< எண்ணாகமம் 34 >
Још рече Господ Мојсију говорећи:
2 “நீ இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது இதுவே: ‘உங்களுக்கு உரிமைச்சொத்தாகப் பங்கிடப்பட இருக்கும் கானான் நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, அந்நாடு கொண்டிருக்கும் எல்லைகள் எவையெனில்:
Заповеди синовима Израиљевим и реци им: Кад дођете у земљу хананску, та ће вам земља припасти у наследство, земља хананска с међама својим.
3 “‘உங்கள் தென்பகுதி ஏதோமின் எல்லை நெடுகிலும், சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியிருக்கும். உங்கள் தெற்கு எல்லை கிழக்கே உப்புக்கடலின் முனையிலிருந்து தொடங்கி,
Јужни крај да вам је од пустиње Сина, уз међу едомску, и да вам је јужна међа од брега сланог мора на исток;
4 அக்கராபீம் மேடுகளுக்குத் தெற்கில் கடந்துசென்று, சீன் பாலைவனம்வரை போய், பின் காதேஸ் பர்னேயாவின் தெற்கிலே போகும். பின்பு அங்கிருந்து ஆத்சார் அதாருக்குப் போய் அஸ்மோனாவரை செல்லும்.
И та међа нека се савије од југа к Акравиму и иде до Сина, и нека се пружи од југа преко Кадис-Варније, а отуда нека изиђе на село Адар и иде до Аселмона;
5 பின்பு அஸ்மோனாவிலிருந்து திரும்பி, எகிப்தின் சிற்றாறுகளை இணைத்து மத்திய தரைக்கடலில்போய் முடியும்.
Потом нека се савије та међа од Аселмона до потока мисирског и иде до мора.
6 உங்கள் மேற்கு எல்லை மத்திய தரைக்கடலின் கரையாக இருக்கும். இதுவே மேற்குப்புறத்தில் உங்கள் எல்லையாயிருக்கும்.
А западна међа да вам буде велико море; то да вам је западна међа.
7 உங்கள் வடக்கு எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து தொடங்கி ஓர் மலைவரை சென்று,
А северна међа ово да вам буде: од великог мора повуците себи међу до горе Ора;
8 ஓர் மலையில் இருக்கும் ஆமாத்தின் வழியாகப் போகும். அங்கிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
А од горе Ора повуците себи међу како се иде у Емат, и та међа нека иде на Седад;
9 சிப்போரோன்வரை தொடர்ந்து சென்று ஆசார் ஏனானில் முடியும். இதுவே உங்கள் வடக்கு எல்லையாயிருக்கும்.
И нека иде та међа до Зефрона, и крај нека јој буде код села Енана, то да вам буде северна међа.
10 உங்கள் கிழக்கு எல்லை ஆசார் ஏனானில் இருந்து தொடங்கி சேப்பாம்வரை போகும்.
А с истока повуците себи међу од села Енана до Сефама;
11 அதன் எல்லை சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்குப் பக்கத்திலுள்ள ரிப்லாவுக்குப் போய், கலிலேயாக் கடலின் கிழக்கேயுள்ள சரிவுகள் நெடுகிலும் தொடர்ந்து போகும்.
А од Сефама нека иде та међа к Ривли, с истока Аину, и нека иде даље та међа докле дође до мора Хинерота к истоку;
12 பின்பு அந்த எல்லை யோர்தான் நெடுகிலும் சென்று உப்புக்கடலில் முடிவடையும். “‘எல்லா பக்கங்களிலும் இந்த எல்லைகளைக்கொண்ட உங்கள் நாடு இதுவே’ என்றார்.”
И нека се спусти та међа ка Јордану, и нека изађе на слано море. Та ће земља бити ваша с међама својим унаоколо.
13 மோசே இஸ்ரயேலருக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “இந்த நாட்டைச் சீட்டுப்போட்டு உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள். இதை ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா உத்தரவிட்டிருக்கிறார்.
И каза Мојсије синовима Израиљевим говорећи: То је земља коју ћете добити у наследство жребом, за коју је заповедио Господ да је добије девет племена и по.
14 ஏனெனில் ரூபன் கோத்திரமும், காத் கோத்திரமும், மனாசேயின் பாதி கோத்திரமும், ஏற்கெனவே தங்கள் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
Јер племе синова Рувимових по породицама отаца својих, и племе синова Гадових по породицама отаца својих, и половина племена Манасијиног примише своје наследство.
15 இந்த இரண்டரைக் கோத்திரங்களும் எரிகோவிலுள்ள யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாகச் சூரியன் உதிக்கும் திசையில் தங்கள் உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொண்டார்கள்” என்றான்.
Ова два племена и по примише наследство своје с ову страну Јордана према Јерихону с источне стране.
16 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
Опет рече Господ Мојсију говорећи:
17 “நிலத்தை உங்களுக்கு உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக் கொடுக்கிறவர்கள் ஆசாரியன் எலெயாசாரும் நூனின் மகனாகிய யோசுவாவுமே.
Ово су имена људи који ће вам разделити у наследство земљу: Елеазар свештеник и Исус син Навин.
18 அவர்களுடன் சேர்ந்து நாட்டைப் பங்கிடுவதில் உதவிசெய்வதற்கு நீ ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொரு தலைவனை நியமிக்கவேண்டும்.
И по једног кнеза из сваког племена узмите да дели земљу.
19 “அவர்களுடைய பெயர்கள் என்னவெனில்: “யூதா கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேப்;
А ово су имена тих људи: од племена Јудиног Халев син Јефонијин,
20 சிமியோன் கோத்திரத்திலிருந்து, அம்மியூதினின் மகன் சாமுயேல்;
Од племена синова Симеунових Самуило син Емијудов,
21 பென்யமீன் கோத்திரத்திலிருந்து, கிஸ்லோனின் மகன் எலிதாது;
Од племена Венијаминовог Елдад син Хаслонов,
22 தாண் கோத்திரத்திலிருந்து தலைவனாக யொக்கிலியின் மகன் புக்கி;
Од племена синова Данових кнез Вокор син Јеклинов,
23 யோசேப்பின் மகன் மனாசேயின் கோத்திரத்திலிருந்து தலைவனாக எபோதின் மகன் அன்னியேல்;
Од синова Јосифових: од племена синова Манасијиних кнез Анило син Суфидов,
24 யோசேப்பின் மகன் எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து, தலைவனாக சிப்தானின் மகன் கேமுயேல்;
Од племена синова Јефремових, кнез Камуило син Сафтанов,
25 செபுலோன் கோத்திரத்திலிருந்து, தலைவனாக பர்னாகின் மகன் எலிசாப்பான்;
Од племена синова Завулонових кнез Елисафан син Харнахов,
26 இசக்கார் கோத்திரத்திலிருந்து, தலைவனாக ஆசானின் மகன் பல்த்தியேல்;
Од племена синова Исахарових кнез Фалтило син Озаинов,
27 ஆசேர் கோத்திரத்திலிருந்து, தலைவனாக செலோமியின் மகன் அகியூத்;
Од племена синова Асирових кнез Ахиор син Селемијин,
28 நப்தலி கோத்திரத்திலிருந்து தலைவனாக அம்மியூதின் மகன் பெதாக்கேல் ஆகியோர்” என்றார்.
И од племена Нефталимовог кнез Фадаило син Амијудов.
29 கானான் நாட்டில் இஸ்ரயேலருக்கு நிலத்தை உரிமைச்சொத்தாகப் பங்கிட்டுக்கொடுக்கும்படி யெகோவா கட்டளையிட்ட தலைவர்கள் இவர்களே.
Овима заповеди Господ да разделе наследство синовима Израиљевим у земљи хананској.