< சங்கீதம் 126 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
성전에 올라가는 노래 여호와께서 시온의 포로를 돌리실 때에 우리가 꿈꾸는 것 같았도다
2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது.
그 때에 우리 입에는 웃음이 가득하고 우리 혀에는 찬양이 찼었도다 열방 중에서 말하기를 여호와께서 저희를 위하여 대사를 행하셨다 하였도다
3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.
여호와를 위하여 대사를 행하셨으니 우리는 기쁘도다
4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும்.
여호와여 우리의 포로를 남방 시내들 같이 돌리소서
5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள், மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.
눈물을 흘리며 씨를 뿌리는 자는 기쁨으로 거두리로다
6 விதைப்பதற்கான விதைகளை அழுதுகொண்டு சுமந்து போகிறவன், மகிழ்ச்சியின் பாடல்களுடன் கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.
울며 씨를 뿌리러 나가는 자는 정녕 기쁨으로 그 단을 가지고 돌아오리로다