< சங்கீதம் 124 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
若不是上主保佑我們,唯願以色列子民再說:
2 மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
若不是上主保佑我們,當世人起來攻擊我們,
3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
並向我們發洩怒火時,必會活活將我們舌食。
4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
就像淹沒我們的水禍,流過我們頭頸的洪波。
5 பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
又像洶湧澎湃的狂浪,早已將我們淹沒滅亡。
6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
讚美上主,他沒有將我們拋出,使我們做成他爪牙的獵物;
7 வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
我們像掙脫獵人羅網的小鳥,羅網扯破了,我們自然逃掉。
8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.
我們的救助是仰賴上主的名,上天和下地都是由他所造成。