< லேவியராகமம் 15 >
1 யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் பேசி,
Yahweh falou com Moisés e com Arão, dizendo:
2 “நீங்கள் இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘தன் உடலிலிருந்து ஒருவனுக்கு கசிவு ஏற்பட்டால் அது அசுத்தமானது.
“Fale com os filhos de Israel, e diga-lhes: 'Quando qualquer homem tem uma descarga de seu corpo, por causa de sua descarga, ele é impuro.
3 அக்கசிவு அவன் உடலிலிருந்து தொடர்ந்து வடிந்தாலும், தடைப்பட்டாலும், அது அவனை அசுத்தப்படுத்தும். அவனுடைய உடற்கசிவு அசுத்தத்தை உண்டாக்கும் விதமாவது:
Esta será sua impureza na sua descarga: quer seu corpo corra com sua descarga, quer seu corpo tenha parado de ser descarregado, é sua impureza.
4 “‘அவன் படுக்கின்ற எந்தக் கட்டிலும், அவன் உட்காருகிற எந்த இடமும் அசுத்தமாகும்.
“'Toda cama em que jaz aquele que tem a descarga será imunda; e tudo em que ele se senta será imundo.
5 யாராவது ஒருவன் அந்தக் கட்டிலைத் தொட்டால் அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான்.
Quem tocar sua cama lavará suas roupas, e se banhará em água, e será imundo até a noite.
6 கசிவு உள்ள அந்த மனிதன் உட்கார்ந்த இடத்தில் யாராவது உட்கார்ந்தால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
Aquele que se sentar sobre qualquer coisa sobre a qual o homem que tiver a descarga se sentar lavará suas roupas, e se banhará em água, e será imundo até a noite.
7 “‘கசிவுள்ளவனைத் தொடுகிறவனும் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“'Aquele que toca o corpo daquele que tem a descarga deve lavar suas roupas, banhar-se em água e ficar impuro até a noite.
8 “‘கசிவுள்ள அந்த மனிதன் சுத்தமுள்ள ஒருவன்மேல் துப்பினால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“'Se aquele que tem a descarga cuspir sobre aquele que está limpo, então ele deverá lavar suas roupas, banhar-se em água e ficar imundo até a noite.
9 “‘அவன் ஏறி இருந்து சவாரி செய்த எல்லாமே அசுத்தமானதாகும்.
“'Seja qual for a sela em que ele que tiver a descarga montar, será imundo.
10 அவன் உட்கார்ந்த எந்தப் பொருளையும் தொடுகிறவன், மாலைவரை அசுத்தமாயிருப்பான். அப்படிப்பட்ட பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
Quem tocar em qualquer coisa que estava debaixo dele será imundo até a noite. Aquele que carrega essas coisas lavará suas roupas, e se banhará em água, e será imundo até a noite.
11 “‘கசிவு உள்ளவன், தன் கைகளைக் கழுவாமல் வேறொருவனைத் தொட்டால், தொடப்பட்டவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
“'Aquele que tiver a descarga toca, sem ter lavado as mãos na água, deve lavar suas roupas, banhar-se em água, e ficar impuro até a noite.
12 “‘அவன் ஒரு மண்பாத்திரத்தைத் தொடுவானானால், அப்பாத்திரம் உடைக்கப்பட வேண்டும். மரப்பாத்திரங்களை எல்லாம் தண்ணீரால் அலசவேண்டும்.
“'O vaso de barro, que quem tem a descarga toca, deve ser quebrado; e todo vaso de madeira deve ser enxaguado na água.
13 “‘அந்தக் கசிவு அவனைவிட்டு நீங்கும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்தமாவதற்கு ஏழுநாள் பொறுத்து, ஏழாம்நாள் தன் உடைகளைக் கழுவி சுத்தமான தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
“'Quando aquele que tiver uma descarga for limpo de sua descarga, então contará para si mesmo sete dias para sua limpeza, e lavará suas roupas; e banhará sua carne em água corrente, e estará limpo.
14 எட்டாம் நாளிலே, இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை அவன் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும். அவற்றை சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொடுக்கவேண்டும்.
“'No oitavo dia ele levará duas rolinhas, ou dois pombinhos, e virá antes de Yahweh à porta da Tenda da Reunião, e os entregará ao padre.
15 ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் யெகோவா முன்னிலையில் அந்தக் கசிவின் நிமித்தம் அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
O padre os oferecerá, um para oferta pelo pecado, e o outro para oferta queimada. O sacerdote fará expiação por ele diante de Yahweh por sua exoneração.
16 “‘ஒருவனிலிருந்து விந்து வெளியேறினால், அவன் தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவி முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான்.
“'Se qualquer homem tiver uma emissão de sêmen, então ele deve banhar toda sua carne em água, e ficar impuro até a noite.
17 விந்துபட்ட எந்த உடையும், தோல் பொருளும் தண்ணீரினால் கழுவப்பட வேண்டும். அது மாலைவரை அசுத்தமாயிருக்கும்.
Toda vestimenta e toda a pele em que o sêmen estiver colocado será lavada com água, e ficará imunda até a noite.
18 ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உறவுகொண்டு விந்து வெளிப்பட்டால், அவர்கள் இருவரும் தண்ணீரில் முழுகவேண்டும். அவர்கள் மாலைவரை அசுத்தமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
Se um homem deitar com uma mulher e houver uma emissão de sêmen, ambos se banharão em água e ficarão imundos até a noite.
19 “‘ஒழுங்கான இரத்தப்போக்கு உள்ள பெண் மாதவிடாய் காலத்தில் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவளாய் இருப்பாள். அவளைத் தொடுகிற எவனும், மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
“'Se uma mulher tem uma descarga, e sua descarga em sua carne é sangue, ela estará em sua impureza por sete dias. Quem a tocar será impuro até a noite.
20 “‘அந்நாட்களில் அவள் படுக்கின்ற படுக்கையும், அவள் உட்காரும் இடமும் அசுத்தமுள்ளதாயிருக்கும்.
“'Tudo aquilo em que ela jaz em sua impureza será impuro. Também tudo aquilo em que ela se senta será imundo.
21 யாராவது அவளின் படுக்கையைத் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
Quem tocar na cama dela deverá lavar suas roupas, banhar-se em água e ficar imundo até a noite.
22 அவள் உட்காரும் எதையாவது யாராவது ஒருவன் தொட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி, தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
Quem tocar em qualquer coisa sobre a qual ela se sente, lavará suas roupas, e se banhará em água, e será imundo até a noite.
23 அவள் படுக்கையை அல்லது, அவள் உட்கார்ந்த எதையாவது ஒருவன் தொட்டால், அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
Se estiver sobre a cama, ou sobre qualquer coisa em que ela se sente, quando ele a tocar, ficará imundo até a noite.
24 “‘அந்நாட்களில் ஒருவன் அவளுடன் உறவுகொள்வதினால், அவளுடைய மாதவிடாய் அவனில் படும்போது அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான். அவன் பயன்படுத்தும் எந்தப் படுக்கையும் அசுத்தமாயிருக்கும்.
“'Se algum homem se deitar com ela, e seu fluxo mensal estiver sobre ele, será imundo sete dias; e toda cama onde ele se deitar será imunda.
25 “‘ஒரு பெண்ணுக்கு உடலின் இரத்தப்போக்கு மாதவிடாயைவிட வழக்கத்திற்கு மாறாக வந்தால் அல்லது மாதவிடாய் காலம் நீடித்தால், அவள் அந்த மாதவிடாய் காலத்தில் இருந்ததுபோல், இரத்தப்போக்கு இருக்கும்வரைக்கும் அசுத்தமாயிருப்பாள்.
“'Se uma mulher tem uma descarga de seu sangue por muitos dias não no tempo de seu período, ou se ela tem uma descarga além do tempo de seu período, todos os dias da descarga de sua impureza serão como nos dias de seu período. Ela está impura.
26 அவள் இந்த நாட்களில் படுக்கின்ற கட்டிலும், அவள் உட்காரும் எதுவும், முன்பு மாதவிடாய் நாட்களில் அசுத்தமுள்ளதாய் இருந்ததுபோல, இப்பொழுதும் அசுத்தமுள்ளதாய் இருக்கும்.
Toda cama que ela deitar em todos os dias de sua descarga será para ela como a cama do seu período. Tudo em que ela se sentar será imundo, como a imundícia de seu período.
27 யாராவது ஒருவன் அவைகளைத் தொட்டால், அவன் அசுத்தமுள்ளவனாவான். அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாவான்.
Quem tocar nestas coisas será imundo, e lavará suas roupas e se banhará em água, e será imundo até a noite.
28 “‘அவள் தன் மாதவிடாயிலிருந்து சுத்திகரிக்கப்படும்போது, அவள் ஏழு நாட்களை எண்ணவேண்டும். அதன்பின் சம்பிரதாய முறைப்படி அவள் சுத்தமாவாள்.
“'Mas se ela for limpa de sua descarga, então ela contará para si mesma sete dias, e depois disso ela estará limpa.
29 எட்டாம் நாள் அவள் இரண்டு புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சபைக்கூடார வாசலில் ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
No oitavo dia, ela levará duas rolinhas, ou dois pombinhos, e os levará ao padre, à porta da Tenda da Reunião.
30 ஆசாரியன் அதில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் பலிசெலுத்தவேண்டும். இவ்விதம் ஆசாரியன் அவளுடைய இரத்தப்போக்கின் அசுத்தத்திற்காக யெகோவா முன்பாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
O sacerdote oferecerá um para oferta pelo pecado, e o outro para holocausto; e o sacerdote fará expiação por ela diante de Yahweh pela imundícia de sua descarga.
31 “‘நீ இஸ்ரயேலரை அவர்களை அசுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வேறுபடுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் மத்தியில் இருக்கும் என் வசிப்பிடத்தை அசுத்தப்படுத்துவதால், இஸ்ரயேலர் தங்கள் அசுத்தத்தில் சாகாதபடி, இப்படிச் செய்யவேண்டும்.’”
“'Assim separareis os filhos de Israel de sua impureza, para que não morram em sua impureza quando profanarem meu tabernáculo que está entre eles'”.
32 ஆகவே உடலில் கசிவு உள்ளவனுக்கும், விந்து கழிவதினால் அசுத்தமுள்ளவனுக்கும்,
Esta é a lei daquele que tem uma descarga, e daquele que tem uma emissão de sêmen, de modo que ele é impuro por ela;
33 மாதவிடாய் உள்ள பெண்ணுக்கும், உடல் கசிவுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும், சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிற பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் மனிதனுக்கும் கொடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் இவையே என்றார்.
e daquela que tem seu período, e de um homem ou mulher que tem uma descarga, e daquele que se deita com ela que é impuro.