< லூக்கா 21 >
1 இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, பணக்காரர் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார்.
[Ісус] дивився, як багатії клали свої дари в скарбницю [Храму].
2 ஒரு ஏழை விதவை, இரண்டு சிறிய செப்பு நாணயங்களை அதிலே போடுகிறதையும் அவர் கண்டார்.
Побачив Він також і бідну вдову, яка поклала туди дві лепти.
3 அப்பொழுது அவர், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை, மற்ற எல்லோரைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டிருக்கிறாள்.
І промовив: «Істинно кажу вам: ця бідна вдова поклала більше, ніж усі інші,
4 இவர்கள் எல்லோரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கைளைக் கொடுத்தார்கள்; இவளோ, தனது ஏழ்மையிலிருந்து, தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார்.
бо всі клали зі свого достатку, а вона зі своєї бідності поклала все, що в неї було на прожиток».
5 இயேசுவினுடைய சீடர்களில் சிலர், “ஆலயம் அழகான கற்களாலும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளினாலும் எவ்வளவாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு அவர்களிடம்,
Коли присутні заговорили про Храм, що він прикрашений дорогоцінним камінням та дарами, Він сказав:
6 “நீங்கள் இங்கே காண்கிற இவையெல்லாம், ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி இடிக்கப்படும் நாட்கள் வரும்; அவை ஒவ்வொன்றும் கீழே தள்ளிவிடப்படும்” என்றார்.
―Прийдуть дні, коли з того, що бачите, не залишиться каменя на камені, який не був би зруйнований.
7 அவர்கள் இயேசுவிடம், “போதகரே, எப்பொழுது இவை நிகழும்? நிகழப்போகிறது என்பதற்கான அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள்.
І запитали Його: ―Учителю, коли це станеться? І яка ознака того, що це має статися?
8 இயேசு அதற்குப் பதிலாக, “நீங்கள் ஏமாறாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில், அநேகர் நான்தான் அவர், காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்றவேண்டாம்.
Він відповів: ―Дивіться, щоб ніхто не ввів вас в оману, бо багато хто прийде в ім’я Моє й казатиме: «Це Я!» і «Час наблизився!» Не йдіть за ними!
9 நீங்கள் யுத்தங்களையும், கலவரங்களையும் கேள்விப்படும்போது, பயப்படவேண்டாம். முதலில் இவை நிகழவே வேண்டும். ஆனாலும், முடிவோ உடனே வராது” என்றார்.
Коли почуєте про війни та повстання, не лякайтеся: спочатку все це має статися, але кінець буде не відразу.
10 பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசு அரசிற்கெதிராய் எழும்பும்.
Тоді сказав їм: ―Повстане народ проти народу й царство проти царства.
11 பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கர சம்பவங்களும், வானத்திலிருந்து பெரிய அடையாளங்களும் காணப்படும்.
Будуть сильні землетруси в різних місцях, голод та чума. Будуть відбуватися страшні події та великі знамення на небі.
12 “இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவை எல்லாம் என் பெயரின் பொருட்டு நிகழும்.
Але перед тим, як все це відбудеться, накладуть на вас руки та переслідуватимуть вас. Видаватимуть вас у синагоги та в’язниці, поведуть вас до царів та правителів через ім’я Моє.
13 நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு, இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும்.
І це дасть вам можливість свідчити.
14 ஆனால், உங்கள் சார்பாக எப்படிப் பேசலாம் என்று முன்னதாகக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
Отже, покладіть собі в серця не турбуватись завчасно, що говорити на свій захист,
15 உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
бо Я дам вам слова й таку мудрість, якій не зможуть противитися й суперечити всі ваші противники.
16 நீங்கள் பெற்றோர்களாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
Вас будуть зраджувати навіть ваші батьки, брати, родичі та друзі. Декого з вас вбиватимуть.
17 என் நிமித்தம் அனைவரும் உங்களை வெறுப்பார்கள்.
І всі будуть ненавидіти вас через Моє ім’я.
18 ஆனால், உங்கள் தலையிலுள்ள ஒரு முடிகூட அழிந்துபோகாது.
Але жодна волосина з вашої голови не пропаде.
19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.
Терпінням вашим ви здобудете душі ваші.
20 “எருசலேம் படை வீரரால் முற்றுகையிடப்படுவதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள்.
Коли ж побачите Єрусалим, оточений військами, тоді знайте, що його спустошення наблизилось.
21 அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். நகரத்தில் இருக்கிறவர்கள் வெளியே புறப்பட்டு போகட்டும். நாட்டு மக்கள் பட்டணத்திற்குள் போகாமல் இருக்கட்டும்.
Тоді ті, що в Юдеї, нехай тікають у гори; ті, що в Єрусалимі, нехай виходять із нього; а ті, що будуть на полях, нехай до нього не входять.
22 ஏனெனில், எழுதப்பட்டிருப்பவை எல்லாம் நிறைவேறப்போகும் தண்டனையின் காலம் இதுவே.
Бо це буде час помсти, коли все написане здійсниться.
23 அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நாட்டிலே கொடிய துன்பமும் உண்டாகும். இந்த மக்களுக்கு எதிராக கடுங்கோபமும் வெளிப்படும்.
Горе вагітним і тим, що будуть годувати грудьми в ті дні, бо велике лихо буде на землі та гнів на цьому народі.
24 அவர்கள் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். எல்லா மக்களின் நாடுகளுக்கும் கைதிகளாய் கொண்டு செல்லப்படுவார்கள். யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரை, எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும்.
[Люди] будуть гинути від меча, їх заберуть у полон поміж усі народи. Єрусалим топтатимуть язичники, аж доки час язичників не закінчиться.
25 “சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் ஏற்படும். பூமியிலோ மக்கள் கடலின் முழக்கத்தினாலும், கொந்தளிப்பினாலும், பெருந்துன்பத்திற்கும், கலக்கத்திற்கும் உட்படுவார்கள்.
І будуть знамення на сонці, місяці та зірках, а на землі буде жах між народами та розгубленість від ревіння морських хвиль.
26 வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படுவதனால், மனிதர் உலகத்திற்கு என்ன ஏற்படுமோ என்று பயத்தினால், மனம் சோர்ந்துபோவார்கள்.
Люди вмиратимуть від страху в очікуванні подій, що насуваються на людство, бо сили небесні захитаються.
27 அவ்வேளையில் மானிடமகனாகிய நான் வல்லமையுடனும், மிகுந்த மகிமையுடனும், மேகத்தில் வருவதை மனிதர்கள் காண்பார்கள்.
І тоді [люди] побачать Сина Людського, Який приходить на хмарі з великою силою та славою.
28 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தி எழுந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது.”
Коли ці речі почнуть збуватися, ви встаньте та підійміть ваші голови, бо наближається визволення ваше.
29 இயேசு சீடர்களுக்கு மேலும் இந்த உவமையைச் சொன்னார்: “அத்திமரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் நோக்கிப்பாருங்கள்.
Потім сказав їм цю притчу: ―Дивіться на смоковницю та на всі дерева:
30 அவை துளிர்விடும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று, நீங்களே பார்த்து அறிந்துகொள்கிறீர்கள்.
коли на них з’являється листя, знаєте, що літо вже близько.
31 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, இறைவனுடைய அரசு சமீபமாய் வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.
Так і ви, коли побачите, що це збувається, знайте: Царство Боже вже близько.
32 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது.
Істинно кажу вам: не мине цей рід, поки все це не станеться.
33 வானமும், பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
Небо та земля проминуть, але слова Мої не проминуть.
34 “ஊதாரித்தனத்தினாலும், மதுபான வெறியினாலும், வாழ்க்கைக்குரிய கவலைகளினாலும் உங்கள் இருதயங்கள் பாரமடைந்து போகாதடி நீங்கள் கவனமாய் இருங்கள். அப்பொழுது அந்த நாள், ஒரு கண்ணியைப்போல எதிர்பாராத விதத்தில், உங்கள்மேல் வரும்.
Будьте уважні, щоб ваші серця не обтяжували ненажерство, п’янство та життєві турботи і щоб день той не застав вас зненацька,
35 பூமி முழுவதிலும் வாழுகின்ற எல்லோர்மேலும் அது வரும்.
як пастка. Бо він прийде несподівано для всіх, хто живе на землі.
36 எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள். நடக்கப்போகின்ற எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக மன்றாடுங்கள். மானிடமகனாகிய எனக்கு முன்பாக, உங்களுக்கு நிற்கக்கூடிய வல்லமை இருக்கவும் மன்றாடுங்கள்” என்றார்.
Завжди пильнуйте та моліться, щоб мати змогу уникнути всього того, що має відбутися, і стати перед Сином Людським.
37 இயேசு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பு, இரவு நேரத்தை ஒலிவமலை எனப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
Кожен день [Ісус] навчав у Храмі, а вночі виходив та перебував на горі, що зветься Оливною.
38 எல்லா மக்களும் அதிகாலையிலேயே எழுந்து, அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவரிடம் ஆலயத்திற்கு வந்தார்கள்.
Увесь народ збирався зранку в Храмі, аби слухати Його.