< மாற்கு 16 >

1 ஓய்வுநாள் முடிவடைந்தபோது, மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமியும், இயேசுவின் உடலுக்கு வாசனைத் தைலம் பூசும்படி, நறுமணப் பொருட்களை வாங்கினார்கள்.
Після Суботи Марія, Марія Магдалина, Марія, [мати] Якова, і Саломія купили пахощі, щоб піти та намастити Його.
2 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, பொழுது விடிகையில், அவர்கள் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
На світанку першого дня тижня вони пішли до гробниці
3 “கல்லறையின் வாசலில் இருக்கும் கல்லை யார் நமக்காகப் புரட்டித்தள்ளுவான்?” என்று, அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
й говорили між собою: «Хто відкотить нам камінь від входу в гробницю?»
4 ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோதோ, மிகவும் பெரிதான அந்தக் கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
Але коли придивилися, то побачили, що камінь, який був дуже великий, відкочено.
5 அவர்கள் கல்லறைக்குள்ளே நுழைந்தபோது, வெள்ளை உடை உடுத்திய ஒரு இளைஞன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதை அவர்கள் கண்டு பயந்தார்கள்.
Увійшовши до гробниці, побачили юнака, одягненого в білий одяг, який сидів праворуч. Вони дуже злякалися.
6 அப்பொழுது அவன் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை நீங்கள் தேடுகிறீர்கள். ஆனால் அவரோ உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் இங்கு இல்லை. அவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.
Але він сказав їм: «Не бійтеся! Ви шукаєте Ісуса з Назарета, Який був розіп’ятий? Немає Його тут: Він воскрес! Подивіться на місце, де Його поклали.
7 நீங்கள் போய், அவருடைய சீடர்களுக்கும், பேதுருவுக்கும் சொல்லுங்கள், ‘இயேசு உங்களுக்குச் சொன்னதுபோலவே, உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போகிறார். நீங்களும் அவரை அங்கே காண்பீர்கள்’ என்று சொல்லுங்கள்” என்றான்.
Ідіть та скажіть Його учням та Петрові, що Він іде перед вами в Галілею, там Його побачите, як Він казав вам».
8 அவர்கள் நடுக்கத்துடனும், திகைப்புடனும் வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடிப்போனார்கள். அவர்கள் பயந்ததினால், ஒருவருக்குமே ஒன்றும் சொல்லவில்லை.
Вони вийшли та побігли геть від гробниці, бо їх охопило тремтіння та подив. Вони нікому нічого не сказали, адже були охоплені страхом.
9 (note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் இயேசு உயிர்த்தெழுந்தபோது, அவர் முதலில், மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை அவர் துரத்தியிருந்தார்.
(note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) Після Свого воскресіння вранці першого дня тижня [Ісус] найперше з’явився Марії Магдалині, з якої вигнав сім демонів.
10 அவள் போய் அவரோடு இருந்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருக்கையில், அதைச் சொன்னாள்.
Вона пішла та сповістила Його учнів, які плакали та сумували.
11 இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவரை அவள் கண்டாள் என்றும் அவள் சொன்னதை சீடர்கள் நம்பவில்லை.
Почувши, що Він живий і що вона Його бачила, вони не повірили.
12 இதற்குப் பின்பு இயேசு நாட்டுப்புறமாக நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களில் இருவருக்குத் தம்மை வேறொரு உருவத்தில் வெளிப்படுத்தினார்.
Після цього, Він з’явився в іншому вигляді двом із них, які йшли до села.
13 இவர்கள் திரும்பிப்போய், இதை மற்ற சீடர்களுக்கும் அறிவித்தார்கள்; ஆனால் அவர்களோ இவர்கள் சொன்னதையும் நம்பவில்லை.
Вони повернулися та сповістили іншим, але їм теж не повірили.
14 பின்பு சீடர்கள் பதினொருபேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, இயேசு அவர்களுக்குக் காட்சியளித்தார்; அவர் சீடர்களுடைய விசுவாசக் குறைவைக் குறித்தும், தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக் கண்டவர்கள் சொன்னதைப் பிடிவாதமாய் நம்ப மறுத்ததைக் குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.
Нарешті Він з’явився одинадцятьом, коли вони були за столом. Він докоряв їм за їхню невіру та впертість, бо не повірили тим, хто бачив Його воскреслим із мертвих.
15 இயேசு சீடர்களிடம், “நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள்.
Потім промовив: «Ідіть по всьому світі та проповідуйте Добру Звістку всім людям!
16 யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசித்து, திருமுழுக்கு பெறுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். யாரெல்லாம் நற்செய்தியை விசுவாசிக்கவில்லையோ, அவர்கள் குற்றவாளியாய்த் தீர்க்கப்படுவார்கள்.
Хто повірить та охреститься, буде спасенний, а хто не повірить, буде засуджений.
17 விசுவாசிக்கிறவர்கள் மத்தியில், இந்த அடையாளங்கள் காணப்படும்: எனது பெயரில் அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; அவர்கள் புதிய மொழிகளில் பேசுவார்கள்;
Такі ознаки будуть супроводжувати тих, хто увірував: в ім’я Моє будуть виганяти демонів, говоритимуть новими мовами,
18 அவர்கள் பாம்புகளைக்கூட தங்கள் கைகளினால் பிடித்துத் தூக்குவார்கள்; சாகவைக்கக் கூடிய நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குக் கேடுவிளைவிக்காது; அவர்கள் நோயாளிகளின்மேல் தங்கள் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள்” என்றார்.
якщо братимуть до рук змій або вип’ють отруту, це не нашкодить їм, на хворих покладатимуть руки, і ті зціляться».
19 கர்த்தராகிய இயேசு அவர்களுடன் பேசி முடித்தபின்பு, அவர் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.
Після того, як Господь Ісус промовив до них ці слова, Він вознісся на небо й сів праворуч від Бога.
20 அதற்குப் பின்பு, அவருடைய சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். கர்த்தர் அவர்களுடன் செயலாற்றி, தமது வார்த்தையை அற்புத அடையாளங்களினால் உறுதிப்படுத்தினார்.
Вони пішли та проповідували по всьому світі, а Господь допомагав їм і підтверджував Слово ознаками, що його супроводжували.

< மாற்கு 16 >