< மாற்கு 5 >
1 அவர்கள் கடலைக் கடந்து, கதரேனருடைய நாட்டிற்குச் சென்றார்கள்.
Sa wa kafa uhuru uraba udang anyimo ama nyanga magasinawa.
2 இயேசு படகைவிட்டு இறங்கியவுடன், தீய ஆவி பிடித்திருந்த ஒருவன் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தான்.
Sa ma tuno a nyimo ujirgi me uru nu una gbergene abit sa ma ciki ahira amucau ma e ma kem Yeso.
3 அவன் கல்லறைகளில் வாழ்ந்து கொண்டிருந்தான்; அவனைச் சங்கிலியினால்கூட ஒருவராலும் கட்ட முடியாதிருந்தது.
Ma dusa ma kurzo yeso ni agi ahira mucau muni ahira aticukum ti meme, barki anime unu tirza umeme ma zoni.
4 பலமுறை அவனுடைய காலையும் கையையும் சங்கிலியினால் கட்டியபோதுங்கூட, அவன் சங்கிலிகளைத் தகர்த்து தனது கால்களிலுள்ள விலங்குகளை உடைத்துப் போடுவான். அவனை அடக்கிக் கட்டுப்படுத்த யாராலும் முடியாதிருந்தது.
Barki amu tirza me in tizini ma tazi tini tiyorso unu rusa utirza umeme ma zoni.
5 இரவும் பகலும் அவன் கல்லறைகளிலும் குன்றுகளிலும் கூச்சலிட்டுக் கொண்டும் தன்னைத்தானே கற்களினால் காயப்படுத்திக்கொண்டும் இருப்பான்.
Ahira amucau acukuno gusi akura ameme niye nan wuyi sarki uhirsa.
6 இயேசுவைத் தூரத்தில் கண்டபோது, அவன் ஓடிப்போய் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு விழுந்தான்.
Sa ma ira Yeso ma aze madusa ma ka rizo aje ameme.
7 அவன் உரத்த குரலில் சத்தமிட்டு, “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? என்னைத் துன்புறுத்தவேண்டாம் என்று இறைவன் பெயரில் கேட்கிறேன்!” என்றான்.
Ma dusa ma wu uhunu magu, “nyanini indi wuzi Yesu, vanaa asere una ninonzo mapata nan na asere. kati gidim.
8 ஏனெனில் இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இவனைவிட்டு வெளியே போ!” என்று சொல்லியிருந்தார்.
Ba yesu magu “suro ani pum ni nu ugeme hu bibe bizenze”
9 அப்பொழுது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று அவன் பதிலளித்தான்.
Yesu ma iki me niza ni weme aveni, ma kabirka magu”na za nim gbem barki ti ori.
10 அவர்களை அந்தப் பகுதியை விட்டு அனுப்பவேண்டாம் என்று அவன் திரும்பத்திரும்ப இயேசுவிடம் கெஞ்சிக்கேட்டான்.
Magun Yesu nyara kati Yesu ma gidi me a manya ma meme ba.
11 அங்கே அருகேயிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
Ahira me nigo ni maladu nazi unu kase unu nyara imum yare azeser upana.
12 பிசாசுகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பும்; அவைகளுக்குள்ளே புகுந்துகொள்ள அனுமதிகொடும்” என்று கெஞ்சிக்கேட்டன.
Agbergene wa iki Yesu wa gu” tuburko duru anyimo amaladu tika ribe anyimo awe”.
13 இயேசு அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்; அந்தத் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அந்தப் பன்றிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பன்றிகள் இருந்தன. அவை அந்த செங்குத்தான கரையோரத்திலிருந்து விரைந்தோடி, ஏரிக்குள் விழுந்து மூழ்கின.
Madusa ma hem unu iko wa agbergene abit me, wa dusa wa suri inti sum sum wa ka ribe anyimo amaladu akuro ukirau, wa dusa wa rizo anyimo uraba udang, mei ma dusa ma ziki we.
14 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் பட்டணத்திலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்ன என்று பார்க்கும்படி மக்கள், அங்கே சென்றார்கள்.
Abini me anu me sa wazi unu kasen imaladu me wa dusa unu sum uhana anyimo anipim nan nagiro waka buka imum me sa wa ira. Anu gwardang wa suri wa ha ahira me bati wa ka ira imum me sa Yesu ma wuza.
15 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்தவன் உடை உடுத்தி, மனத்தெளிவுடன் உட்கார்ந்து இருப்பதைக் கண்டார்கள்; அதனால் அவர்கள் பயமடைந்தார்கள்.
Sa wa aye ahira Yesu me wa iri una agberne agino me sa ma zi maciki a dizi maaduku soki turunga ti riri ani pum ni meme sa wa ira wa dusa wa kunna biyau.
16 நடந்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்தவனுக்கு நிகழ்ந்ததையும் பன்றிகளைப் பற்றியும் அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள்.
Andesa wa e wa iri imum me sa ya kem unu agbergene agino me ma buki we imum me vat sa ya kem me nan maladu me.
17 அப்பொழுது அந்த மக்கள் இயேசுவை அந்தப் பகுதியைவிட்டுப் போய்விடும்படி வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
Wadusa wa gun desa mazin inna gbergene me, ma ceki we manyanga.
18 இயேசு படகில் ஏறியபோது, பிசாசு பிடித்திருந்தவன் அவருடன் போகும்படி கெஞ்சிக்கேட்டான்.
Sa yesu mazi unu ribe ujirgi umei una agbergene me magu madi tarsi me.
19 இயேசு அவனைத் தன்னுடன் வர அனுமதிக்காமல் அவனிடம், “நீ உன் வீட்டிற்குப்போய் கர்த்தர் உனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதையும் உனக்குக் காண்பித்த இரக்கத்தையும் அவர்களுக்குச் சொல்” என்றார்.
Yesu daki ma hem ma dusa nan me ba, magun me”dusa akura ashi me ahira anu aweme uka buka imum me sa ugomo Asere ma wuza we.
20 அவன் புறப்பட்டுப்போய், இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்று தெக்கப்போலி நாட்டில் சொல்லத் தொடங்கினான். எல்லோரும் வியப்படைந்தார்கள்.
Ba ma dusa unu boo timumum ti dangdang me sa Yesu ma wuza me a nyimo Udikafolis, anu wa kunna biyau vat desa ma kunna.
21 இயேசு மீண்டும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்கு வந்து கடற்கரையில் இருக்கும்போது, மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டு அவரிடம் வந்தார்கள்.
Sa Yesu ma kafa unuhuru uraba udang anyimo ukwale kwale ni'ori na nu gbardang ni e ni kem me sa ma raa ani kira nuraba me.
22 அப்பொழுது யூத ஜெப ஆலயத் தலைவர்களில் ஒருவனான யவீரு என பெயருடையவன் அங்கு வந்தான். அவன் இயேசுவைக் கண்டு அவருடைய பாதத்தில் விழுந்தான்.
ure una katuma anyimo udenge unigura nahana Asere una niza Yayirus sa ma ira Yesu, ma dusa ma tunguno ina ruu aje ameme.
23 அவன் இயேசுவிடம், “எனது மகள் மரணத் தருவாயில் இருக்கிறாள். தயவுசெய்து நீர் வந்து, உமது கைகளை அவள்மேல் வையும். அப்பொழுது அவள் சுகமடைந்து உயிர் பெறுவாள்” என்று சொல்லி மிகவும் மன்றாடிக் கேட்டான்.
Ma vovi tari ahira me ma gun yesu”kusu ucaa um mada zo me uhuma, ma aye mamu iwono, aye tara tari tiwe me ani ce ni meme bati ma huma.
24 எனவே இயேசு அவனுடன் சென்றார். போகும்போது, ஒரு மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது.
Madusa nigome nan me, ni'ori nanu gbardang unu tarsa ume unu haza mamu nan me.
25 அங்கே, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள்.
Ure une maka aye sa ma ziki tiwe ukirau nan tini re unu kpongizo uma ye.
26 அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி, தன்னிடம் இருந்தவற்றை எல்லாம் செலவழித்து முடித்துவிட்டாள். ஆனால் அவள் குணமடையாமல், மேலும் கடுமையான வியாதியுள்ளவளாக இருந்தாள்.
Ma tarsi ana tika gbardang, ma hu vat imum me sa ma zini, daki ma huma. imum me isabi ikingizi.
27 அவள் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவருக்குப் பின்னாக மக்கள் கூட்டத்திற்குள்ளே வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள்.
Sa ma kunna abanga Yesu. Madusa ma tarsi me adumo sa mazin intanu, madusa ma dari udibi Yesu.
28 ஏனெனில், “நான் அவருடைய உடையைத் தொட்டால் போதும் குணமடைவேன்” என்று அவள் நினைத்திருந்தாள்.
Ma buki anyimo iriba imeme, “inki ma dara udibi uyesu indidi huma”.
29 உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
Sa ma dara udibi me ukpogizo umaye me udusa utonno, ma kunna ani pum nimeme ma huma ma venke ini jasi imeme.
30 இயேசு தன்னிலிருந்து வல்லமைப் புறப்பட்டதை உடனே அறிந்தார். அவர் மக்கள் கூட்டத்திற்குள்ளே திரும்பி, “எனது உடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
Yesu kunna nikara na suro ani pum nimeme. Ma dusa ma gamirka ma iki ni'ori nanu me magu “aveni ma dara udibi um”?
31 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “மக்கள் உம்மைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறீரே. அப்படியிருக்க, ‘என்னைத் தொட்டது யார்’ என்று நீர் எப்படிக் கேட்கலாம்?” என்றார்கள்.
Ba anu tarsa umeme wagu”wa ira ni'ori na nabu na aka upuru uwe, iduku gu”aveni ma dara we”?
32 ஆனாலும் இயேசு, தன்னைத் தொட்டது யார் என்று அறியும்படி சுற்றிப் பார்த்தார்.
Yesu madusa ma gunkuno bati ma iri desa ma dara me.
33 அப்பொழுது தனக்கு நடந்திருந்ததை அறிந்திருந்த அந்தப் பெண் வந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள்; அவள் பயத்துடன் நடுங்கிக்கொண்டு உண்மை முழுவதையும் அவருக்குச் சொன்னாள்.
Uneme sa ma rusi imum me sa ya kem me, madusa unu kira imbiyau. Madusa ma e ma rizi aje Yesu ma buki me kadure me.
34 இயேசு அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தியது. சமாதானத்துடனே போ, உன் வேதனை நீங்கி குணமாயிரு” என்றார்.
Madusa ma gun me”uca um nihem ni weme na benki we wa huma. Dusa anyimo iriba irum wa huma.
35 இயேசு பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டிலிருந்து, சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் ஏன் போதகருக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்?” என்றார்கள்.
Sa ma raa anyimo atize are ana katuma udenge ubirigira, wagu”uca uwe me mamu wono. nyanini ya wuna daki wa kini ba?
36 அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல், ஜெப ஆலயத் தலைவனிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு” என்றார்.
Sa Yesu ma kunna imum sa wazi unu boo me, nan ana akatuma udenge ubi unigura,”kati i kunna biyau, hem ni shi”.
37 பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறு எவரையும் தம்முடன் வர இயேசு அனுமதிக்கவில்லை.
Daki ma ceki uye ma tarsi me ba an Bitrus, Yakubu nan Yohana uhenu Yakubu cas ma hem wa tarsi me.
38 அவர்கள் ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்கு வந்தபோது, மக்கள் அழுவதினாலும் சத்தமிட்டுப் புலம்புவதினாலும் ஏற்பட்ட குழப்பத்தை இயேசு கண்டார்.
Sa wa aye akura una katuma udenge uni gura ma e ma kem anu wazin tiso nan tihunu.
39 பிறகு இயேசு உள்ளே போய் அவர்களிடம், “ஏன் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திப் புலம்புகிறீர்கள்? பிள்ளை சாகவில்லை, தூங்குகிறாள்” என்றார்.
Sa ma ribe akura me, ba ma iki we “nyanini ya wuna iriba ishi me ya corno me nyanini ya wuna izin ti soo me? vanaa me daki ma wono ba, moro mani mazini”.
40 அவர்களோ இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். இயேசு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டபின், அந்தப் பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தன்னுடன் இருந்த சீடரையும் கூட்டிக்கொண்டு, பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார்.
Ba ma dusa mazunzuka, ma suso anu me vat amatara, ma ziki aco nan ka a'ino nan an desa wazi nigo me nan me, wa ha ahira sa uca me marari ni.
41 அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்!” என்றார். அதற்கு அராமிய மொழியில், “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திரு!” என்று அர்த்தமாகும்.
Ma yeze tari tikubura me ma gu me “Talitha koum” sa igusa kubura, ma gunan hu hira”
42 உடனே அந்தச் சிறு பெண் எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயதுடையவளாயிருந்தாள். இதைக் கண்டவர்கள், மிகவும் வியப்படைந்தார்கள்.
Kubura ku dusa ku hiri ku tubi tanu [tiwe timeme tazi ukirau in tini tire]. Anu wa dusa wa kunna biyau.
43 “இதை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று இயேசு உறுதியான உத்தரவு கொடுத்தார்; பின் அந்த சிறு பெண்ணுக்கு சாப்பிட, ஏதாவது கொடுக்கும்படி அவர்களிடம் சொன்னார்.
Madusa hunguko we titui kati wa buki uye ba. Ba ma gu me imum yare mari.