< மத்தேயு 10 >
1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
And he called his twelve disciples, and gave them power over unclean spirits to cast them out, and to cure every disease and infirmity.
2 இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள்: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;
Now, of the twelve apostles the names are these: the first of them, Shemun who is called Kipha, and Andreas his brother, and Jakubbar-Zabdai, and Juchanon his brother,
3 பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
and Philipos, and Bar-Tholmai, and Thoma, and Mathai the tribute-gatherer, and Jakubbar-Chalphai, and Labi who was surnamed Thadai,
4 கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே.
and Shemun the zealous, and Jihuda S'carjuta, he who betrayed him.
5 இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம்.
These twelve Jeshu sent, and commanded them and said, In the way of the heathens go not, and into the city of the Shomroyee do not enter;
6 இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள்.
but go rather unto the sheep which have perished from the house of Isroel.
7 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள்.
And as you go, proclaim and say that the kingdom of heaven hath drawn near.
8 நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள்.
The diseased heal, the lepers cleanse, the dead raise, and the demons cast forth. Freely you have received, freely give.
9 “நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்;
Provide neither gold, nor silver, nor brass in your purses,
10 பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.
nor a wallet for the road; neither two tunics, nor sandals, nor staff: for worthy is the workman of his meat.
11 நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள்.
And into whatsoever city or town you enter, inquire who is worthy in it, and there be till you depart.
12 அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள்.
And when you enter into the house, invoke peace for the house;
13 அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும்.
and if the house be worthy, your peace shall come upon it; but if it be not worthy, your peace upon yourselves shall revert.
14 யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள்.
But whosoever doth not receive you or hear your words, when you depart from that house, or that town, set free the dust from your feet.
15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும்.
And, Amen, I say unto you, that for the land of Sadum and of Amura it will be more tolerable, in the day of the judgment, than for that city.
16 “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள்.
LO, I send you forth as sheep among wolves: be you, therefore, wise as serpents and guileless as doves.
17 மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள்.
But beware of the sons of men; for, delivering you to the house of judgments, in their synagogues they will scourge you,
18 என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்.
and before governors and kings bring you, on my account, for the testimony concerning them and the gentiles.
19 அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும்.
But when they deliver you up, be not solicitous how or what you shall speak; for it is given you in that hour what you shall speak.
20 ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.
For it is not you speaking, but the Spirit of your Father speaking in you.
21 “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள்.
But the brother shall deliver his brother unto death, and the father his son; and the sons shall rise up against their fathers, and shall slay them.
22 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
And you shall be abhorred by all men on account of my name: but he who shall persevere until the end, he shall be saved.
23 நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
When they persecute you in this city, escape to the other; for, Amen I say unto you, that you shall not have completed all the cities of the house of Isroel, till the Son of man shall come.
24 “ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.
The disciple is not greater than his master, nor the servant than his lord.
25 ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்!
It sufficeth the disciple that he be as his master, and the servant as his lord. If the master of the house they have called Beelzebub, how much more his house-sons!
26 “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
You shall not fear, therefore, from them; for there is nothing covered which shall not be revealed, nor secret which shall not be known.
27 நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள்.
Whatsoever I say to you in darkness, declare you in the light; and whatsoever you have heard in your ears, proclaim upon the roofs.
28 உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna )
And fear not them who kill the body, but the soul cannot kill; but fear rather One who the soul and the body can destroy in gihano. (Geenna )
29 இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை.
Are not two sparrows sold for an asor? yet one of them, without your Father, doth not fall upon the earth.
30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன.
But of you, also, the hairs of your head are all numbered.
31 எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
Fear not, therefore; than many sparrows more precious are you.
32 “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன்.
Every man, therefore, who shall confess me before the sons of men, I myself will confess him also before my Father who is in heaven.
33 மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
But whosoever shall deny me before the sons of men, I also will deny him, I, before my Father who is in heaven.
34 “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன்.
EXPECT not that I have come to send forth peace on the earth; I have not come to send forth peace, but the sword.
35 “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;
For I have come to cause a man to separate from his father, and a daughter from her mother, and a daughter-in-law from her mother-in-law;
36 ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’
and the adversaries of a man (to be) his own house-sons.
37 “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல;
Whosoever loveth father or mother more than me is not worthy (of) me; and whosoever loveth son or daughter more than me is not worthy (of) me.
38 தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல.
And every one who taketh not his cross and cometh after me, is not worthy of me.
39 தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
Whosoever will find his life shall lose it, and whosoever shall lose his life for my sake shall find it.
40 “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
Whosoever receiveth you, receiveth me; and whosoever receiveth me, Him who sent me he receiveth.
41 ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள்.
Whosoever entertaineth a prophet in the name of a prophet, the reward of a prophet receiveth. Whosoever entertaineth a just man in the name of a just man, the reward of the just man he receiveth.
42 இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
And whosoever only giveth one of these little ones a cup of cold (waters) to drink in the name of a disciple, Amen, I say unto you, he shall not lose his reward.