< மத்தேயு 18 >
1 அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
ತದಾನೀಂ ಶಿಷ್ಯಾ ಯೀಶೋಃ ಸಮೀಪಮಾಗತ್ಯ ಪೃಷ್ಟವನ್ತಃ ಸ್ವರ್ಗರಾಜ್ಯೇ ಕಃ ಶ್ರೇಷ್ಠಃ?
2 அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார்.
ತತೋ ಯೀಶುಃ ಕ್ಷುದ್ರಮೇಕಂ ಬಾಲಕಂ ಸ್ವಸಮೀಪಮಾನೀಯ ತೇಷಾಂ ಮಧ್ಯೇ ನಿಧಾಯ ಜಗಾದ,
3 அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள்.
ಯುಷ್ಮಾನಹಂ ಸತ್ಯಂ ಬ್ರವೀಮಿ, ಯೂಯಂ ಮನೋವಿನಿಮಯೇನ ಕ್ಷುದ್ರಬಾಲವತ್ ನ ಸನ್ತಃ ಸ್ವರ್ಗರಾಜ್ಯಂ ಪ್ರವೇಷ್ಟುಂ ನ ಶಕ್ನುಥ|
4 ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார்.
ಯಃ ಕಶ್ಚಿದ್ ಏತಸ್ಯ ಕ್ಷುದ್ರಬಾಲಕಸ್ಯ ಸಮಮಾತ್ಮಾನಂ ನಮ್ರೀಕರೋತಿ, ಸಏವ ಸ್ವರ್ಗರಾಜಯೇ ಶ್ರೇಷ್ಠಃ|
5 “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
ಯಃ ಕಶ್ಚಿದ್ ಏತಾದೃಶಂ ಕ್ಷುದ್ರಬಾಲಕಮೇಕಂ ಮಮ ನಾಮ್ನಿ ಗೃಹ್ಲಾತಿ, ಸ ಮಾಮೇವ ಗೃಹ್ಲಾತಿ|
6 “என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
ಕಿನ್ತು ಯೋ ಜನೋ ಮಯಿ ಕೃತವಿಶ್ವಾಸಾನಾಮೇತೇಷಾಂ ಕ್ಷುದ್ರಪ್ರಾಣಿನಾಮ್ ಏಕಸ್ಯಾಪಿ ವಿಧ್ನಿಂ ಜನಯತಿ, ಕಣ್ಠಬದ್ಧಪೇಷಣೀಕಸ್ಯ ತಸ್ಯ ಸಾಗರಾಗಾಧಜಲೇ ಮಜ್ಜನಂ ಶ್ರೇಯಃ|
7 மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ!
ವಿಘ್ನಾತ್ ಜಗತಃ ಸನ್ತಾಪೋ ಭವಿಷ್ಯತಿ, ವಿಘ್ನೋಽವಶ್ಯಂ ಜನಯಿಷ್ಯತೇ, ಕಿನ್ತು ಯೇನ ಮನುಜೇನ ವಿಘ್ನೋ ಜನಿಷ್ಯತೇ ತಸ್ಯೈವ ಸನ್ತಾಪೋ ಭವಿಷ್ಯತಿ|
8 உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
ತಸ್ಮಾತ್ ತವ ಕರಶ್ಚರಣೋ ವಾ ಯದಿ ತ್ವಾಂ ಬಾಧತೇ, ತರ್ಹಿ ತಂ ಛಿತ್ತ್ವಾ ನಿಕ್ಷಿಪ, ದ್ವಿಕರಸ್ಯ ದ್ವಿಪದಸ್ಯ ವಾ ತವಾನಪ್ತವಹ್ನೌ ನಿಕ್ಷೇಪಾತ್, ಖಞ್ಜಸ್ಯ ವಾ ಛಿನ್ನಹಸ್ತಸ್ಯ ತವ ಜೀವನೇ ಪ್ರವೇಶೋ ವರಂ| (aiōnios )
9 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
ಅಪರಂ ತವ ನೇತ್ರಂ ಯದಿ ತ್ವಾಂ ಬಾಧತೇ, ತರ್ಹಿ ತದಪ್ಯುತ್ಪಾವ್ಯ ನಿಕ್ಷಿಪ, ದ್ವಿನೇತ್ರಸ್ಯ ನರಕಾಗ್ನೌ ನಿಕ್ಷೇಪಾತ್ ಕಾಣಸ್ಯ ತವ ಜೀವನೇ ಪ್ರವೇಶೋ ವರಂ| (Geenna )
10 “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ತಸ್ಮಾದವಧದ್ಧಂ, ಏತೇಷಾಂ ಕ್ಷುದ್ರಪ್ರಾಣಿನಾಮ್ ಏಕಮಪಿ ಮಾ ತುಚ್ಛೀಕುರುತ,
11 ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.
ಯತೋ ಯುಷ್ಮಾನಹಂ ತಥ್ಯಂ ಬ್ರವೀಮಿ, ಸ್ವರ್ಗೇ ತೇಷಾಂ ದೂತಾ ಮಮ ಸ್ವರ್ಗಸ್ಥಸ್ಯ ಪಿತುರಾಸ್ಯಂ ನಿತ್ಯಂ ಪಶ್ಯನ್ತಿ| ಏವಂ ಯೇ ಯೇ ಹಾರಿತಾಸ್ತಾನ್ ರಕ್ಷಿತುಂ ಮನುಜಪುತ್ರ ಆಗಚ್ಛತ್|
12 “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ?
ಯೂಯಮತ್ರ ಕಿಂ ವಿವಿಂಗ್ಘ್ವೇ? ಕಸ್ಯಚಿದ್ ಯದಿ ಶತಂ ಮೇಷಾಃ ಸನ್ತಿ, ತೇಷಾಮೇಕೋ ಹಾರ್ಯ್ಯತೇ ಚ, ತರ್ಹಿ ಸ ಏಕೋನಶತಂ ಮೇಷಾನ್ ವಿಹಾಯ ಪರ್ವ್ವತಂ ಗತ್ವಾ ತಂ ಹಾರಿತಮೇಕಂ ಕಿಂ ನ ಮೃಗಯತೇ?
13 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான்.
ಯದಿ ಚ ಕದಾಚಿತ್ ತನ್ಮೇಷೋದ್ದೇಶಂ ಲಮತೇ, ತರ್ಹಿ ಯುಷ್ಮಾನಹಂ ಸತ್ಯಂ ಕಥಯಾಮಿ, ಸೋಽವಿಪಥಗಾಮಿಭ್ಯ ಏಕೋನಶತಮೇಷೇಭ್ಯೋಪಿ ತದೇಕಹೇತೋರಧಿಕಮ್ ಆಹ್ಲಾದತೇ|
14 அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல.
ತದ್ವದ್ ಏತೇಷಾಂ ಕ್ಷುದ್ರಪ್ರಾಏನಾಮ್ ಏಕೋಪಿ ನಶ್ಯತೀತಿ ಯುಷ್ಮಾಕಂ ಸ್ವರ್ಗಸ್ಥಪಿತು ರ್ನಾಭಿಮತಮ್|
15 “உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய்.
ಯದ್ಯಪಿ ತವ ಭ್ರಾತಾ ತ್ವಯಿ ಕಿಮಪ್ಯಪರಾಧ್ಯತಿ, ತರ್ಹಿ ಗತ್ವಾ ಯುವಯೋರ್ದ್ವಯೋಃ ಸ್ಥಿತಯೋಸ್ತಸ್ಯಾಪರಾಧಂ ತಂ ಜ್ಞಾಪಯ| ತತ್ರ ಸ ಯದಿ ತವ ವಾಕ್ಯಂ ಶೃಣೋತಿ, ತರ್ಹಿ ತ್ವಂ ಸ್ವಭ್ರಾತರಂ ಪ್ರಾಪ್ತವಾನ್,
16 ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ.
ಕಿನ್ತು ಯದಿ ನ ಶೃಣೋತಿ, ತರ್ಹಿ ದ್ವಾಭ್ಯಾಂ ತ್ರಿಭಿ ರ್ವಾ ಸಾಕ್ಷೀಭಿಃ ಸರ್ವ್ವಂ ವಾಕ್ಯಂ ಯಥಾ ನಿಶ್ಚಿತಂ ಜಾಯತೇ, ತದರ್ಥಮ್ ಏಕಂ ದ್ವೌ ವಾ ಸಾಕ್ಷಿಣೌ ಗೃಹೀತ್ವಾ ಯಾಹಿ|
17 அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து.
ತೇನ ಸ ಯದಿ ತಯೋ ರ್ವಾಕ್ಯಂ ನ ಮಾನ್ಯತೇ, ತರ್ಹಿ ಸಮಾಜಂ ತಜ್ಜ್ಞಾಪಯ, ಕಿನ್ತು ಯದಿ ಸಮಾಜಸ್ಯಾಪಿ ವಾಕ್ಯಂ ನ ಮಾನ್ಯತೇ, ತರ್ಹಿ ಸ ತವ ಸಮೀಪೇ ದೇವಪೂಜಕಇವ ಚಣ್ಡಾಲಇವ ಚ ಭವಿಷ್ಯತಿ|
18 “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.
ಅಹಂ ಯುಷ್ಮಾನ್ ಸತ್ಯಂ ವದಾಮಿ, ಯುಷ್ಮಾಭಿಃ ಪೃಥಿವ್ಯಾಂ ಯದ್ ಬಧ್ಯತೇ ತತ್ ಸ್ವರ್ಗೇ ಭಂತ್ಸ್ಯತೇ; ಮೇದಿನ್ಯಾಂ ಯತ್ ಭೋಚ್ಯತೇ, ಸ್ವರ್ಗೇಽಪಿ ತತ್ ಮೋಕ್ಷ್ಯತೇ|
19 “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும்.
ಪುನರಹಂ ಯುಷ್ಮಾನ್ ವದಾಮಿ, ಮೇದಿನ್ಯಾಂ ಯುಷ್ಮಾಕಂ ಯದಿ ದ್ವಾವೇಕವಾಕ್ಯೀಭೂಯ ಕಿಞ್ಚಿತ್ ಪ್ರಾರ್ಥಯೇತೇ, ತರ್ಹಿ ಮಮ ಸ್ವರ್ಗಸ್ಥಪಿತ್ರಾ ತತ್ ತಯೋಃ ಕೃತೇ ಸಮ್ಪನ್ನಂ ಭವಿಷ್ಯತಿ|
20 ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.
ಯತೋ ಯತ್ರ ದ್ವೌ ತ್ರಯೋ ವಾ ಮಮ ನಾನ್ನಿ ಮಿಲನ್ತಿ, ತತ್ರೈವಾಹಂ ತೇಷಾಂ ಮಧ್ಯೇಽಸ್ಮಿ|
21 அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
ತದಾನೀಂ ಪಿತರಸ್ತತ್ಸಮೀಪಮಾಗತ್ಯ ಕಥಿತವಾನ್ ಹೇ ಪ್ರಭೋ, ಮಮ ಭ್ರಾತಾ ಮಮ ಯದ್ಯಪರಾಧ್ಯತಿ, ತರ್ಹಿ ತಂ ಕತಿಕೃತ್ವಃ ಕ್ಷಮಿಷ್ಯೇ?
22 இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார்.
ಕಿಂ ಸಪ್ತಕೃತ್ವಃ? ಯೀಶುಸ್ತಂ ಜಗಾದ, ತ್ವಾಂ ಕೇವಲಂ ಸಪ್ತಕೃತ್ವೋ ಯಾವತ್ ನ ವದಾಮಿ, ಕಿನ್ತು ಸಪ್ತತ್ಯಾ ಗುಣಿತಂ ಸಪ್ತಕೃತ್ವೋ ಯಾವತ್|
23 “பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது.
ಅಪರಂ ನಿಜದಾಸೈಃ ಸಹ ಜಿಗಣಯಿಷುಃ ಕಶ್ಚಿದ್ ರಾಜೇವ ಸ್ವರ್ಗರಾಜಯಂ|
24 அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான்.
ಆರಬ್ಧೇ ತಸ್ಮಿನ್ ಗಣನೇ ಸಾರ್ದ್ಧಸಹಸ್ರಮುದ್ರಾಪೂರಿತಾನಾಂ ದಶಸಹಸ್ರಪುಟಕಾನಾಮ್ ಏಕೋಽಘಮರ್ಣಸ್ತತ್ಸಮಕ್ಷಮಾನಾಯಿ|
25 அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
ತಸ್ಯ ಪರಿಶೋಧನಾಯ ದ್ರವ್ಯಾಭಾವಾತ್ ಪರಿಶೋಧನಾರ್ಥಂ ಸ ತದೀಯಭಾರ್ಯ್ಯಾಪುತ್ರಾದಿಸರ್ವ್ವಸ್ವಞ್ಚ ವಿಕ್ರೀಯತಾಮಿತಿ ತತ್ಪ್ರಭುರಾದಿದೇಶ|
26 “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான்.
ತೇನ ಸ ದಾಸಸ್ತಸ್ಯ ಪಾದಯೋಃ ಪತನ್ ಪ್ರಣಮ್ಯ ಕಥಿತವಾನ್, ಹೇ ಪ್ರಭೋ ಭವತಾ ಘೈರ್ಯ್ಯೇ ಕೃತೇ ಮಯಾ ಸರ್ವ್ವಂ ಪರಿಶೋಧಿಷ್ಯತೇ|
27 வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.
ತದಾನೀಂ ದಾಸಸ್ಯ ಪ್ರಭುಃ ಸಕರುಣಃ ಸನ್ ಸಕಲರ್ಣಂ ಕ್ಷಮಿತ್ವಾ ತಂ ತತ್ಯಾಜ|
28 “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
ಕಿನ್ತು ತಸ್ಮಿನ್ ದಾಸೇ ಬಹಿ ರ್ಯಾತೇ, ತಸ್ಯ ಶತಂ ಮುದ್ರಾಚತುರ್ಥಾಂಶಾನ್ ಯೋ ಧಾರಯತಿ, ತಂ ಸಹದಾಸಂ ದೃಷ್ದ್ವಾ ತಸ್ಯ ಕಣ್ಠಂ ನಿಷ್ಪೀಡ್ಯ ಗದಿತವಾನ್, ಮಮ ಯತ್ ಪ್ರಾಪ್ಯಂ ತತ್ ಪರಿಶೋಧಯ|
29 “அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான்.
ತದಾ ತಸ್ಯ ಸಹದಾಸಸ್ತತ್ಪಾದಯೋಃ ಪತಿತ್ವಾ ವಿನೀಯ ಬಭಾಷೇ, ತ್ವಯಾ ಧೈರ್ಯ್ಯೇ ಕೃತೇ ಮಯಾ ಸರ್ವ್ವಂ ಪರಿಶೋಧಿಷ್ಯತೇ|
30 “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான்.
ತಥಾಪಿ ಸ ತತ್ ನಾಙಗೀಕೃತ್ಯ ಯಾವತ್ ಸರ್ವ್ವಮೃಣಂ ನ ಪರಿಶೋಧಿತವಾನ್ ತಾವತ್ ತಂ ಕಾರಾಯಾಂ ಸ್ಥಾಪಯಾಮಾಸ|
31 நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.
ತದಾ ತಸ್ಯ ಸಹದಾಸಾಸ್ತಸ್ಯೈತಾದೃಗ್ ಆಚರಣಂ ವಿಲೋಕ್ಯ ಪ್ರಭೋಃ ಸಮೀಪಂ ಗತ್ವಾ ಸರ್ವ್ವಂ ವೃತ್ತಾನ್ತಂ ನಿವೇದಯಾಮಾಸುಃ|
32 “அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன்.
ತದಾ ತಸ್ಯ ಪ್ರಭುಸ್ತಮಾಹೂಯ ಜಗಾದ, ರೇ ದುಷ್ಟ ದಾಸ, ತ್ವಯಾ ಮತ್ಸನ್ನಿಧೌ ಪ್ರಾರ್ಥಿತೇ ಮಯಾ ತವ ಸರ್ವ್ವಮೃಣಂ ತ್ಯಕ್ತಂ;
33 நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான்.
ಯಥಾ ಚಾಹಂ ತ್ವಯಿ ಕರುಣಾಂ ಕೃತವಾನ್, ತಥೈವ ತ್ವತ್ಸಹದಾಸೇ ಕರುಣಾಕರಣಂ ಕಿಂ ತವ ನೋಚಿತಂ?
34 அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
ಇತಿ ಕಥಯಿತ್ವಾ ತಸ್ಯ ಪ್ರಭುಃ ಕ್ರುದ್ಧ್ಯನ್ ನಿಜಪ್ರಾಪ್ಯಂ ಯಾವತ್ ಸ ನ ಪರಿಶೋಧಿತವಾನ್, ತಾವತ್ ಪ್ರಹಾರಕಾನಾಂ ಕರೇಷು ತಂ ಸಮರ್ಪಿತವಾನ್|
35 “நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.
ಯದಿ ಯೂಯಂ ಸ್ವಾನ್ತಃಕರಣೈಃ ಸ್ವಸ್ವಸಹಜಾನಾಮ್ ಅಪರಾಧಾನ್ ನ ಕ್ಷಮಧ್ವೇ, ತರ್ಹಿ ಮಮ ಸ್ವರ್ಗಸ್ಯಃ ಪಿತಾಪಿ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತೀತ್ಥಂ ಕರಿಷ್ಯತಿ|