< சங்கீதம் 100 >

1 நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம். பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.
稱謝詩。 普天下當向耶和華歡呼!
2 மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள், மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.
你們當樂意事奉耶和華, 當來向他歌唱!
3 யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்; நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.
你們當曉得耶和華是上帝! 我們是他造的,也是屬他的; 我們是他的民,也是他草場的羊。
4 அவருடைய வாசல்களில் நன்றியோடும், அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
當稱謝進入他的門; 當讚美進入他的院。 當感謝他,稱頌他的名!
5 யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது; அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.
因為耶和華本為善。 他的慈愛存到永遠; 他的信實直到萬代。

< சங்கீதம் 100 >