< பிலேமோன் 1 >

1 கிறிஸ்து இயேசுவின் கைதியாயிருக்கிற பவுலும், நமது சகோதரனாகிய தீமோத்தேயுவும், எங்கள் அன்புக்குரியவனும், எங்கள் உடன் ஊழியனுமான பிலேமோனுக்கும்,
ⲁ̅ⲡⲁⲩⲗⲟⲥ ⲡⲉⲧⲙⲏⲣ ⲛⲧⲉ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ ⲙⲛ ⲧⲓⲙⲟⲑⲉⲟⲥ ⲡⲥⲟⲛ ⲉⲩⲥϩⲁⲓ ⲙⲫⲓⲗⲏⲙⲱⲛ ⲡⲙⲉⲣⲓⲧ ⲁⲩⲱ ⲡⲉⲛϣⲃⲣⲣϩⲱⲃ
2 சகோதரி அப்பியாவுக்கும், எங்கள் உடன் போர்வீரனாகிய அர்க்கிப்புவுக்கும், உமது வீட்டில் கூடிவருகிற திருச்சபைக்கும் எழுதுகிறதாவது:
ⲃ̅ⲙⲛ ⲁⲙⲫⲓⲁ ⲧⲙⲉⲣⲓⲧ ⲙⲛ ⲁⲣⲭⲓⲡⲡⲟⲥ ⲡⲉⲛϣⲃⲣⲙⲁⲧⲟⲓ ⲙⲛ ⲧⲥⲟⲟⲩϩⲥ ⲉⲧϩⲙ ⲡⲉⲕⲏⲓ
3 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ⲅ̅ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲏⲧⲛ ⲙⲛ ϯⲣⲏⲛⲏ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲛⲉⲓⲱⲧ ⲙⲛ ⲡϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ
4 என்னுடைய மன்றாட்டுகளில் நான் உன்னை நினைத்து, என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ⲇ̅ϯϣⲡϩⲙⲟⲧ ⲛⲧⲙ ⲡⲁⲛⲟⲩⲧⲉ ⲛⲟⲩⲟⲓϣ ⲛⲓⲙ ⲉⲓⲉⲓⲣⲉ ⲙⲡⲉⲕⲙⲉⲉⲩⲉ ϩⲛ ⲛⲁϣⲗⲏⲗ
5 ஏனெனில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நீ வைத்திருக்கும் விசுவாசத்தைக்குறித்தும், பரிசுத்தவான்கள் எல்லோரிடமும் நீ வைத்திருக்கும் அன்பைக்குறித்தும் நான் கேள்விப்படுகிறேன்.
ⲉ̅ⲉⲓⲥⲱⲧⲙ ⲉⲧⲉⲕⲡⲓⲥⲧⲓⲥ ⲙⲛ ⲧⲉⲕⲁⲅⲁⲡⲏ ⲉⲧⲉⲩⲛⲧⲁⲕⲥ ⲉϩⲟⲩⲛ ⲉⲡϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲁⲩⲱ ⲉⲑⲟⲩⲛ ⲉⲛⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲧⲏⲣⲟⲩ
6 உன்னுடைய விசுவாசத்தில் நமது ஐக்கியம், கிறிஸ்துவுக்காக நாம் பெற்றிருக்கிற எல்லா நன்மைகளைக் குறித்தும் நீ முழுமையாக விளங்கிக்கொள்ள பயன்படவேண்டும் என்று மன்றாடுகிறேன்.
ⲋ̅ϫⲉ ⲉⲣⲉⲧⲕⲟⲓⲛⲱⲛⲓⲁ ⲛⲧⲉⲕⲡⲓⲥⲧⲓⲥ ϣⲱⲡⲉ ⲉⲥⲉⲛⲉⲣⲅⲓ ϩⲙ ⲡⲥⲟⲟⲩⲛ ⲙⲡⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲛⲓⲙ ⲉⲧⲛϩⲏⲧ ⲧⲏⲩⲧⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲉⲭⲥ
7 சகோதரனே, நீ பரிசுத்தவான்களின் இருதயங்களுக்கு புத்துயிரூட்டியிருக்கிறாய். உனது அந்த அன்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.
ⲍ̅ⲁⲓⲣⲟⲩⲛⲟϭ ⲅⲁⲣ ⲛⲣⲁϣⲉ ⲙⲛ ⲟⲩⲥⲟⲗⲥⲗ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛ ⲧⲉⲕⲁⲅⲁⲡⲏ ϫⲉ ⲁⲛⲉⲥⲡⲗⲁⲅⲭⲛⲟⲛ ⲛⲛⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲙⲧⲟⲛ ⲙⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲓ ⲧⲟⲟⲧⲕ ⲡⲥⲟⲛ
8 எனவே நீ என்ன செய்யவேண்டும் என்பதை, உனக்குக் கட்டளையிட்டுச் சொல்ல, கிறிஸ்துவில் நான் துணிவுடையவனாய் இருந்தாலும்,
ⲏ̅ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲉⲩⲛⲧⲁⲓ ⲙⲙⲁⲩ ⲛⲟⲩⲛⲟϭ ⲙⲡⲁⲣϩⲏⲥⲓⲁ ϩⲙ ⲡⲉⲭⲥ ⲉⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲛⲁⲕ ⲙⲡⲉⲧⲉϣϣⲉ
9 நான் அன்பின் அடிப்படையிலேயே உன்னிடம் வேண்டுகிறேன். எனவே வயது சென்றவனும், இப்பொழுது கிறிஸ்து இயேசுவின் பொருட்டு சிறைக்கைதியாய் இருக்கிறவனுமான பவுலாகிய நான்,
ⲑ̅ⲉⲧⲃⲉ ⲧⲁⲅⲁⲡⲏ ⲛϩⲟⲩⲟ ⲉⲓⲡⲁⲣⲁⲕⲁⲗⲉⲓ ⲉⲓⲟ ⲛⲧⲉⲉⲓⲙⲓⲛⲉ ϩⲱⲥ ⲡⲁⲩⲗⲟⲥ ⲡⲛⲟϭ ⲉⲣⲟⲕ ⲧⲉⲛⲟⲩ ⲇⲉ ⲟⲛ ⲉⲓⲙⲏⲣ ϩⲙ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ
10 எனது மகன் ஒநேசிமுவுக்காகவே உன்னிடம் வேண்டிக்கொள்கிறேன். நான் விலங்கிடப்பட்டிருக்கையில் அவன் எனக்கு மகனானான்.
ⲓ̅ϯⲡⲁⲣⲁⲕⲁⲗⲉⲓ ⲙⲙⲟⲕ ϩⲁ ⲡⲁϣⲏⲣⲉ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁⲓϫⲡⲟϥ ϩⲛ ⲛⲁⲙⲣⲣⲉ ⲟⲛⲏⲥⲓⲙⲟⲥ
11 முன்பு அவன் உனக்குப் பயனற்றவனாய் இருந்தான். ஆனால் இப்போதோ, அவன் உனக்கும் எனக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான்.
ⲓ̅ⲁ̅ⲡⲁⲓ ⲉⲧⲟ ⲛⲁⲕ ⲛⲁⲧϣⲁⲩ ⲙⲡⲓⲟⲩⲟⲉⲓϣ ⲧⲉⲛⲟⲩ ⲇⲉ ⲉϥⲟ ⲛⲁⲕ ⲁⲩⲱ ⲛⲁⲓ ⲛϣⲁⲩ ⲁⲓⲧⲛⲛⲟⲟⲩϥ ϣⲁⲣⲟⲕ
12 என் உயிரோடு ஒன்றித்துவிட்ட அவனை, நான் உன்னிடம் திருப்பி அனுப்புகிறேன்.
ⲓ̅ⲃ̅ⲛⲧⲟⲕ ⲇⲉ ϣⲟⲡϥ ⲉⲣⲟⲕ ⲉⲧⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲛⲁⲥⲡⲗⲁⲅⲭⲛⲟⲛ
13 நற்செய்திக்காக இங்கு விலங்கிடப்பட்டிருக்கிற எனக்கு உதவிசெய்யும்படி, உனக்குப் பதிலாய் ஒநேசிமுவை என்னுடன் வைத்திருக்க நான் விரும்பினேன்.
ⲓ̅ⲅ̅ⲡⲁⲓ ⲉⲛⲉⲓⲟⲩⲱϣ ⲉⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ ϩⲁⲧⲏⲓ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉϣⲙϣⲉ ⲛⲁⲓ ⲉⲡⲉⲕⲙⲁ ϩⲛ ⲙⲙⲣⲣⲉ ⲙⲡⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲟⲛ
14 ஆனால் உன்னுடைய சம்மதமின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில், நீ செய்கிற எந்த உதவியையும் நீயாக மனமுவந்து செய்ய வேண்டுமேயன்றி, எனது வற்புறுத்தலின் பேரில் அதைச் செய்யக்கூடாது என்று நான் எண்ணினேன்.
ⲓ̅ⲇ̅ⲙⲡⲓⲟⲩⲱϣ ⲇⲉ ⲉⲣ ⲗⲁⲁⲩ ⲁϫⲛ ⲧⲉⲕⲅⲛⲱⲙⲏ ϫⲉ ⲛⲛⲉ ⲡⲉⲕⲁⲅⲁⲑⲟⲛ ϣⲱⲡⲉ ⲕⲁⲧⲁ ⲟⲩϩⲧⲟⲣ ⲁⲗⲗⲁ ⲉϩⲛⲁⲕ
15 சிறிதுகாலம் ஒநேசிமு உன்னைவிட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை அவன் திரும்பிவந்து, நிரந்தரமாகவே உன்னுடன் இருக்கும்படியே இது நிகழ்ந்திருக்கலாம். (aiōnios g166)
ⲓ̅ⲉ̅ⲙⲉϣⲁⲕ ⲅⲁⲣ ⲛⲧⲁϥⲟⲩⲉ ⲙⲙⲟⲕ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲡⲣⲟⲥⲟⲩⲟⲩⲛⲟⲩ ϫⲉ ⲉⲕⲉϫⲓⲧϥ ϣⲁ ⲉⲛⲉϩ (aiōnios g166)
16 அதாவது இனிமேலும் அவன் அடிமையாய் அல்ல, அடிமையைவிட பயனுள்ள அன்புக்குரிய சகோதரனாக உன்னுடன் இருக்கும்படியே ஏற்றுக்கொள்ளும். அவன் எனக்கு மிகவும் அன்புக்குரியவன். ஆனாலும் அதைவிட ஒரு மனிதன் என்ற வகையிலும், கர்த்தரில் ஒரு சகோதரன் என்ற வகையிலும், அவன் உனக்கு இன்னும் அதிக அன்புக்குரியவனாய் இருக்கிறான்.
ⲓ̅ⲋ̅ϩⲱⲥ ϩⲙϩⲁⲗ ⲁⲛ ϭⲉ ⲁⲗⲗⲁ ⲡⲉⲧⲛⲁⲁⲁϥ ⲉϩⲙϩⲁⲗ ⲟⲩⲥⲟⲛ ⲙⲙⲉⲣⲓⲧ ⲛⲁⲓ ⲛϩⲟⲩⲟ ⲉⲓⲉ ⲟⲩⲏⲣ ϭⲉ ⲛⲁⲕ ϩⲛ ⲧⲥⲁⲣⲝ ⲁⲩⲱ ϩⲙ ⲡϫⲟⲉⲓⲥ
17 ஆகவே நான் உனக்கு ஐக்கியமானவன் என்று நீ எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்.
ⲓ̅ⲍ̅ⲉϣⲱⲡⲉ ϭⲉ ϯϣⲟⲟⲡ ⲛⲁⲕ ⲛⲕⲟⲓⲛⲱⲛⲟⲥ ϣⲟⲡϥ ⲉⲣⲟⲕ ⲛⲧⲁϩⲉ
18 அவன் உனக்கு ஏதாவது தீமை செய்திருந்தாலோ, அல்லது அவன் உனக்கு கடன் ஏதாவது கொடுக்கவேண்டியிருந்தாலோ, அதை என்னுடைய கணக்கில் வைத்துவிடு.
ⲓ̅ⲏ̅ⲉϣϫⲉ ⲁϥϫⲓⲧⲕ ⲇⲉ ⲛϭⲟⲛⲥ ⲛⲟⲩϩⲱⲃ ⲏ ⲟⲩⲛⲧⲁⲕ ⲉⲣⲟϥ ⲡⲁⲓ ⲟⲡϥ ⲉⲣⲟⲓ
19 நான் அதை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று பவுலாகிய நான் இதை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இவ்வேளையில், உன்னையே நீ எனக்குக் கொடுக்கவேண்டியவனாய் இருக்கிறாய் என்று நான் உனக்குச் சொல்லவேண்டியதில்லை.
ⲓ̅ⲑ̅ⲁⲛⲟⲕ ⲡⲁⲩⲗⲟⲥ ⲁⲓⲥϩⲁⲓ ⲛⲧⲁϭⲓϫ ⲁⲛⲟⲕ ⲡⲉⲧⲛⲁⲧⲟⲩⲉⲓⲟ ⲛⲁⲕ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲛⲁϫⲟⲟⲥ ϫⲉ ⲉⲕⲛⲧⲟⲟⲧ ϩⲱⲱⲕ ⲛϩⲙⲟⲧ
20 சகோதரனே, இந்த உதவியை எனக்குச் செய். அப்பொழுது கர்த்தரில் உன்னிடமிருந்து சிறிதளவு நன்மை பெறுவேன்; நீ கிறிஸ்துவில் என் உள்ளத்திற்கு புத்துயிரூட்டுவாய்.
ⲕ̅ⲁⲓⲟ ⲡⲥⲟⲛ ⲉⲓⲉⲙⲧⲟⲛ ⲛϩⲏⲧ ϩⲁⲣⲟⲕ ϩⲙ ⲡϫⲟⲉⲓⲥ ϯⲙⲧⲟⲛ ⲛⲛⲁⲥⲡⲗⲁⲅⲭⲛⲟⲛ ϩⲙ ⲡⲉⲭⲥ
21 உனது கீழ்ப்படிதலில் மனவுறுதி உள்ளவனாக நான் இதை உனக்கு எழுதுகிறேன். நான் கேட்டுக்கொள்வதைவிட அதிகமாய்ச் செய்வாய் என்று எனக்குத் தெரியும்.
ⲕ̅ⲁ̅ⲉⲓⲕⲱ ⲛϩⲧⲏⲓ ⲉⲧⲉⲕⲙⲛⲧⲥⲧⲙⲏⲧ ⲁⲓⲥϩⲁⲓ ⲛⲁⲕ ⲉⲓⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲕⲛⲁⲣϩⲟⲩⲟ ⲉⲡⲉϯϫⲱ ⲙⲙⲟϥ
22 மேலும் ஒரு வேண்டுகோள்: எனக்காக ஒரு தங்கும் இடத்தை ஆயத்தம் செய். ஏனெனில் உங்களுடைய மன்றாட்டுகளின் பிரதிபலனாக, நான் மீண்டும் உங்களிடம் வருவேன் என்று எதிர்பார்க்கிறேன்.
ⲕ̅ⲃ̅ϩⲁⲙⲁ ⲇⲉ ⲛⲅⲥⲟⲃⲧⲉ ⲛⲁⲓ ⲛⲟⲩⲙⲁ ⲛϣⲱⲡⲉ ϯϩⲉⲗⲡⲓⲍⲉ ⲅⲁⲣ ϫⲉ ⲥⲉⲛⲁⲧⲁⲁⲧ ⲛⲏⲧⲛ ⲛϩⲙⲟⲧ ϩⲓⲧⲛ ⲛⲉⲧⲛϣⲗⲏⲗ
23 கிறிஸ்து இயேசுவுக்காக என்னுடன் சிறைக்கைதியாய் இருக்கும் எப்பாப்பிராவும், உனக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறான்.
ⲕ̅ⲅ̅ⲉⲡⲁⲫⲣⲁ ϣⲓⲛⲉ ⲉⲣⲟⲕ ⲡⲁϣⲃⲣⲁⲓⲭⲙⲁⲗⲱⲧⲟⲥ ϩⲙ ⲡⲉⲭⲥ ⲓⲏⲥ
24 அப்படியே என் உடன் ஊழியர்களான மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.
ⲕ̅ⲇ̅ⲙⲛ ⲙⲁⲣⲕⲟⲥ ⲁⲩⲱ ⲁⲣⲓⲥⲧⲁⲣⲭⲟⲥ ⲙⲛ ⲇⲏⲙⲁⲥ ⲙⲛ ⲗⲟⲩⲕⲁⲥ ⲛⲁϣⲃⲣⲣϩⲱⲃ
25 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக.
ⲕ̅ⲉ̅ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲙⲡⲉⲛϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ ⲡⲉⲭⲥ ⲙⲛ ⲡⲉⲧⲛⲡⲛⲁ

< பிலேமோன் 1 >