< யோசுவா 19 >

1 இரண்டாவது சீட்டு வம்சம் வம்சமாக சிமியோன் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளே அமைந்தது.
இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு, யூதா கோத்திரத்தார்களுடைய பங்குகளின் நடுவே இருக்கிறது.
2 அப்பட்டணங்களாவன: பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா,
அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
3 ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம்,
ஆசார்சூவால், பாலா, ஏத்சேம்,
4 எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,
எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,
5 சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
6 பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும்.
பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பதிமூன்று.
7 மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும்,
மேலும் ஆயீன், ரிம்மோன். ஏத்தேர், ஆசான் என்னும் நான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
8 அதோடு பாலாத்பெயேர் வரையுள்ள இந்தப் பட்டணங்களைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களும் ஆகும். ராமாத் நெகேப் பாலைவனத்திலுள்ளது. வம்சம் வம்சமாகச் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை இவையே.
இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கே இருக்கிற ராமாத்வரை இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு.
9 யூதாவுக்கு அளிக்கப்பட்ட பங்கு அவர்களுக்கு தேவையானதைவிட அதிகமாயிருந்தது. ஆதலால் சிமியோனின் சொத்துரிமை யூதாவின் பங்கில் இருந்து கொடுக்கப்பட்டது. எனவே யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளேயே சிமியோனியருக்கு சொத்துரிமைப் பங்கு அளிக்கப்பட்டது.
சிமியோன் கோத்திரத்தார்களுடைய பங்கு யூதா கோத்திரத்தார்களின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா கோத்திரத்தார்களின் பங்கு அவர்களுக்கு மிகுதியாக இருந்தபடியால், சிமியோன் கோத்திரத்தார் அவர்களுடைய பங்குகளின் நடுவிலே பங்குகளைப் பெற்றார்கள்.
10 மூன்றாவது சீட்டு வம்சம் வம்சமாக செபுலோன் கோத்திரத்திற்கு விழுந்தது: அவர்களுடைய சொத்துரிமையின் எல்லை சாரீத் வரை சென்றது.
௧0மூன்றாம் சீட்டு செபுலோன் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சொந்தமான பங்குவீதம் சாரீத் வரை உள்ளது.
11 மேற்கே செல்கையில் அது மாராலா என்னும் இடத்திற்குச் சென்று பின் தாபெஷெத்தை தொட்டுச்சென்று யொக்கினேயாமுக்கு அருகே உள்ள கணவாய்வரை நீண்டிருந்தது.
௧௧அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்திற்கு வந்து, யொக்னியாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போகும்.
12 இந்த எல்லை சாரீத் பட்டணத்திலிருந்து கிழக்குப்பக்கமாகத் திரும்பி, சூரியன் உதிக்கும் திசை நோக்கி கிஸ்லோத் தாபோரின் நிலப்பரப்புக்குச் சென்றது. அங்கிருந்து தாபேராத்துக்கும் யப்பியா வரைக்கும் மேலே ஏறிச் சென்றது.
௧௨சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபராத்திற்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
13 தொடர்ந்து கிழக்கே காத் ஏபேர், ஏத் காத்சீன் வரை சென்று பின் ரிம்மோன் வழியாக நேயாவுக்குத் திரும்பியது.
௧௩அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே காத்தேப்பேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போகும்.
14 அவ்விடத்தின் எல்லை வடக்கே அன்னதோனுக்குச் சென்று இப்தாயேலின் பள்ளத்தாக்கிலே முடிவடைந்தது.
௧௪அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
15 காத்தா, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லெகேம் ஆகிய பன்னிரண்டு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இதனுள் அடங்கியிருந்தன.
௧௫காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
16 இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களுமே செபுலோனுக்கு வம்சம் வம்சமாகக் கிடைத்த சொத்துரிமை.
௧௬செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.
17 நான்காவது சீட்டு வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்கு விழுந்தது.
௧௭நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
18 அவர்களுடைய நிலப்பரப்பில் யெஸ்ரயேல், கெசுலோத், சூனேம்,
௧௮இசக்கார் கோத்திரத்தார்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
19 அபிராயீம், சீயோன், அனாகராத்,
௧௯அப்பிராயீம், சீகோன் அனாகராத்,
20 ராபித், கிசோயோன், அபெத்ஸ்,
௨0ராப்பித், கிஷியோன், அபெத்ஸ்,
21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத் பாஸ்செஸ் ஆகிய பட்டணங்கள் உள்ளடங்கியிருந்தன.
௨௧ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
22 அந்த எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேஷ் பட்டணங்களைத் தொட்டுச்சென்று யோர்தான் நதியில் முடிந்தது. அங்கே பதினாறு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
௨௨அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உண்டு.
23 இப்பட்டணங்களும் இவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
௨௩இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.
24 ஐந்தாம் சீட்டு, வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்திற்கு விழுந்தது.
௨௪ஐந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
25 அவர்களுடைய நிலப்பரப்பு, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
௨௫அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
26 அலம்மேலெக், ஆமாத், மிஷால், ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது. மேற்கு எல்லையானது கர்மேலையும், சீகோர் லிப்னாத்தையும் தொட்டு,
௨௬அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
27 பின்பு எல்லை கிழக்கே பெத் தாகோனை நோக்கித் திரும்பி செபுலோன், இப்தாயேல் பள்ளத்தாக்கைத் தொட்டுச்சென்று வடக்கே பெத் எமேக் நெகியேல் வரை சென்றது. இந்த எல்லையில் இடப்புறமாய் காபூல் இருந்தது.
௨௭கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கே இருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்கிற்கும் பெத்தேமேக்கிற்கும் நேகியெலிற்கும் வந்து, இடதுபுறமான காபூலிற்கும்,
28 அதோடு இது அப்தோன், ரேகோப், அம்மோன், கானா மற்றும் பெரிய சீதோன்வரை சென்றது.
௨௮எபிரோனிற்கும், ரேகோபிற்கும், அம்மோனிற்கும், கானாவிற்கும், பெரிய சீதோன்வரைக்கும் போகும்.
29 தொடர்ந்து இந்த எல்லை ராமாவை நோக்கி, பின் திரும்பி அரணிடப்பட்ட நகரான தீருவுக்குச் சென்றது. அங்கிருந்து ஒசாவை நோக்கித் திரும்பி அக்சீப்,
௨௯அப்புறம் அந்த எல்லை ராமாவிற்கும் தீரு என்னும் பாதுகாப்பான பட்டணம்வரைத் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவிற்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்தில் உள்ள மத்திய தரைக் கடலிலே முடியும்.
30 உம்மா, ஆப்பெக், ரேகோப் ஆகிய பிரதேசத்தில் உள்ள கடலில் முடிவுற்றது. அங்கே இருபத்திரெண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
௩0உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
31 இந்நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சொத்துரிமை.
௩௧இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும்.
32 ஆறாவது சீட்டு வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்கு விழுந்தது.
௩௨ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
33 அவர்களின் எல்லை ஏலேப்பிலும், சானானிமின் பெரிய மரத்தடியிலுமிருந்து ஆதமி நெகேப், யாப்னியேலைக் கடந்து லக்கூமை அடைந்து, யோர்தானில் முடிவடைந்தது.
௩௩நப்தலி கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்வரைக்கும் போய், யோர்தானில் முடியும்.
34 எல்லை மேற்கே சென்று அஸ்னோத் தாபோர் வழியாகப்போய் உக்கொத்தில் முடிவடைந்தது. தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், கிழக்கே யோர்தானையும் தொட்டுச் சென்றது.
௩௪அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
35 அங்கிருந்த அரணிடப்பட்ட பட்டணங்களாவன: சித்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
௩௫பாதுகாப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
36 ஆதமா, ராமா, ஆத்சோர்,
௩௬ஆதமா, ராமா, ஆத்சோர்,
37 கேதேஸ், எத்ரேயி, என் ஆத்சோர்
௩௭கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
38 ஈரோன், மிக்தாலேல், ஒரேம், பெத் ஆனாத், பெத்ஷிமேஷ் ஆகியன. அங்கே பத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
௩௮ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெத்தானாத் பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்பட பத்தொன்பது.
39 இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
௩௯இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
40 ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது.
௪0ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
41 அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை: சோரா, எஸ்தாவோல், இர்ஷெமேஸ்,
௪௧அவர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
42 சாலாபீன், ஆயலோன், இத்லா,
௪௨சாலாபீன், ஆயலோன், யெத்லா,
43 ஏலோன், திம்னா, எக்ரோன்,
௪௩ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
௪௪எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
45 யெகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
௪௫யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
46 மேயார்கோன், ராக்கோன் யோப்பாவுக்கு எதிரே உள்ள பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
௪௬மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யோப்பாவுக்கு எதிரான எல்லையுமே.
47 ஆனால் தாண் கோத்திரத்தாருக்கோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பைத் தமக்குரியதாக்கிக்கொள்வது கடினமாயிருந்தது. எனவே லெஷேம் என்னும் இடத்திற்குச் சென்று அதைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் குடிகளை தம் வாளுக்கு இரையாக்கி, அதில் தாங்கள் குடியேறினார்கள். அவர்கள் லெஷேமில் குடியேறி தங்கள் முற்பிதாவின் பெயரின்படி அதற்குத் தாண் என்று பெயரிட்டார்கள்.
௪௭தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய முற்பிதாவாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
௪௮இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
49 இவ்வாறு நிலம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சொத்துரிமையாக வழங்கப்பட்டபின், இஸ்ரயேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவுக்குத் தங்கள் மத்தியில் சொத்துரிமையைக்
௪௯தேசத்தை அதின் எல்லைகளின்படி சொந்தமாகப் பங்கிட்டு முடித்தபோது, இஸ்ரவேல் மக்கள் நூனின் மகனாகிய யோசுவாவிற்குத் தங்கள் நடுவிலே ஒரு பங்கைக் கொடுத்தார்கள்.
50 யெகோவாவின் கட்டளைப்படி கொடுத்தார்கள். அவன் கேட்ட திம்னாத் சேராக் என்ற பட்டணத்தை அவனுக்குக் கொடுத்தார்கள். இது எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. யோசுவா அவ்விடத்தில் நகரத்தைக் கட்டி அங்கே குடியேறினான்.
௫0எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் யெகோவாவுடைய கட்டளையின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான்.
51 இவ்வாறு இந்த நிலப்பரப்புகளை ஆசாரியனான எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, இஸ்ரயேல் கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீட்டுப்போட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் சீலோவின் சபைக்கூடார வாசலில் இவ்வாறு நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். இவ்வாறு அவர்கள் நாட்டைப் பங்கிட்டு முடித்தார்கள்.
௫௧ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் இஸ்ரவேல் மக்களின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த பங்குகள் இவைகளே; இவ்விதமாக அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

< யோசுவா 19 >