< சங்கீதம் 114 >

1 இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,
בְּצֵ֣את יִ֭שְׂרָאֵל מִמִּצְרָ֑יִם בֵּ֥ית יַ֝עֲקֹ֗ב מֵעַ֥ם לֹעֵֽז׃
2 யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று; இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.
הָיְתָ֣ה יְהוּדָ֣ה לְקָדְשׁ֑וֹ יִ֝שְׂרָאֵ֗ל מַמְשְׁלוֹתָֽיו׃
3 கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது; யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.
הַיָּ֣ם רָ֭אָה וַיָּנֹ֑ס הַ֝יַּרְדֵּ֗ן יִסֹּ֥ב לְאָחֽוֹר׃
4 மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.
הֶֽ֭הָרִים רָקְד֣וּ כְאֵילִ֑ים גְּ֝בָע֗וֹת כִּבְנֵי־צֹֽאן׃
5 கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்? யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
מַה־לְּךָ֣ הַ֭יָּם כִּ֣י תָנ֑וּס הַ֝יַּרְדֵּ֗ן תִּסֹּ֥ב לְאָחֽוֹר׃
6 மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?
הֶֽ֭הָרִים תִּרְקְד֣וּ כְאֵילִ֑ים גְּ֝בָע֗וֹת כִּבְנֵי־צֹֽאן׃
7 பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.
מִלִּפְנֵ֣י אָ֭דוֹן ח֣וּלִי אָ֑רֶץ מִ֝לִּפְנֵ֗י אֱל֣וֹהַּ יַעֲקֹֽב׃
8 அவர் கற்பாறையைக் குளமாகவும், கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.
הַהֹפְכִ֣י הַצּ֣וּר אֲגַם־מָ֑יִם חַ֝לָּמִ֗ישׁ לְמַעְיְנוֹ־מָֽיִם׃

< சங்கீதம் 114 >