< யோசுவா 16 >

1 யோசேப்பின் பங்கு, எரிகோவின் நீர் நிலைகளுக்குக் கிழக்கே, யோர்தானிலிருந்து எரிகோவுக்கு அப்பால், பாலைவன வழியாகச் சென்று பெத்தேல் மலைநாட்டை அடைந்தது.
ਯੂਸੁਫ਼ ਦੀ ਸੰਤਾਨ ਦਾ ਹਿੱਸਾ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਪਿਆ ਕਿ ਉਹ ਯਰਦਨ ਤੋਂ ਯਰੀਹੋ ਕੋਲ ਅਰਥਾਤ ਯਰੀਹੋ ਦੇ ਪਾਣੀਆਂ ਕੋਲੋਂ ਪੂਰਬ ਵੱਲ ਉਜਾੜ ਦੇ ਵਿੱਚ ਦੀ ਯਰੀਹੋ ਤੋਂ ਬੈਤਏਲ ਦੀ ਪਹਾੜੀ ਤੱਕ ਚੜ੍ਹਦਾ ਹੈ।
2 பெத்தேல் என்னும் லூஸில் இருந்து அதரோத்திலுள்ள அர்கியின் பிரதேசத்தைக் கடந்து,
ਫਿਰ ਬੈਤਏਲ ਤੋਂ ਲੂਜ਼ ਨੂੰ ਗਈ ਅਤੇ ਅਰਕੀਆਂ ਦੀ ਹੱਦ ਲੰਘ ਕੇ ਅਟਾਰੋਥ ਨੂੰ ਗਈ।
3 பின் மேற்குத் திசையில் யப்லெத்திரின் பிரதேசத்தை நோக்கிக் கீழ் இறங்கி, அப்பிரதேசத்திலுள்ள கீழ் பெத் ஓரோன், கேசேர்வரை சென்று அங்கிருந்து கடலில் முடிவடைந்தது.
ਫਿਰ ਲਹਿੰਦੇ ਵੱਲ ਯਫਲੇਤੀਆਂ ਦੀ ਹੱਦ ਕੋਲੋਂ ਹੇਠਲੇ ਬੈਤ-ਹੋਰੋਨ ਦੀ ਹੱਦ ਅਤੇ ਗਜ਼ਰ ਤੱਕ ਉਤਰੀ ਅਤੇ ਉਹ ਦਾ ਫੈਲਾਓ ਸਮੁੰਦਰ ਤੱਕ ਸੀ।
4 இவ்வாறு யோசேப்பின் மகன்களான மனாசேயும், எப்பிராயீமும் தங்கள் சொத்துரிமையைப் பெற்றுக்கொண்டார்கள்.
ਉਸ ਤੋਂ ਬਾਅਦ ਯੂਸੁਫ਼ ਦੀ ਅੰਸ ਨੇ ਅਰਥਾਤ ਮਨੱਸ਼ਹ ਅਤੇ ਇਫ਼ਰਾਈਮ ਨੇ ਆਪਣੀ ਇਹ ਮਿਲਖ਼ ਲੈ ਲਈ।
5 எப்பிராயீம் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாகக் கொடுக்கப்பட்ட பிரதேசமாவது: அவர்களுடைய சொத்துரிமை நிலத்தின் எல்லை, கிழக்கே அதரோத் அதாரில் ஆரம்பித்து, மேல் பெத் ஓரோன் வழியாக,
ਇਫ਼ਰਾਈਮ ਦੀ ਅੰਸ ਦੀ ਹੱਦ ਉਹਨਾਂ ਦੇ ਘਰਾਣਿਆਂ ਅਨੁਸਾਰ ਇਹ ਸੀ। ਉਹਨਾਂ ਦੀ ਮਿਲਖ਼ ਦੀ ਹੱਦ ਚੜ੍ਹਦੇ ਪਾਸੇ ਅਟਾਰੋਥ ਅੱਦਾਰ ਤੋਂ ਉੱਪਰਲੇ ਬੈਤ-ਹੋਰੋਨ ਤੱਕ ਸੀ।
6 அங்கிருந்து மத்திய தரைக்கடலுக்குச் சென்றது. வடக்கிலுள்ள மிக்மேத்தா என்னும் இடத்தில் இருந்து, தானாத் சீலோவுக்குக் கிழக்கே வளைந்துசென்று அதனை கடந்து கிழக்கிலுள்ள யநோகாவைச் சென்றடைந்தது.
ਅਤੇ ਉਹ ਹੱਦ ਸਮੁੰਦਰ ਵੱਲ ਮਿਕਮਥਾਥ ਦੇ ਉੱਤਰ ਨੂੰ ਗਈ ਅਤੇ ਪੂਰਬ ਵੱਲ ਤਅਨਥ ਸ਼ੀਲੋਹ ਨੂੰ ਮੁੜੀ ਅਤੇ ਯਾਨੋਹਾਹ ਦੀ ਪੂਰਬ ਵੱਲ ਉਹ ਦੇ ਨਾਲ-ਨਾਲ ਦੀ ਲੰਘੀ।
7 பின் யநோகாவிலிருந்து கீழ்நோக்கிச்சென்று, அதரோத்தையும் நாராவையும் கடந்து எரிகோவை நெருங்கி யோர்தான் நதியில் முடிந்தது.
ਅਤੇ ਯਾਨੋਹਾਹ ਤੋਂ ਅਟਾਰੋਥ ਅਤੇ ਨਆਰਾਥ ਵੱਲ ਉਤਰੀ ਅਤੇ ਯਰੀਹੋ ਨੂੰ ਪਹੁੰਚ ਕੇ ਯਰਦਨ ਨੂੰ ਗਈ।
8 தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.
ਅਤੇ ਉਹ ਹੱਦ ਪੱਛਮ ਵੱਲ ਤੱਪੂਆਹ ਤੋਂ ਕਾਨਾਹ ਦੀ ਵਾਦੀ ਨੂੰ ਗਈ ਅਤੇ ਉਸ ਦਾ ਫੈਲਾਓ ਸਮੁੰਦਰ ਤੱਕ ਸੀ। ਇਫ਼ਰਾਈਮ ਦੀ ਅੰਸ ਦੇ ਗੋਤ ਦੀ ਮਿਲਖ਼ ਉਹਨਾਂ ਦੇ ਘਰਾਣਿਆਂ ਅਨੁਸਾਰ ਇਹ ਸੀ।
9 இதைவிட மனாசேயின் கோத்திரத்தாருக்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலத்தில் எப்பிராயீமியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களும் இதற்குள் அடங்கியிருந்தன.
ਇਫ਼ਰਾਈਮ ਦੀ ਅੰਸ ਲਈ ਮਨੱਸ਼ਹ ਦੀ ਅੰਸ ਦੀ ਮਿਲਖ਼ ਵਿੱਚ ਵੱਖੋ-ਵੱਖ ਸ਼ਹਿਰ ਸਨ ਅਰਥਾਤ ਸਾਰੇ ਸ਼ਹਿਰ ਅਤੇ ਉਹਨਾਂ ਦੇ ਪਿੰਡ।
10 ஆனால் எப்பிராயீமியர் கேசேர் பகுதியில் வாழ்ந்த கானானியரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. கானானியரும் எப்பிராயீம் மக்கள் மத்தியில் இன்றுவரை வாழ்கின்றார்கள். அவர்கள் கட்டாய வேலைசெய்ய வேண்டியிருந்தது.
੧੦ਅਤੇ ਉਹਨਾਂ ਨੇ ਕਨਾਨੀਆਂ ਨੂੰ ਜਿਹੜੇ ਗਜ਼ਰ ਵਿੱਚ ਵੱਸਦੇ ਸਨ ਨਾ ਕੱਢਿਆ ਪਰ ਉਹ ਕਨਾਨੀ ਅੱਜ ਦੇ ਦਿਨ ਤੱਕ ਇਫ਼ਰਾਈਮੀਆਂ ਦੇ ਵਿੱਚ ਵੱਸਦੇ ਹਨ ਅਤੇ ਉਹ ਬਿਨ੍ਹਾਂ ਮਜ਼ਦੂਰੀ ਦੇ ਕੰਮ ਕਰਨ ਵਾਲੇ ਗੁਲਾਮ ਸਨ।

< யோசுவா 16 >