1சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
שיר המעלות אשרי כל ירא יהוה ההלך בדרכיו׃
2உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்; ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.
יגיע כפיך כי תאכל אשריך וטוב לך׃
3உன் மனைவி உன் வீட்டிற்குள் கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்; ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல், உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.
אשתך כגפן פריה בירכתי ביתך בניך כשתלי זיתים סביב לשלחנך׃
4ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.
הנה כי כן יברך גבר ירא יהוה׃
5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக; உன் வாழ்நாட்களெல்லாம் எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.
יברכך יהוה מציון וראה בטוב ירושלם כל ימי חייך׃
6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக; இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.