< மத்தேயு 6 >
1 “நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது.
สาวธานา ภวต, มนุชานฺ ทรฺศยิตุํ เตษำ โคจเร ธรฺมฺมกรฺมฺม มา กุรุต, ตถา กฺฤเต ยุษฺมากํ สฺวรฺคสฺถปิตุ: สกาศาตฺ กิญฺจน ผลํ น ปฺราปฺสฺยถฯ
2 “ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள்.
ตฺวํ ยทา ททาสิ ตทา กปฏิโน ชนา ยถา มนุเชภฺย: ปฺรศํสำ ปฺราปฺตุํ ภชนภวเน ราชมารฺเค จ ตูรีํ วาทยนฺติ, ตถา มา กุริ, อหํ ตุภฺยํ ยถารฺถํ กถยามิ, เต สฺวกายํ ผลมฺ อลภนฺตฯ
3 ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும்.
กินฺตุ ตฺวํ ยทา ททาสิ, ตทา นิชทกฺษิณกโร ยตฺ กโรติ, ตทฺ วามกรํ มา ชฺญาปยฯ
4 அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
เตน ตว ทานํ คุปฺตํ ภวิษฺยติ ยสฺตุ ตว ปิตา คุปฺตทรฺศี, ส ปฺรกาศฺย ตุภฺยํ ผลํ ทาสฺยติฯ
5 “நீங்கள் மன்றாடும்போது, வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம், ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள்.
อปรํ ยทา ปฺรารฺถยเส, ตทา กปฏินอิว มา กุรุ, ยสฺมาตฺ เต ภชนภวเน ราชมารฺคสฺย โกเณ ติษฺฐนฺโต โลกานฺ ทรฺศยนฺต: ปฺรารฺถยิตุํ ปฺรียนฺเต; อหํ ยุษฺมานฺ ตถฺยํ วทามิ, เต สฺวกียผลํ ปฺราปฺนุวนฺฯ
6 ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
ตสฺมาตฺ ปฺรารฺถนากาเล อนฺตราคารํ ปฺรวิศฺย ทฺวารํ รุทฺวฺวา คุปฺตํ ปศฺยตสฺตว ปิตุ: สมีเป ปฺรารฺถยสฺว; เตน ตว ย: ปิตา คุปฺตทรฺศี, ส ปฺรกาศฺย ตุภฺยํ ผลํ ทาสฺยติ
7 நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
อปรํ ปฺรารฺถนากาเล เทวปูชกาอิว มุธา ปุนรุกฺตึ มา กุรุ, ยสฺมาตฺ เต โพธนฺเต, พหุวารํ กถายำ กถิตายำ เตษำ ปฺรารฺถนา คฺราหิษฺยเตฯ
8 நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார்.
ยูยํ เตษามิว มา กุรุต, ยสฺมาตฺ ยุษฺมากํ ยทฺ ยตฺ ปฺรโยชนํ ยาจนาต: ปฺราเคว ยุษฺมากํ ปิตา ตตฺ ชานาติฯ
9 “ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே: “‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக,
อเตอว ยูยม อีทฺฤกฺ ปฺรารฺถยธฺวํ, เห อสฺมากํ สฺวรฺคสฺถปิต: , ตว นาม ปูชฺยํ ภวตุฯ
10 உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
ตว ราชตฺวํ ภวตุ; ตเวจฺฉา สฺวรฺเค ยถา ตไถว เมทินฺยามปิ สผลา ภวตุฯ
11 எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
อสฺมากํ ปฺรโยชนียมฺ อาหารมฺ อทฺย เทหิฯ
12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
วยํ ยถา นิชาปราธิน: กฺษมามเห, ตไถวาสฺมากมฺ อปราธานฺ กฺษมสฺวฯ
13 எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல், எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’
อสฺมานฺ ปรีกฺษำ มานย, กินฺตุ ปาปาตฺมโน รกฺษ; ราชตฺวํ เคารวํ ปรากฺรม: เอเต สรฺเวฺว สรฺวฺวทา ตว; ตถาสฺตุฯ
14 ஏனெனில், மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார்.
ยทิ ยูยมฺ อเนฺยษามฺ อปราธานฺ กฺษมเธฺว ตรฺหิ ยุษฺมากํ สฺวรฺคสฺถปิตาปิ ยุษฺมานฺ กฺษมิษฺยเต;
15 ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார்.
กินฺตุ ยทิ ยูยมฺ อเนฺยษามฺ อปราธานฺ น กฺษมเธฺว, ตรฺหิ ยุษฺมากํ ชนโกปิ ยุษฺมากมฺ อปราธานฺ น กฺษมิษฺยเตฯ
16 “நீங்கள் உபவாசிக்கும்போது, வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
อปรมฺ อุปวาสกาเล กปฏิโน ชนา มานุษานฺ อุปวาสํ ชฺญาปยิตุํ เสฺวษำ วทนานิ มฺลานานิ กุรฺวฺวนฺติ, ยูยํ ตอิว วิษณวทนา มา ภวต; อหํ ยุษฺมานฺ ตถฺยํ วทามิ เต สฺวกียผลมฺ อลภนฺตฯ
17 ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, உங்கள் முகத்தைக் கழுவுங்கள்.
ยทา ตฺวมฺ อุปวสสิ, ตทา ยถา โลไกสฺตฺวํ อุปวาสีว น ทฺฤศฺยเส, กินฺตุ ตว โย'โคจร: ปิตา เตไนว ทฺฤศฺยเส, ตตฺกฺฤเต นิชศิรสิ ไตลํ มรฺทฺทย วทนญฺจ ปฺรกฺษาลย;
18 அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும். ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
เตน ตว ย: ปิตา คุปฺตทรฺศี ส ปฺรกาศฺย ตุภฺยํ ผลํ ทาสฺยติฯ
19 “நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள்.
อปรํ ยตฺร สฺถาเน กีฏา: กลงฺกาศฺจ กฺษยํ นยนฺติ, เจาราศฺจ สนฺธึ กรฺตฺตยิตฺวา โจรยิตุํ ศกฺนุวนฺติ, ตาทฺฤศฺยำ เมทินฺยำ สฺวารฺถํ ธนํ มา สํจินุตฯ
20 ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள்.
กินฺตุ ยตฺร สฺถาเน กีฏา: กลงฺกาศฺจ กฺษยํ น นยนฺติ, เจาราศฺจ สนฺธึ กรฺตฺตยิตฺวา โจรยิตุํ น ศกฺนุวนฺติ, ตาทฺฤเศ สฺวรฺเค ธนํ สญฺจินุตฯ
21 ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
ยสฺมาตฺ ยตฺร สฺถาเน ยุษฺมำก ธนํ ตไตฺรว ขาเน ยุษฺมากํ มนำสิฯ
22 “கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும்.
โลจนํ เทหสฺย ปฺรทีปกํ, ตสฺมาตฺ ยทิ ตว โลจนํ ปฺรสนฺนํ ภวติ, ตรฺหิ ตว กฺฤตฺสฺนํ วปุ รฺทีปฺติยุกฺตํ ภวิษฺยติฯ
23 ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்!
กินฺตุ โลจเน'ปฺรสนฺเน ตว กฺฤตฺสฺนํ วปุ: ตมิสฺรยุกฺตํ ภวิษฺยติฯ อเตอว ยา ทีปฺติสฺตฺวยิ วิทฺยเต, สา ยทิ ตมิสฺรยุกฺตา ภวติ, ตรฺหิ ตตฺ ตมิสฺรํ กิยนฺ มหตฺฯ
24 “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது.
โกปิ มนุโช เทฺวา ปฺรภู เสวิตุํ น ศกฺโนติ, ยสฺมาทฺ เอกํ สํมนฺย ตทนฺยํ น สมฺมนฺยเต, ยทฺวา เอกตฺร มโน นิธาย ตทนฺยมฺ อวมนฺยเต; ตถา ยูยมปีศฺวรํ ลกฺษฺมีญฺเจตฺยุเภ เสวิตุํ น ศกฺนุถฯ
25 “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்; அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவா?
อปรมฺ อหํ ยุษฺมภฺยํ ตถฺยํ กถยามิ, กึ ภกฺษิษฺยาม: ? กึ ปาสฺยาม: ? อิติ ปฺราณธารณาย มา จินฺตยต; กึ ปริธาสฺยาม: ? อิติ กายรกฺษณาย น จินฺตยต; ภกฺษฺยาตฺ ปฺราณา วสนาญฺจ วปูํษิ กึ เศฺรษฺฐาณิ น หิ?
26 ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா?
วิหายโส วิหงฺคมานฺ วิโลกยต; ไต โรฺนปฺยเต น กฺฤตฺยเต ภาณฺฑาคาเร น สญฺจียเต'ปิ; ตถาปิ ยุษฺมากํ สฺวรฺคสฺถ: ปิตา เตภฺย อาหารํ วิตรติฯ
27 கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும்?
ยูยํ เตภฺย: กึ เศฺรษฺฐา น ภวถ? ยุษฺมากํ กศฺจิตฺ มนุช: จินฺตยนฺ นิชายุษ: กฺษณมปิ วรฺทฺธยิตุํ ศกฺโนติ?
28 “உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை.
อปรํ วสนาย กุตศฺจินฺตยต? เกฺษโตฺรตฺปนฺนานิ ปุษฺปาณิ กถํ วรฺทฺธนฺเต ตทาโลจยตฯ ตานิ ตนฺตูนฺ โนตฺปาทยนฺติ กิมปิ การฺยฺยํ น กุรฺวฺวนฺติ;
29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
ตถาปฺยหํ ยุษฺมานฺ วทามิ, สุเลมานฺ ตาทฺฤคฺ ไอศฺวรฺยฺยวานปิ ตตฺปุษฺปมิว วิภูษิโต นาสีตฺฯ
30 விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு, எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்?
ตสฺมาตฺ กฺษทฺย วิทฺยมานํ ศฺจ: จุลฺลฺยำ นิกฺเษปฺสฺยเต ตาทฺฤศํ ยตฺ เกฺษตฺรสฺถิตํ กุสุมํ ตตฺ ยทีศฺจร อิตฺถํ พิภูษยติ, ตรฺหิ เห โสฺตกปฺรตฺยยิโน ยุษฺมานฺ กึ น ปริธาปยิษฺยติ?
31 எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம்.
ตสฺมาตฺ อสฺมาภิ: กิมตฺสฺยเต? กิญฺจ ปายิษฺยเต? กึ วา ปริธายิษฺยเต, อิติ น จินฺตยตฯ
32 ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
ยสฺมาตฺ เทวารฺจฺจกา อปีติ เจษฺฏนฺเต; เอเตษุ ทฺรเวฺยษุ ปฺรโยชนมสฺตีติ ยุษฺมากํ สฺวรฺคสฺถ: ปิตา ชานาติฯ
33 எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும்.
อเตอว ปฺรถมต อีศฺวรียราชฺยํ ธรฺมฺมญฺจ เจษฺฏธฺวํ, ตต เอตานิ วสฺตูนิ ยุษฺมภฺยํ ปฺรทายิษฺยนฺเตฯ
34 நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும்.
ศฺว: กฺฤเต มา จินฺตยต, ศฺเวอว สฺวยํ สฺวมุทฺทิศฺย จินฺตยิษฺยติ; อทฺยตนี ยา จินฺตา สาทฺยกฺฤเต ปฺรจุรตราฯ