< லூக்கா 16 >
1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
ଅପରଞ୍ଚ ଯୀଶୁଃ ଶିଷ୍ୟେଭ୍ୟୋନ୍ୟାମେକାଂ କଥାଂ କଥଯାମାସ କସ୍ୟଚିଦ୍ ଧନୱତୋ ମନୁଷ୍ୟସ୍ୟ ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶେ ସମ୍ପତ୍ତେରପୱ୍ୟଯେଽପୱାଦିତେ ସତି
2 எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான்.
ତସ୍ୟ ପ୍ରଭୁସ୍ତମ୍ ଆହୂଯ ଜଗାଦ, ତ୍ୱଯି ଯାମିମାଂ କଥାଂ ଶୃଣୋମି ସା କୀଦୃଶୀ? ତ୍ୱଂ ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶକର୍ମ୍ମଣୋ ଗଣନାଂ ଦର୍ଶଯ ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶପଦେ ତ୍ୱଂ ନ ସ୍ଥାସ୍ୟସି|
3 “அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.
ତଦା ସ ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶୋ ମନସା ଚିନ୍ତଯାମାସ, ପ୍ରଭୁ ର୍ୟଦି ମାଂ ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶପଦାଦ୍ ଭ୍ରଂଶଯତି ତର୍ହି କିଂ କରିଷ୍ୟେଽହଂ? ମୃଦଂ ଖନିତୁଂ ମମ ଶକ୍ତି ର୍ନାସ୍ତି ଭିକ୍ଷିତୁଞ୍ଚ ଲଜ୍ଜିଷ୍ୟେଽହଂ|
4 இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
ଅତଏୱ ମଯି ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶପଦାତ୍ ଚ୍ୟୁତେ ସତି ଯଥା ଲୋକା ମହ୍ୟମ୍ ଆଶ୍ରଯଂ ଦାସ୍ୟନ୍ତି ତଦର୍ଥଂ ଯତ୍କର୍ମ୍ମ ମଯା କରଣୀଯଂ ତନ୍ ନିର୍ଣୀଯତେ|
5 “தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
ପଶ୍ଚାତ୍ ସ ସ୍ୱପ୍ରଭୋରେକୈକମ୍ ଅଧମର୍ଣମ୍ ଆହୂଯ ପ୍ରଥମଂ ପପ୍ରଚ୍ଛ, ତ୍ୱତ୍ତୋ ମେ ପ୍ରଭୁଣା କତି ପ୍ରାପ୍ୟମ୍?
6 “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
ତତଃ ସ ଉୱାଚ, ଏକଶତାଢକତୈଲାନି; ତଦା ଗୃହକାର୍ୟ୍ୟାଧୀଶଃ ପ୍ରୋୱାଚ, ତୱ ପତ୍ରମାନୀଯ ଶୀଘ୍ରମୁପୱିଶ୍ୟ ତତ୍ର ପଞ୍ଚାଶତଂ ଲିଖ|
7 “பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
ପଶ୍ଚାଦନ୍ୟମେକଂ ପପ୍ରଚ୍ଛ, ତ୍ୱତ୍ତୋ ମେ ପ୍ରଭୁଣା କତି ପ୍ରାପ୍ୟମ୍? ତତଃ ସୋୱାଦୀଦ୍ ଏକଶତାଢକଗୋଧୂମାଃ; ତଦା ସ କଥଯାମାସ, ତୱ ପତ୍ରମାନୀଯ ଅଶୀତିଂ ଲିଖ|
8 “அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn )
ତେନୈୱ ପ୍ରଭୁସ୍ତମଯଥାର୍ଥକୃତମ୍ ଅଧୀଶଂ ତଦ୍ବୁଦ୍ଧିନୈପୁଣ୍ୟାତ୍ ପ୍ରଶଶଂସ; ଇତ୍ଥଂ ଦୀପ୍ତିରୂପସନ୍ତାନେଭ୍ୟ ଏତତ୍ସଂସାରସ୍ୟ ସନ୍ତାନା ୱର୍ତ୍ତମାନକାଲେଽଧିକବୁଦ୍ଧିମନ୍ତୋ ଭୱନ୍ତି| (aiōn )
9 உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios )
ଅତୋ ୱଦାମି ଯୂଯମପ୍ୟଯଥାର୍ଥେନ ଧନେନ ମିତ୍ରାଣି ଲଭଧ୍ୱଂ ତତୋ ଯୁଷ୍ମାସୁ ପଦଭ୍ରଷ୍ଟେଷ୍ୱପି ତାନି ଚିରକାଲମ୍ ଆଶ୍ରଯଂ ଦାସ୍ୟନ୍ତି| (aiōnios )
10 “மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான்.
ଯଃ କଶ୍ଚିତ୍ କ୍ଷୁଦ୍ରେ କାର୍ୟ୍ୟେ ୱିଶ୍ୱାସ୍ୟୋ ଭୱତି ସ ମହତି କାର୍ୟ୍ୟେପି ୱିଶ୍ୱାସ୍ୟୋ ଭୱତି, କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିତ୍ କ୍ଷୁଦ୍ରେ କାର୍ୟ୍ୟେଽୱିଶ୍ୱାସ୍ୟୋ ଭୱତି ସ ମହତି କାର୍ୟ୍ୟେପ୍ୟୱିଶ୍ୱାସ୍ୟୋ ଭୱତି|
11 எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்?
ଅତଏୱ ଅଯଥାର୍ଥେନ ଧନେନ ଯଦି ଯୂଯମୱିଶ୍ୱାସ୍ୟା ଜାତାସ୍ତର୍ହି ସତ୍ୟଂ ଧନଂ ଯୁଷ୍ମାକଂ କରେଷୁ କଃ ସମର୍ପଯିଷ୍ୟତି?
12 இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்?
ଯଦି ଚ ପରଧନେନ ଯୂଯମ୍ ଅୱିଶ୍ୱାସ୍ୟା ଭୱଥ ତର୍ହି ଯୁଷ୍ମାକଂ ସ୍ୱକୀଯଧନଂ ଯୁଷ୍ମଭ୍ୟଂ କୋ ଦାସ୍ୟତି?
13 “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
କୋପି ଦାସ ଉଭୌ ପ୍ରଭୂ ସେୱିତୁଂ ନ ଶକ୍ନୋତି, ଯତ ଏକସ୍ମିନ୍ ପ୍ରୀଯମାଣୋଽନ୍ୟସ୍ମିନ୍ନପ୍ରୀଯତେ ଯଦ୍ୱା ଏକଂ ଜନଂ ସମାଦୃତ୍ୟ ତଦନ୍ୟଂ ତୁଚ୍ଛୀକରୋତି ତଦ୍ୱଦ୍ ଯୂଯମପି ଧନେଶ୍ୱରୌ ସେୱିତୁଂ ନ ଶକ୍ନୁଥ|
14 பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
ତଦୈତାଃ ସର୍ୱ୍ୱାଃ କଥାଃ ଶ୍ରୁତ୍ୱା ଲୋଭିଫିରୂଶିନସ୍ତମୁପଜହସୁଃ|
15 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது.
ତତଃ ସ ଉୱାଚ, ଯୂଯଂ ମନୁଷ୍ୟାଣାଂ ନିକଟେ ସ୍ୱାନ୍ ନିର୍ଦୋଷାନ୍ ଦର୍ଶଯଥ କିନ୍ତୁ ଯୁଷ୍ମାକମ୍ ଅନ୍ତଃକରଣାନୀଶ୍ୱରୋ ଜାନାତି, ଯତ୍ ମନୁଷ୍ୟାଣାମ୍ ଅତି ପ୍ରଶଂସ୍ୟଂ ତଦ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ଘୃଣ୍ୟଂ|
16 “மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
ଯୋହନ ଆଗମନପର୍ୟ୍ୟନତଂ ଯୁଷ୍ମାକଂ ସମୀପେ ୱ୍ୟୱସ୍ଥାଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନାଂ ଲେଖନାନି ଚାସନ୍ ତତଃ ପ୍ରଭୃତି ଈଶ୍ୱରରାଜ୍ୟସ୍ୟ ସୁସଂୱାଦଃ ପ୍ରଚରତି, ଏକୈକୋ ଲୋକସ୍ତନ୍ମଧ୍ୟଂ ଯତ୍ନେନ ପ୍ରୱିଶତି ଚ|
17 வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது.
ୱରଂ ନଭସଃ ପୃଥିୱ୍ୟାଶ୍ଚ ଲୋପୋ ଭୱିଷ୍ୟତି ତଥାପି ୱ୍ୟୱସ୍ଥାଯା ଏକବିନ୍ଦୋରପି ଲୋପୋ ନ ଭୱିଷ୍ୟତି|
18 “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
ଯଃ କଶ୍ଚିତ୍ ସ୍ୱୀଯାଂ ଭାର୍ୟ୍ୟାଂ ୱିହାଯ ସ୍ତ୍ରିଯମନ୍ୟାଂ ୱିୱହତି ସ ପରଦାରାନ୍ ଗଚ୍ଛତି, ଯଶ୍ଚ ତା ତ୍ୟକ୍ତାଂ ନାରୀଂ ୱିୱହତି ସୋପି ପରଦାରାନ ଗଚ୍ଛତି|
19 “ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ଏକୋ ଧନୀ ମନୁଷ୍ୟଃ ଶୁକ୍ଲାନି ସୂକ୍ଷ୍ମାଣି ୱସ୍ତ୍ରାଣି ପର୍ୟ୍ୟଦଧାତ୍ ପ୍ରତିଦିନଂ ପରିତୋଷରୂପେଣାଭୁଂକ୍ତାପିୱଚ୍ଚ|
20 அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய்,
ସର୍ୱ୍ୱାଙ୍ଗେ କ୍ଷତଯୁକ୍ତ ଇଲିଯାସରନାମା କଶ୍ଚିଦ୍ ଦରିଦ୍ରସ୍ତସ୍ୟ ଧନୱତୋ ଭୋଜନପାତ୍ରାତ୍ ପତିତମ୍ ଉଚ୍ଛିଷ୍ଟଂ ଭୋକ୍ତୁଂ ୱାଞ୍ଛନ୍ ତସ୍ୟ ଦ୍ୱାରେ ପତିତ୍ୱାତିଷ୍ଠତ୍;
21 பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
ଅଥ ଶ୍ୱାନ ଆଗତ୍ୟ ତସ୍ୟ କ୍ଷତାନ୍ୟଲିହନ୍|
22 “காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான்.
କିଯତ୍କାଲାତ୍ପରଂ ସ ଦରିଦ୍ରଃ ପ୍ରାଣାନ୍ ଜହୌ; ତତଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତାସ୍ତଂ ନୀତ୍ୱା ଇବ୍ରାହୀମଃ କ୍ରୋଡ ଉପୱେଶଯାମାସୁଃ|
23 அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs )
ପଶ୍ଚାତ୍ ସ ଧନୱାନପି ମମାର, ତଂ ଶ୍ମଶାନେ ସ୍ଥାପଯାମାସୁଶ୍ଚ; କିନ୍ତୁ ପରଲୋକେ ସ ୱେଦନାକୁଲଃ ସନ୍ ଊର୍ଦ୍ଧ୍ୱାଂ ନିରୀକ୍ଷ୍ୟ ବହୁଦୂରାଦ୍ ଇବ୍ରାହୀମଂ ତତ୍କ୍ରୋଡ ଇଲିଯାସରଞ୍ଚ ୱିଲୋକ୍ୟ ରୁୱନ୍ନୁୱାଚ; (Hadēs )
24 எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
ହେ ପିତର୍ ଇବ୍ରାହୀମ୍ ଅନୁଗୃହ୍ୟ ଅଙ୍ଗୁଲ୍ୟଗ୍ରଭାଗଂ ଜଲେ ମଜ୍ଜଯିତ୍ୱା ମମ ଜିହ୍ୱାଂ ଶୀତଲାଂ କର୍ତ୍ତୁମ୍ ଇଲିଯାସରଂ ପ୍ରେରଯ, ଯତୋ ୱହ୍ନିଶିଖାତୋହଂ ୱ୍ୟଥିତୋସ୍ମି|
25 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய்.
ତଦା ଇବ୍ରାହୀମ୍ ବଭାଷେ, ହେ ପୁତ୍ର ତ୍ୱଂ ଜୀୱନ୍ ସମ୍ପଦଂ ପ୍ରାପ୍ତୱାନ୍ ଇଲିଯାସରସ୍ତୁ ୱିପଦଂ ପ୍ରାପ୍ତୱାନ୍ ଏତତ୍ ସ୍ମର, କିନ୍ତୁ ସମ୍ପ୍ରତି ତସ୍ୟ ସୁଖଂ ତୱ ଚ ଦୁଃଖଂ ଭୱତି|
26 இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான்.
ଅପରମପି ଯୁଷ୍ମାକମ୍ ଅସ୍ମାକଞ୍ଚ ସ୍ଥାନଯୋ ର୍ମଧ୍ୟେ ମହଦ୍ୱିଚ୍ଛେଦୋଽସ୍ତି ତତ ଏତତ୍ସ୍ଥାନସ୍ୟ ଲୋକାସ୍ତତ୍ ସ୍ଥାନଂ ଯାତୁଂ ଯଦ୍ୱା ତତ୍ସ୍ଥାନସ୍ୟ ଲୋକା ଏତତ୍ ସ୍ଥାନମାଯାତୁଂ ନ ଶକ୍ନୁୱନ୍ତି|
27 “அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்.
ତଦା ସ ଉକ୍ତୱାନ୍, ହେ ପିତସ୍ତର୍ହି ତ୍ୱାଂ ନିୱେଦଯାମି ମମ ପିତୁ ର୍ଗେହେ ଯେ ମମ ପଞ୍ଚ ଭ୍ରାତରଃ ସନ୍ତି
28 ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
ତେ ଯଥୈତଦ୍ ଯାତନାସ୍ଥାନଂ ନାଯାସ୍ୟନ୍ତି ତଥା ମନ୍ତ୍ରଣାଂ ଦାତୁଂ ତେଷାଂ ସମୀପମ୍ ଇଲିଯାସରଂ ପ୍ରେରଯ|
29 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான்.
ତତ ଇବ୍ରାହୀମ୍ ଉୱାଚ, ମୂସାଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନାଞ୍ଚ ପୁସ୍ତକାନି ତେଷାଂ ନିକଟେ ସନ୍ତି ତେ ତଦ୍ୱଚନାନି ମନ୍ୟନ୍ତାଂ|
30 “அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
ତଦା ସ ନିୱେଦଯାମାସ, ହେ ପିତର୍ ଇବ୍ରାହୀମ୍ ନ ତଥା, କିନ୍ତୁ ଯଦି ମୃତଲୋକାନାଂ କଶ୍ଚିତ୍ ତେଷାଂ ସମୀପଂ ଯାତି ତର୍ହି ତେ ମନାଂସି ୱ୍ୟାଘୋଟଯିଷ୍ୟନ୍ତି|
31 “அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”
ତତ ଇବ୍ରାହୀମ୍ ଜଗାଦ, ତେ ଯଦି ମୂସାଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନାଞ୍ଚ ୱଚନାନି ନ ମନ୍ୟନ୍ତେ ତର୍ହି ମୃତଲୋକାନାଂ କସ୍ମିଂଶ୍ଚିଦ୍ ଉତ୍ଥିତେପି ତେ ତସ୍ୟ ମନ୍ତ୍ରଣାଂ ନ ମଂସ୍ୟନ୍ତେ|