< யோனா 2 >
1 யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான்.
És könyörge Jónás az Úrnak, az ő Istenének a halnak gyomrából.
2 அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol )
És mondá: Nyomorúságomban az Úrhoz kiálték és meghallgata engem; a Seol torkából sikolték és meghallád az én szómat. (Sheol )
3 நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; உமது அலைகளும், அலையின் நுரைகளும் என்மேல் புரண்டன.
Mert mélységbe vetettél engem, tenger közepébe, és körülfogott engem a víz; örvényeid és habjaid mind átmentek rajtam!
4 ‘உமது முன்னிலையிலிருந்து நான் துரத்தப்பட்டேன். இருந்தாலும், நான் திரும்பவும் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன்.
És én mondám: Elvettettem a te szemeid elől; vajha láthatnám még szentséged templomát!
5 என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.
Körülvettek engem a vizek lelkemig, mély ár kerített be engem, hinár szövődött fejemre.
6 மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
A hegyek alapjáig sülyedtem alá; bezáródtak a föld závárjai felettem örökre! Mindazáltal kiemelted éltemet a mulásból, oh Uram, Istenem!
7 “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் நான் உம்மையே நினைத்தேன், என் மன்றாட்டு மேலெழுந்து உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.
Mikor elcsüggedt bennem az én lelkem, megemlékeztem az Úrról, és bejutott az én könyörgésem te hozzád, a te szentséged templomába.
8 “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.
A kik hiú bálványokra ügyelnek, elhagyják boldogságukat;
9 ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். ‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’” என்றான்.
De én hálaadó szóval áldozom néked; megadom, a mit fogadtam. Az Úré a szabadítás.
10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.
És szóla az Úr a halnak, és kiveté Jónást a szárazra.