< நெகேமியா 7 >

1 மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
Bayan an sāke gina katangar na kuma sa ƙofofi a wurarensu, sai aka naɗa masu tsaro, da mawaƙa, da Lawiyawa.
2 எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான்.
Na sa ɗan’uwana Hanani tare da Hananiya shugaban fada aikin riƙon Urushalima, domin shi Hananiya mutum mai mutunci ne, mai tsoron Allah fiye da yawancin mutane.
3 நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.
Na ce musu, “Kada a buɗe ƙofofin Urushalima da sassafe sai rana ta fito sosai. Yayinda matsaran ƙofofi suna aiki, a kulle ƙofofin a sa musu sakata kafin matsaran su tashi, wajen fāɗuwar rana. Ku kuma naɗa mazaunan Urushalima a matsayin masu tsaro, waɗansunsu a wuraren aiki, waɗansun kuma kusa da gidajensu.”
4 இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை.
Birnin Urushalima kuwa tana da fāɗi da girma, amma mutanen da suke zama a cikinta kaɗan ne, ba a kuma gina gidaje da yawa ba tukuna.
5 அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே:
Sai Allahna ya sa a zuciyata in tara manyan gari, shugabanni da talakawa don a rubuta su bisa ga iyalansu. Na sami littafin asali na waɗanda suka fara dawowa. Ga abin da na tarar an rubuta a ciki.
6 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும்
Waɗannan su ne mutanen yankin da suka dawo daga zaman bautar da Nebukadnezzar sarkin Babilon ya kame (sun dawo Urushalima da Yahuda, kowanne zuwa garinsa.
7 செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
Sun dawo tare da Zerubbabel, da Yeshuwa, da Nehemiya, da Azariya, da Ra’amiya, da Nahamani, da Mordekai, da Bilshan, da Misfar, da Bigwai, da Nehum da kuma Ba’ana). Ga jerin mutanen Isra’ila.
8 பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
Zuriyar Farosh mutum 2,172
9 செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
ta Shefatiya 372
10 ஆராகின் சந்ததி 652 பேர்,
ta Ara 652
11 யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
ta Fahat-Mowab (ta wurin Yeshuwa da Yowab) 2,818
12 ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
ta Elam 1,254
13 சத்தூவின் சந்ததி 845 பேர்,
ta Zattu 845
14 சக்காயின் சந்ததி 760 பேர்,
ta Zakkai 760
15 பின்னூயியின் சந்ததி 648 பேர்,
ta Binnuyi 648
16 பெபாயின் சந்ததி 628 பேர்,
ta Bebai 628
17 அஸ்காதின் சந்ததி 2,322 பேர்,
ta Azgad 2,322
18 அதோனிகாமின் சந்ததி 667 பேர்,
ta Adonikam 667
19 பிக்வாயின் சந்ததி 2,067 பேர்,
ta Bigwai 2,067
20 ஆதீனின் சந்ததி 655 பேர்,
ta Adin 655
21 எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
ta Ater (ta wurin Hezekiya) 98
22 ஆசூமின் சந்ததி 328 பேர்,
ta Hashum 328
23 பேஸாயின் சந்ததி 324 பேர்,
ta Bezai 324
24 ஆரீப்பின் சந்ததி 112 பேர்,
ta Harif 112
25 கிபியோனின் சந்ததி 95 பேர்.
ta Gibeyon 95.
26 பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,
Mutanen Betlehem da na Netofa 188
27 ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
na Anatot 128
28 பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
na Bet-Azmawet 42
29 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
na Kiriyat Yeyarim, Kefira da na Beyerot 743
30 ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
na Rama da na Geba 621
31 மிக்மாஸின் மனிதர் 122 பேர்,
na Mikmash 122
32 பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,
na Betel da na Ai 123
33 மற்ற நேபோவின் மனிதர் 52 பேர்,
na ɗayan Nebo 52
34 மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
na ɗayan Elam 1,254
35 ஆரீமின் மனிதர் 320 பேர்,
na Harim 2 320
36 எரிகோவின் மனிதர் 345 பேர்,
na Yeriko 345
37 லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,
na Lod, da na Hadid, da na Ono 721
38 செனாகாவின் மனிதர் 3,930 பேர்.
na Sena’a 3,930.
39 ஆசாரியர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,
Ga zuriyar Firistoci. Zuriyar Yedahiya (ta wurin iyalin Yeshuwa) 973
40 இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
ta Immer 1,052
41 பஸ்கூரின் சந்ததி 1,247 பேர்,
ta Fashhur 1,247
42 ஆரீமின் சந்ததி 1,017 பேர்.
ta Harim 1,017.
43 லேவியர்கள்: ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர்.
Ga zuriyar Lawiyawa. Zuriyar Yeshuwa da Kadmiyel (ta wurin Hodeba) 74.
44 பாடகர்கள்: ஆசாப்பின் சந்ததி 148 பேர்.
Mawaƙa. Zuriyar Asaf mutum 148.
45 வாசல் காவலர்கள்: சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர்.
Ga zuriyar Matsaran Ƙofofi. Zuriyar Shallum, Ater, Talmon, Akkub, Hatita da Shobai 138.
46 ஆலய பணியாட்கள்: சீகா, அசுபா, தபாயோத்,
Ma’aikatan haikali. Zuriyar Ziha, Hasufa, Tabbawot,
47 கேரோசு, சீயா, பாதோன்,
da ta Keros, da ta Siya, da ta Fadon,
48 லெபானா, அகாபா, சல்மாயி,
da ta Lebana, da ta Hagaba, da ta Shalmai,
49 ஆனான், கித்தேல், காகார்,
da ta Hanan, da ta Giddel, da ta Gahar,
50 ரயாயா, ரேசீன், நெக்கோதா,
da ta Reyahiya, da ta Rezin, da ta Nekoda,
51 காசாம், ஊசா, பாசெயா,
da ta Gazzam, da ta Uzza, da ta Faseya,
52 பேசாய், மெயூனீம், நெபுசீம்,
da ta Besai, da ta Meyunawa, da ta Nefussiyawa,
53 பக்பூக், அகுபா, அர்கூர்,
da ta Bakbuk, da ta Hakufa, da ta Harhur,
54 பஸ்லுத், மெகிதா, அர்ஷா,
da ta Bazlit, da ta Mehida, da ta Harsha,
55 பர்கோஸ், சிசெரா, தேமா,
da ta Barkos, da ta Sisera, da ta Tema,
56 நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.
da ta Neziya, da kuma ta Hatifa.
57 சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: சோதாய், சொபெரேத், பெரிதா,
Ga zuriyar bayin Solomon. Zuriyar Sotai, da ta Soferet, da ta Ferida,
58 யாலா, தர்கோன், கித்தேல்,
da ta Ya’ala, da ta Darkon, da ta Giddel,
59 செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.
Shefatiya, Hattil, Fokeret-Hazzebayim, da Amon.
60 ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர்.
Zuriyar ma’aikatan haikali da ta bayin Solomon su 392.
61 பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
Waɗansu sun hauro daga garuruwan Tel-Mela, Tel-Harsha, Kerub, Addon da Immer, amma ba su iya nuna cewa iyalansu su zuriyar Isra’ila ce ba,
62 அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.
zuriyar Delahiya, Tobiya, da Nekoda 642.
63 ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.
Na wajen firistoci kuwa su ne, Zuriyar Hobahiya, da ta Hakkoz, da ta Barzillai (wani mutumin da ya auri’yar Barzillai mutumin Gileyad, aka kuma kira shi da wannan suna).
64 இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
Waɗannan ne aka nemi sunayensu a cikin tarihin asalin iyalai, amma ba a same su a ciki ba, saboda haka aka hana su shiga cikin firistoci, sun zama kamar marasa tsarki.
65 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
Sai gwamna ya umarce su kada su ci wani abinci mafi tsarki, sai akwai firist da zai nemi nufin Ubangiji ta wurin Urim da Tummim.
66 எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
Yawan jama’ar duka ya kai mutum 42,360,
67 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர்.
ban da bayinsu maza da mata 7,337. Suna kuma da mawaƙa maza da mata 245.
68 மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
Akwai dawakai 736, alfadarai 245
69 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.
raƙuma 435, da kuma jakuna 6,720.
70 குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும், 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான்.
Waɗansu shugabannin iyalai suka ba da kyautai domin taimakon aiki. Gwamna ya ba da darik 1,000 na zinariya, kwanoni 50, da riguna 530 don firistoci.
71 சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும், 2,200 மினா வெள்ளியையும் கொடுத்தார்கள்.
Waɗansu shugabannin iyalai sun ba da darik 20,000 na zinariya da mina 2,200 na azurfa don aiki.
72 மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.
Jimillar da sauran mutane suka bayar ta kai darik 20,000 na zinariya, minas 2,000 na azurfa, da riguna sittin da bakwai don firistoci.
73 ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,
Firistoci, da Lawiyawa, da matsaran ƙofofi, da mawaƙa, da ma’aikatan haikali tare da waɗansu mutane da kuma sauran mutanen Isra’ila, suka zauna a garuruwansu. Da wata na bakwai ya zo, Isra’ilawa kuwa sun riga sun zauna a garuruwansu,

< நெகேமியா 7 >