< மத்தேயு 25 >

1 “அந்நாளிலே பரலோக அரசு, பத்து கன்னிகைகள் விளக்குகளை எடுத்துக்கொண்டு மணமகனைச் சந்திக்கப் போனதற்கு ஒப்பாயிருக்கும்.
ଯା ଦଶ କନ୍ୟାଃ ପ୍ରଦୀପାନ୍ ଗୃହ୍ଲତ୍ୟୋ ୱରଂ ସାକ୍ଷାତ୍ କର୍ତ୍ତୁଂ ବହିରିତାଃ, ତାଭିସ୍ତଦା ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟସ୍ୟ ସାଦୃଶ୍ୟଂ ଭୱିଷ୍ୟତି|
2 அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள்.
ତାସାଂ କନ୍ୟାନାଂ ମଧ୍ୟେ ପଞ୍ଚ ସୁଧିଯଃ ପଞ୍ଚ ଦୁର୍ଧିଯ ଆସନ୍|
3 அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.
ଯା ଦୁର୍ଧିଯସ୍ତାଃ ପ୍ରଦୀପାନ୍ ସଙ୍ଗେ ଗୃହୀତ୍ୱା ତୈଲଂ ନ ଜଗୃହୁଃ,
4 ஆனால் புத்தியுள்ள கன்னிகைகளோ தங்கள் விளக்குகளுடன் எண்ணெயையும் பாத்திரங்களில் எடுத்துச் சென்றார்கள்.
କିନ୍ତୁ ସୁଧିଯଃ ପ୍ରଦୀପାନ୍ ପାତ୍ରେଣ ତୈଲଞ୍ଚ ଜଗୃହୁଃ|
5 மணமகன் வருவதற்கு நீண்ட நேரமானபடியால், அவர்கள் எல்லோரும் அயர்ந்து தூங்கிவிட்டார்கள்.
ଅନନ୍ତରଂ ୱରେ ୱିଲମ୍ବିତେ ତାଃ ସର୍ୱ୍ୱା ନିଦ୍ରାୱିଷ୍ଟା ନିଦ୍ରାଂ ଜଗ୍ମୁଃ|
6 “நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார்! அவரை சந்திக்கப் புறப்படுங்கள் புறப்படுங்கள்’ என்ற சத்தம் கேட்டது.
ଅନନ୍ତରମ୍ ଅର୍ଦ୍ଧରାତ୍ରେ ପଶ୍ୟତ ୱର ଆଗଚ୍ଛତି, ତଂ ସାକ୍ଷାତ୍ କର୍ତ୍ତୁଂ ବହିର୍ୟାତେତି ଜନରୱାତ୍
7 “அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.
ତାଃ ସର୍ୱ୍ୱାଃ କନ୍ୟା ଉତ୍ଥାଯ ପ୍ରଦୀପାନ୍ ଆସାଦଯିତୁଂ ଆରଭନ୍ତ|
8 புத்தியில்லாத கன்னிகைகளோ புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்; எங்கள் விளக்குகள் அணைந்து போகின்றன’ என்றார்கள்.
ତତୋ ଦୁର୍ଧିଯଃ ସୁଧିଯ ଊଚୁଃ, କିଞ୍ଚିତ୍ ତୈଲଂ ଦତ୍ତ, ପ୍ରଦୀପା ଅସ୍ମାକଂ ନିର୍ୱ୍ୱାଣାଃ|
9 “அதற்கு புத்தியுள்ள கன்னிகைகள், ‘இல்லை, எங்களிடம் இருக்கும் எண்ணெய் உங்களுக்கும் எங்களுக்கும் போதாமல் போகலாம். எனவே நீங்கள் போய் எண்ணெய் விற்பவர்களிடம், உங்களுக்காக கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
କିନ୍ତୁ ସୁଧିଯଃ ପ୍ରତ୍ୟୱଦନ୍, ଦତ୍ତେ ଯୁଷ୍ମାନସ୍ମାଂଶ୍ଚ ପ୍ରତି ତୈଲଂ ନ୍ୟୂନୀଭୱେତ୍, ତସ୍ମାଦ୍ ୱିକ୍ରେତୃଣାଂ ସମୀପଂ ଗତ୍ୱା ସ୍ୱାର୍ଥଂ ତୈଲଂ କ୍ରୀଣୀତ|
10 “புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்காகப் போகும்போதே மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்த கன்னிகைகள் திருமண விருந்தில் பங்குகொள்ள, அவருடன் உள்ளே சென்றார்கள். கதவோ அடைக்கப்பட்டது.
ତଦା ତାସୁ କ୍ରେତୁଂ ଗତାସୁ ୱର ଆଜଗାମ, ତତୋ ଯାଃ ସଜ୍ଜିତା ଆସନ୍, ତାସ୍ତେନ ସାକଂ ୱିୱାହୀଯଂ ୱେଶ୍ମ ପ୍ରୱିୱିଶୁଃ|
11 “பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குக் கதவைத் திறந்தருளும்!’ என்றார்கள்.
ଅନନ୍ତରଂ ଦ୍ୱାରେ ରୁଦ୍ଧେ ଅପରାଃ କନ୍ୟା ଆଗତ୍ୟ ଜଗଦୁଃ, ହେ ପ୍ରଭୋ, ହେ ପ୍ରଭୋ, ଅସ୍ମାନ୍ ପ୍ରତି ଦ୍ୱାରଂ ମୋଚଯ|
12 “ஆனால் அவரோ, ‘நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உங்களை எனக்குத் தெரியாது’ எனப் பதிலளித்தார்.
କିନ୍ତୁ ସ ଉକ୍ତୱାନ୍, ତଥ୍ୟଂ ୱଦାମି, ଯୁଷ୍ମାନହଂ ନ ୱେଦ୍ମି|
13 “எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் மானிடமகனாகிய நான் திரும்பிவரும் நாளையும் வேளையையும் நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.
ଅତୋ ଜାଗ୍ରତଃ ସନ୍ତସ୍ତିଷ୍ଠତ, ମନୁଜସୁତଃ କସ୍ମିନ୍ ଦିନେ କସ୍ମିନ୍ ଦଣ୍ଡେ ୱାଗମିଷ୍ୟତି, ତଦ୍ ଯୁଷ୍ମାଭି ର୍ନ ଜ୍ଞାଯତେ|
14 “மேலும், பரலோக அரசு பயணம் செல்கின்ற ஒருவன் தனது வேலைக்காரர்களை அழைத்துத் தனது சொத்துக்களை அவர்களிடம் ஒப்புவித்ததுபோல் இருக்கும்.
ଅପରଂ ସ ଏତାଦୃଶଃ କସ୍ୟଚିତ୍ ପୁଂସସ୍ତୁଲ୍ୟଃ, ଯୋ ଦୂରଦେଶଂ ପ୍ରତି ଯାତ୍ରାକାଲେ ନିଜଦାସାନ୍ ଆହୂଯ ତେଷାଂ ସ୍ୱସ୍ୱସାମର୍ଥ୍ୟାନୁରୂପମ୍
15 ஒருவனுக்கு அவன் ஐந்து பொற்காசும், இன்னொருவனுக்கு இரண்டு பொற்காசும், வேறொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுத்தான். இவ்விதமாய் ஒவ்வொருவனுடைய திறமைக்கு ஏற்றபடியே கொடுத்தான். பின்பு அவன் பயணம் மேற்கொண்டான்.
ଏକସ୍ମିନ୍ ମୁଦ୍ରାଣାଂ ପଞ୍ଚ ପୋଟଲିକାଃ ଅନ୍ୟସ୍ମିଂଶ୍ଚ ଦ୍ୱେ ପୋଟଲିକେ ଅପରସ୍ମିଂଶ୍ଚ ପୋଟଲିକୈକାମ୍ ଇତ୍ଥଂ ପ୍ରତିଜନଂ ସମର୍ପ୍ୟ ସ୍ୱଯଂ ପ୍ରୱାସଂ ଗତୱାନ୍|
16 ஐந்து பொற்காசைப் பெற்றவன் உடனேபோய், இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதிக்க அதை முதலீடு செய்தான்.
ଅନନ୍ତରଂ ଯୋ ଦାସଃ ପଞ୍ଚ ପୋଟଲିକାଃ ଲବ୍ଧୱାନ୍, ସ ଗତ୍ୱା ୱାଣିଜ୍ୟଂ ୱିଧାଯ ତା ଦ୍ୱିଗୁଣୀଚକାର|
17 அவ்வாறே இரண்டு பொற்காசைப் பெற்றவன், இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்தான்.
ଯଶ୍ଚ ଦାସୋ ଦ୍ୱେ ପୋଟଲିକେ ଅଲଭତ, ସୋପି ତା ମୁଦ୍ରା ଦ୍ୱିଗୁଣୀଚକାର|
18 ஆனால் ஒரு பொற்காசைப் பெற்றவனோ புறப்பட்டுப்போய், நிலத்திலே ஒரு குழியைத் தோண்டி, தன் எஜமானின் காசைப் புதைத்து வைத்தான்.
କିନ୍ତୁ ଯୋ ଦାସ ଏକାଂ ପୋଟଲିକାଂ ଲବ୍ଧୱାନ୍, ସ ଗତ୍ୱା ଭୂମିଂ ଖନିତ୍ୱା ତନ୍ମଧ୍ୟେ ନିଜପ୍ରଭୋସ୍ତା ମୁଦ୍ରା ଗୋପଯାଞ୍ଚକାର|
19 “நீண்டகாலத்திற்குப்பின் அந்த வேலைக்காரர்களின் எஜமான் திரும்பிவந்து, அவர்களிடம் கணக்கு கொடுக்கும்படிக் கேட்டான்.
ତଦନନ୍ତରଂ ବହୁତିଥେ କାଲେ ଗତେ ତେଷାଂ ଦାସାନାଂ ପ୍ରଭୁରାଗତ୍ୟ ତୈର୍ଦାସୈଃ ସମଂ ଗଣଯାଞ୍ଚକାର|
20 ஐந்து பொற்காசைப் பெற்றவன், இன்னும் ஐந்து பொற்காசைக் கொண்டுவந்தான். அவன், ‘ஐயா, நீர் ஐந்து பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர். பாரும், நான் இன்னும் ஐந்து பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
ତଦାନୀଂ ଯଃ ପଞ୍ଚ ପୋଟଲିକାଃ ପ୍ରାପ୍ତୱାନ୍ ସ ତା ଦ୍ୱିଗୁଣୀକୃତମୁଦ୍ରା ଆନୀଯ ଜଗାଦ; ହେ ପ୍ରଭୋ, ଭୱତା ମଯି ପଞ୍ଚ ପୋଟଲିକାଃ ସମର୍ପିତାଃ, ପଶ୍ୟତୁ, ତା ମଯା ଦ୍ୱିଗୁଣୀକୃତାଃ|
21 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே! நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
ତଦାନୀଂ ତସ୍ୟ ପ୍ରଭୁସ୍ତମୁୱାଚ, ହେ ଉତ୍ତମ ୱିଶ୍ୱାସ୍ୟ ଦାସ, ତ୍ୱଂ ଧନ୍ୟୋସି, ସ୍ତୋକେନ ୱିଶ୍ୱାସ୍ୟୋ ଜାତଃ, ତସ୍ମାତ୍ ତ୍ୱାଂ ବହୁୱିତ୍ତାଧିପଂ କରୋମି, ତ୍ୱଂ ସ୍ୱପ୍ରଭୋଃ ସୁଖସ୍ୟ ଭାଗୀ ଭୱ|
22 “இரண்டு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் இரண்டு பொற்காசை என்னிடம் ஒப்புவித்தீர்; பாரும், நான் இன்னும் இரண்டு பொற்காசை சம்பாதித்துள்ளேன்’ என்றான்.
ତତୋ ଯେନ ଦ୍ୱେ ପୋଟଲିକେ ଲବ୍ଧେ ସୋପ୍ୟାଗତ୍ୟ ଜଗାଦ, ହେ ପ୍ରଭୋ, ଭୱତା ମଯି ଦ୍ୱେ ପୋଟଲିକେ ସମର୍ପିତେ, ପଶ୍ୟତୁ ତେ ମଯା ଦ୍ୱିଗୁଣୀକୃତେ|
23 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், உண்மையுள்ள நல்ல வேலைக்காரனே, நீ கொஞ்சக் காரியத்தில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்; அதனால் நான் உன்னை அநேக காரியங்களுக்குப் பொறுப்பாக வைப்பேன். வந்து உனது எஜமானின் மகிழ்ச்சியில் பங்குகொள்’ என்றான்.
ତେନ ତସ୍ୟ ପ୍ରଭୁସ୍ତମୱୋଚତ୍, ହେ ଉତ୍ତମ ୱିଶ୍ୱାସ୍ୟ ଦାସ, ତ୍ୱଂ ଧନ୍ୟୋସି, ସ୍ତୋକେନ ୱିଶ୍ୱାସ୍ୟୋ ଜାତଃ, ତସ୍ମାତ୍ ତ୍ୱାଂ ବହୁଦ୍ରୱିଣାଧିପଂ କରୋମି, ତ୍ୱଂ ନିଜପ୍ରଭୋଃ ସୁଖସ୍ୟ ଭାଗୀ ଭୱ|
24 “பின்பு ஒரு பொற்காசைப் பெற்றவனும் வந்தான். அவன், ‘ஐயா, நீர் கடினமுள்ள மனிதர் என்பதை நான் அறிவேன். நீர் விதைக்காதிருந்தும் அவ்விடத்தில் அறுவடை செய்கிறவர் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாதிருந்தும் அவ்விடத்திலிருந்து அள்ளிச் சேர்க்கிறவர் என்றும் அறிவேன்.
ଅନନ୍ତରଂ ଯ ଏକାଂ ପୋଟଲିକାଂ ଲବ୍ଧୱାନ୍, ସ ଏତ୍ୟ କଥିତୱାନ୍, ହେ ପ୍ରଭୋ, ତ୍ୱାଂ କଠିନନରଂ ଜ୍ଞାତୱାନ୍, ତ୍ୱଯା ଯତ୍ର ନୋପ୍ତଂ, ତତ୍ରୈୱ କୃତ୍ୟତେ, ଯତ୍ର ଚ ନ କୀର୍ଣଂ, ତତ୍ରୈୱ ସଂଗୃହ୍ୟତେ|
25 எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான்.
ଅତୋହଂ ସଶଙ୍କଃ ସନ୍ ଗତ୍ୱା ତୱ ମୁଦ୍ରା ଭୂମଧ୍ୟେ ସଂଗୋପ୍ୟ ସ୍ଥାପିତୱାନ୍, ପଶ୍ୟ, ତୱ ଯତ୍ ତଦେୱ ଗୃହାଣ|
26 “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘கொடியவனே, சோம்பேறியான வேலைக்காரனே, நான் ஒரு இடத்தில் விதைக்காமல் அங்கு அறுவடை செய்கிறவன் என்றும், ஒரு இடத்தில் விதைகளைத் தூவாமல் அங்கு அள்ளிச் சேர்க்கிறவன் என்றும் நீ அறிந்திருந்தாயே.
ତଦା ତସ୍ୟ ପ୍ରଭୁଃ ପ୍ରତ୍ୟୱଦତ୍ ରେ ଦୁଷ୍ଟାଲସ ଦାସ, ଯତ୍ରାହଂ ନ ୱପାମି, ତତ୍ର ଛିନଦ୍ମି, ଯତ୍ର ଚ ନ କିରାମି, ତତ୍ରେୱ ସଂଗୃହ୍ଲାମୀତି ଚେଦଜାନାସ୍ତର୍ହି
27 அப்படியானால், நீ என் காசை வங்கியில் போட்டு வைத்திருக்கலாமே. அப்படி நீ செய்திருந்தால், நான் திரும்பி வரும்போது, அதை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே’ என்றான்.
ୱଣିକ୍ଷୁ ମମ ୱିତ୍ତାର୍ପଣଂ ତୱୋଚିତମାସୀତ୍, ଯେନାହମାଗତ୍ୟ ୱୃଦ୍ୱ୍ୟା ସାକଂ ମୂଲମୁଦ୍ରାଃ ପ୍ରାପ୍ସ୍ୟମ୍|
28 “அவன், ‘அந்த ஒரு காசை அவனிடமிருந்து எடுத்து, அதைப் பத்து காசை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்.
ଅତୋସ୍ମାତ୍ ତାଂ ପୋଟଲିକାମ୍ ଆଦାଯ ଯସ୍ୟ ଦଶ ପୋଟଲିକାଃ ସନ୍ତି ତସ୍ମିନ୍ନର୍ପଯତ|
29 ஏனெனில் இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும், அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
ଯେନ ୱର୍ଦ୍ୱ୍ୟତେ ତସ୍ମିନ୍ନୈୱାର୍ପିଷ୍ୟତେ, ତସ୍ୟୈୱ ଚ ବାହୁଲ୍ୟଂ ଭୱିଷ୍ୟତି, କିନ୍ତୁ ଯେନ ନ ୱର୍ଦ୍ୱ୍ୟତେ, ତସ୍ୟାନ୍ତିକେ ଯତ୍ କିଞ୍ଚନ ତିଷ୍ଠତି, ତଦପି ପୁନର୍ନେଷ୍ୟତେ|
30 அந்த பயனற்ற வேலைக்காரனை வெளியே தள்ளுங்கள். பற்கடிப்பும் அழுகையும் இருக்கும் இருளிலே தள்ளிப்போடுங்கள்’ என்றான்.
ଅପରଂ ଯୂଯଂ ତମକର୍ମ୍ମଣ୍ୟଂ ଦାସଂ ନୀତ୍ୱା ଯତ୍ର ସ୍ଥାନେ କ୍ରନ୍ଦନଂ ଦନ୍ତଘର୍ଷଣଞ୍ଚ ୱିଦ୍ୟେତେ, ତସ୍ମିନ୍ ବହିର୍ଭୂତତମସି ନିକ୍ଷିପତ|
31 “மானிடமகனாகிய நான் எனது மகிமையில் வரும்போது, தூதர்கள் எல்லோரும் என்னுடன் வருவார்கள்; நான் பரலோக மகிமையுடன் எனது அரியணையில் அமர்ந்திருப்பேன்.
ଯଦା ମନୁଜସୁତଃ ପୱିତ୍ରଦୂତାନ୍ ସଙ୍ଗିନଃ କୃତ୍ୱା ନିଜପ୍ରଭାୱେନାଗତ୍ୟ ନିଜତେଜୋମଯେ ସିଂହାସନେ ନିୱେକ୍ଷ୍ୟତି,
32 எல்லா ஜனத்தாரும் எனக்கு முன்பாக ஒன்றுசேர்க்கப்படுவார்கள். மேய்ப்பன் ஒருவன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல், மக்களையும் நான் ஒருவரிலிருந்து ஒருவரை வேறு பிரிப்பேன்.
ତଦା ତତ୍ସମ୍ମୁଖେ ସର୍ୱ୍ୱଜାତୀଯା ଜନା ସଂମେଲିଷ୍ୟନ୍ତି| ତତୋ ମେଷପାଲକୋ ଯଥା ଛାଗେଭ୍ୟୋଽୱୀନ୍ ପୃଥକ୍ କରୋତି ତଥା ସୋପ୍ୟେକସ୍ମାଦନ୍ୟମ୍ ଇତ୍ଥଂ ତାନ୍ ପୃଥକ କୃତ୍ୱାୱୀନ୍
33 நான் செம்மறியாடுகளை எனது வலதுபக்கத்தில் நிறுத்துவேன், வெள்ளாடுகளை எனது இடதுபக்கத்தில் நிறுத்துவேன்.
ଦକ୍ଷିଣେ ଛାଗାଂଶ୍ଚ ୱାମେ ସ୍ଥାପଯିଷ୍ୟତି|
34 “அப்பொழுது நான் வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே வாருங்கள்; உலகம் படைக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற அரசை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
ତତଃ ପରଂ ରାଜା ଦକ୍ଷିଣସ୍ଥିତାନ୍ ମାନୱାନ୍ ୱଦିଷ୍ୟତି, ଆଗଚ୍ଛତ ମତ୍ତାତସ୍ୟାନୁଗ୍ରହଭାଜନାନି, ଯୁଷ୍ମତ୍କୃତ ଆ ଜଗଦାରମ୍ଭତ୍ ଯଦ୍ ରାଜ୍ୟମ୍ ଆସାଦିତଂ ତଦଧିକୁରୁତ|
35 ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன், அப்பொழுது எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்; நான் அந்நியனாய் இருந்தேன், என்னை நீங்கள் உங்கள் வீட்டிற்குள் அழைத்தீர்கள்;
ଯତୋ ବୁଭୁକ୍ଷିତାଯ ମହ୍ୟଂ ଭୋଜ୍ୟମ୍ ଅଦତ୍ତ, ପିପାସିତାଯ ପେଯମଦତ୍ତ, ୱିଦେଶିନଂ ମାଂ ସ୍ୱସ୍ଥାନମନଯତ,
36 நான் உடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுத்தீர்கள்; நான் வியாதியாய் இருந்தேன், நீங்கள் என்னை கவனித்துக் கொண்டீர்கள்; நான் சிறையில் இருந்தேன், அப்பொழுது என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்று சொல்வார்.
ୱସ୍ତ୍ରହୀନଂ ମାଂ ୱସନଂ ପର୍ୟ୍ୟଧାପଯତ, ପୀଡୀତଂ ମାଂ ଦ୍ରଷ୍ଟୁମାଗଚ୍ଛତ, କାରାସ୍ଥଞ୍ଚ ମାଂ ୱୀକ୍ଷିତୁମ ଆଗଚ୍ଛତ|
37 “அப்பொழுது நீதிமான்கள் என்னிடம், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு, உணவு கொடுத்தோம், அல்லது தாகம் உள்ளவராகக் கண்டு, குடிக்கக் கொடுத்தோம்?
ତଦା ଧାର୍ମ୍ମିକାଃ ପ୍ରତିୱଦିଷ୍ୟନ୍ତି, ହେ ପ୍ରଭୋ, କଦା ତ୍ୱାଂ କ୍ଷୁଧିତଂ ୱୀକ୍ଷ୍ୟ ୱଯମଭୋଜଯାମ? ୱା ପିପାସିତଂ ୱୀକ୍ଷ୍ୟ ଅପାଯଯାମ?
38 எப்பொழுது உம்மை அந்நியராயிருக்கக் கண்டு, எங்கள் வீட்டிற்குள் அழைத்தோம், அல்லது உடை இல்லாதவராகக் கண்டு, உடை கொடுத்தோம்?
କଦା ୱା ତ୍ୱାଂ ୱିଦେଶିନଂ ୱିଲୋକ୍ୟ ସ୍ୱସ୍ଥାନମନଯାମ? କଦା ୱା ତ୍ୱାଂ ନଗ୍ନଂ ୱୀକ୍ଷ୍ୟ ୱସନଂ ପର୍ୟ୍ୟଧାପଯାମ?
39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகக் கண்டோம், அல்லது உம்மைச் சிறையில் வந்து பார்த்தோம்?’ என்பார்கள்.
କଦା ୱା ତ୍ୱାଂ ପୀଡିତଂ କାରାସ୍ଥଞ୍ଚ ୱୀକ୍ଷ୍ୟ ତ୍ୱଦନ୍ତିକମଗଚ୍ଛାମ?
40 “அதற்கு நான், ‘உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனது சகோதரரில் மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று பதிலளிப்பேன்.
ତଦାନୀଂ ରାଜା ତାନ୍ ପ୍ରତିୱଦିଷ୍ୟତି, ଯୁଷ୍ମାନହଂ ସତ୍ୟଂ ୱଦାମି, ମମୈତେଷାଂ ଭ୍ରାତୃଣାଂ ମଧ୍ୟେ କଞ୍ଚନୈକଂ କ୍ଷୁଦ୍ରତମଂ ପ୍ରତି ଯଦ୍ ଅକୁରୁତ, ତନ୍ମାଂ ପ୍ରତ୍ୟକୁରୁତ|
41 “பின்பு நான் எனது இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள். பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட நித்திய நெருப்புக்குள் போங்கள்’” என்று சொல்வேன். (aiōnios g166)
ପଶ୍ଚାତ୍ ସ ୱାମସ୍ଥିତାନ୍ ଜନାନ୍ ୱଦିଷ୍ୟତି, ରେ ଶାପଗ୍ରସ୍ତାଃ ସର୍ୱ୍ୱେ, ଶୈତାନେ ତସ୍ୟ ଦୂତେଭ୍ୟଶ୍ଚ ଯୋଽନନ୍ତୱହ୍ନିରାସାଦିତ ଆସ୍ତେ, ଯୂଯଂ ମଦନ୍ତିକାତ୍ ତମଗ୍ନିଂ ଗଚ୍ଛତ| (aiōnios g166)
42 ஏனெனில், நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குக் குடிக்கக்கொடுக்கவில்லை;
ଯତୋ କ୍ଷୁଧିତାଯ ମହ୍ୟମାହାରଂ ନାଦତ୍ତ, ପିପାସିତାଯ ମହ୍ୟଂ ପେଯଂ ନାଦତ୍ତ,
43 நான் அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்குள் அழைக்கவில்லை; நான் உடையில்லாதவனாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உடை கொடுக்கவில்லை; நான் வியாதியாயும் சிறையிலும் இருந்தேன், நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை, என்று சொல்வார்.
ୱିଦେଶିନଂ ମାଂ ସ୍ୱସ୍ଥାନଂ ନାନଯତ, ୱସନହୀନଂ ମାଂ ୱସନଂ ନ ପର୍ୟ୍ୟଧାପଯତ, ପୀଡିତଂ କାରାସ୍ଥଞ୍ଚ ମାଂ ୱୀକ୍ଷିତୁଂ ନାଗଚ୍ଛତ|
44 “அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நாங்கள் உம்மை பசியுள்ளவராகவும் தாகமுள்ளவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை அந்நியராகவும் உடையில்லாதவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருப்பவராகவும் கண்டோம்? எப்பொழுது நாங்கள் உமக்கு உதவி செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.
ତଦା ତେ ପ୍ରତିୱଦିଷ୍ୟନ୍ତି, ହେ ପ୍ରଭୋ, କଦା ତ୍ୱାଂ କ୍ଷୁଧିତଂ ୱା ପିପାସିତଂ ୱା ୱିଦେଶିନଂ ୱା ନଗ୍ନଂ ୱା ପୀଡିତଂ ୱା କାରାସ୍ଥଂ ୱୀକ୍ଷ୍ୟ ତ୍ୱାଂ ନାସେୱାମହି?
45 “அதற்கு நான் அவர்களுக்கு, ‘உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதை செய்யவில்லையோ, அதை எனக்கே செய்யவில்லை’ என்பேன்.
ତଦା ସ ତାନ୍ ୱଦିଷ୍ୟତି, ତଥ୍ୟମହଂ ଯୁଷ୍ମାନ୍ ବ୍ରୱୀମି, ଯୁଷ୍ମାଭିରେଷାଂ କଞ୍ଚନ କ୍ଷୋଦିଷ୍ଠଂ ପ୍ରତି ଯନ୍ନାକାରି, ତନ୍ମାଂ ପ୍ରତ୍ୟେୱ ନାକାରି|
46 “அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” (aiōnios g166)
ପଶ୍ଚାଦମ୍ୟନନ୍ତଶାସ୍ତିଂ କିନ୍ତୁ ଧାର୍ମ୍ମିକା ଅନନ୍ତାଯୁଷଂ ଭୋକ୍ତୁଂ ଯାସ୍ୟନ୍ତି| (aiōnios g166)

< மத்தேயு 25 >