< சங்கீதம் 101 >

1 தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; உமக்கே நான் துதி பாடுவேன்.
לְדָוִד מִזְמוֹר חֶֽסֶד־וּמִשְׁפָּט אָשִׁירָה לְךָ יְהֹוָה אֲזַמֵּֽרָה׃
2 நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன் என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.
אַשְׂכִּילָה ׀ בְּדֶרֶךְ תָּמִים מָתַי תָּבוֹא אֵלָי אֶתְהַלֵּךְ בְּתׇם־לְבָבִי בְּקֶרֶב בֵּיתִֽי׃
3 தீங்கான செயல்களை நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
לֹֽא־אָשִׁית ׀ לְנֶגֶד עֵינַי דְּֽבַר־בְּלִיָּעַל עֲשֹֽׂה־סֵטִים שָׂנֵאתִי לֹא יִדְבַּק בִּֽי׃
4 வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
לֵבָב עִקֵּשׁ יָסוּר מִמֶּנִּי רָע לֹא אֵדָֽע׃
5 தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை நான் தண்டிப்பேன்; கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை நான் சகிக்கமாட்டேன்.
(מלושני) [מְלׇשְׁנִי] בַסֵּתֶר ׀ רֵעֵהוּ אוֹתוֹ אַצְמִית גְּֽבַהּ־עֵינַיִם וּרְחַב לֵבָב אֹתוֹ לֹא אוּכָֽל׃
6 நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; குற்றமற்றவனாய் நடப்பவர்களே எனக்கு ஊழியம் செய்வார்கள்.
עֵינַי ׀ בְּנֶֽאֶמְנֵי־אֶרֶץ לָשֶׁבֶת עִמָּדִי הֹלֵךְ בְּדֶרֶךְ תָּמִים הוּא יְשָׁרְתֵֽנִי׃
7 வஞ்சனை செய்யும் யாரும் என் வீட்டில் வாழமாட்டார்கள்; பொய்ப் பேசுபவர் யாரும் என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
לֹֽא־יֵשֵׁב ׀ בְּקֶרֶב בֵּיתִי עֹשֵׂה רְמִיָּה דֹּבֵר שְׁקָרִים לֹֽא־יִכּוֹן לְנֶגֶד עֵינָֽי׃
8 நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் காலைதோறும் தண்டிப்பேன்; தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.
לַבְּקָרִים אַצְמִית כׇּל־רִשְׁעֵי־אָרֶץ לְהַכְרִית מֵעִיר־יְהֹוָה כׇּל־פֹּעֲלֵי אָֽוֶן׃

< சங்கீதம் 101 >