< யோசுவா 24 >
1 பின்பு யோசுவா இஸ்ரயேல் கோத்திரத்தார் எல்லாரையும் சீகேமில் கூடிவரச் செய்தான். அவர்களில் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோரை அவன் முன்னே வரும்படி அழைத்தான். அவர்கள் இறைவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Na Yosua frɛɛ Israelfo nyinaa, wɔn mpanyimfo, ntuanofo, atemmufo ne adwumayɛfo kɔɔ Sekem. Na wɔn nyinaa baa Onyankopɔn anim.
2 அப்பொழுது யோசுவா மக்கள் அனைவருக்கும் கூறியதாவது, “இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: முற்காலத்தில் உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாமுக்கும், நாகோருக்கும் தகப்பனாகிய தேராகு என்பவன் யூப்ரட்டீஸ் நதிக்கு அப்பால் குடியிருந்தபோது அவர்கள் பிற தெய்வங்களை வணங்கினார்கள்.
Yosua ka kyerɛɛ wɔn se, “Sɛnea Awurade, Israel Nyankopɔn se ni: Mo tete agyanom, Tera a ɔyɛ Abraham agya ne Nahor tenaa Asubɔnten Efrate agya nohɔ na wɔsom anyame foforo.
3 ஆனால் நான் உங்கள் பிதாவாகிய ஆபிரகாமை யூப்ரட்டீஸ் நதியின் அப்பாலுள்ள நாட்டிலிருந்து தெரிந்தெடுத்து, கானான்நாடெங்கும் வழிநடத்தி, அவனுக்குப் பல வழித்தோன்றல்களைக் கொடுத்தேன். அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்,
Nanso mefaa mo agya Abraham fii asase a ɛda Efrate agya hɔ de no baa Kanaan asase so. Mefaa ne ba Isak so maa nʼasefo dɔɔso.
4 ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கொடுத்தேன். சேயீர் என்னும் மலைநாட்டை நான் ஏசாவுக்குக் கொடுத்தேன். ஆனால் யாக்கோபும் அவன் மகன்களும் எகிப்திற்குப் போனார்கள்.
Mede Yakob ne Esau maa Isak. Mede Seir bepɔwman no maa Esau, na Yakob ne ne mma sian kɔɔ Misraim.
5 “‘அதன்பின் நான் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி, அங்கே நான் செய்த செயல்களினால் எகிப்தியரைத் துன்புறுத்தி உங்களை அங்கிருந்து வெளியே கொண்டுவந்தேன்.
“Na mesomaa Mose ne Aaron, na mede ɔyaredɔm a ɛyɛ hu baa Misraimfo no so na akyiri no, miyii mo fii hɔ ma munyaa ahofadi.
6 அவ்வாறு உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது அவர்கள் கடலண்டைக்கு வந்தார்கள். எகிப்தியர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து இரதங்களோடும், குதிரைகளோடும் செங்கடல்வரை துரத்தி வந்தார்கள்.
Bere a mo agyanom duu Po Kɔkɔɔ ho no, Misraimfo no de wɔn nteaseɛnam ne wɔn apɔnkɔkafo taa wɔn.
7 அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவிடம் உதவிகேட்டு, அழுதார்கள். உடனே அவர் அவர்களுக்கும், எகிப்தியருக்குமிடையே இருளை உண்டாக்கினார். பின் அவர் எகிப்தியரின்மேல் செங்கடல் தண்ணீரைத் திருப்பி வரச்செய்து, அவர்களை அமிழ்ந்துபோகச் செய்தார். எகிப்தியருக்கு நான் செய்ததை நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டீர்கள். அதன்பின் நீங்கள் பாலைவனத்தில் நீண்டகாலமாக வாழ்ந்தீர்கள்.
Musu frɛɛ Awurade no, mede sum bɛtoo mo ne Misraimfo no ntam, memaa Po no bu faa wɔn so kataa wɔn so. Mo ankasa mo de mo ani huu nea meyɛe. Afei motenaa sare so mfe bebree.
8 “‘பின்னர் நான் உங்களை யோர்தானின் கிழக்கே வசித்த எமோரியரின் நாட்டிற்குக் கொண்டுவந்தேன். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிட்டபோது, நான் அவர்களை உங்கள் கைகளில் ஒப்படைத்தேன். உங்களுக்கு முன்பாக நான் அவர்களை அழித்தேன். நீங்கள் அவர்களுடைய நாட்டை உங்கள் உடைமையாக்கினீர்கள்.
“Mede mo baa Amorifo asase so wɔ Yordan apuei fam. Wɔne mo koe, nanso memaa mudii wɔn so nkonim na mofaa wɔn asase.
9 அடுத்து சிப்போரின் மகனும் மோவாப் தேசத்தின் அரசனுமாகிய பாலாக், இஸ்ரயேலருக்கு விரோதமாகப் போரிட ஆயத்தமானபோது, அவன் உங்களைச் சபிக்கும்படி பேயோரின் மகனாகிய பிலேயாமை அழைத்தான்.
Na Moabhene Sipor babarima Balak fii ase ko tiaa Israel. Ɔka kyerɛɛ Beor babarima Balaam se ɔnnome mo.
10 ஆனால் நான் பிலேயாமின் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் அவன் திரும்பதிரும்ப உங்களை ஆசீர்வதித்தான். இவ்வாறு நான் உங்களை அவன் கையிலிருந்து விடுவித்தேன்.
Nanso mantie no, na mmom mema ohyiraa mo ntoatoaso, na migyee mo fii Balak nsam.
11 “‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
“Na mutwaa Asubɔnten Yordan baa Yeriko no, Yeriko mmarima ko tiaa mo. Na nkurɔfo pii nso ko tiaa mo a Amorifo, Perisifo, Kanaanfo, Hetifo, Girgasifo, Hewifo ne Yebusifo ka ho. Nanso mema mudii wɔn so nkonim.
12 நானே உங்களுக்கு முன்னால் குளவிகளை அனுப்பினேன். அவை அவர்களையும், இரு எமோரிய அரசர்களையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டது. நீங்கள் உங்கள் வில்லுகளாலும் வாள்களாலும் அவர்களை துரத்தவில்லை.
Afei, mesomaa nnowa dii mo anim ma wɔkɔpam Amorifo ahemfo baanu no. Ɛnyɛ mo afoa anaa mo agyan na ɛma mudii nkonim.
13 இவ்விதமாக நீங்கள் பாடுபட்டுப் பண்படுத்தாத நிலத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும், நான் உங்களுக்குக் கொடுத்தேன். நீங்களும் அவற்றில் வாழ்ந்து நீங்கள் நடாத திராட்சைத் தோட்டத்திலிருந்தும் ஒலிவத் தோப்புகளிலிருந்தும் பெற்ற பழங்களைச் சாப்பிடுகிறீர்கள்.’
Memaa mo asase a ɛnyɛ mo na mudii ho dwuma, maa mo nkuropɔn a ɛnyɛ mo na mokyekyeree, nkuropɔn a mote mu mprempren no. Memaa mo bobe nturo ne ngodua mfuw sɛ mubenya aduan, a mpo ɛnyɛ mo na muduae.
14 “இப்பொழுது யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு எல்லா மன உண்மையுடனும் சேவை செய்யுங்கள். எகிப்து நாட்டிலும் யூபிரடிஸ் நதிக்கு அப்பாலும் உங்கள் முற்பிதாக்கள் வணங்கிய தெய்வங்களை எறிந்துவிட்டு, யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள்.
“Enti munni Awurade ni, na momfa mo koma nyinaa nsom no. Montow ahoni a mo agyanom somee no wɔ bere a na wɔte Asubɔnten Efrate agya ne Misraim no nyinaa ngu korakora. Monsom Awurade nko ara.
15 யெகோவாவுக்குப் பணிசெய்வது உங்களுக்கு விருப்பமில்லையென்றால், யாருக்குப் பணிசெய்ய வேண்டும் என்பதை இன்றே தெரிந்துகொள்ளுங்கள். யூபிரடிஸ் நதிக்கு அப்பால் உங்கள் முற்பிதாக்கள் பணிவிடை செய்த தெய்வங்களையா? அல்லது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களையா? தெரிந்துகொள்ளப் போகிறீர்கள். நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்று யோசுவா கூறினான்.
Sɛ nso mompɛ sɛ mosom Awurade a, nnɛ yi ara, monkyerɛ nea mobɛsom no. Anyame a mo agyanom somee wɔ bere a na wɔwɔ Efrate agya no na mopɛ? Anaa Amorifo a mote wɔn asase so mprempren no anyame? Na me ne me fi de, yɛbɛsom Awurade.”
16 அதற்கு மக்கள் மறுமொழியாக, “யெகோவாவைக் கைவிட்டு வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்வது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.
Na ɔman no buae se, “Yɛrempa Awurade akyi nkɔsom anyame foforo.
17 எங்கள் இறைவனாகிய யெகோவா தாமே, எங்களையும் எங்கள் முன்னோர்களையும் அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். அங்கு எங்கள் கண்களுக்கு முன்பாகப் பெரிய அற்புதச் செயல்களை நடப்பித்தார். எங்கள் பயணம் முழுவதிலும், நாங்கள் பிரயாணம் செய்த இடங்களிலும் உள்ள பிறநாடுகளின் மத்தியிலுமிருந்து நம்மைப் பாதுகாத்தார்.
Efisɛ Awurade, yɛn Nyankopɔn na ogyee yɛn ne yɛn agyanom fii nkoasom mu wɔ Misraim. Ɔyɛɛ anwonwade akɛse wɔ yɛn anim. Na yɛfaa sare so wɔ yɛn atamfo mu no, ɔbɔɔ yɛn ho ban.
18 அத்துடன் யெகோவா எமோரியர் உட்பட அந்நாட்டின் எல்லா மக்களையும் எங்கள் முன்பாகத் துரத்திவிட்டார். ஆகையால் நாங்களும் யெகோவாவுக்கே பணிசெய்வோம். ஏனெனில் அவரே எங்கள் இறைவன்” என்றார்கள்.
Ɛyɛ Awurade na ɔpam Amorifo ne aman foforo a na wɔte asase yi so no. Enti yɛn nso, yɛbɛsom Awurade, efisɛ ɔno nko ne yɛn Nyankopɔn.”
19 அதற்கு யோசுவா மக்களிடம், “நீங்கள் உங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்ய இயலாதிருக்கிறீர்கள். அவர் பரிசுத்தமான இறைவன். அவர் வைராக்கியமுள்ள இறைவன். நீங்கள் அவருக்கு எதிராக செய்யும் கலகத்தையும், பாவங்களையும் அவர் மன்னிக்கமாட்டார்.
Na Yosua ka kyerɛɛ nnipa no se, “Morentumi nsom Awurade, efisɛ ɔyɛ kronkron ne ninkufo Nyankopɔn. Ɔremfa mo atuatew ne mo bɔne nkyɛ mo.
20 அவர் உங்களுக்கு நல்லவராயிருந்த பின்பும், நீங்கள் யெகோவாவைக் கைவிட்டு, அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தால், அவரும் உங்களைவிட்டு விலகிச்சென்று, உங்கள்மேல் பெருந்துன்பத்தை வரப்பண்ணி உங்களை முடிவுறப் பண்ணுவார்” என்றான்.
Sɛ mopa Awurade akyi na mosom anyame foforo a, ɔbɛdan atia mo, asɛe mo a ɛmfa ho sɛ ɔne mo adi no yiye.”
21 அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “இல்லை! நாங்கள் யெகோவாவுக்கே பணிசெய்வோம்” என்றார்கள்.
Nnipa no buaa Yosua se, “Dabi, yɛasi yɛn adwene pi sɛ yɛbɛsom Awurade.”
22 அதற்கு யோசுவா, “நீங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்வதைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள்” என்றான். அதற்கு மக்களும், “ஆம், நாங்களே சாட்சிகள்,” என்றார்கள்.
Yosua nso kae se, “Mubebu saa gyinae yi ho akontaa. Moaka sɛ mobɛsom Awurade.” Wobuae se, “Yiw, yebebu ho akontaa.”
23 “அப்படியானால், இப்பொழுதே உங்கள் மத்தியிலுள்ள அந்நிய தெய்வங்களை எறிந்துவிட்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு உங்கள் உள்ளங்களை ஒப்புக்கொடுங்கள்” என்று யோசுவா சொன்னான்.
Yosua kae sɛ, “Eye, monsɛe ahoni a mowɔ nyinaa na momfa mo koma nto Awurade, Israel Nyankopɔn so.”
24 அப்பொழுது மக்கள் யோசுவாவிடம், “நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்து அவருக்குக் கீழ்படிவோம்” என்றார்கள்.
Nnipa no ka kyerɛɛ Yosua se, “Yɛbɛsom Awurade, yɛn Nyankopɔn. Yɛbɛyɛ osetie ama ɔno nko ara.”
25 அந்நாளில் யோசுவா சீகேமிலே மக்களுக்காக ஒரு உடன்படிக்கையைச் செய்து அவர்களுக்குச் சட்டங்களையும், விதிமுறைகளையும் ஏற்படுத்தினான்.
Enti Yosua ne nnipa no yɛɛ apam saa da no wɔ Sekem, de wɔn hyɛɛ nhyehyɛe a emu yɛ den na ɛbɛtena hɔ daa wɔ wɔne Awurade ntam.
26 இவற்றை யோசுவா இறைவனின் சட்ட புத்தகத்தில் எழுதிவைத்தான். பின்பு யெகோவாவின் பரிசுத்த இடத்திற்கு அருகேயுள்ள கருவாலி மரத்தின்கீழ் ஒரு பெரிய கல்லை நிறுத்தினான்.
Yosua kyerɛw eyinom nyinaa guu Onyankopɔn Mmara Nhoma no mu. Ɔfaa ɔbotan kɛse bi pirew kɔtoo odum dua bi a ɛbɛn Awurade ntamadan no ase sɛ nkae ade.
27 அப்பொழுது அவன் எல்லா மக்களிடமும் கூறியதாவது: “இதோ பாருங்கள்; இந்தக் கல் நமக்கெதிரான சாட்சியாயிருக்கும். யெகோவா நமக்கு கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் இது கேட்டது. நீங்கள் உங்கள் இறைவனுக்கு உண்மையாயிராவிட்டால், இக்கல்லே உங்களுக்கு எதிரான ஒரு சாட்சியாக இருக்கும்” என்றான்.
Yosua ka kyerɛɛ nnipa no se, “Saa ɔbotan yi ate biribiara a Awurade aka akyerɛ yɛn no. Sɛ moanni mo Nyankopɔn nokware a, ɛbɛyɛ adansede atia mo.”
28 அதன்பின் யோசுவா இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் சொத்துரிமை இடங்களுக்குப் போவதற்கு அனுப்பிவைத்தான்.
Afei, Yosua gyaa nnipa no kwan maa obiara kɔɔ nʼagyapade so.
29 இவைகளுக்குப்பின் யெகோவாவின் பணியாளன், நூனின் மகனாகிய யோசுவா தனது நூற்றுப்பத்தாவது வயதில் இறந்தான்.
Asɛm yi akyi, ankyɛ na Nun babarima Yosua, Awurade somfo wui. Odii mfirihyia ɔha ne du.
30 அவர்கள் காயாஸ் மலைக்கு வடக்கேயுள்ள எப்பிராயீமின் மலைநாட்டில் யோசுவாவுக்கு உரிமைச்சொத்தாகக் கிடைத்த, திம்னாத் சேராக் என்னும் இடத்தில் அவனை அடக்கம் செய்தார்கள்.
Wosiee no wɔ nʼagyapade asase so wɔ Timnat-Sera a ɛwɔ Efraim bepɔw asase so, wɔ Gaas Bepɔw atifi fam.
31 யோசுவாவின் வாழ்நாள் முழுவதும், இஸ்ரயேலர்கள் யெகோவாவுக்குப் பணிசெய்தார்கள். அவனுக்குப்பின் யெகோவா இஸ்ரயேலருக்குச் செய்த அனைத்தையும் அனுபவத்தில் கண்ட சபைத்தலைவர்களுடைய வாழ்நாள் முழுவதிலும்கூட இஸ்ரயேலர் யெகோவாவுக்கே பணிசெய்தார்கள்.
Na Israel som Awurade wɔ Yosua, ne mpanyimfo a wɔanyinyin sen no a wohuu nea Awurade yɛ maa Israel wɔn nkwa nna nyinaa mu.
32 எகிப்தில் இருந்து இஸ்ரயேலர் கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகள் சீகேமில் அடக்கம் செய்யப்பட்டன. அந்த நிலத்துண்டை ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக் காசுகளுக்கு யாக்கோபு வாங்கியிருந்தான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன். இந்த நிலத்துண்டு யோசேப்பின் சந்ததிகளின் உரிமைச் சொத்தாகும்.
Na wosiee Yosef nnompe a Israelfo de fi Misraim bae no wɔ Sekem wɔ asasetam bi a Yakob tɔɔ no dwetɛ mpɔw ɔha fii Hamor mmabarima nkyɛn no so. Na saa asase yi wɔ Efraim ne Manase mmusuakuw a wɔyɛ Yosef asefo asase kyɛfa a wɔde maa wɔn no so.
33 ஆரோனின் மகனாகிய எலெயாசார் இறந்தபோது, கிபியா என்னும் இடத்தில் அவன் அடக்கம் செய்யப்பட்டான். எப்பிராயீமின் மலைநாட்டில் இருக்கும் இந்த நிலம் பினெகாசின் மகனுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.
Aaron babarima Eleasar nso wui. Wosiee no wɔ Efraim bepɔw asase no so wɔ Gibea kurow no a na wɔde ama ne babarima Pinehas no mu.