< மாற்கு 15 >
1 அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள்.
Por la mañana, los jefes de los sacerdotes, con los ancianos, los escribas y todo el consejo, celebraron una consulta, ataron a Jesús, lo llevaron y lo entregaron a Pilato.
2 பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.
Pilato le preguntó: “¿Eres tú el Rey de los judíos?” Respondió: “Eso dices tú”.
3 தலைமை ஆசாரியர்கள், அநேக குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினார்கள்.
Los jefes de los sacerdotes le acusaron de muchas cosas.
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான்.
Pilato volvió a preguntarle: “¿No tienes respuesta? Mira cuántas cosas declaran contra ti”.
5 இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான்.
Pero Jesús no respondió más, por lo que Pilato se maravilló.
6 பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது.
En la fiesta solía liberar a un prisionero, cualquiera que pidiesen.
7 அந்நாட்களில் சில கிளர்ச்சிக்காரர்களுடன், பரபாஸ் என்னும் பெயருடைய ஒருவனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். இவன் கிளர்ச்சி ஏற்படுத்தி கொலையும் செய்திருந்தவன்.
Había uno llamado Barrabás, atado con sus compañeros de insurrección, hombres que en la insurrección habían cometido un asesinato.
8 மக்கள் கூடிவந்து, பிலாத்துவிடம் வழக்கமாக செய்துவந்ததுபோல், இம்முறையும் தங்களுக்கு ஒருவனை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
La multitud, gritando, comenzó a pedirle que hiciera lo que siempre hacía por ellos.
9 அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
Pilato les respondió diciendo: “¿Queréis que os suelte al Rey de los judíos?”
10 தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.
Porque se dio cuenta de que por envidia los jefes de los sacerdotes lo habían entregado.
11 ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
Pero los jefes de los sacerdotes incitaron a la multitud para que les soltara a Barrabás en su lugar.
12 எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்லுகிற இவனுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
Pilato volvió a preguntarles: “¿Qué debo hacer, pues, con el que llamáis Rey de los judíos?”
13 அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
Volvieron a gritar: “¡Crucifícalo!”
14 “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.
Pilato les dijo: “¿Qué mal ha hecho?” Pero ellos gritaron con fuerza: “¡Crucifícalo!”
15 பிலாத்து கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி, பரபாஸை அவர்களுக்கு விடுதலை செய்தான். இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.
Pilato, queriendo complacer a la multitud, les soltó a Barrabás y entregó a Jesús, después de haberlo azotado, para que fuera crucificado.
16 போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.
Los soldados lo llevaron dentro del patio, que es el pretorio, y convocaron a toda la cohorte.
17 அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள்.
Lo vistieron de púrpura y le pusieron una corona de espinas.
18 பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
Comenzaron a saludarlo: “¡Salve, rey de los judíos!”
19 அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள்.
Le golpearon la cabeza con una caña, le escupieron y, doblando las rodillas, le rindieron homenaje.
20 இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
Cuando se burlaron de él, le quitaron el manto de púrpura y le pusieron sus propios vestidos. Lo llevaron para crucificarlo.
21 போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள்.
Obligaron a uno que pasaba por allí, procedente del campo, Simón de Cirene, padre de Alejandro y de Rufo, a ir con ellos para que llevara su cruz.
22 பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும்.
Le llevaron al lugar llamado Gólgota, que es, según la interpretación, “El lugar de la calavera”.
23 அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார்.
Le ofrecieron de beber vino mezclado con mirra, pero no lo tomó.
24 பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள்.
Al crucificarlo, se repartieron sus vestidos, echando a suertes lo que debía tomar cada uno.
25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது.
Era la hora tercera cuando lo crucificaron.
26 அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன்.
Sobre él estaba escrita la superposición de su acusación: “EL REY DE LOS JUDÍOS”.
27 அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
Con él crucificaron a dos ladrones, uno a su derecha y otro a su izquierda.
28 அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று.
Se cumplió la Escritura que dice: “Fue contado con los transgresores”.
29 அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே,
Los que pasaban por allí le blasfemaban, moviendo la cabeza y diciendo: “¡Ja! Tú que destruyes el templo y lo construyes en tres días,
30 நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள்.
sálvate a ti mismo y baja de la cruz”.
31 அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்!
Asimismo, también los jefes de los sacerdotes, burlándose entre ellos con los escribas, decían: “Ha salvado a otros. No puede salvarse a sí mismo.
32 இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள்.
Que baje ahora de la cruz el Cristo, el Rey de Israel, para que le veamos y le creamos.” Los que estaban crucificados con él también le insultaban.
33 மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது.
Cuando llegó la hora sexta, hubo oscuridad sobre toda la tierra hasta la hora novena.
34 மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.
A la hora novena, Jesús clamó a gran voz, diciendo: “Eloi, Eloi, lama sabachthani?”, que es, interpretado, “Dios mío, Dios mío, ¿por qué me has abandonado?”
35 அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
Algunos de los que estaban allí, al oírlo, dijeron: “He aquí que llama a Elías”.
36 அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான்.
Uno corrió y, llenando una esponja de vinagre, la puso en una caña y se la dio a beber, diciendo: “Déjalo. A ver si viene Elías a bajarlo”.
37 அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார்.
Jesús gritó con fuerza y entregó el espíritu.
38 அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
El velo del templo se rasgó en dos desde arriba hasta abajo.
39 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான்.
Cuando el centurión, que estaba frente a él, vio que gritaba así y exhalaba, dijo: “¡Verdaderamente este hombre era el Hijo de Dios!”
40 சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்.
Había también mujeres que miraban desde lejos, entre las cuales estaban María Magdalena y María la madre de Santiago el Menor y de José, y Salomé;
41 இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள்.
las cuales, estando él en Galilea, le seguían y le servían; y otras muchas que subieron con él a Jerusalén.
42 அந்த நாள் ஓய்வுநாளுக்கு முந்தின நாளான, ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது,
Cuando llegó la noche, por ser el día de la preparación, es decir, la víspera del sábado,
43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும், நீதிமன்றத்தின் முக்கிய உறுப்பினருமான யோசேப்பு துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். இவன் இறைவனின் அரசுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒருவன்.
vino José de Arimatea, miembro destacado del consejo, que también buscaba el Reino de Dios. Entró audazmente a Pilato y pidió el cuerpo de Jesús.
44 இயேசு அதற்குள்ளாகவே இறந்துவிட்டார் எனக்கேட்ட பிலாத்து வியப்படைந்தான். அவன் நூற்றுக்குத் தலைவனை கூப்பிட்டு, “இயேசு இறந்து விட்டாரா?” என்று கேட்டான்.
Pilato se sorprendió al oír que ya estaba muerto; y llamando al centurión, le preguntó si llevaba mucho tiempo muerto.
45 நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான்.
Al enterarse por el centurión, concedió el cuerpo a José.
46 எனவே யோசேப்பு மென்பட்டுத் துணியைக் கொண்டுவந்து, அவரது உடலைக் கீழே இறக்கி, அதை அந்தத் துணியினால் சுற்றினான். பின்பு, அதை கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, அதன் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி மூடினான்.
Compró un lienzo y, bajándolo, lo envolvió en el lienzo y lo depositó en un sepulcro excavado en una roca. Hizo rodar una piedra contra la puerta del sepulcro.
47 மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள்.
María Magdalena y María, la madre de Josés, vieron dónde estaba depositado.