< மத்தேயு 13 >

1 அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார்.
Da no ara Yesu fii adi kɔtenaa mpoano.
2 அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர். ஆகவே, அவர் ஒரு படகில் ஏறி, அதில் உட்கார்ந்தார். மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள்.
Nnipakuw kyeree so wɔ hɔ a ɛmaa no kɔtenaa ɔkorow bi mu a na nnipakuw no nso gyinagyina mpoano hɔ.
3 இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார். அவைகளில் இது ஒன்றாகும்: “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான்.
Ofii ase kyerɛkyerɛɛ wɔn wɔ mmebu mu se, “Da bi okuafo bi kɔɔ nʼafum koguu aba.
4 அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
Ogu so regu no, aba no bi guu ɔkwan mu maa nnomaa bɛsosɔw ne nyinaa.
5 சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அது விரைவாக முளைத்தாலும்
Bi nso koguu ɔbotan so. Ankyɛ na aba no fifii.
6 வெயில் அதிகமானபோது, பயிர்கள் வாடிப்போயின; வேர் இல்லாததினாலே, அவை உலர்ந்தும் போயின.
Esiane sɛ na dɔte a ɛwɔ ɔbotan no so sua no nti, owia bɔɔ so no, ne nyinaa hyewee.
7 வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, பயிர்களை நெருக்கிப்போட்டன.
Aba no bi nso guu nsɔe mu, na nsɔe no nyin no emiaa no.
8 ஆனால் வேறுசில விதைகளோ, நல்ல மண்ணில் விழுந்தன. அங்கே அவை முறையே நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன.
Aba no bi guu asase pa mu. Enyin, sow aba mmɔho aduasa; bi aduosia na afoforo nso ɔha.
9 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
Nea ɔwɔ aso no, ma ontie!”
10 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.
Owiee ne nkyerɛkyerɛ no, nʼasuafo no baa ne nkyɛn bebisaa no se, “Adɛn na daa wonam mmebu so kasa kyerɛ nnipa no?”
11 இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது: “பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை.
Yesu buaa wɔn se, “Mo de, wɔde Ɔsoro Ahenni ho ahintasɛm ama mo na wɔn de, wɔmmfa mmaa wɔn ɛ.
12 இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும். அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான். இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Nea ɔwɔ biribi no, wɔbɛma no bi aka ho na wanya ama abu no so. Na nea onni ahe bi no, kakra a ɔwɔ no mpo, wobegye afi ne nsam.
13 இதனாலேயே, அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன்: “‘அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்.’
Nea enti a ɛma mekasa kyerɛ wɔn mmebu mu no ne sɛ, “Wohu de, nanso wonhu; wɔte de, na wɔnte ase.
14 ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது: “‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள்.
Wɔn so na ɛnam ama Yesaia nkɔm a ɔhyɛe se, “‘Ɔte de, mobɛte, nanso morente ase; ohu de, mubehu, nanso morenhu no, aba mu.
15 ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
Efisɛ ɔman yi koma apirim. Wɔyɛ asoɔden; wɔakatakata wɔn ani. Sɛ ɛnte saa a anka wɔn ani behu ade, na wɔn aso ate asɛm na wɔn koma ate asɛm ase, na wɔanu wɔn ho asan aba me nkyɛn na masa wɔn yare.’
16 உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை காண்கின்றன; உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஏனெனில் அவை கேட்கின்றன.
Na mo de, wɔahyira mo ani efisɛ ehu ade; wɔahyira mo aso efisɛ ɛte asɛm.
17 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
Na me de, mereka akyerɛ mo se, adiyifo ne atreneefo pii pɛɛ sɛ wohu nea muhu no, nanso wɔanhu. Wɔpɛɛ sɛ wɔte nea mote no, nanso wɔante.
18 “ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்:
“Afei muntie bɛ a ɛfa ogufo a okoguu aba wɔ nʼafum no no nkyerɛase.
19 யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு, அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது, தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான். இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும்.
Wɔn a wotie Onyankopɔn asɛm no, na wɔnte ase no te sɛ aba a eguu ɔkwan mu no. Ɔbɔnefo no ba, behwim nea wɔadua wɔ wɔn koma mu no.
20 கற்பாறையான இடங்களில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள்.
Aba a eguu ɔbotan so no gyina hɔ ma wɔn a wɔte asɛm no, na wɔde anigye so mu.
21 ஆனால் அவர்களில் வேரில்லாததால், அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள். வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும், துன்பங்களும் வரும்போது, அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள்.
Nanso asɛm no nnyina wɔ wɔn mu. Eyi nti ɛnkyɛ na asɛm no awu. Esiane sɛ asɛm no awu nti, sɛ ɔhaw anaa ɔtaa bi ba a, wɔpa abaw.
22 முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும், செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும், அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன. அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள். (aiōn g165)
Aba a eguu nsɔe mu no gyina hɔ ma wɔn a wotie asɛm no, nanso wiase yi mu abrabɔ mu haw ne agyapade ho dadwen nti ɛmma asɛm no ntumi nyɛ wɔn mu adwuma. (aiōn g165)
23 நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள், வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள். இவர்கள் நூறு, அறுபது, முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள்.”
Na aba a eguu asase pa mu no gyina hɔ ma wɔn a wotie asɛm no, na wɔte ase. Wɔsow aba mmɔho aduasa; bi aduosia; na afoforo nso, ɔha.”
24 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது.
Yesu de bɛ foforo kaa asɛm se, “Ɔsoro Ahenni no te sɛ okuafo bi a oduaa aburow wɔ nʼafum.
25 எல்லோரும் நித்திரையாய் இருக்கையில், அவனுடைய பகைவன் வந்து, கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.
Da koro anadwo a wada no, ne tamfo nso beduaa nwura fraa aburow a wadua no.
26 கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது. அப்பொழுது களைகளும் காணப்பட்டன.
Aburow no renyin no, na nwura no nso renyin.
27 “வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர்? அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
“Okuafo no apaafo bɛka kyerɛɛ no se, ‘Owura, aburow a wuduae no, nwura bi afifi wɔ ase!’
28 “அதற்கு எஜமான், ‘பகைவனே அதைச் செய்தான்’ என்று பதிலளித்தான். “வேலைக்காரர்கள் அவனிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா?’ என்று கேட்டார்கள்.
“Okuafo no buae se, ‘Ɔtamfo bi na oduae!’ “Apaafo no bisaa no se, ‘Wopɛ sɛ yekotutu saa nwura no ana?’
29 “அதற்கு எஜமான், ‘இல்லை. நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது, அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும்.
“Obuaa wɔn se, ‘Dabi da!’ Anyɛ a na moatutu aburow no bi afra nwura no.
30 அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும். அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம்: முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள்; அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து, எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன்.’”
Momma ne nyinaa nyin nkosi twabere na mama atwafo ayiyi nwura no afi aburow no mu ahyew no, na wɔde aburow no nso agu asan so.”
31 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு, ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது.
Yesu buu wɔn bɛ foforo se, “Ɔsoro Ahenni te sɛ onyaa aba ketewa bi a obi duaa wɔ nʼafum.
32 அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும், அது வளரும்போது, தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து, மரமாகிறது. அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதன் கிளைகளில் தங்குகின்றன” என்றார்.
Ɛyɛ aba ketewaa bi, nanso sɛ enyin a, ɛyɛ dutan kɛse ma nnomaa kosisi ne mman so.”
33 இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார்: “பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து, அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது” என்றார்.
Obuu wɔn bɛ foforo se, “Ɔsoro Ahenni te sɛ mmɔkaw bi a brodotofo de fɔtɔw mmɔre ma etu.”
34 இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார்; இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை.
Yesu nam mmebu so ɔkasa kyerɛɛ nnipadɔm no.
35 இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின: “நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன். உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன்.”
Enti ɔhyɛɛ nea adiyifo no ahyɛ ho nkɔm no mma se: “Mɛkasa mmebu mu, na maka anwonwade mu ahintasɛm a efi adebɔ mfiase.”
36 அதற்குப் பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும்” என்று கேட்டார்கள்.
Afei Yesu fii nnipadɔm no nkyɛn kɔɔ fie. Nʼasuafo no baa ne nkyɛn bɛka kyerɛɛ no se ɔnkyerɛ wɔn bɛ a ɛfa nwura ne aburow ho no ase.
37 இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே.
Yesu buaa wɔn se, “Me Onipa Ba no, mene okuafo a oduaa aburow no.
38 வயல் என்பது உலகம், நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள். களைகளோ தீயவனின் பிள்ளைகள்.
Afuw no ne wiase, na aburow no nso gyina hɔ ma wɔn a wɔyɛ Ahenni no mma; nwura no nso gyina hɔ ma wɔn a wɔyɛ ɔbonsam mma.
39 அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான். அறுவடை என்பது உலகத்தின் முடிவு. அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள். (aiōn g165)
Ɔtamfo a oduaa nwura fraa aburow no ne ɔbɔnefo no. Otwabere no yɛ wiase awiei; atwafo no ne abɔfo no. (aiōn g165)
40 “களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும். (aiōn g165)
“Sɛnea asɛnka no mu, wotutuu nwura no fii aburow no mu kɔhyew no no, saa ara na ɛbɛyɛ wɔ wiase awiei. (aiōn g165)
41 மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன். அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும், தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள்.
Onipa Ba no bɛsoma nʼabɔfo, na wɔabɛboaboa wɔn a wɔpɛ bɔne, nsɛmmɔnedifo nyinaa ano afi Ahenni no mu,
42 இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
na wɔatow wɔn agu ogyatannaa no mu, ahyew wɔn. Ɛhɔ na osu ne setwɛre wɔ.
43 அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
Na atreneefo no bɛhyerɛn sɛ owia wɔ wɔn Agya Ahenni no mu. Nea ɔwɔ aso no, ma ontie!”
44 “பரலோக அரசு, ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒருவன் கண்டுபிடித்தபோது, அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு, பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம், தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அந்த வயலை வாங்குகிறான்.
Yesu toaa mmebu no so se, “Ɔsoro Ahenni no te sɛ ademude bi a obi kohuu wɔ afuw bi mu. Ɔkataa so, na ɔde ahopere kɔtɔn nʼahode nyinaa, de kɔtɔɔ afuw no.
45 “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது.
“Bio, Ɔsoro Ahenni te sɛ obi a odi nhene pa ho gua a ɔrehwehwɛ nhene pa atɔ.
46 பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும், அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
Okonyaa bi a ɛyɛ fɛ mmoroso, enti ɔkɔtɔn nʼahode nyinaa de kɔtɔe!”
47 “மேலும் பரலோக அரசு, கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது.
Yesu toaa so bio se, “Ɔsoro Ahenni no te sɛ obi a okoguu asau wɔ asu bi mu yii nsumnam ahorow bebree.
48 வலை நிரம்பியபோது, மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் உட்கார்ந்து, நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள். கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள்.
Asau no yɛɛ ma no, ɔtwe baa konkɔn so. Afei ɔtenaa ase yiyii nam pa no guu kɛntɛn mu na ɔtow nea enye no gui.
49 இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும். இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்து (aiōn g165)
Saa ara na wiase awiei bɛyɛ. Abɔfo no bɛba abɛpaw abɔnefo no afi atreneefo no mu, (aiōn g165)
50 அவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள். அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்.
na wɔatow abɔnefo no agu ogyatannaa no mu; ɛhɔ na osu ne setwɛre wɔ.
51 “இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா?” என்று இயேசு சீடர்களை கேட்டார். “ஆம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.
“Mote ase?” Nʼasuafo no buaa no se, “Yiw.”
52 “ஆகவே, பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும், தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும், பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான்” என்றார்.
Yesu toaa ne nkyerɛkyerɛ no so se, “Kyerɛwsɛm no akyerɛkyerɛfo a wɔabɛyɛ mʼasuafo no te sɛ ofiwura a wada nʼagyapade foforo ne dedaw nyinaa adi.”
53 இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், அங்கிருந்து சென்றார்.
Yesu wiee ne mmebu no, ofii faako a ɔwɔ hɔ no.
54 அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார், அவர்கள் வியப்படைந்தார்கள். “இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும், அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?” என்று கேட்டார்கள்.
Ɔkɔɔ ne kurom Nasaret. Ɔkyerɛkyerɛɛ wɔ hyiadan mu maa wɔn a wotiee no no ho dwiriw wɔn. Wobisabisaa wɔn ho wɔn ho se, “Ɛhe na saa ɔbarima yi konyaa nyansa a ɔde yɛ anwonwade sɛɛ yi?
55 அவர்கள், “இவன் தச்சனின் மகன் அல்லவா? இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவா?
Ɛnyɛ dua dwumfo no ba no ni? Ɛnyɛ ne na ne Maria? Ɛnyɛ ne nua barimanom ne Yakobo ne Yosef ne Simon ne Yuda?
56 இவனுடைய சகோதரிகளும், நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்க, இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்?” என்று சொல்லி,
Ɛnyɛ yɛne ne nuabeanom na ɛte ha? Na afei ɛhe na okonyaa eyinom nyinaa yi?”
57 அவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
Wɔn bo fuw no. Yesu ka kyerɛɛ wɔn se, “Odiyifo wɔ anuonyam baabiara, gye ne man mu anaa ne nkurɔfo mu!”
58 அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.
Esiane sɛ wɔannye no anni no nti, wanyɛ anwonwade bebree wɔ hɔ!

< மத்தேயு 13 >