< நீதிமொழிகள் 3 >
1 என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்.
我儿,不要忘记我的法则; 你心要谨守我的诫命;
2 அவை உனக்கு நீண்ட ஆயுளையும், சமாதான வாழ்வையும் கொண்டுவரும்.
因为它必将长久的日子, 生命的年数与平安,加给你。
3 அன்பும் உண்மையும் உன்னைவிட்டு ஒருபோதும் விலகாதிருப்பதாக; அவற்றை உன் கழுத்திலே அணிந்து, உன் இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்.
不可使慈爱、诚实离开你, 要系在你颈项上,刻在你心版上。
4 அப்பொழுது நீ இறைவனின் பார்வையிலும் மனிதனின் பார்வையிலும் தயவையும் நற்பெயரையும் பெறுவாய்.
这样,你必在 神和世人眼前 蒙恩宠,有聪明。
5 உன் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் நம்பிக்கைவை, உன் சொந்த அறிவை மட்டுமே சார்ந்திராதே.
你要专心仰赖耶和华, 不可倚靠自己的聪明,
6 நீ செய்யும் எல்லாவற்றிலும் யெகோவாவுக்கே அடங்கியிரு, அவர் உன்னை சரியான பாதையில் நடத்துவார்.
在你一切所行的事上都要认定他, 他必指引你的路。
7 உன்னை ஞானியென்று என்று நீயே எண்ணிக்கொள்ளாதே; யெகோவாவுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகு.
不要自以为有智慧; 要敬畏耶和华,远离恶事。
8 அது உன் உடலுக்கு சுகத்தையும், உனது எலும்புகளுக்கு ஊட்டத்தையும் கொடுக்கும்.
这便医治你的肚脐, 滋润你的百骨。
9 நீ உன் செல்வத்தினாலும், உனது எல்லா விளைச்சலின் முதற்பலனினாலும் யெகோவாவைக் கனம்பண்ணு.
你要以财物 和一切初熟的土产尊荣耶和华。
10 அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும்.
这样,你的仓房必充满有余; 你的酒榨有新酒盈溢。
11 என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே.
我儿,你不可轻看耶和华的管教, 也不可厌烦他的责备;
12 ஏனெனில் ஒரு தகப்பன் தனது அருமை மகனை கண்டித்துத் திருத்துவதுபோல், யெகோவா யாரை நேசிக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.
因为耶和华所爱的,他必责备, 正如父亲责备所喜爱的儿子。
13 ஞானத்தை அடைகிறவர்களும், புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
得智慧,得聪明的, 这人便为有福。
14 ஏனெனில் ஞானம் வெள்ளியைவிட மேலானது, தங்கத்தைவிடப் பயனுள்ளது.
因为得智慧胜过得银子, 其利益强如精金,
15 அது பவளங்களைவிட பெருமதிப்புள்ளது; நீ விரும்புகிற எதற்கும் அது நிகரல்ல.
比珍珠宝贵; 你一切所喜爱的,都不足与比较。
16 அதின் வலதுகையில் நீண்ட ஆயுளும் இருக்கிறது; அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கின்றன.
她右手有长寿, 左手有富贵。
17 அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை.
她的道是安乐; 她的路全是平安。
18 அதை அணைத்துக் கொள்கிறவர்களுக்கு அது வாழ்வு கொடுக்கும் மரம், அதனைப் பற்றிக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
她与持守她的作生命树; 持定她的,俱各有福。
19 யெகோவா ஞானத்தினால் பூமிக்கு அஸ்திபாரமிட்டார், அவருடைய புரிந்துகொள்ளுதலினால் வானங்களை அமைத்தார்;
耶和华以智慧立地, 以聪明定天,
20 அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின.
以知识使深渊裂开, 使天空滴下甘露。
21 என் மகனே, ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, சரியான நிதானிப்பையும் அறிவுடைமையையும் காத்துக்கொள்.
我儿,要谨守真智慧和谋略, 不可使她离开你的眼目。
22 அவை உனக்கு வாழ்வாகவும், உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும்.
这样,她必作你的生命, 颈项的美饰。
23 அப்பொழுது நீ உன் வழியில் பாதுகாப்புடன் போவாய்; உன் கால்களும் இடறாது.
你就坦然行路, 不致碰脚。
24 நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும்.
你躺下,必不惧怕; 你躺卧,睡得香甜。
25 திடீரென வரும் பேராபத்திற்கும் கொடியவர்கள்மேல் வரும் அழிவுக்கும் நீ பயப்படவேண்டாம்.
忽然来的惊恐,不要害怕; 恶人遭毁灭,也不要恐惧。
26 யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; அவர் உன் கால் இடறாமல் காப்பார்.
因为耶和华是你所倚靠的; 他必保守你的脚不陷入网罗。
27 நன்மைசெய்ய உன்னால் இயலும்போது, அதை பெறத்தக்கவர்களுக்கு கொடுக்காமல் விடாதே.
你手若有行善的力量,不可推辞, 就当向那应得的人施行。
28 உன்னிடம் இருக்கும்போதே, உன் அயலவனிடம், “போய்வா; நாளைக்கு உனக்குத் தருவேன்” எனச் சொல்லாதே.
你那里若有现成的,不可对邻舍说: 去吧,明天再来,我必给你。
29 உன் அருகே நம்பிக்கையுடன் வாழும் அயலவனுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்யாதே.
你的邻舍既在你附近安居, 你不可设计害他。
30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதபோது காரணம் இல்லாமல் அவர்கள்மேல் குற்றம் சாட்டாதே.
人未曾加害与你, 不可无故与他相争。
31 வன்முறையாளர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய வழிகளில் எதையும் தெரிந்தெடுக்காதே.
不可嫉妒强暴的人, 也不可选择他所行的路。
32 ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.
因为,乖僻人为耶和华所憎恶; 正直人为他所亲密。
33 கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும்.
耶和华咒诅恶人的家庭, 赐福与义人的居所。
34 பெருமைகொண்ட பரியாசக்காரர்களை யெகோவா ஏளனம் செய்கிறார்; ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபையைக் கொடுக்கிறார்.
他讥诮那好讥诮的人, 赐恩给谦卑的人。
35 ஞானிகள் மதிப்பைப் பெறுவார்கள்; மூடர்கள் வெட்கப்படுவார்கள்.
智慧人必承受尊荣; 愚昧人高升也成为羞辱。