< யோசுவா 12 >
1 இஸ்ரயேலரால் முறியடிக்கப்பட்ட நாட்டின் அரசர்கள் இவர்களே: யோர்தானுக்குக் கிழக்கே, அர்னோன் கணவாய் தொடங்கி, அரபாவின் கிழக்குப்பகுதி உட்பட எர்மோன் மலைவரையுள்ள அரசர்களுடைய நிலப்பகுதியை இஸ்ரயேலர் கைப்பற்றினர்.
以色列人在約旦河外向日出之地擊殺二王,得他們的地,就是從亞嫩谷直到黑門山,並東邊的全亞拉巴之地。
2 எமோரிய அரசன் சீகோன் எஸ்போனில் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி அர்னோன் கணவாயின் ஓரத்தில் உள்ள அரோயேர் தொடங்கி, அர்னோன் கணவாயின் நடுப்பகுதி வழியாக யாப்போக் ஆறுவரை இருந்தது. யாப்போக் ஆறு அம்மோனியரின் எல்லையாயிருந்தது. இது கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.
這二王,有住希實本、亞摩利人的王西宏。他所管之地是從亞嫩谷邊的亞羅珥和谷中的城,並基列一半,直到亞捫人的境界,雅博河
3 அதோடு கிழக்கு அரபாவையும் இவனே ஆட்சிசெய்தான். அந்த நாடு கலிலேயாக்கடலிலிருந்து உப்புக்கடல்வரை போய் பெத்யெசிமோத் பட்டணம் வரையும் இருந்தது. பின்பு அது தெற்கே பிஸ்கா மலைச்சரிவுகளையும் உள்ளடக்கியதாயிருந்தது.
與約旦河東邊的亞拉巴,直到基尼烈海,又到亞拉巴的海,就是鹽海,通伯‧耶西末的路,以及南方,直到毗斯迦的山根。
4 பாசானின் அரசனாகிய ஓகு ஆட்சி செய்த பகுதியையும் இஸ்ரயேலர் கைப்பற்றினர். அவன் அஸ்தரோத், எத்ரே ஆகிய நிலப்பகுதி எல்லைகளை ஆட்சி செய்த ரெப்பாயீமியரைச் சேர்ந்த கடைசி அரசர்களில் ஒருவன்.
又有巴珊王噩。他是利乏音人所剩下的,住在亞斯他錄和以得來。
5 அவன் எர்மோன் மலைநாடு, சல்கா பிரதேசம், மற்றும் பாசான் நாடு முழுவதையும் ஆட்சிசெய்தான். கேசூரியர், மாகாத்தியர் ஆகியோரின் பிரதேசங்களை எல்லையாகக்கொண்ட இடங்களையும் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியதாயிருந்தது. தெற்கே எஸ்போனின் அரசனாகிய சீகோனின் எல்லைவரை இருந்தது. சீகோன் எஸ்போனின் அரசனாயிருந்தான்.
他所管之地是黑門山、撒迦、巴珊全地,直到基述人和瑪迦人的境界,並基列一半,直到希實本王西宏的境界。
6 யெகோவாவின் அடியானாகிய மோசேயும் இஸ்ரயேலரும் இவ்விரு அரசர்களையும் வெற்றிகொண்டிருந்தார்கள். அத்துடன் யெகோவாவின் அடியானாகிய மோசே, கைப்பற்றப்பட்ட அவர்களுடைய நாட்டை இஸ்ரயேலரின் கோத்திரத்தாராகிய ரூபனியர், காத்தியர், மனாசே கோத்திரத்தின் அரைப்பகுதியினர் ஆகியோருக்குச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான்.
這二王是耶和華僕人摩西和以色列人所擊殺的;耶和華僕人摩西將他們的地賜給呂便人、迦得人,和瑪拿西半支派的人為業。
7 யோர்தானுக்கு மேற்கேயுள்ள பகுதியில் யோசுவாவும் இஸ்ரயேலரும் வெற்றிகொண்ட நாட்டின் அரசர்களான இவர்கள் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காத் முதல் சேயீரை நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலைவரையுள்ள பகுதியில் ஆட்சிசெய்தார்கள். இவர்களது நாடுகளை யோசுவா கைப்பற்றி, இஸ்ரயேலரின் கோத்திரங்களுக்கு ஏற்ப அவற்றைப் பிரித்து சொத்துரிமை நாடாக ஒவ்வொரு கோத்திரங்களுக்கும் கொடுத்தான்.
約書亞和以色列人在約旦河西擊殺了諸王。他們的地是從黎巴嫩平原的巴力‧迦得,直到上西珥的哈拉山。約書亞就將那地按着以色列支派的宗族分給他們為業,
8 அப்பகுதிகள் நடுவிலுள்ள மலை நாடுகள், மேற்கு மலையடிவாரப்பகுதிகள், அரபா, மலைச்சரிவுகள், யூதாவின் வறண்ட நிலம், நெகேவ் வனாந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. அவை முன்னர் ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களது நாடுகளாயிருந்தன. இவர்களே யோசுவா வெற்றிகொண்ட அரசர்கள்:
就是赫人、亞摩利人、迦南人、比利洗人、希未人、耶布斯人的山地、高原亞拉巴、山坡、曠野,和南地。
9 எரிகோவின் அரசன் ஒருவன், பெத்தேலுக்கு அருகேயிருந்த ஆயியின் அரசன் ஒருவன்,
他們的王:一個是耶利哥王,一個是靠近伯特利的艾城王,
10 எருசலேமின் அரசன் ஒருவன், எப்ரோனின் அரசன் ஒருவன்,
一個是耶路撒冷王,一個是希伯崙王,
11 யர்மூத்தின் அரசன் ஒருவன், லாகீசின் அரசன் ஒருவன்,
一個是耶末王,一個是拉吉王,
12 எக்லோனின் அரசன் ஒருவன், கேசேரின் அரசன் ஒருவன்,
一個是伊磯倫王,一個是基色王,
13 தெபீரின் அரசன் ஒருவன், கெதேரின் அரசன் ஒருவன்,
一個是底璧王,一個是基德王,
14 ஓர்மாவின் அரசன் ஒருவன், ஆராதின் அரசன் ஒருவன்,
一個是何珥瑪王,一個是亞拉得王,
15 லிப்னாவின் அரசன் ஒருவன், அதுல்லாமின் அரசன் ஒருவன்,
一個是立拿王,一個是亞杜蘭王,
16 மக்கெதாவின் அரசன் ஒருவன், பெத்தேலின் அரசன் ஒருவன்,
一個是瑪基大王,一個是伯特利王,
17 தப்புவாவின் அரசன் ஒருவன், எப்பேரின் அரசன் ஒருவன்
一個是他普亞王,一個是希弗王,
18 ஆப்பெக்கின் அரசன் ஒருவன், லசரோனின் அரசன் ஒருவன்,
一個是亞弗王,一個是拉沙崙王,
19 மாதோனின் அரசன் ஒருவன், ஆத்சோரின் அரசன் ஒருவன்,
一個是瑪頓王,一個是夏瑣王,
20 சிம்ரோன் மோரோனின் அரசன் ஒருவன், அக்சாபின் அரசன் ஒருவன்,
一個是伸崙‧米崙王,一個是押煞王,
21 தானாகின் அரசன் ஒருவன், மெகிதோவின் அரசன் ஒருவன்,
一個是他納王,一個是米吉多王,
22 கேதேசின் அரசன் ஒருவன், கர்மேலிலுள்ள யொக்னியாமின் அரசன் ஒருவன்,
一個是基低斯王,一個是靠近迦密的約念王,
23 நாபோத்தோரிலுள்ள தோரின் அரசன் ஒருவன், கில்காலில் உள்ள கோயிமின் அரசன் ஒருவன்,
一個是多珥山岡的多珥王,一個是吉甲的戈印王,
24 திர்சாவின் அரசன் ஒருவன். இவ்வாறாக, மொத்தம் முப்பத்தொரு அரசர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
一個是得撒王;共計三十一個王。