< சங்கீதம் 110 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”
A Psalm of David. The Lord said to my Lord, “Sit at my right hand, until I make your enemies your footstool.”
2 யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்; “நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!”
The Lord will send forth the scepter of your virtue from Zion. Rule in the midst of your enemies.
3 உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில், தாங்களாகவே முன்வருவார்கள்; அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல் உமது வாலிபர்கள் பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.
It is with you from the beginning, in the day of your virtue, in the splendor of the saints. From conception, before the light-bearer, I begot you.
4 “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்” என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்; அவர் தமது மனதை மாற்றமாட்டார்.
The Lord has sworn, and he will not repent: “You are a priest forever, according to the order of Melchizedek.”
5 யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்; அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.
The Lord is at your right hand. He has broken kings in the day of his wrath.
6 அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்; இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.
He will judge between the nations; he will fill up ruination. He will shatter heads in the land of the many.
7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.
He will drink from the torrent on the way. Because of this, he will exalt the head.

< சங்கீதம் 110 >