< புலம்பல் 1 >
1 ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே.
Taukiri e! noho mokemoke ana te pa i ki nei i te tangata! Ano tona rite he pouaru! kua waiho hei hoatu takoha te mea i nui nei i roto i nga iwi, te rangatira i roto i nga kawanatanga!
2 இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
Nui atu tana tangi i te po, a kei ona paparinga ona roimata: i roto i te hunga katoa i aroha ki a ia, kahore he kaiwhakamarie mona; kua tinihanga ona hoa ki a ia, kua meinga ratou hei hoariri mona.
3 துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
Kua haere a Hura ki te whakarau, he tangi hoki, he whakamahinga nui; kei te noho ia i roto i nga tauiwi, kahore e kitea e ia he tanga manawa: kua hopukia ia e ona kaiwhai katoa i roto i nga wahi kuiti.
4 நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
Kei te tangi nga ara o Hiona, no te mea kahore he tangata e haere mai ana ki te huihuinga nui; kua ururuatia ona kuwaha katoa, e aue ana ana tohunga, ko ana wahine kei te pouri, a ko ia, kei roto ia i te mamae.
5 அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
Kua waiho ona hoariri hei upoko, kei te noho humarie ona hoa whawhai; no te mea kua whiua ia e Ihowa mo ona he maha: kua riro ana tamariki hei parau i te aroaro o te hoariri.
6 சீயோன் மகளின் சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத மான்களைப் போலானார்கள்; அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
Kua wehe atu i te tamahine a Hiona tona nui katoa: kua rite ona rangatira ki nga hata kihai i pono ki te wahi kai, haere kahakore ana ratou i te aroaro o te kaiwhai.
7 எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
E mahara ana a Hiruharama i nga ra o tona tangi, o ona wherutanga, ki ana mea ahuareka katoa o nga ra o mua: i te takanga o tona iwi ki roto ki te ringa o te hoariri, a kahore he kaiawhina mona, ka kite nga hoariri i a ia, ka kata ki ona mutunga.
8 எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள். அவளை கனம்பண்ணின யாவரும் அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால், அவளை அவமதிக்கிறார்கள்; அவள் தனக்குள் அழுது, தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
Nui atu te hara o Hiruharama; na reira ia i meinga ai, ano hei mea poke: ko te hunga katoa i whakahonore i a ia, whakahawea ana ki a ia, no te mea kua kite ratou i tona tahangatanga: ae ra, kei te aue ia, kei te hoki ki muri.
9 அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை. ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது; அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை. “யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்; என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள்.
Kei ona kurupatu tona poke, kahore ona mahara ki tona whakamutunga; na reira he hanga whakamiharo tona tukunga iho ki raro: kahore he kaiwhakamarie mona: e Ihowa, titiro mai ki toku mate: kua whakahirahira hoki te hoariri i a ia.
10 பகைவன் எருசலேமின் இன்பமான எல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான். அவளுடைய பரிசுத்த இடத்திற்குள் பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள். யெகோவா தடைசெய்தவர்கள் அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள்.
Kua wherahia atu te ringa o te hoariri ki runga ki ana mea ahuareka katoa; kua kite nei ia i nga iwi e tomo mai ana ki tona wahi tapu, era i ako ra koe kia kaua ratou e uru ki tau whakaminenga.
11 அவளுடைய மக்கள் யாவரும் அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களை உணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள். அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்! நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள்.
Kei te aue tona iwi katoa; kei te rapu taro ratou: e hoatu ana e ratou a ratou mea ahuareka hei utu kai, hei whakahauora ake mo te wairua: titiro mai, e Ihowa, whakaaro mai, kua whakahouhou hoki ahau.
12 “இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே, உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ? சுற்றிலும் நோக்கிப்பாருங்கள். யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில், என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்ற வேதனை ஏதும் உண்டோ?
He kahore noa iho tenei ki a koutou, e koutou e haere nei i te ara? Whakaaro mai, titiro mai, e rite ana ranei tetahi mamae ki toku mamae, e mahia nei moku, ki ta Ihowa nei whiu moku i te ra i mura ai tona riri?
13 “யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார். அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து, என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார். அவர் என்னைப் பாழாக்கி, நாள்தோறும் மயக்கமடையச் செய்தார்.
Kua tukua iho nei e ia i runga, he ahi ki oku wheua, a e wera ana i tera: kua horahia e ia he kupenga mo oku waewae, kua whakahokia ahau ki muri; kua tukua ahau e ia ki te kahore, ki te whakaruhi, a pau noa te ra.
14 “என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு, என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன. யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார். என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில் என்னை ஒப்புக்கொடுத்து விட்டார்.
Ko te ioka o oku he herea iho e tona ringa, whiri rawa, kua eke ake ki runga ki toku kaki: kua he i a ia toku kaha, kua tukua ahau e te Ariki ki te ringa tangata, a kahore oku kaha ki te whakatika ake.
15 “என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் யெகோவா புறக்கணித்துவிட்டார்; என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி, எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார். யூதாவின் கன்னிகையை யெகோவா தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார்.
Kua kore noa iho i te Ariki oku marohirohi katoa i roto i ahau; kua karangatia e ia he huihui ki ahau hei wawahi i aku taitama: kua takatakahia e te Ariki te tamahine wahine a Hura, ano he takahanga waina.
16 “இதனால்தான் நான் அழுகிறேன். என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை. என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை. பகைவன் வெற்றிகொண்டபடியினால், என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.”
Na enei mea ahau i tangi ai: ko toku kanohi, tarere ana te wai o toku kanohi: no te mea kei tawhiti atu i ahau te kaiwhakamarie hei whakahauora ake i toku wairua: ko aku tamariki kei te noho kau noa iho, no te mea kua kaha te hoariri.
17 சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள், அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை. யாக்கோபின் அயலவர் அவனுக்குப் பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்; அவர்கள் மத்தியில் எருசலேம் ஒரு அசுத்தப் பொருளாயிற்று.
Kua wherahia e Hiona ona ringa; kahore he kaiwhakamarie mona; na Ihowa te whakahau mo Hakopa, hei hoariri mona te hunga e karapoti ana i a ia: kua rite a Hiruharama i roto i a ratou ki te wahine e paheke ana.
18 “யெகோவா நேர்மையுள்ளவர், இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன். மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்; என்னுடைய துன்பத்தைப் பாருங்கள். என் இளைஞரும், இளம்பெண்களும் நாடுகடத்தப்பட்டுப் போனார்கள்.
He tika hoki a Ihowa; i whakakeke hoki ahau ki tana kupu: tena whakarongo mai, e nga iwi katoa, titiro mai hoki ki toku mamae; kua riro aku wahine, aku taitama, i te whakarau.
19 “நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள். என்னுடைய ஆசாரியரும், முதியோரும் தங்கள் உயிரைக் காக்க உணவு தேடுகையில், பட்டணத்தில் அழிந்துபோனார்கள்.
I karanga ahau ki te hunga i aroha ki ahau, heoi kei te tinihanga ki ahau; ko oku tohunga, ko oku kaumatua, hemo noa iho ratou i roto i te pa, i a ratou e rapu kai ana ma ratou hei whakahauora ake i o ratou wairua.
20 “யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன். நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன். என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன். ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன். வெளியே, வாள் அழிக்கிறது; உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது.
Titiro mai, e Ihowa, he mamae hoki toku, e ohooho ana oku whekau; ko toku ngakau hurikiko ana i roto i ahau: he nui noa atu hoki toku whakakeke: i waho ko te hoari ki te whakamoti, i roto kei te mate te rite.
21 “என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை. என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு, நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களும் என்னைப் போலாகும்படி நீர் அறிவித்த நாளை வரப்பண்ணும்.
Kua rongo ratou kei te aue ahau, te ai he kaiwhakamarie moku: kua rongo oku hoariri katoa ki toku matenga, koa ana ratou ki tau i mea ai: ka kawea mai e koe te ra i karangatia e koe, a ka rite ratou ki ahau.
22 “அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்; என்னுடைய எல்லா பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோலவே, அவர்களுக்கும் செய்யும். என் புலம்பல்கள் அநேகம், என் இருதயமும் சோர்ந்துபோகிறது.”
Kia tae to ratou kino katoa ki tou aroaro: meatia ano ki a ratou tau i mea mai ai ki ahau mo oku he katoa: ka maha nei hoki oku auetanga; ko toku ngakau whakaruhi rawa.