< யோசுவா 22 >

1 அதன்பின்பு யோசுவா ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரை வரவழைத்து,
Akkor hivatá Józsué a Rúbenitákat, a Gáditákat és a Manassé fél nemzetségét,
2 அவர்களிடம், “யெகோவாவின் ஊழியன் மோசே கட்டளையிட்டபடியெல்லாம் நீங்கள் செய்து, நான் கட்டளையிட்ட எல்லாவற்றிலும், எனக்கும் கீழ்ப்படிந்தீர்கள்.
És monda nékik: Ti megtartottátok mindazt, a mit Mózes, az Úrnak szolgája parancsolt néktek, és hallgattatok az én szómra mindenben, a mit parancsoltam néktek;
3 இன்றுவரை வெகுகாலமாக நீங்கள் உங்கள் சகோதரரை கைவிட்டுவிடவில்லை. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களிடம் ஒப்படைத்த பணியை நீங்கள் செய்துமுடித்தீர்கள்.
Nem hagytátok el a ti atyátokfiait immár sok nap óta mind e mai napig, és megtartottátok a megtartandókat, az Úrnak, a ti Isteneteknek parancsolatját.
4 இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா தாம் வாக்களித்தபடியே, உங்கள் சகோதரருக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறார். ஆகவே யெகோவாவின் அடியவனாகிய மோசே யோர்தானுக்கு அப்பால் உங்களுக்குக் கொடுத்த நாட்டில் இருக்கும் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போங்கள்.
Most pedig nyugodalmat adott az Úr, a ti Istenetek a ti atyátokfiainak, a mint megmondta vala nékik; most azért térjetek vissza, és menjetek a ti sátraitokba, a ti örökségteknek földére, a melyet Mózes, az Úrnak szolgája adott vala néktek túl a Jordánon.
5 ஆனால் யெகோவாவின் அடியவனாகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளையையும் சட்டத்தையும் கைக்கொள்ளக் கவனமாயிருங்கள்: உங்கள் இறைவனாகிய யெகோவாவை நேசித்து, அவரின் வழிகளிலெல்லாம் நடந்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பற்றிக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருக்குச் சேவை செய்யக் கவனமாய் இருங்கள்” என்றான்.
Csak igen vigyázzatok, hogy teljesítsétek a parancsolatot és a törvényt, a melyet parancsolt néktek Mózes, az Úrnak szolgája, hogy szeressétek az Urat, a ti Isteneteket, és járjatok minden ő útján, és tartsátok meg az ő parancsolatait, és ragaszkodjatok hozzá, és szolgáljatok néki teljes szívetekből és teljes lelketekből.
6 அதன்பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பினான், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
És megáldá őket Józsué, azután elbocsátá őket, és elmenének az ő sátraikba.
7 மனாசேயின் அரைக் கோத்திரத்திற்கு மோசே பாசானில் நிலத்தைக் கொடுத்திருந்தான். மற்ற அரைக் கோத்திரத்திற்கு யோசுவா யோர்தான் நதியின் மேற்பகுதியில் அவர்களின் சகோதரர்களுடனே நிலம் கொடுத்தான். பின் யோசுவா அவர்களை வீடுகளுக்கு அனுப்பியபோது அவர்களை ஆசீர்வதித்து,
Mert a Manassé nemzetsége felének Mózes adott vala örökséget Básánban; a másik felének pedig Józsué adott az ő atyjafiaival a Jordánon innen napnyugot felől. És a mikor elbocsátá is őket Józsué az ő sátraikba, akkor is megáldá őket,
8 “உங்கள் பெருகிய செல்வத்துடன் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றிய பெருந்தொகையான மந்தை, வெள்ளி, தங்கம், வெண்கலம், இரும்பு, ஏராளமான உடைகள் ஆகிய கொள்ளைப்பொருட்களை உங்கள் சகோதரர்களுடன் பங்கிட்டுக்கொள்ளுங்கள்” என்றான்.
És szóla nékik, mondván: Nagy gazdagsággal térjetek vissza sátraitokba, és igen sok barommal, ezüsttel, arannyal, rézzel, vassal és igen sok ruhával. Az ellenségeitektől vett zsákmányt oszszátok meg a ti atyátokfiaival.
9 எனவே ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோர் கானான் தேசத்தில் உள்ள சீலோ என்னும் இடத்தில் மற்ற இஸ்ரயேலரை விட்டுப்பிரிந்து தங்கள் சொந்த நாடான கீலேயாத்திற்குப் போனார்கள். இது யெகோவாவின் கட்டளைப்படி மோசேயினால் அவர்களுக்குச் சொத்துரிமையாகக் கொடுக்கப்பட்டிருந்தது.
Visszatérének azért, és elmenének a Rúben fiai, a Gád fiai és a Manassé fél nemzetsége Izráel fiaitól, Silóból, a mely Kanaán földén van, hogy menjenek Gileád földére, az ő örökségüknek földébe, a melyben örökséget vőnek az Úr rendelése szerint Mózes által.
10 ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோர் கானான் தேசத்திலே யோர்தான் நதிக்கு அருகேயுள்ள கெலிலோத்துக்கு வந்தபோது, யோர்தானுக்கு அருகே மிகப்பெரிய தோற்றமுடைய பலிபீடம் ஒன்றைக் கட்டினார்கள்.
Mikor a Jordán mellékére értek, a mely még Kanaán földén van, építének a Rúben fiai, Gád fiai és Manassé fél nemzetsége ott a Jordán mellett oltárt, nagy, láttatós oltárt.
11 இஸ்ரயேலருக்குரிய பகுதியில் யோர்தானுக்கு அருகேயுள்ள கானானின் எல்லையில் உள்ள கெலிலோத்தில் அவர்கள் பலிபீடத்தை எழுப்பினதை மற்ற இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.
Meghallák pedig Izráel fiai, hogy ezt mondják vala: Ímé a Rúben fiai, Gád fiai és Manassé fél nemzetsége oltárt építettek átellenben a Kanaán földével, a Jordán mellékén, Izráel fiainak oldala felől.
12 அப்பொழுது இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவர்களுக்கெதிராக யுத்தம் புரிவதற்காக சீலோவிலே ஒன்றுதிரண்டது.
A mint meghallák Izráel fiai, egybegyűle Izráel fiainak egész gyülekezete Silóban, hogy hadakozni induljanak fel ellenök.
13 எனவே இஸ்ரயேலர் ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாசை ரூபன், காத், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம் கீலேயாத்திற்கு அனுப்பினார்கள்.
Küldék pedig Izráel fiai a Rúben fiaihoz, Gád fiaihoz és a Manassé fél nemzetségéhez Gileád földére Fineást, Eleázárnak, a papnak fiát;
14 அவனுடன் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவனாக இன்னும் பத்துத் தலைவர்களையும் அனுப்பினார்கள். அவர்கள் ஒவ்வொருவனும் இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுள் ஒரு குடும்பத் தலைவனாக இருந்தான்.
Tíz fejedelmet is vele, egy-egy fejedelmet az ősök háza szerint Izráelnek minden nemzetségéből. Ezek mind fejedelmei valának az ő őseik házának, Izráelnek ezerei között.
15 அவர்கள் கீலேயாத்திற்குப்போய் ரூபனியர், காத்தியர் மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரிடம்,
És eljutának a Rúben fiaihoz, a Gád fiaihoz és a Manassé fél nemzetségéhez a Gileád földére, és szólának ő velök, mondván:
16 “யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதும் சொல்கிறது என்னவென்றால்: ‘நீங்கள் எப்படி இஸ்ரயேலரின் இறைவனுக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்? இப்பொழுது நீங்கள் எப்படி யெகோவாவைவிட்டு வழிவிலகி அவருக்கு எதிராகக் கலகம்பண்ணி உங்களுக்கென ஒரு பலிபீடத்தைக் கட்டலாம்?
Így szól az Úrnak egész gyülekezete: Micsoda vétek ez, a melylyel vétkeztetek Izráelnek Istene ellen, hogy immár elfordultatok az Úrtól, építvén magatoknak oltárt, hogy pártot üssetek immár az Úr ellen?!
17 பேயோரின் மலையில் செய்த பாவம் எங்களுக்குப் போதாதோ? அதனால் யெகோவாவின் மக்கள் கூட்டம் முழுவதின் மேலும் கொள்ளைநோய் வந்தபோதும்கூட, இன்றுவரை அப்பாவத்திலிருந்து நம்மை நாம் சுத்திகரித்துக் கொள்ளவில்லையே!
Avagy kevés-é nékünk a Peór miatt való hamisságunk, a miből ki sem tisztultunk még mind e napig, és a miért csapás lőn az Úrnak gyülekezetén?
18 இப்பொழுது நீங்கள் யெகோவாவைவிட்டு விலகிபோகிறீர்களா? “‘இன்று யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தால், நாளை அவர் முழு இஸ்ரயேல் சமுதாயத்தின்மேலும் கோபம்கொள்வார் அல்லவா.
És ti elfordultatok immár az Úrtól; pedig ha ti pártot üttök ma az Úr ellen: holnap majd Izráelnek egész gyülekezetére haragszik meg.
19 உங்கள் சொத்துரிமையான நாடு மாசுபட்டிருந்தால், இறைசமுககூடாரம் இருக்கிற யெகோவாவின் நாட்டிற்கு வந்து, எங்களுடன் அந்நாட்டைப் பகிர்ந்துகொள்ளுங்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தையன்றி, வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு விரோதமாகவோ, எங்களுக்கு விரோதமாகவோ கலகம் செய்யவேண்டாம்.
Ha pedig tisztátalannak tetszik előttetek a ti örökségeteknek földje: úgy jőjjetek át az Úr örökségének földjére, a hol ott áll az Úrnak sátora, és legyetek örökösökké mi közöttünk; de az Úr ellen ne üssetek pártot, és ellenünk se üssetek pártot, építvén magatoknak oltárt, az Úrnak, a mi Istenünknek oltárán kivül.
20 முன்னர் சேராவின் மகனாகிய ஆகான் யெகோவாவுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் நம்பிக்கைத் துரோகமாக நடந்தபோது, இறைவனின் கோபம் இஸ்ரயேல் சமுதாயம் முழுவதன் மேலும் வரவில்லையோ? அவனுடைய பாவத்திற்காக அவன் மட்டும் சாகவில்லையே’” என்றார்கள்.
Avagy nem Ákán, a Zéra fia vétkezék-é nagy vétekkel az Istennek szentelt dolog ellen; mégis az Izráelnek egész gyülekezete ellen lőn a harag! És az a férfiú nem egymaga halt meg az ő bűnéért!
21 இதற்கு மறுமொழியாக ரூபன், காத், மனாசேயின் அரைப்பங்கு கோத்திரத்தார் அனைவரும், அங்கு வந்த இஸ்ரயேல் வம்சத்தலைவர்களுக்கு கூறியதாவது:
Felelének pedig a Rúben fiai, a Gád fiai és a Manassé fél nemzetsége, és szólának az Izráel ezereinek fejeihez:
22 “வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, வல்லமையுள்ளவர் இறைவனாகிய யெகோவா, அவர் அறிவார். அதை இஸ்ரயேலரும் அறிந்துகொள்ளட்டும்! யெகோவாவுக்கு எதிரான கலகமாய், அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமையாய் இது இருந்தால் இன்று எங்களைத் தப்பவிடவேண்டாம்.
Az Istenek Istene az Úr, az Istenek Istene az Úr: ő tudja, és az Izráel is megtudja. Ha pártütésből és ha az Úr ellen való vétekből van ez: ne tartson meg minket e napon!
23 யெகோவாவைவிட்டு விலகிப்போவதற்காகவும், தகன காணிக்கைகளையோ, தானியக் காணிக்கைகளையோ, அல்லது சமாதான காணிக்கைகளையோ பலியிடுவதற்காகவும் நாங்கள் எங்கள் சொந்தப் பலிபீடத்தைக் கட்டியிருந்தால், யெகோவா தாமே எங்களிடம் கணக்குக் கேட்கட்டும்.
Ha azért építettünk magunknak oltárt, hogy elforduljunk az Úrtól, vagy pedig hogy áldozzunk azon egészen égőáldozatot és ételáldozatot; vagy hogy tegyünk arra hálaadásnak áldozatját: – lássa meg ezt ő maga az Úr!
24 “இல்லை! உங்கள் சந்ததிகள், எங்கள் சந்ததிகளிடம் ஒரு நாளைக்கு, ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது?
Hát nem inkább a miatt való féltünkben cselekedtük-é ezt, hogy így gondolkoztunk: Maholnap így szólhatnak a ti fiaitok a mi fiainkhoz, mondván: Mi közötök van néktek az Úrhoz, Izráel Istenéhez?
25 ரூபனியரே! காத்தியரே! உங்களுக்கும் எங்களுக்கும் இடையே யெகோவா யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார்; யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை’ என்று சொல்வார்கள் என்ற பயத்தினால் இதைச் செய்தோம். இவ்வாறு எங்களுடைய சந்ததிகள் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதை நிறுத்திவிட உங்கள் சந்ததிகள் காரணமாயிருப்பார்கள்.
Hiszen határt vetett az Úr mi közöttünk és ti közöttetek Rúben fiai és Gád fiai – a Jordánt; nincsen néktek részetek az Úrban! És elidegeníthetnék a ti fiaitok a mi fiainkat, hogy ne féljék az Urat!
26 “அதனால்தான், ‘நாங்கள் முன் ஆயத்தமாகவே ஒரு பலிபீடத்தைக் கட்டுவோம்’ எனச் சொன்னோம். தகனபலிக்காகவோ, வேறு பலிகளுக்காகவோ அல்ல;
Mondottuk azért: Nosza fogjunk hozzá, hogy építsünk oltárt, se nem egészen égőáldozatra, se nem véres áldozatra;
27 மாறாக இது எங்களுக்கும், உங்களுக்கும், பின்வரும் சந்ததிகளுக்கும் இடையே சாட்சியாயிருக்கும். நாங்கள் எங்கள் தகன காணிக்கைகளாலும், மற்ற பலிகளாலும், சமாதான காணிக்கைகளாலும் யெகோவாவை அவருடைய பரிசுத்த இடத்தில் வழிபடுவோம் என்பதற்கு இது சாட்சியாயிருக்கும். அப்பொழுது வருங்காலத்தில் உங்கள் வழித்தோன்றல்கள் எங்கள் சந்ததிகளிடம், ‘யெகோவாவிடம் உங்களுக்குப் பங்கில்லை’ எனச் சொல்ல இயலாதிருக்கும்.
Hanem hogy bizonyság legyen az mi közöttünk és ti közöttetek, és a mi utánunk való nemzetségeink között, hogy szolgálni akarjuk az Urat ő előtte a mi egészen égőáldozatainkkal, véres áldozatainkkal és hálaáldozatainkkal, és hogy ne mondhassák a ti fiaitok maholnap a mi fiainknak: Nincs néktek részetek az Úrban.
28 “மேலும் நாங்கள், ‘அவர்கள் எப்பொழுதாவது எங்களிடமோ, அல்லது எங்கள் சந்ததிகளிடமோ இப்படிச் சொன்னால், நாங்கள் எங்கள் தந்தையர் கட்டிய யெகோவாவின் பலிபீடத்தின் மாதிரி அமைப்பைப் பாருங்கள்! இது தகன காணிக்கைகளுக்காகவோ அல்லது மற்ற பலிகளுக்காகவோ அல்ல; ஆனால் இது எங்களுக்கும், உங்களுக்கும் ஒரு சாட்சியாகவே கட்டப்பட்டிருக்கிறது என்று பதிலளிப்போம்’ என்று சொல்லி இதைக் கட்டினோம்.
Mondottuk azért: Ha így szólanának maholnap nékünk vagy a mi nemzetségeinknek, ezt mondjuk majd: Lássátok az Úr oltárának mássát, a melyet a mi atyáink készítettek, nem egészen égőáldozatra, sem nem véres áldozatra, hanem hogy bizonyság legyen mi közöttünk és ti közöttetek!
29 “எங்கள் இறைவனாகிய யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தின் முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறு பலிபீடத்தைக் கட்டுவதனால், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வதும் அவரைவிட்டு விலகுவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக. இதில் தகன காணிக்கைகளையும், தானியக் காணிக்கைகளையும், மற்றப் பலிகளையும் செலுத்துவதும் எமக்குத் தூரமாயிருப்பதாக என்போம்” என்றார்கள்.
Távol legyen tőlünk, hogy pártot üssünk az Úr ellen, és elforduljunk immár az Úrtól, építvén oltárt égőáldozatra, ételáldozatra és véres áldozatra az Úrnak, a mi Istenünknek oltárán kivül, a mely az ő sátora előtt van!
30 அப்பொழுது ஆசாரியன் பினெகாசும், சமுதாயத் தலைவர்களும், இஸ்ரயேல் கோத்திரத் தலைவர்களும் ரூபனியர், காத்தியர், மனாசேயினர் ஆகியோர் கூறியதைக் கேட்டதும், மனதில் திருப்தியடைந்தார்கள்.
Hallván pedig Fineás, a pap és a gyülekezetnek fejedelmei és Izráel ezereinek fejei, a kik vele valának, a beszédeket, a melyeket szólottak vala a Rúben fiai, a Gád fiai és a Manassé fiai; tetszésre találtak vala előttök.
31 அப்பொழுது ஆசாரியன் எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனியரிடமும், காத்தியரிடமும் மனாசேயினரிடமும், “நீங்கள் இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தபடியால், யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை நாங்கள் இன்று அறிந்திருக்கிறோம். இப்பொழுது இஸ்ரயேலரை யெகோவாவின் கரத்திலிருந்து தப்புவித்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.
És monda Fineás, az Eleázár pap fia a Rúben fiainak, Gád fiainak és a Manassé fiainak: Ma tudtuk meg, hogy köztünk van az Úr, mivelhogy nem vétkeztetek e vétekkel az Úr ellen. Most megszabadítottátok Izráel fiait az Úr kezéből.
32 எலெயாசாரின் மகன் ஆசாரியன் பினெகாசும் தலைவர்களும் ரூபனியரையும், காத்தியரையும் சந்தித்துவிட்டு கீலேயாத்திலிருந்து கானானுக்குத் திரும்பிவந்து இஸ்ரயேலரிடம் நடந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்.
Visszatére azért Fineás, az Eleázár pap fia és a fejedelmek a Rúben fiaitól, a Gád fiaitól a Gileád földéről a Kanaán földére Izráelnek fiaihoz, és megbeszélék nékik e dolgot.
33 அவர்கள் கூறியதைக் கேட்டு இஸ்ரயேலர் சந்தோஷப்பட்டு இறைவனுக்குத் துதி செலுத்தினார்கள். ரூபனியரும், காத்தியரும் வாழ்ந்த நாட்டிற்கு விரோதமாகப் படையெடுத்து, அதை அழிப்பதைப்பற்றி பின் ஒருபோதும் அவர்கள் பேசியதில்லை.
És tetszésre talált e dolog Izráel fiai előtt is, és áldák az Istent Izráel fiai, és nem mondák, hogy hadakozni menjenek fel ellenök, hogy elveszessék a földet, a melyben lakoznak a Rúben fiai és a Gád fiai.
34 அப்பொழுது ரூபனியரும், காத்தியரும் அந்த பலிபீடத்திற்கு, “யெகோவாவே இறைவன் என்பதற்கு நமக்கு ஒரு சாட்சி” என்று பெயரிட்டார்கள்.
Az oltárt pedig így nevezék Rúben fiai és a Gád fiai: „Bizonyság ez közöttünk, hogy az Úr az Isten.”

< யோசுவா 22 >