< சங்கீதம் 120 >
1 சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
(성전으로 올라가는 노래) 내가 환난 중에 여호와께 부르짖었더니 내게 응답하셨도다
2 யெகோவாவே, பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும், வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
여호와여, 거짓된 입술과 궤사한 혀에서 내 생명을 건지소서
3 வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
너 궤사한 혀여, 무엇으로 네게 주며 무엇으로 네게 더할꼬
4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
장사의 날카로운 살과 로뎀나무 숯불이리로다
5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே; கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
메섹에 유하며 게달의 장막 중에 거하는 것이 내게 화로다
6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில் நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
내가 화평을 미워하는 자와 함께 오래 거하였도다
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.
나는 화평을 원할지라도 내가 말할 때에 저희는 싸우려 하는도다