< நீதிமொழிகள் 21 >

1 அரசனுடைய இருதயம் யெகோவாவின் கரத்தில் நீரோடைகளைப் போலிருக்கின்றது; அவர் அதைத் தாம் விரும்பியவர்களிடம் நடத்துகிறார்.
王的心在耶和华手中, 好像陇沟的水随意流转。
2 மனிதனுடைய வழியெல்லாம் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும், ஆனால் யெகோவா இருதயத்தின் சிந்தனைகளை சோதித்து அறிகிறார்.
人所行的,在自己眼中都看为正; 惟有耶和华衡量人心。
3 பலி செலுத்துவதைப் பார்க்கிலும், நியாயத்தையும் நீதியையும் செய்வதே யெகோவாவுக்கு விருப்பம்.
行仁义公平 比献祭更蒙耶和华悦纳。
4 கொடியவர்களின் உழாத நிலம் என்பது, அவர்களின் பாவத்தை உண்டாக்கும் அகந்தையான பார்வையும் பெருமையான இருதயமுமே.
恶人发达,眼高心傲, 这乃是罪。
5 அவசரச்செயல் வறுமையைக் கொடுப்பது நிச்சயம், அதுபோலவே கடின உழைப்புள்ளவர்களின் திட்டங்கள் இலாபத்தைக் கொடுப்பதும் நிச்சயம்.
殷勤筹划的,足致丰裕; 行事急躁的,都必缺乏。
6 பொய் சொல்லி சம்பாதிக்கும் செல்வம், பறந்து செல்லும் நீராவியாயும் மரணக் கண்ணியாயும் இருக்கும்.
用诡诈之舌求财的,就是自己取死; 所得之财乃是吹来吹去的浮云。
7 கொடியவர்கள் நியாயஞ்செய்ய மறுப்பதால், அவர்களின் வன்முறை அவர்களையே வாரிச்செல்லும்.
恶人的强暴必将自己扫除, 因他们不肯按公平行事。
8 குற்றவாளிகளின் வழி கோணலானது, ஆனால் குற்றமற்றவர்களின் நடத்தையோ நேர்மையானது.
负罪之人的路甚是弯曲; 至于清洁的人,他所行的乃是正直。
9 சண்டைக்கார மனைவியுடன் வீட்டில் ஒன்றாய் வாழ்வதைவிட, கூரையின் மூலையில் தனித்து வாழ்வது சிறந்தது.
宁可住在房顶的角上, 不在宽阔的房屋与争吵的妇人同住。
10 கொடியவர்கள் தீமையை விரும்புகிறார்கள்; தமக்கு அடுத்திருப்போரை இரக்கத்தோடு பார்க்கமாட்டார்கள்.
恶人的心乐人受祸; 他眼并不怜恤邻舍。
11 ஏளனம் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அறிவற்றவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்; ஞானமுள்ளவர்களுக்குப் போதிக்கும்போது, அவர்கள் அறிவைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
亵慢的人受刑罚,愚蒙的人就得智慧; 智慧人受训诲,便得知识。
12 நீதிபரரான இறைவன் கொடியவர்களின் வீட்டைக் கவனித்துப் பார்த்து, கொடியவர்களை தண்டிக்கிறார்.
义人思想恶人的家, 知道恶人倾倒,必致灭亡。
13 ஏழைகளின் அழுகைக்குச் செவிகொடுக்காதவர்களுக்கு தாங்கள் அழும்பொழுது பதில் கிடைக்காது.
塞耳不听穷人哀求的, 他将来呼吁也不蒙应允。
14 இரகசியமாய் கொடுக்கும் அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்; அங்கியில் மறைத்துக் கொடுக்கும் இலஞ்சம் கடுஞ்சீற்றத்தைக் குறைக்கும்.
暗中送的礼物挽回怒气; 怀中搋的贿赂止息暴怒。
15 நீதி செய்யப்படும்போது, அது நீதிமான்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, ஆனால் தீயவர்களுக்கு பயமுண்டாக்கும்.
秉公行义使义人喜乐, 使作孽的人败坏。
16 விவேகத்தின் பாதையைவிட்டு விலகிச்செல்பவர்கள், முடிவில் இறந்தவர்களின் கூட்டத்தில் சேருவார்கள்.
迷离通达道路的, 必住在阴魂的会中。
17 சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்; திராட்சைரசத்தையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறவர்கள் ஒருபோதும் செல்வந்தராவதில்லை.
爱宴乐的,必致穷乏; 好酒,爱膏油的,必不富足。
18 கொடியவர்கள் நீதிமான்களையும், துரோகிகள் நேர்மையுள்ளவர்களையும் மீட்கும் பணயப் பொருளாவார்கள்.
恶人作了义人的赎价; 奸诈人代替正直人。
19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலைவனத்தில் வாழ்வது சிறந்தது.
宁可住在旷野, 不与争吵使气的妇人同住。
20 சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்; மூடர்களோ எல்லாவற்றையும் தின்று குடித்து அழித்துவிடுவார்கள்.
智慧人家中积蓄宝物膏油; 愚昧人随得来随吞下。
21 நீதியாகவும் அன்பாகவும் இருக்க விரும்புகிறவர்கள், வாழ்வையும் செழிப்பையும், மதிப்பையும் பெறுவார்கள்.
追求公义仁慈的, 就寻得生命、公义,和尊荣。
22 ஞானமுள்ளவர்கள் பலவான்களின் பட்டணத்தைத் தாக்கி, அவர்கள் நம்பியிருக்கும் கோட்டையையும் இடித்துப் போடுவார்கள்.
智慧人爬上勇士的城墙, 倾覆他所倚靠的坚垒。
23 தங்கள் வாயையும் நாவையும் காத்துக்கொள்கிறவர்கள் பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.
谨守口与舌的, 就保守自己免受灾难。
24 அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களுக்கு, “ஏளனக்காரர்கள்” என்று பெயர், அவர்கள் எல்லையற்ற ஆணவத்துடன் நடந்துகொள்கிறார்கள்.
心骄气傲的人名叫亵慢; 他行事狂妄,都出于骄傲。
25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய மறுப்பதால், அவர்களின் ஆசையினால் அவர்கள் அழிவார்கள்.
懒惰人的心愿将他杀害, 因为他手不肯做工。
26 அவர்களுடைய பேராசை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது; ஆனால் நீதிமான்களோ, தாராளமாய்க் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
有终日贪得无厌的; 义人施舍而不吝惜。
27 கொடியவர்கள் செலுத்தும் பலி அருவருப்பானது; அது தீயநோக்கத்துடன் செலுத்தப்படுமானால், அது இன்னும் எவ்வளவு அதிக அருவருப்பாயிருக்கும்!
恶人的祭物是可憎的; 何况他存恶意来献呢?
28 பொய்ச்சாட்சி கூறுபவர்கள் அழிந்துபோவார்கள்; ஆனால் கவனமாய்க் கேட்பவர்கள் வெற்றிகரமாக சாட்சியளிப்பார்.
作假见证的必灭亡; 惟有听真情而言的,其言长存。
29 கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்; ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
恶人脸无羞耻; 正直人行事坚定。
30 யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை.
没有人能以智慧、聪明、 谋略敌挡耶和华。
31 போரின் நாளுக்காக குதிரை ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் வெற்றியோ யெகோவாவினுடையது.
马是为打仗之日预备的; 得胜乃在乎耶和华。

< நீதிமொழிகள் 21 >