< லேவியராகமம் 11 >
1 மீண்டும் யெகோவா மோசேயுடனும் ஆரோனுடனும் பேசி,
၁ထာဝရဘုရားသည်ဣသရေလအမျိုး သားတို့လိုက်နာရန် အောက်ပါပညတ်များ ကိုမောရှေနှင့်အာရုန်တို့မှတစ်ဆင့်ချမှတ် ပေးတော်မူ၏။ သင်တို့သည်ကုန်းသတ္တဝါ တို့တွင်၊-
2 “நீங்கள் இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பூமியில் வாழும் எல்லா மிருகங்களுக்குள்ளும் நீங்கள் சாப்பிடக் கூடியவைகள் இவையே:
၂
3 முழுவதும் விரிந்த குளம்புடையதும், இரையை அசைப்போடுகிறதுமான எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.
၃ခွာကွဲ၍စားမြုံ့ပြန်တတ်သော တိရစ္ဆာန် များ၏အသားကိုစားနိုင်သည်။-
4 “‘சில மிருகங்கள் இரையை அசைப்போடுகிறதாய் மட்டும் இருக்கின்றன, சில மிருகங்கள் விரிந்த குளம்பு உடையதாய் மட்டும் இருக்கின்றன, அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது. ஒட்டகம் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தாலும் அதற்கு விரிந்த குளம்பு இல்லாதபடியால், அது சம்பிரதாய முறைப்படி உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.
၄သို့ရာတွင်ကုလားအုတ်၊ ခွေးတူဝက်တူနှင့် ယုန်တို့၏အသားကိုမစားရ။ ဤတိရစ္ဆာန် တို့သည်စားမြုံ့ပြန်တတ်သော်လည်းခွာမကွဲ သဖြင့် စားရန်မသန့်ရှင်းဟုမှတ်ယူရမည်။-
5 அதேபோல், குழிமுயலானது இரையை அசைப்போடுகிறதாய் இருந்தாலும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.
၅
6 முயல் இரையை அசைப்போடுகிறதாய் இருந்தும், விரிந்த குளம்பு இல்லாதபடியால், அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.
၆
7 பன்றி, விரிந்த குளம்புடையதாயிருந்தாலும், இரையை அசைப்போடுகிறதில்லை; ஆதலால் அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.
၇ဝက်သားကိုလည်းမစားရ။ ဝက်တို့သည်ခွာ ကွဲသော်လည်းစားမြုံ့မပြန်သဖြင့် စားရန် မသန့်ရှင်းဟုမှတ်ယူရမည်။-
8 நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் பிணங்களைத் தொடவும் கூடாது. அவை உங்களுக்கு அசுத்தமாயிருக்கிறது.
၈သင်တို့သည်ထိုတိရစ္ဆာန်တို့၏အသားကို မစားရ။ အသေကောင်များကိုပင်မထိရ။ ယင်းတို့ကိုမသန့်ရှင်းဟုမှတ်ယူရမည်။
9 “‘கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீரில் வாழ்கின்ற உயிரினங்களில் துடுப்புகளும் செதில்களும் உள்ள எதையும் நீங்கள் சாப்பிடலாம்.
၉သင်တို့သည်ဆူးတောင်နှင့်အကြေးရှိသော ငါးများကိုစားနိုင်သည်။-
10 கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீரில் வாழ்கின்ற உயிரினங்களுக்குள்ளே துடுப்புகளும், செதில்களும் இல்லாத எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்கவேண்டும்.
၁၀သို့ရာတွင်ဆူးတောင်နှင့်အကြေးမပါရှိ သောရေသတ္တဝါများကိုမစားရ။-
11 நீங்கள் அவற்றை அருவருக்கவேண்டும் என்பதால், அவைகளின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அவற்றின் செத்த உடல்களை நீங்கள் அருவருத்து ஒதுக்க வேண்டும்.
၁၁ထိုသတ္တဝါများကိုမသန့်ရှင်းဟုမှတ်ယူ ရမည်။ သင်တို့သည်ထိုသတ္တဝါများကို မစားရ၊ အသေကောင်များကိုပင်မထိ ရ။-
12 நீரில் வாழ்கின்ற துடுப்புகளும், செதில்களும் இல்லாதவையெல்லாம் உங்களுக்கு அருவருப்பாய் இருக்கவேண்டும்.
၁၂ဆူးတောင်နှင့်အကြေးမပါရှိသောရေ သတ္တဝါဟူသမျှကိုမစားရ။
13 “‘பறவைகளில் நீங்கள் அருவருக்கவேண்டியதும், அருவருப்பாய் இருப்பதால் சாப்பிடாமல் தவிர்க்கவேண்டியதும் இவையே: கழுகு, கருடன், கடலூராஞ்சி,
၁၃အောက်ဖော်ပြပါငှက်မျိုးတို့ကိုသင်တို့ သည်မစားရ။ လင်းယုန်၊ ဇီးကွက်၊ သိမ်းငှက်၊ လင်းတ၊ ကျီး၊ ငှက်ကုလားအုတ်၊ ဇင်ယော်၊ ငှက် ကျား၊ ဗျိုင်း၊ ငှက်ကြီးဝံပို၊ တင်ကျီး၊ တောင်သူ ဘီးငှက်နှင့်လင်းနို့တို့ဖြစ်သည်။
14 செம்பருந்து எல்லாவித வல்லூறுகள்,
၁၄
15 எல்லாவித அண்டங்காக்கைகள்,
၁၅
16 கொம்பு ஆந்தை, அலறும் ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள்,
၁၆
17 சின்ன ஆந்தை, நீர்க்காகம், பெரிய ஆந்தை,
၁၇
18 வெள்ளை ஆந்தை, பாலைவன ஆந்தை, மீன்கொத்தும் பெரிய பறவை,
၁၈
19 கொக்கு, எல்லாவித நாரைகள், புழுக்கொத்தி, வவ்வால் என்பனவாகும்.
၁၉
20 “‘பறக்கும் பூச்சி வகைகளில் நான்கு கால்களால் நடக்கின்ற யாவும் உங்களுக்கு அருவருப்பானவை.
၂၀ခုန်ဆွသွားတတ်သည့်ပိုးကောင်များမှလွဲ၍ အတောင်ရှိပိုးကောင်ဟူသမျှသည်မသန့်ရှင်း၊-
21 ஆனாலும், நீங்கள் சாப்பிடக்கூடிய நான்கு கால்களால் நடக்கும் சிறகுகளை உடைய சில உயிரினங்களாவன: தரையில் தத்திப்பாயக்கூடிய இணைக்கப்பட்ட கால்களையுடையவை.
၂၁
22 இவைகளில் நீங்கள், எல்லா வகையான வெட்டுக்கிளிகளையும், பச்சை வெட்டுக்கிளிகளையும், சில்வண்டுகளையும், விட்டில்களையும் சாப்பிடலாம்.
၂၂သင်တို့သည်ကျိုင်းကောင်၊ ပရစ်နှင့်နှံကောင်များ ကိုစားနိုင်သည်။-
23 ஆனால் நான்கு கால்களையும், சிறகுகளையும் உடைய மற்ற எல்லா பூச்சிகளையும் நீங்கள் அருவருக்கவேண்டும்.
၂၃သို့ရာတွင်အတောင်ရှိ၍တွားသွားတတ်သော အခြားအကောင်ငယ်ရှိသမျှကို မသန့်ရှင်း ဟုမှတ်ယူရမည်။
24 “‘இவற்றால் உங்களை நீங்கள் அசுத்தமாக்கிக்கொள்வீர்கள். அவற்றின் செத்த உடல்களைத் தொடுகிற எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
၂၄အောက်ဖော်ပြပါတိရစ္ဆာန်တို့၏အသေကောင် များကိုထိကိုင်မိသူသည် ညဦးတိုင်အောင် မသန့်ရှင်းဘဲရှိလိမ့်မည်။ ခွာကွဲ၍စားမြုံ့ ပြန်သောတိရစ္ဆာန်များမှတစ်ပါးအခြားခွာ ရှိတိရစ္ဆာန်အားလုံးနှင့် အုပ်ဖမ်းတတ်သောလက် ရှိသည့်ခြေလေးချောင်းသတ္တဝါအားလုံးတို့ ဖြစ်သည်။ ထိုတိရစ္ဆာန်တို့၏အသေကောင်များ ကိုသယ်ဆောင်သွားသူသည် မိမိ၏အဝတ် များကိုဖွပ်လျှော်ရမည်။ သို့သော်လည်းသူ သည်ညဦးတိုင်အောင်မသန့်ရှင်းဘဲရှိလိမ့် မည်။
25 அவற்றின் செத்த உடலை எடுக்கிறவன் எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான்.
၂၅
26 “‘விரிந்த குளம்பு இல்லாததும், இரையை அசைப்போடுகிறதுமான மிருகங்கள் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். அவற்றின் பிணங்களைத் தொடுகிற எவனும் அசுத்தமாயிருப்பான்.
၂၆
27 நான்கு கால்களால் நடக்கும் எல்லா மிருகங்களுக்குள்ளும் பாதங்களை ஊன்றி நடக்கின்ற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்க வேண்டும்; அவற்றின் பிணங்களைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
၂၇
28 அவற்றின் பிணங்களைத் தூக்குகிற எவனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவை உங்களுக்கு அசுத்தமானவை.
၂၈
29 “‘தரையில் ஊரும்பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள்: மரநாய், எலி, எல்லா வகையான ஓணான்,
၂၉ပွေး၊ ကြွက်၊ အိမ်မြှောင်မျိုးတို့ကိုမသန့်ရှင်းဟု မှတ်ယူရမည်။-
30 மரப்பல்லி, உடும்பு, பல்லி, அரணை, பச்சோந்தி என்பனவாகும்.
၃၀
31 ஊரும்பிராணிகளில் இவையெல்லாம் உங்களுக்கு அசுத்தமானவை. இவற்றிலும் செத்ததைத் தொடுகிறவன் சூரியன் மறையும்வரை அசுத்தமாயிருப்பான்.
၃၁ထိုသတ္တဝါတို့ကိုဖြစ်စေ၊ ၎င်းတို့၏အသေ ကောင်များကိုဖြစ်စေကိုင်တွယ်မိသူသည် ည ဦးတိုင်အောင်မသန့်ရှင်းဘဲရှိလိမ့်မည်။-
32 அவைகளில் ஒன்று செத்து மரப்பாத்திரத்திலோ, உடையிலோ, தோலிலோ, சாக்குப்பையிலோ, பயன்படுத்தும் எந்தப் பாத்திரத்திலாவது விழுந்தால், அவை அசுத்தமாயிருக்கும். அதை தண்ணீரில் போடுங்கள். அவை மாலைவரை அசுத்தமாயிருக்கும். பின்பு அவை சுத்தமாகும்.
၃၂သစ်သား၊ အဝတ်၊ သားရေ၊ လျှော်တေစသည် တို့ဖြင့်ပြုလုပ်သောမည်သည့်အသုံးအဆောင် များပေါ်သို့မဆို ထိုသတ္တဝါတို့၏အသေ ကောင်များကျခဲ့သော် ယင်းအသုံးအဆောင် သည်မသန့်ရှင်းဟုမှတ်ယူရမည်။ ယင်းကဲ့ သို့ညစ်ညမ်းသွားသောအသုံးအဆောင်ကို ရေထဲ၌နှစ်ရမည်။ သို့ရာတွင်ထိုအသုံး အဆောင်သည် ညဦးတိုင်အောင်မသန့်ရှင်း ဘဲရှိလိမ့်မည်။-
33 அவைகளில் ஒன்று மண்பானைக்குள் விழுமானால், அதிலுள்ள அனைத்தும் அசுத்தமாகும். எனவே அந்தப் பானையை உடைக்கவேண்டும்.
၃၃အသေကောင်များမြေအိုးထဲသို့ကျလျှင် အိုးထဲရှိသမျှသည်လည်း ညစ်ညမ်းကုန် သဖြင့်အိုးကိုခွဲရမည်။-
34 அந்தப் பானையிலிருந்து தண்ணீர் எந்த உணவிலாவது பட்டுவிட்டால், அது அசுத்தமாயிருக்கும். அதிலிருந்து குடிக்கும் எந்தவித பானமும் அசுத்தமாயிருக்கும்.
၃၄မသန့်ရှင်းသောထိုအိုးမှရေသည်စားစရာ ပေါ်သို့ကျလျှင် ထိုစားစရာသည်လည်း မသန့်ရှင်းချေ။ ထိုအိုးမှသောက်ရေသည် လည်းမသန့်ရှင်း။-
35 செத்தவைகளில் ஒன்று எதில் விழுந்தாலும், அது அசுத்தமாயிருக்கும். அடுப்பிலோ அல்லது சட்டியிலோ விழுந்தால், அவை உடைக்கப்பட வேண்டும். அவை அசுத்தமானவை. அவற்றை நீங்கள் அசுத்தமாக எண்ணவேண்டும்.
၃၅မြေမီးဖိုသို့မဟုတ်မုန့်ဖုတ်ဖိုပေါ်သို့ထို သတ္တဝါတို့၏အသေကောင်များကျလျှင် ထိုမီးဖိုသို့မဟုတ်မုန့်ဖုတ်ဖိုသည်မသန့် ရှင်းသဖြင့်ခွဲပစ်လိုက်ရမည်။-
36 ஆனாலும் செத்ததில் ஒன்று நீரூற்றிலோ, தண்ணீர் சேமிக்கும் தொட்டியிலோ விழுந்தால், அவை அசுத்தமாகாது. அதற்குள் செத்துக்கிடப்பதைத் தொடுகிறவன் அசுத்தமாய் இருக்கிறான்.
၃၆သို့ရာတွင်စမ်းရေတွင်းသို့မဟုတ်ရေလှောင် ကန်ထဲသို့အသေကောင်ကျလျှင် ထိုရေသည် မညစ်ညမ်း။ ထိုအသေကောင်နှင့်ထိမိသော အရာသာလျှင်ညစ်ညမ်းသည်။-
37 அது விதைக்க வைத்திருக்கும் எந்தத் தானியத்தின்மேல் விழுந்தாலும் சுத்தமாகவே இருக்கும்.
၃၇ကြဲမည့်မျိုးစေ့ပေါ်သို့အသေကောင်ကျ လျှင် မျိုးစေ့သည်မညစ်ညမ်း။-
38 ஆகிலும் தானியம் நீரில் நனைக்கப்பட்டிருக்கும் போது, அது தானியத்தின்மேல் விழுந்தால், அந்தத் தானியம் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
၃၈သို့ရာတွင်ရေစိမ်ထားသောမျိုးစေ့ပေါ် သို့အသေကောင်ကျလျှင် ထိုမျိုးစေ့သည် မသန့်ရှင်း။
39 “‘ஆகிலும், நீங்கள் சாப்பிடும்படி அனுமதிக்கப்பட்ட ஒரு மிருகம் இறந்தால், அந்தப் பிணத்தைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை அசுத்தமாய் இருப்பான்.
၃၉စားနိုင်သောတိရစ္ဆာန်သေလျှင်ထိုအသေ ကောင်ကိုကိုင်တွယ်မိသူသည် ညဦးတိုင်အောင် မသန့်ရှင်းချေ။-
40 அந்தப் பிணத்தில் எதையாவது சாப்பிடுகிறவன் எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். மாலைவரை அவன் அசுத்தமாயிருப்பான். அந்தப் பிணத்தைத் தூக்குகிற எவனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
၄၀ထိုအသေကောင်၏အသားကိုစားသူသည် မိမိအဝတ်ကိုဖွပ်လျှော်ရမည်။ သူသည်ည ဦးတိုင်အောင်မသန့်ရှင်းဘဲရှိလိမ့်မည်။ ထို အသေကောင်ကိုသယ်ဆောင်မိသူသည် မိမိ အဝတ်ကိုဖွပ်လျှော်ရမည်။ သို့သော်သူသည် ညဦးတိုင်အောင်မသန့်ရှင်းဘဲရှိလိမ့်မည်။
41 “‘தரையில் ஊரும்பிராணிகள் எல்லாம் அருவருப்பானவை. அவற்றைச் சாப்பிடக்கூடாது.
၄၁မြေကြီးပေါ်တွင်တွားသွားတတ်သော သို့ မဟုတ်ခြေလေးချောင်းရှိသော သို့မဟုတ် ခြေလေးချောင်းထက်များသောခြေရှိသော သတ္တဝါငယ်များကိုသင်တို့မစားရ။-
42 தரையில் ஊரும் எந்தப் பிராணியும் அவை வயிற்றினால் ஊர்ந்தாலும் சரி, நான்கு கால்களாலோ அநேகம் கால்களாலோ நகர்ந்தாலும் சரி, அவை அருவருப்பானவையே. அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது.
၄၂
43 இந்த ஊரும்பிராணிகளில் எதினாலாவது நீங்கள் உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம். நீங்கள் அவற்றினாலாவது அவற்றின் மூலமாவது உங்களை அசுத்தமாக்கிக்கொள்ள வேண்டாம்.
၄၃ထိုသတ္တဝါများကိုစား၍သင်တို့ကိုယ်ကို မညစ်ညမ်းစေနှင့်။-
44 நான் உங்கள் இறைவனாகிய யெகோவா. ஆகையால் நீங்கள் உங்களை அர்ப்பணம் செய்து பரிசுத்தராயிருங்கள். ஏனெனில், நான் பரிசுத்தர். நீங்கள் தரையில் ஊர்ந்து திரியும் எந்தவித பிராணியாலும் உங்களை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.
၄၄ငါသည်သင်တို့၏ဘုရားသခင်ထာဝရ ဘုရားဖြစ်၏။ ငါသည်သန့်ရှင်းသောကြောင့် သင်တို့သည်လည်းသန့်ရှင်းကြရမည်။-
45 உங்கள் இறைவனாயிருக்கும்படி உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த யெகோவா நானே. ஆகையால் நீங்கள் பரிசுத்தமாயிருங்கள். ஏனெனில், நான் பரிசுத்தர்.
၄၅ငါသည်သင်တို့၏ထာဝရဘုရားသခင် ဖြစ်အံ့သောငှာ သင်တို့ကိုအီဂျစ်ပြည်မှ ထုတ်ဆောင်ခဲ့သောဘုရားဖြစ်တော်မူ၏။ ငါသည်သန့်ရှင်းသောကြောင့် သင်တို့သည် လည်းသန့်ရှင်းကြရမည်။
46 “‘மிருகங்கள், பறவைகள், நீரில் நீந்தும் உயிரினங்கள், தரையில் ஊரும்பிராணிகள் அனைத்தையும் பற்றிய ஒழுங்குவிதிகள் இவையே.
၄၆ဤပညတ်သည်ကားတိရစ္ဆာန်များနှင့်ငှက် များ၊ ရေသတ္တဝါနှင့်ကုန်းသတ္တဝါများနှင့် ဆိုင်သောပညတ်ဖြစ်သတည်း။-
47 அசுத்தமானதற்கும், சுத்தமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவும், சாப்பிடக்கூடிய உயிரினங்களுக்கும், சாப்பிடக்கூடாத உயிரினங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை காட்டவுமே இந்த ஒழுங்குவிதிகள் கொடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.”
၄၇သင်တို့သည်ဘာသာရေးထုံးနည်းအရ သန့်ရှင်း၍ စားနိုင်သောတိရစ္ဆာန်နှင့်မသန့်ရှင်း ၍မစားနိုင်သောတိရစ္ဆာန်တို့ကိုခွဲခြားသိ ကြရမည်။