< சங்கீதம் 108 >
1 தாவீதின் சங்கீதமாகிய பாடல். இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.
大衛的詩歌。 上帝啊,我心堅定; 我口要唱詩歌頌!
2 யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.
琴瑟啊,你們當醒起! 我自己要極早醒起!
3 யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
耶和華啊,我要在萬民中稱謝你, 在列邦中歌頌你!
4 ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
因為,你的慈愛大過諸天; 你的誠實達到穹蒼。
5 இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
上帝啊,願你崇高過於諸天! 願你的榮耀高過全地!
6 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
求你應允我們,用右手拯救我們, 好叫你所親愛的人得救。
7 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
上帝已經指着他的聖潔說: 我要歡樂;我要分開示劍, 丈量疏割谷。
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல்.
基列是我的; 瑪拿西是我的; 以法蓮是護衛我頭的; 猶大是我的杖;
9 மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
摩押是我的沐浴盆; 我要向以東拋鞋; 我必因勝非利士呼喊。
10 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
誰能領我進堅固城? 誰能引我到以東地?
11 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
上帝啊,你不是丟棄了我們嗎? 上帝啊,你不和我們的軍兵同去嗎?
12 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
求你幫助我們攻擊敵人, 因為人的幫助是枉然的。
13 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.
我們倚靠上帝才得施展大能, 因為踐踏我們敵人的就是他。