< மல்கியா 1 >

1 இது ஒரு இறைவாக்கு, மல்கியாவின் மூலம் இஸ்ரயேலுக்குக் கிடைத்த யெகோவாவின் வார்த்தை.
מַשָּׂ֥א דְבַר־יְהוָ֖ה אֶל־יִשְׂרָאֵ֑ל בְּיַ֖ד מַלְאָכִֽי׃
2 “இஸ்ரயேலரே, நான் உங்களில் அன்பாயிருக்கிறேன்” என யெகோவா சொல்கிறார். “ஆனால், ‘எங்களில் எப்படி நீர் அன்பு செலுத்தினீர்?’ என நீங்கள் கேட்கிறீர்கள். “ஏசா யாக்கோபின் சகோதரன் அல்லவா?” அப்படியிருந்தும், “யாக்கோபை நான் நேசித்தேன்.
אָהַ֤בְתִּי אֶתְכֶם֙ אָמַ֣ר יְהוָ֔ה וַאֲמַרְתֶּ֖ם בַּמָּ֣ה אֲהַבְתָּ֑נוּ הֲלוֹא־אָ֨ח עֵשָׂ֤ו לְיַֽעֲקֹב֙ נְאֻם־יְהוָ֔ה וָאֹהַ֖ב אֶֽת־יַעֲקֹֽב׃
3 ஏசாவையோ நான் வெறுத்தேன், அவனுடைய மலையைப் பாழடையச் செய்து அவனுடைய சொத்துரிமையை பாலைவன நரிகளுக்குக் கொடுத்தேன்” என்று யெகோவா சொல்கிறார்.
וְאֶת־עֵשָׂ֖ו שָׂנֵ֑אתִי וָאָשִׂ֤ים אֶת־הָרָיו֙ שְׁמָמָ֔ה וְאֶת־נַחֲלָת֖וֹ לְתַנּ֥וֹת מִדְבָּֽר׃
4 “நாங்கள் நொறுக்கப்பட்டோம், ஆயினும் திரும்பிவந்து பாழடைந்தவற்றைக் கட்டியெழுப்புவோம்” என ஏதோமியர் சொல்லலாம். ஆனால் சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்கள் கட்டியெழுப்பலாம், ஆனால் நான் அதை இடித்து அழிப்பேன். அவர்கள் கொடுமையின் நாடு என்றும், எப்பொழுதும் யெகோவாவின் கோபத்திற்கு உள்ளான மக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள்.
כִּֽי־תֹאמַ֨ר אֱד֜וֹם רֻשַּׁ֗שְׁנוּ וְנָשׁוּב֙ וְנִבְנֶ֣ה חֳרָב֔וֹת כֹּ֤ה אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת הֵ֥מָּה יִבְנ֖וּ וַאֲנִ֣י אֶהֱר֑וֹס וְקָרְא֤וּ לָהֶם֙ גְּב֣וּל רִשְׁעָ֔ה וְהָעָ֛ם אֲשֶׁר־זָעַ֥ם יְהוָ֖ה עַד־עוֹלָֽם׃
5 உங்கள் சொந்தக் கண்களினால் இதைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள், ‘யெகோவாவே மிகவும் பெரியவர், இஸ்ரயேலின் எல்லைகளைக் கடந்தும் யெகோவாவே பெரியவர்’ என்று சொல்வீர்கள்.
וְעֵינֵיכֶ֖ם תִּרְאֶ֑ינָה וְאַתֶּ֤ם תֹּֽאמְרוּ֙ יִגְדַּ֣ל יְהוָ֔ה מֵעַ֖ל לִגְב֥וּל יִשְׂרָאֵֽל׃
6 “ஒரு மகன் தன் தகப்பனையும், ஒரு வேலைக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறான். நான் ஒரு தகப்பனாயிருந்தால், எனக்குரிய கனம் எங்கே? நான் ஒரு எஜமானாயிருந்தால், எனக்குரிய மரியாதை எங்கே?” என சேனைகளின் யெகோவா உங்களிடம் கேட்கிறார். ஆசாரியர்களே, நீங்கள் அல்லவா என்னுடைய பெயரை அவமதிக்கிறீர்கள். ஆனால், “உம்முடைய பெயரை எப்படி அவமதித்தோம்?” எனக் கேட்கிறீர்கள்.
בֵּ֛ן יְכַבֵּ֥ד אָ֖ב וְעֶ֣בֶד אֲדֹנָ֑יו וְאִם־אָ֣ב אָ֣נִי אַיֵּ֣ה כְבוֹדִ֡י וְאִם־אֲדוֹנִ֣ים אָנִי֩ אַיֵּ֨ה מוֹרָאִ֜י אָמַ֣ר ׀ יְהוָ֣ה צְבָא֗וֹת לָכֶם֙ הַכֹּֽהֲנִים֙ בּוֹזֵ֣י שְׁמִ֔י וַאֲמַרְתֶּ֕ם בַּמֶּ֥ה בָזִ֖ינוּ אֶת־שְׁמֶֽךָ׃
7 என் பலிபீடத்தின்மேல் அசுத்தமான காணிக்கைகளை வைக்கிறீர்கள். ஆயினும், “உம்மை எப்படி கறைபடுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். யெகோவாவின் மேஜை மதிப்புக்குரியது என்று நீங்கள் எண்ணாததினாலேயே அப்படிச் செய்கிறீர்கள்.
מַגִּישִׁ֤ים עַֽל־מִזְבְּחִי֙ לֶ֣חֶם מְגֹאָ֔ל וַאֲמַרְתֶּ֖ם בַּמֶּ֣ה גֵֽאַלְנ֑וּךָ בֶּאֱמָרְכֶ֕ם שֻׁלְחַ֥ן יְהוָ֖ה נִבְזֶ֥ה הֽוּא׃
8 நீங்கள் குருடான மிருகங்களை பலிக்காகக் கொண்டு வருகிறீர்களே, அது தவறில்லையா? ஊனமானதும் நோயுற்றதுமான மிருகங்களைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உங்கள் ஆளுநருக்குக் கொடுத்துப் பாருங்கள். உங்களிடம் அவன் பிரியமாய் இருப்பானோ? அல்லது உங்களை அவன் ஏற்றுக்கொள்வானோ? என சேனைகளின் யெகோவா கேட்கிறார்.
וְכִֽי־תַגִּשׁ֨וּן עִוֵּ֤ר לִזְבֹּ֙חַ֙ אֵ֣ין רָ֔ע וְכִ֥י תַגִּ֛ישׁוּ פִּסֵּ֥חַ וְחֹלֶ֖ה אֵ֣ין רָ֑ע הַקְרִיבֵ֨הוּ נָ֜א לְפֶחָתֶ֗ךָ הֲיִּרְצְךָ֙ א֚וֹ הֲיִשָּׂ֣א פָנֶ֔יךָ אָמַ֖ר יְהוָ֥ה צְבָאֽוֹת׃
9 “அப்படியிருந்தும் இப்போது உங்களில் கிருபையாய் இருக்கும்படி, இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறீர்கள். உங்கள் கைகளில் இப்படியான காணிக்கைகளை அவரிடம் கொண்டுவந்தால், ஏன் அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்?” என சேனைகளின் யெகோவா கேட்கிறார்.
וְעַתָּ֛ה חַלּוּ־נָ֥א פְנֵי־אֵ֖ל וִֽיחָנֵ֑נוּ מִיֶּדְכֶם֙ הָ֣יְתָה זֹּ֔את הֲיִשָּׂ֤א מִכֶּם֙ פָּנִ֔ים אָמַ֖ר יְהוָ֥ה צְבָאֽוֹת׃
10 “என் பலிபீடத்தில் பயனற்ற நெருப்பை மூட்டாதபடி, உங்களில் ஒருவனாகிலும் ஆலயக் கதவை அடைக்கமாட்டானோ, உங்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் கைகளிலிருந்து நான் எந்த ஒரு காணிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
מִ֤י גַם־בָּכֶם֙ וְיִסְגֹּ֣ר דְּלָתַ֔יִם וְלֹֽא־תָאִ֥ירוּ מִזְבְּחִ֖י חִנָּ֑ם אֵֽין־לִ֨י חֵ֜פֶץ בָּכֶ֗ם אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת וּמִנְחָ֖ה לֹֽא־אֶרְצֶ֥ה מִיֶּדְכֶֽם׃
11 நாடுகளுக்குள்ளே என் பெயர் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து, அது மறையும் திசை வரையும், மேன்மையுள்ளதாய் விளங்கும். அதனால் எல்லா இடத்திலேயும் என் பெயருக்கு தூபமும், தூய்மையான காணிக்கையும் செலுத்தப்படும். ஏனெனில் நாடுகளிடையே, என் பெயர் மேன்மையுள்ளதாயிருக்கும்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
כִּ֣י מִמִּזְרַח־שֶׁ֜מֶשׁ וְעַד־מְבוֹא֗וֹ גָּד֤וֹל שְׁמִי֙ בַּגּוֹיִ֔ם וּבְכָל־מָק֗וֹם מֻקְטָ֥ר מֻגָּ֛שׁ לִשְׁמִ֖י וּמִנְחָ֣ה טְהוֹרָ֑ה כִּֽי־גָד֤וֹל שְׁמִי֙ בַּגּוֹיִ֔ם אָמַ֖ר יְהוָ֥ה צְבָאֽוֹת׃
12 “ஆனால் நீங்கள் யெகோவாவின் பரிசுத்த பெயரைக் கறைப்படுத்துகிறீர்கள், ‘யெகோவாவினுடைய மேஜையையும் அப்பத்தையும் குறித்தோ, அவை கறைபட்டால் பரவாயில்லை’ என்று சொல்லி அதைத் தூய்மைக் கேடாக்குகிறீர்கள்.
וְאַתֶּ֖ם מְחַלְּלִ֣ים אוֹת֑וֹ בֶּאֱמָרְכֶ֗ם שֻׁלְחַ֤ן אֲדֹנָי֙ מְגֹאָ֣ל ה֔וּא וְנִיב֖וֹ נִבְזֶ֥ה אָכְלֽוֹ׃
13 ‘இது எவ்வளவு தொல்லையாயிருக்கிறது!’ என்று காணிக்கை ஒப்புக்கொடுப்பதை இழிவாக பேசுகிறீர்கள் என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “காயப்பட்டதையும், ஊனமானதையும், நோயுற்றதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்தும்போது, அதை உங்கள் கைகளிலிருந்து நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ?” என யெகோவா கேட்கிறார்.
וַאֲמַרְתֶּם֩ הִנֵּ֨ה מַתְּלָאָ֜ה וְהִפַּחְתֶּ֣ם אוֹת֗וֹ אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת וַהֲבֵאתֶ֣ם גָּז֗וּל וְאֶת־הַפִּסֵּ֙חַ֙ וְאֶת־הַ֣חוֹלֶ֔ה וַהֲבֵאתֶ֖ם אֶת־הַמִּנְחָ֑ה הַאֶרְצֶ֥ה אוֹתָ֛הּ מִיֶּדְכֶ֖ם אָמַ֥ר יְהוָֽה׃ ס
14 “தன் மந்தையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கடா இருக்கும்போது, யெகோவாவுக்கு அதை நேர்ந்தபின், குறைபாடுள்ள ஒரு மிருகத்தைப் பலியிட்டால், அவன் ஏமாற்றுக்காரன், சபிக்கப்பட்டவன்; ஏனெனில் நான் ஒரு பேரரசர், என் பெயர் நாடுகளுக்குள்ளே பயத்திற்குரியதாய் இருக்கவேண்டும்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
וְאָר֣וּר נוֹכֵ֗ל וְיֵ֤שׁ בְּעֶדְרוֹ֙ זָכָ֔ר וְנֹדֵ֛ר וְזֹבֵ֥חַ מָשְׁחָ֖ת לַֽאדֹנָ֑י כִּי֩ מֶ֨לֶךְ גָּד֜וֹל אָ֗נִי אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת וּשְׁמִ֖י נוֹרָ֥א בַגּוֹיִֽם׃

< மல்கியா 1 >