< சங்கீதம் 122 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். “யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்” என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.
Песнь восхождения. Давида. Возрадовался я, когда сказали мне: “пойдем в дом Господень”.
2 எருசலேமே, எங்கள் கால்கள் உன் வாசல்களில் நிற்கின்றன.
Вот, стоят ноги наши во вратах твоих, Иерусалим,
3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல், எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.
Иерусалим, устроенный как город, слитый в одно,
4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு, கோத்திரங்கள் அங்கு போவார்கள்; இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி, யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.
куда восходят колена, колена Господни, по закону Израилеву, славить имя Господне.
5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன; அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.
Там стоят престолы суда, престолы дома Давидова.
6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்: “உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.
Просите мира Иерусалиму: да благоденствуют любящие тебя!
7 உன் மதில்களுக்குள் சமாதானமும், உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக.”
Да будет мир в стенах твоих, благоденствие - в чертогах твоих!
8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும் “உனக்குள் சமாதானம் இருக்கட்டும்” என்று நான் வாழ்த்துகிறேன்.
Ради братьев моих и ближних моих говорю я: “мир тебе!”
9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால், நான் உன் செழிப்பைத் தேடுவேன்.
Ради дома Господа, Бога нашего, желаю блага тебе.