< மாற்கு 10 >
1 பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார்.
ଅନନ୍ତରଂ ସ ତତ୍ସ୍ଥାନାତ୍ ପ୍ରସ୍ଥାଯ ଯର୍ଦ୍ଦନନଦ୍ୟାଃ ପାରେ ଯିହୂଦାପ୍ରଦେଶ ଉପସ୍ଥିତୱାନ୍, ତତ୍ର ତଦନ୍ତିକେ ଲୋକାନାଂ ସମାଗମେ ଜାତେ ସ ନିଜରୀତ୍ୟନୁସାରେଣ ପୁନସ୍ତାନ୍ ଉପଦିଦେଶ|
2 சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
ତଦା ଫିରୂଶିନସ୍ତତ୍ସମୀପମ୍ ଏତ୍ୟ ତଂ ପରୀକ୍ଷିତୁଂ ପପ୍ରଚ୍ଛଃ ସ୍ୱଜାଯା ମନୁଜାନାଂ ତ୍ୟଜ୍ୟା ନ ୱେତି?
3 அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார்.
ତତଃ ସ ପ୍ରତ୍ୟୱାଦୀତ୍, ଅତ୍ର କାର୍ୟ୍ୟେ ମୂସା ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତି କିମାଜ୍ଞାପଯତ୍?
4 அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.
ତ ଊଚୁଃ ତ୍ୟାଗପତ୍ରଂ ଲେଖିତୁଂ ସ୍ୱପତ୍ନୀଂ ତ୍ୟକ୍ତୁଞ୍ଚ ମୂସାଽନୁମନ୍ୟତେ|
5 அதற்கு இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, மோசே இந்தச் சட்டத்தை உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிறான்” என்றார்.
ତଦା ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ଯୁଷ୍ମାକଂ ମନସାଂ କାଠିନ୍ୟାଦ୍ଧେତୋ ର୍ମୂସା ନିଦେଶମିମମ୍ ଅଲିଖତ୍|
6 “ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார்.
କିନ୍ତୁ ସୃଷ୍ଟେରାଦୌ ଈଶ୍ୱରୋ ନରାନ୍ ପୁଂରୂପେଣ ସ୍ତ୍ରୀରୂପେଣ ଚ ସସର୍ଜ|
7 ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;
"ତତଃ କାରଣାତ୍ ପୁମାନ୍ ପିତରଂ ମାତରଞ୍ଚ ତ୍ୟକ୍ତ୍ୱା ସ୍ୱଜାଯାଯାମ୍ ଆସକ୍ତୋ ଭୱିଷ୍ୟତି,
8 இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
ତୌ ଦ୍ୱାୱ୍ ଏକାଙ୍ଗୌ ଭୱିଷ୍ୟତଃ| " ତସ୍ମାତ୍ ତତ୍କାଲମାରଭ୍ୟ ତୌ ନ ଦ୍ୱାୱ୍ ଏକାଙ୍ଗୌ|
9 ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
ଅତଃ କାରଣାଦ୍ ଈଶ୍ୱରୋ ଯଦଯୋଜଯତ୍ କୋପି ନରସ୍ତନ୍ନ ୱିଯେଜଯେତ୍|
10 மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள்.
ଅଥ ଯୀଶୁ ର୍ଗୃହଂ ପ୍ରୱିଷ୍ଟସ୍ତଦା ଶିଷ୍ୟାଃ ପୁନସ୍ତତ୍କଥାଂ ତଂ ପପ୍ରଚ୍ଛୁଃ|
11 அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.
ତତଃ ସୋୱଦତ୍ କଶ୍ଚିଦ୍ ଯଦି ସ୍ୱଭାର୍ୟ୍ୟାଂ ତ୍ୟକ୍ତୱାନ୍ୟାମ୍ ଉଦ୍ୱହତି ତର୍ହି ସ ସ୍ୱଭାର୍ୟ୍ୟାଯାଃ ପ୍ରାତିକୂଲ୍ୟେନ ୱ୍ୟଭିଚାରୀ ଭୱତି|
12 ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
କାଚିନ୍ନାରୀ ଯଦି ସ୍ୱପତିଂ ହିତ୍ୱାନ୍ୟପୁଂସା ୱିୱାହିତା ଭୱତି ତର୍ହି ସାପି ୱ୍ୟଭିଚାରିଣୀ ଭୱତି|
13 பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள்.
ଅଥ ସ ଯଥା ଶିଶୂନ୍ ସ୍ପୃଶେତ୍, ତଦର୍ଥଂ ଲୋକୈସ୍ତଦନ୍ତିକଂ ଶିଶୱ ଆନୀଯନ୍ତ, କିନ୍ତୁ ଶିଷ୍ୟାସ୍ତାନାନୀତୱତସ୍ତର୍ଜଯାମାସୁଃ|
14 இயேசு இதைக் கண்டபோது, கோபமடைந்தார். அவர் அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
ଯୀଶୁସ୍ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା କ୍ରୁଧ୍ୟନ୍ ଜଗାଦ, ମନ୍ନିକଟମ୍ ଆଗନ୍ତୁଂ ଶିଶୂନ୍ ମା ୱାରଯତ, ଯତ ଏତାଦୃଶା ଈଶ୍ୱରରାଜ୍ୟାଧିକାରିଣଃ|
15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଚ୍ମି, ଯଃ କଶ୍ଚିତ୍ ଶିଶୁୱଦ୍ ଭୂତ୍ୱା ରାଜ୍ୟମୀଶ୍ୱରସ୍ୟ ନ ଗୃହ୍ଲୀଯାତ୍ ସ କଦାପି ତଦ୍ରାଜ୍ୟଂ ପ୍ରୱେଷ୍ଟୁଂ ନ ଶକ୍ନୋତି|
16 இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
ଅନନତରଂ ସ ଶିଶୂନଙ୍କେ ନିଧାଯ ତେଷାଂ ଗାତ୍ରେଷୁ ହସ୍ତୌ ଦତ୍ତ୍ୱାଶିଷଂ ବଭାଷେ|
17 இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ଅଥ ସ ୱର୍ତ୍ମନା ଯାତି, ଏତର୍ହି ଜନ ଏକୋ ଧାୱନ୍ ଆଗତ୍ୟ ତତ୍ସମ୍ମୁଖେ ଜାନୁନୀ ପାତଯିତ୍ୱା ପୃଷ୍ଟୱାନ୍, ଭୋଃ ପରମଗୁରୋ, ଅନନ୍ତାଯୁଃ ପ୍ରାପ୍ତଯେ ମଯା କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ? (aiōnios )
18 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவனைத்தவிர நல்லவர் ஒருவரும் இல்லை.
ତଦା ଯୀଶୁରୁୱାଚ, ମାଂ ପରମଂ କୁତୋ ୱଦସି? ୱିନେଶ୍ୱରଂ କୋପି ପରମୋ ନ ଭୱତି|
19 ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
ପରସ୍ତ୍ରୀଂ ନାଭିଗଚ୍ଛ; ନରଂ ମା ଘାତଯ; ସ୍ତେଯଂ ମା କୁରୁ; ମୃଷାସାକ୍ଷ୍ୟଂ ମା ଦେହି; ହିଂସାଞ୍ଚ ମା କୁରୁ; ପିତରୌ ସମ୍ମନ୍ୟସ୍ୱ; ନିଦେଶା ଏତେ ତ୍ୱଯା ଜ୍ଞାତାଃ|
20 அதற்கு அவன், “போதகரே, நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
ତତସ୍ତନ ପ୍ରତ୍ୟୁକ୍ତଂ, ହେ ଗୁରୋ ବାଲ୍ୟକାଲାଦହଂ ସର୍ୱ୍ୱାନେତାନ୍ ଆଚରାମି|
21 இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடத்தில் குறைவுபடுகிறது. நீ போய், உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
ତଦା ଯୀଶୁସ୍ତଂ ୱିଲୋକ୍ୟ ସ୍ନେହେନ ବଭାଷେ, ତୱୈକସ୍ୟାଭାୱ ଆସ୍ତେ; ତ୍ୱଂ ଗତ୍ୱା ସର୍ୱ୍ୱସ୍ୱଂ ୱିକ୍ରୀଯ ଦରିଦ୍ରେଭ୍ୟୋ ୱିଶ୍ରାଣଯ, ତତଃ ସ୍ୱର୍ଗେ ଧନଂ ପ୍ରାପ୍ସ୍ୟସି; ତତଃ ପରମ୍ ଏତ୍ୟ କ୍ରୁଶଂ ୱହନ୍ ମଦନୁୱର୍ତ୍ତୀ ଭୱ|
22 அப்பொழுது அவனுடைய முகம் வாடியது. அவன் துக்கத்துடன் திரும்பிப்போனான், ஏனெனில் அவன் மிகுந்த செல்வமுடையவனாக இருந்தான்.
କିନ୍ତୁ ତସ୍ୟ ବହୁସମ୍ପଦ୍ୱିଦ୍ୟମାନତ୍ୱାତ୍ ସ ଇମାଂ କଥାମାକର୍ଣ୍ୟ ୱିଷଣୋ ଦୁଃଖିତଶ୍ଚ ସନ୍ ଜଗାମ|
23 இயேசு சுற்றிப்பார்த்து, தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன் இறைவனின் அரசுக்குள் போவது எவ்வளவு கடினமானது!” என்றார்.
ଅଥ ଯୀଶୁଶ୍ଚତୁର୍ଦିଶୋ ନିରୀକ୍ଷ୍ୟ ଶିଷ୍ୟାନ୍ ଅୱାଦୀତ୍, ଧନିଲୋକାନାମ୍ ଈଶ୍ୱରରାଜ୍ୟପ୍ରୱେଶଃ କୀଦୃଗ୍ ଦୁଷ୍କରଃ|
24 அவருடைய வார்த்தைகளைக்குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது!
ତସ୍ୟ କଥାତଃ ଶିଷ୍ୟାଶ୍ଚମଚ୍ଚକ୍ରୁଃ, କିନ୍ତୁ ସ ପୁନରୱଦତ୍, ହେ ବାଲକା ଯେ ଧନେ ୱିଶ୍ୱସନ୍ତି ତେଷାମ୍ ଈଶ୍ୱରରାଜ୍ୟପ୍ରୱେଶଃ କୀଦୃଗ୍ ଦୁଷ୍କରଃ|
25 ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.
ଈଶ୍ୱରରାଜ୍ୟେ ଧନିନାଂ ପ୍ରୱେଶାତ୍ ସୂଚିରନ୍ଧ୍ରେଣ ମହାଙ୍ଗସ୍ୟ ଗମନାଗମନଂ ସୁକରଂ|
26 சீடர்களோ, மேலும் அதிக வியப்படைந்து, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
ତଦା ଶିଷ୍ୟା ଅତୀୱ ୱିସ୍ମିତାଃ ପରସ୍ପରଂ ପ୍ରୋଚୁଃ, ତର୍ହି କଃ ପରିତ୍ରାଣଂ ପ୍ରାପ୍ତୁଂ ଶକ୍ନୋତି?
27 இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார்.
ତତୋ ଯୀଶୁସ୍ତାନ୍ ୱିଲୋକ୍ୟ ବଭାଷେ, ତନ୍ ନରସ୍ୟାସାଧ୍ୟଂ କିନ୍ତୁ ନେଶ୍ୱରସ୍ୟ, ଯତୋ ହେତୋରୀଶ୍ୱରସ୍ୟ ସର୍ୱ୍ୱଂ ସାଧ୍ୟମ୍|
28 அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவந்தோமே” என்றான்.
ତଦା ପିତର ଉୱାଚ, ପଶ୍ୟ ୱଯଂ ସର୍ୱ୍ୱଂ ପରିତ୍ୟଜ୍ୟ ଭୱତୋନୁଗାମିନୋ ଜାତାଃ|
29 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,
ତତୋ ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୱଦତ୍, ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ୱଦାମି, ମଦର୍ଥଂ ସୁସଂୱାଦାର୍ଥଂ ୱା ଯୋ ଜନଃ ସଦନଂ ଭ୍ରାତରଂ ଭଗିନୀଂ ପିତରଂ ମାତରଂ ଜାଯାଂ ସନ୍ତାନାନ୍ ଭୂମି ୱା ତ୍ୟକ୍ତ୍ୱା
30 அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn , aiōnios )
ଗୃହଭ୍ରାତୃଭଗିନୀପିତୃମାତୃପତ୍ନୀସନ୍ତାନଭୂମୀନାମିହ ଶତଗୁଣାନ୍ ପ୍ରେତ୍ୟାନନ୍ତାଯୁଶ୍ଚ ନ ପ୍ରାପ୍ନୋତି ତାଦୃଶଃ କୋପି ନାସ୍ତି| (aiōn , aiōnios )
31 ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர், கடைசியாகவும். கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.
କିନ୍ତ୍ୱଗ୍ରୀଯା ଅନେକେ ଲୋକାଃ ଶେଷାଃ, ଶେଷୀଯା ଅନେକେ ଲୋକାଶ୍ଚାଗ୍ରା ଭୱିଷ୍ୟନ୍ତି|
32 அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.
ଅଥ ଯିରୂଶାଲମ୍ୟାନକାଲେ ଯୀଶୁସ୍ତେଷାମ୍ ଅଗ୍ରଗାମୀ ବଭୂୱ, ତସ୍ମାତ୍ତେ ଚିତ୍ରଂ ଜ୍ଞାତ୍ୱା ପଶ୍ଚାଦ୍ଗାମିନୋ ଭୂତ୍ୱା ବିଭ୍ୟୁଃ| ତଦା ସ ପୁନ ର୍ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟାନ୍ ଗୃହୀତ୍ୱା ସ୍ୱୀଯଂ ଯଦ୍ୟଦ୍ ଘଟିଷ୍ୟତେ ତତ୍ତତ୍ ତେଭ୍ୟଃ କଥଯିତୁଂ ପ୍ରାରେଭେ;
33 “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள்.
ପଶ୍ୟତ ୱଯଂ ଯିରୂଶାଲମ୍ପୁରଂ ଯାମଃ, ତତ୍ର ମନୁଷ୍ୟପୁତ୍ରଃ ପ୍ରଧାନଯାଜକାନାମ୍ ଉପାଧ୍ୟାଯାନାଞ୍ଚ କରେଷୁ ସମର୍ପଯିଷ୍ୟତେ; ତେ ଚ ୱଧଦଣ୍ଡାଜ୍ଞାଂ ଦାପଯିତ୍ୱା ପରଦେଶୀଯାନାଂ କରେଷୁ ତଂ ସମର୍ପଯିଷ୍ୟନ୍ତି|
34 என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார்.
ତେ ତମୁପହସ୍ୟ କଶଯା ପ୍ରହୃତ୍ୟ ତଦ୍ୱପୁଷି ନିଷ୍ଠୀୱଂ ନିକ୍ଷିପ୍ୟ ତଂ ହନିଷ୍ୟନ୍ତି, ତତଃ ସ ତୃତୀଯଦିନେ ପ୍ରୋତ୍ଥାସ୍ୟତି|
35 அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.
ତତଃ ସିୱଦେଃ ପୁତ୍ରୌ ଯାକୂବ୍ୟୋହନୌ ତଦନ୍ତିକମ୍ ଏତ୍ୟ ପ୍ରୋଚତୁଃ, ହେ ଗୁରୋ ଯଦ୍ ଆୱାଭ୍ୟାଂ ଯାଚିଷ୍ୟତେ ତଦସ୍ମଦର୍ଥଂ ଭୱାନ୍ କରୋତୁ ନିୱେଦନମିଦମାୱଯୋଃ|
36 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார்.
ତତଃ ସ କଥିତୱାନ୍, ଯୁୱାଂ କିମିଚ୍ଛଥଃ? କିଂ ମଯା ଯୁଷ୍ମଦର୍ଥଂ କରଣୀଯଂ?
37 அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள்.
ତଦା ତୌ ପ୍ରୋଚତୁଃ, ଆୱଯୋରେକଂ ଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ୱାମପାର୍ଶ୍ୱେ ଚୈକଂ ତୱୈଶ୍ୱର୍ୟ୍ୟପଦେ ସମୁପୱେଷ୍ଟୁମ୍ ଆଜ୍ଞାପଯ|
38 அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
କିନ୍ତୁ ଯୀଶୁଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ ଯୁୱାମଜ୍ଞାତ୍ୱେଦଂ ପ୍ରାର୍ଥଯେଥେ, ଯେନ କଂସେନାହଂ ପାସ୍ୟାମି ତେନ ଯୁୱାଭ୍ୟାଂ କିଂ ପାତୁଂ ଶକ୍ଷ୍ୟତେ? ଯସ୍ମିନ୍ ମଜ୍ଜନେନାହଂ ମଜ୍ଜିଷ୍ୟେ ତନ୍ମଜ୍ଜନେ ମଜ୍ଜଯିତୁଂ କିଂ ଯୁୱାଭ୍ୟାଂ ଶକ୍ଷ୍ୟତେ? ତୌ ପ୍ରତ୍ୟୂଚତୁଃ ଶକ୍ଷ୍ୟତେ|
39 அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள்.
ତଦା ଯୀଶୁରୱଦତ୍ ଯେନ କଂସେନାହଂ ପାସ୍ୟାମି ତେନାୱଶ୍ୟଂ ଯୁୱାମପି ପାସ୍ୟଥଃ, ଯେନ ମଜ୍ଜନେନ ଚାହଂ ମଜ୍ଜିଯ୍ୟେ ତତ୍ର ଯୁୱାମପି ମଜ୍ଜିଷ୍ୟେଥେ|
40 ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
କିନ୍ତୁ ଯେଷାମର୍ଥମ୍ ଇଦଂ ନିରୂପିତଂ, ତାନ୍ ୱିହାଯାନ୍ୟଂ କମପି ମମ ଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ୱାମପାର୍ଶ୍ୱେ ୱା ସମୁପୱେଶଯିତୁଂ ମମାଧିକାରୋ ନାସ୍ତି|
41 இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள்.
ଅଥାନ୍ୟଦଶଶିଷ୍ୟା ଇମାଂ କଥାଂ ଶ୍ରୁତ୍ୱା ଯାକୂବ୍ୟୋହନ୍ଭ୍ୟାଂ ଚୁକୁପୁଃ|
42 இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
କିନ୍ତୁ ଯୀଶୁସ୍ତାନ୍ ସମାହୂଯ ବଭାଷେ, ଅନ୍ୟଦେଶୀଯାନାଂ ରାଜତ୍ୱଂ ଯେ କୁର୍ୱ୍ୱନ୍ତି ତେ ତେଷାମେୱ ପ୍ରଭୁତ୍ୱଂ କୁର୍ୱ୍ୱନ୍ତି, ତଥା ଯେ ମହାଲୋକାସ୍ତେ ତେଷାମ୍ ଅଧିପତିତ୍ୱଂ କୁର୍ୱ୍ୱନ୍ତୀତି ଯୂଯଂ ଜାନୀଥ|
43 ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும்.
କିନ୍ତୁ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ ନ ତଥା ଭୱିଷ୍ୟତି, ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ ଯଃ ପ୍ରାଧାନ୍ୟଂ ୱାଞ୍ଛତି ସ ଯୁଷ୍ମାକଂ ସେୱକୋ ଭୱିଷ୍ୟତି,
44 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும்.
ଯୁଷ୍ମାକଂ ଯୋ ମହାନ୍ ଭୱିତୁମିଚ୍ଛତି ସ ସର୍ୱ୍ୱେଷାଂ କିଙ୍କରୋ ଭୱିଷ୍ୟତି|
45 மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.
ଯତୋ ମନୁଷ୍ୟପୁତ୍ରଃ ସେୱ୍ୟୋ ଭୱିତୁଂ ନାଗତଃ ସେୱାଂ କର୍ତ୍ତାଂ ତଥାନେକେଷାଂ ପରିତ୍ରାଣସ୍ୟ ମୂଲ୍ୟରୂପସ୍ୱପ୍ରାଣଂ ଦାତୁଞ୍ଚାଗତଃ|
46 அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ଅଥ ତେ ଯିରୀହୋନଗରଂ ପ୍ରାପ୍ତାସ୍ତସ୍ମାତ୍ ଶିଷ୍ୟୈ ର୍ଲୋକୈଶ୍ଚ ସହ ଯୀଶୋ ର୍ଗମନକାଲେ ଟୀମଯସ୍ୟ ପୁତ୍ରୋ ବର୍ଟୀମଯନାମା ଅନ୍ଧସ୍ତନ୍ମାର୍ଗପାର୍ଶ୍ୱେ ଭିକ୍ଷାର୍ଥମ୍ ଉପୱିଷ୍ଟଃ|
47 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான்.
ସ ନାସରତୀଯସ୍ୟ ଯୀଶୋରାଗମନୱାର୍ତ୍ତାଂ ପ୍ରାପ୍ୟ ପ୍ରୋଚୈ ର୍ୱକ୍ତୁମାରେଭେ, ହେ ଯୀଶୋ ଦାଯୂଦଃ ସନ୍ତାନ ମାଂ ଦଯସ୍ୱ|
48 பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
ତତୋନେକେ ଲୋକା ମୌନୀଭୱେତି ତଂ ତର୍ଜଯାମାସୁଃ, କିନ୍ତୁ ସ ପୁନରଧିକମୁଚ୍ଚୈ ର୍ଜଗାଦ, ହେ ଯୀଶୋ ଦାଯୂଦଃ ସନ୍ତାନ ମାଂ ଦଯସ୍ୱ|
49 இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
ତଦା ଯୀଶୁଃ ସ୍ଥିତ୍ୱା ତମାହ୍ୱାତୁଂ ସମାଦିଦେଶ, ତତୋ ଲୋକାସ୍ତମନ୍ଧମାହୂଯ ବଭାଷିରେ, ହେ ନର, ସ୍ଥିରୋ ଭୱ, ଉତ୍ତିଷ୍ଠ, ସ ତ୍ୱାମାହ୍ୱଯତି|
50 அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான்.
ତଦା ସ ଉତ୍ତରୀଯୱସ୍ତ୍ରଂ ନିକ୍ଷିପ୍ୟ ପ୍ରୋତ୍ଥାଯ ଯୀଶୋଃ ସମୀପଂ ଗତଃ|
51 இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான்.
ତତୋ ଯୀଶୁସ୍ତମୱଦତ୍ ତ୍ୱଯା କିଂ ପ୍ରାର୍ଥ୍ୟତେ? ତୁଭ୍ୟମହଂ କିଂ କରିଷ୍ୟାମୀ? ତଦା ସୋନ୍ଧସ୍ତମୁୱାଚ, ହେ ଗୁରୋ ମଦୀଯା ଦୃଷ୍ଟିର୍ଭୱେତ୍|
52 அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.
ତତୋ ଯୀଶୁସ୍ତମୁୱାଚ ଯାହି ତୱ ୱିଶ୍ୱାସସ୍ତ୍ୱାଂ ସ୍ୱସ୍ଥମକାର୍ଷୀତ୍, ତସ୍ମାତ୍ ତତ୍କ୍ଷଣଂ ସ ଦୃଷ୍ଟିଂ ପ୍ରାପ୍ୟ ପଥା ଯୀଶୋଃ ପଶ୍ଚାଦ୍ ଯଯୌ|