< எண்ணாகமம் 2 >

1 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
And Jehovah spoke to Moses and to Aaron, saying,
2 “இஸ்ரயேலர் சபைக் கூடாரத்தைச் சுற்றி சற்றுத் தொலைவில் தங்கள் முகாம்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன்தன் சின்னத்தின்கீழ் குடும்பத்தின் கொடியுடன் இருக்கவேண்டும்.”
The children of Israel shall encamp every one by his standard, with the ensign of their father's house; round about the tent of meeting, afar off, opposite to it shall they encamp.
3 சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன்.
And [for] those encamping eastward toward the sun-rising [there shall be] the standard of the camp of Judah according to their hosts; and the prince of the sons of Judah shall be Nahshon the son of Amminadab;
4 அவனுடைய பிரிவின் தொகை 74,600 பேர்.
and his host, even those that were numbered of them, were seventy-four thousand six hundred.
5 இசக்காரின் கோத்திரத்தார் அவர்களுக்கு அருகில் முகாமிடவேண்டும். சூவாரின் மகன் நெதனெயேல், இசக்கார் மக்களுக்குத் தலைவன்.
And those that encamp next unto him shall be the tribe of Issachar; and the prince of the sons of Issachar shall be Nethaneel the son of Zuar;
6 அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர்.
and his host, even those that were numbered thereof, fifty-four thousand four hundred.
7 செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன்.
[With them shall be] the tribe of Zebulun; and the prince of the sons of Zebulun shall be Eliab the son of Helon;
8 அவனுடைய பிரிவின் தொகை 57,400 பேர்.
and his host, even those that were numbered thereof, fifty-seven thousand four hundred.
9 யூதாவின் பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,86,400 பேர். அவர்களே முதலில் புறப்படுவார்கள்.
All that were numbered of the camp of Judah were a hundred and eighty-six thousand four hundred, according to their hosts. They shall set forth first.
10 தென்புறத்தில் ரூபனின் முகாம் பிரிவுகள், தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். சேதேயூரின் மகன் எலிசூர், ரூபன் மக்களுக்குத் தலைவன்.
The standard of the camp of Reuben shall be southward according to their hosts; and the prince of the sons of Reuben shall be Elizur the son of Shedeur;
11 அவனுடைய பிரிவின் தொகை 46,500 பேர்.
and his host, even those that were numbered thereof, forty-six thousand five hundred.
12 சிமியோன் கோத்திரம் அவர்களை அடுத்து முகாமிடவேண்டும். சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் மக்களுக்குத் தலைவன்.
And those that encamp by him shall be the tribe of Simeon; and the prince of the sons of Simeon shall be Shelumiel the son of Zurishaddai;
13 அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர்.
and his host, even those that were numbered of them, fifty-nine thousand three hundred.
14 காத் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். தேகுயேலின் மகன் எலியாசாப், காத் மக்களுக்குத் தலைவன்.
And [with them shall be] the tribe of Gad; and the prince of the sons of Gad shall be Eliasaph the son of Reuel;
15 அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர்.
and his host, even those that were numbered of them, forty-five thousand six hundred and fifty.
16 ரூபனுடைய பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,51,450 பேர். அவர்கள் இரண்டாவதாகப் புறப்படுவார்கள்.
All that were numbered of the camp of Reuben were a hundred and fifty-one thousand four hundred and fifty, according to their hosts. And they shall set forth second.
17 சபைக் கூடாரமும், லேவியரின் முகாமும் மற்ற முகாம்களுக்கு நடுவிலிருந்து புறப்படும். அவர்கள் தாம் முகாமிட்ட அதே ஒழுங்கின்படி ஒவ்வொருவரும் தன்தன் சின்னத்தின் கீழாகப் போவார்கள்.
And the tent of meeting shall set forth, the camp of the Levites in the midst of the camps; as they encamp, so shall they set forth, every man in his place, according to their standards.
18 மேற்குப் பக்கத்தில் எப்பிராயீமின் முகாமின் பிரிவுகள், தங்கள் கொடியின்கீழ் இருக்கும். அம்மியூதின் மகன் எலிஷாமா, எப்பிராயீம் மக்களுக்குத் தலைவன்.
The standard of the camp of Ephraim according to their hosts shall be westward; and the prince of the sons of Ephraim shall be Elishama the son of Ammihud;
19 அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர்.
and his host, even those that were numbered of them, forty thousand five hundred.
20 மனாசே கோத்திரம் அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும். பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே மக்களுக்குத் தலைவன்.
And by him shall be the tribe of Manasseh; and the prince of the sons of Manasseh shall be Gamaliel the son of Pedahzur;
21 அவனுடைய பிரிவின் தொகை 32,200 பேர்.
and his host, even those that were numbered of them, thirty-two thousand two hundred.
22 பென்யமீன் கோத்திரம் அதற்கு அடுத்ததாக இருக்கும். கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் மக்களுக்குத் தலைவன்.
And [with them shall be] the tribe of Benjamin; and the prince of the sons of Benjamin shall be Abidan the son of Gideoni;
23 அவனுடைய பிரிவின் தொகை 35,400 பேர்.
and his host, even those that were numbered of them, thirty-five thousand four hundred.
24 எப்பிராயீமின் பக்கத்திற்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,08,100 பேர். அவர்கள் மூன்றாவதாகப் புறப்படுவார்கள்.
All that were numbered of the camp of Ephraim were a hundred and eight thousand one hundred, according to their hosts. And they shall set forth third.
25 வடக்குப் பக்கத்தில் தாண் முகாமின் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். அம்மிஷதாயின் மகன் அகியேசேர், தாண் மக்களுக்குத் தலைவன்.
The standard of the camp of Dan shall be northward according to their hosts; and the prince of the sons of Dan shall be Ahiezer the son of Ammishaddai;
26 அவனுடைய பிரிவின் தொகை 62,700 பேர்.
and his host, even those that were numbered of them, sixty-two thousand seven hundred.
27 ஆசேர் கோத்திரம் அவர்களை அடுத்ததாக முகாமிடவேண்டும். ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் மக்களுக்குத் தலைவன்.
And those that encamp by him shall be the tribe of Asher; and the prince of the sons of Asher shall be Pagiel the son of Ocran;
28 அவனுடைய பிரிவின் தொகை 41,500 பேர்.
and his host, even those that were numbered of them, forty-one thousand five hundred.
29 நப்தலி கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏனானின் மகன் அகீரா, நப்தலி மக்களுக்குத் தலைவன்.
And [with them shall be] the tribe of Naphtali; and the prince of the sons of Naphtali shall be Ahira the son of Enan;
30 அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர்.
and his host, even those that were numbered of them, fifty-three thousand four hundred.
31 தாணின் பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதர்களின் மொத்தத்தொகை 1,57,600 பேர். அவர்கள் கடைசியாக தங்கள் கொடிகளின் கீழ் புறப்படுவார்கள்.
All that were numbered of the camp of Dan were a hundred and fifty-seven thousand six hundred. They shall set forth last according to their standards.
32 அவரவருடைய குடும்பங்களின்படி கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்கள் இவர்களே. அவர்களுடைய பிரிவுகளின்படி முகாம்களில் இருந்த எல்லோருடைய எண்ணிக்கை 6,03,550 பேர்.
These are those that were numbered of the children of Israel, according to their fathers' houses: all those that were numbered of the camps, according to their hosts, were six hundred and three thousand five hundred and fifty.
33 ஆனாலும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, லேவியர் மற்ற இஸ்ரயேலருடன் கணக்கிடப்படவில்லை.
But the Levites were not numbered among the children of Israel; as Jehovah had commanded Moses.
34 அப்படியே யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள். அந்த முறையாக அவர்கள் தங்கள் கொடிகளின் கீழே முகாமிட்டு இருந்தார்கள். அவ்விதமாகவே அவர்கள் போகும்போது ஒவ்வொருவரும் தன் வம்சத்துடனும், குடும்பத்துடனும் புறப்பட்டார்கள்.
And the children of Israel did according to all that Jehovah had commanded Moses: so they encamped according to their standards, and so they journeyed, every one according to their families, according to their fathers' houses.

< எண்ணாகமம் 2 >