< புலம்பல் 3 >
1 அவருடைய கோபத்தின் பிரம்பினால் உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே.
在上主盛怒的鞭責下,我成了受盡痛苦的人;
2 அவர் என்னை வெளியே துரத்தி, வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார்.
他引我走入黑暗,不見光明;
3 உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் அவர் தமது கையை என்மேல் திருப்பினார்.
且終日再三再四,伸手與我為敵;
4 எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், என் எலும்புகளையும் உடைத்துவிட்டார்.
他使我肌膚枯瘦,折斷我的骨頭;
5 அவர், கசப்பும் கஷ்டமும் முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார்.
他在我四周築起圍牆,用毒草和痛苦環繞我,
6 வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார்.
讓我居住在黑暗之中,好像久已死去的人。
7 நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார்.
他用垣牆圍困我,不能逃脫;並且加重我的桎梏;
8 நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார்.
我呼籲求救時,他卻掩耳不聽我的祈禱。
9 செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார்.
他用方石堵住了我的去路,阻塞了我的行徑。
10 பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும்,
上主之於我,像是一隻潛伏的狗熊,是一頭藏匿的獅子,
11 அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார்.
他把我拖到路旁,撲捉撕裂,加以摧殘;
12 அவர் தம்முடைய வில்லை வளைத்து, தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
又拉開他的弓,瞄準我,把我當作眾矢之的。
13 அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார்.
他用箭囊的箭,射殺了我的雙腰;
14 நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள்.
使我成了萬民的笑柄,終日受他們的嘲笑;
15 அவர் என்னை கசப்பினால் நிரப்பி, காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார்.
他使我飽食苦菜,醉飲苦酒。
16 அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார்.
他用砂礫破碎我的牙齒,用灰塵給我充饑。
17 நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன்.
他除去了我心中的平安,我已經忘記了一切幸福;
18 ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.”
於是我說:「我的光榮已經消逝,對上主的希望也已經幻滅。」
19 நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன்.
我回憶著我的困厄和痛苦,盡是茹苦含辛!
20 நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று.
我的心越回想,越覺沮喪。
21 ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு:
但是我必要追念這事,以求獲得希望:
22 அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
上主的慈愛,永無止境;他的仁慈,無窮無盡。
23 உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது.
你的仁慈,朝朝常新;你的忠信,浩大無垠!
24 நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
我心中知道:上主是我的福分;因此,我必信賴他。
25 யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
上主對信賴他和尋求他的人,是慈善的。
26 எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக அமைதியாய் காத்திருப்பது நல்லது.
最好是靜待上主的救援,
27 இளைஞனாய் இருக்கும்போதே அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது.
最好是自幼背負上主的重軛,
28 யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும்.
默然獨坐,因為是上主加於他的軛;
29 அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
他該把自己的口貼近塵埃,這樣或者還有希望;
30 அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.
向打他的人,送上面頰,飽受凌辱。
31 ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
因為上主決不會永遠把人遺棄;
32 அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
縱使懲罰,他必按照自己豐厚的慈愛,而加以憐憫。
33 அவர் துன்பத்தையோ துக்கத்தையோ மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
因為他苛待和懲罰世人,原不是出於他的心願。
34 நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் கால்களின்கீழ் மிதிப்பதையும்,
將世上所有的俘虜,都踐踏在腳下,
35 ஒருவனின் மனித உரிமைகளை மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும்,
在至上者前剝奪人的權利,
36 ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் யெகோவா காணாதிருப்பாரோ?
與人爭訟時,欺壓他人:難道上主看不見﹖
37 யெகோவா உத்தரவிடாவிட்டால், எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்?
若非上主有命,誰能言出即成呢﹖
38 பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன.
吉凶禍福,難道不是出自至上者之口﹖
39 வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
人生在世,為自己的罪受罰,為什麼還叫苦﹖
40 ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்புவோம்.
我們應檢討考察我們的行為,回頭歸向上主!
41 எங்கள் இருதயங்களையும், கைகளையும் பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி:
應向天上的大主,雙手奉上我們的心!
42 “நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், நீர் எங்களை மன்னிக்கவில்லை.
正因為我們犯罪背命,你纔沒有寬恕。
43 “நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர்.
你藏在盛怒之中,追擊我們,殺死我們,毫不留情。
44 மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது.
你隱在濃雲深處,哀禱不能上達。
45 நீர் எங்களை நாடுகளுக்குள் குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர்.
你使我們在萬民中,成了塵垢和廢物。
46 “எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
我們所有的仇人,都向我們大張其口。
47 எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், பாழும் அழிவும் வந்தன.”
為我們只有恐怖和陷阱,破壞和滅亡。
48 என் மக்கள் அழிக்கப்பட்டதனால் என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது.
為了我女兒──人民的滅亡,我的眼淚湧流如江河。
49 என் கண்கள் ஓய்வின்றி, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும்.
我的眼淚湧流不止,始終不停,
50 பரலோகத்திலிருந்து யெகோவா கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும்.
直到上主從天垂顧憐視,
51 என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், என் ஆத்துமா துக்கிக்கிறது.
因我城中的一切女兒,使我觸目傷心。
52 காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள்.
我的仇人無故追捕我,像獵取飛鳥一樣;
53 அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்;
他們將我投入坑穴之中,把石塊擲在我身上;
54 வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன்.
水淹沒了我的頭頂,我想:「我要死了! 」
55 யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன்.
上主,我從坑穴深處,呼號你的聖名;
56 “ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர்.
你曾俯聽過我的呼聲,對我的哀禱,不要掩耳不聞。
57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர்.
在我呼號你的那一天,願你走近而對我說:「不要害怕! 」
58 யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
上主,你辯護了我的案件,贖回我的性命。
59 யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்!
上主,你見我遭受冤屈,你替我伸了冤,
60 அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர்.
你看見了他們對我的種種仇恨和陰謀。
61 யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;
上主,你聽見了他們加於我的種種侮辱和陰謀,
62 அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.
你也聽見了反對我者的誹謗,和他們終日對我的企圖。
63 அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.
你看! 他們或坐或立,我始終是他們嘲笑的對象。
64 யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.
上主,求你按照他們雙手的作為,報復他們;
65 அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.
求你使他們的心思頑固,並詛咒他們。
66 கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.
上主,求你憤怒地追擊他們,將他們由普天之下除掉。