< யோவான் 8 >
1 இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
ப்ரத்யூஷே யீஸு²: பநர்மந்தி³ரம் ஆக³ச்ச²த்
2 அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார்.
தத: ஸர்வ்வேஷு லோகேஷு தஸ்ய ஸமீப ஆக³தேஷு ஸ உபவிஸ்²ய தாந் உபதே³ஷ்டும் ஆரப⁴த|
3 அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள்.
ததா³ அத்⁴யாபகா: பி²ரூஸி²நஞ்ச வ்யபி⁴சாரகர்ம்மணி த்⁴ரு’தம்’ ஸ்த்ரியமேகாம் ஆநிய ஸர்வ்வேஷாம்’ மத்⁴யே ஸ்தா²பயித்வா வ்யாஹரந்
4 அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள்.
ஹே கு³ரோ யோஷிதம் இமாம்’ வ்யபி⁴சாரகர்ம்ம குர்வ்வாணாம்’ லோகா த்⁴ரு’தவந்த: |
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள்.
ஏதாத்³ரு’ஸ²லோகா: பாஷாணாகா⁴தேந ஹந்தவ்யா இதி விதி⁴ர்மூஸாவ்யவஸ்தா²க்³ரந்தே² லிகி²தோஸ்தி கிந்து ப⁴வாந் கிமாதி³ஸ²தி?
6 இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார்.
தே தமபவதி³தும்’ பரீக்ஷாபி⁴ப்ராயேண வாக்யமித³ம் அப்ரு’ச்ச²ந் கிந்து ஸ ப்ரஹ்வீபூ⁴ய பூ⁴மாவங்க³ல்யா லேகி²தும் ஆரப⁴த|
7 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.
ததஸ்தை: புந: புந: ப்ரு’ஷ்ட உத்தா²ய கதி²தவாந் யுஷ்மாகம்’ மத்⁴யே யோ ஜநோ நிரபராதீ⁴ ஸஏவ ப்ரத²மம் ஏநாம்’ பாஷாணேநாஹந்து|
8 இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
பஸ்²சாத் ஸ புநஸ்²ச ப்ரஹ்வீபூ⁴ய பூ⁴மௌ லேகி²தும் ஆரப⁴த|
9 அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள்.
தாம்’ கத²ம்’ ஸ்²ருத்வா தே ஸ்வஸ்வமநஸி ப்ரபோ³த⁴ம்’ ப்ராப்ய ஜ்யேஷ்டா²நுக்ரமம்’ ஏகைகஸ²: ஸர்வ்வே ப³ஹிரக³ச்ச²ந் ததோ யீஸு²ரேகாகீ தயக்த்தோப⁴வத் மத்⁴யஸ்தா²நே த³ண்டா³யமாநா ஸா யோஷா ச ஸ்தி²தா|
10 இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
தத்பஸ்²சாத்³ யீஸு²ருத்தா²ய தாம்’ வநிதாம்’ விநா கமப்யபரம்’ ந விலோக்ய ப்ரு’ஷ்டவாந் ஹே வாமே தவாபவாத³கா: குத்ர? கோபி த்வாம்’ கிம்’ ந த³ண்ட³யதி?
11 அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
ஸாவத³த் ஹே மஹேச்ச² கோபி ந ததா³ யீஸு²ரவோசத் நாஹமபி த³ண்ட³யாமி யாஹி புந: பாபம்’ மாகார்ஷீ: |
12 மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
ததோ யீஸு²: புநரபி லோகேப்⁴ய இத்த²ம்’ கத²யிதும் ஆரப⁴த ஜக³தோஹம்’ ஜ்யோதி: ஸ்வரூபோ ய: கஸ்²சிந் மத்பஸ்²சாத³ க³ச்ச²தி ஸ திமிரே ந ப்⁴ரமித்வா ஜீவநரூபாம்’ தீ³ப்திம்’ ப்ராப்ஸ்யதி|
13 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
தத: பி²ரூஸி²நோ(அ)வாதி³ஷுஸ்த்வம்’ ஸ்வார்தே² ஸ்வயம்’ ஸாக்ஷ்யம்’ த³தா³ஸி தஸ்மாத் தவ ஸாக்ஷ்யம்’ க்³ராஹ்யம்’ ந ப⁴வதி|
14 இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
ததா³ யீஸு²: ப்ரத்யுதி³தவாந் யத்³யபி ஸ்வார்தே²(அ)ஹம்’ ஸ்வயம்’ ஸாக்ஷ்யம்’ த³தா³மி ததா²பி மத் ஸாக்ஷ்யம்’ க்³ராஹ்யம்’ யஸ்மாத்³ அஹம்’ குத ஆக³தோஸ்மி க்வ யாமி ச தத³ஹம்’ ஜாநாமி கிந்து குத ஆக³தோஸ்மி குத்ர க³ச்சா²மி ச தத்³ யூயம்’ ந ஜாநீத²|
15 நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை.
யூயம்’ லௌகிகம்’ விசாரயத² நாஹம்’ கிமபி விசாரயாமி|
16 நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார்.
கிந்து யதி³ விசாரயாமி தர்ஹி மம விசாரோ க்³ரஹீதவ்யோ யதோஹம் ஏகாகீ நாஸ்மி ப்ரேரயிதா பிதா மயா ஸஹ வித்³யதே|
17 இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது.
த்³வயோ ர்ஜநயோ: ஸாக்ஷ்யம்’ க்³ரஹணீயம்’ ப⁴வதீதி யுஷ்மாகம்’ வ்யவஸ்தா²க்³ரந்தே² லிகி²தமஸ்தி|
18 நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
அஹம்’ ஸ்வார்தே² ஸ்வயம்’ ஸாக்ஷித்வம்’ த³தா³மி யஸ்²ச மம தாதோ மாம்’ ப்ரேரிதவாந் ஸோபி மத³ர்தே² ஸாக்ஷ்யம்’ த³தா³தி|
19 அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார்.
ததா³ தே(அ)ப்ரு’ச்ச²ந் தவ தாத: குத்ர? ததோ யீஸு²: ப்ரத்யவாதீ³த்³ யூயம்’ மாம்’ ந ஜாநீத² மத்பிதரஞ்ச ந ஜாநீத² யதி³ மாம் அக்ஷாஸ்யத தர்ஹி மம தாதமப்யக்ஷாஸ்யத|
20 இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
யீஸு² ர்மந்தி³ர உபதி³ஸ்²ய ப⁴ண்டா³கா³ரே கதா² ஏதா அகத²யத் ததா²பி தம்’ ப்ரதி கோபி கரம்’ நோத³தோலயத்|
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
தத: பரம்’ யீஸு²: புநருதி³தவாந் அது⁴நாஹம்’ க³ச்சா²மி யூயம்’ மாம்’ க³வேஷயிஷ்யத² கிந்து நிஜை: பாபை ர்மரிஷ்யத² யத் ஸ்தா²நம் அஹம்’ யாஸ்யாமி தத் ஸ்தா²நம் யூயம்’ யாதும்’ ந ஸ²க்ஷ்யத²|
22 அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள்.
ததா³ யிஹூதீ³யா: ப்ராவோசந் கிமயம் ஆத்மகா⁴தம்’ கரிஷ்யதி? யதோ யத் ஸ்தா²நம் அஹம்’ யாஸ்யாமி தத் ஸ்தா²நம் யூயம்’ யாதும்’ ந ஸ²க்ஷ்யத² இதி வாக்யம்’ ப்³ரவீதி|
23 இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல.
ததோ யீஸு²ஸ்தேப்⁴ய: கதி²தவாந் யூயம் அத⁴: ஸ்தா²நீயா லோகா அஹம் ஊர்த்³வ்வஸ்தா²நீய: யூயம் ஏதஜ்ஜக³த்ஸம்ப³ந்தீ⁴யா அஹம் ஏதஜ்ஜக³த்ஸம்ப³ந்தீ⁴யோ ந|
24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார்.
தஸ்மாத் கதி²தவாந் யூயம்’ நிஜை: பாபை ர்மரிஷ்யத² யதோஹம்’ ஸ புமாந் இதி யதி³ ந விஸ்²வஸித² தர்ஹி நிஜை: பாபை ர்மரிஷ்யத²|
25 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி,
ததா³ தே (அ)ப்ரு’ச்ச²ந் கஸ்த்வம்’? ததோ யீஸு²: கதி²தவாந் யுஷ்மாகம்’ ஸந்நிதௌ⁴ யஸ்ய ப்ரஸ்தாவம் ஆ ப்ரத²மாத் கரோமி ஸஏவ புருஷோஹம்’|
26 “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார்.
யுஷ்மாஸு மயா ப³ஹுவாக்யம்’ வக்த்தவ்யம்’ விசாரயிதவ்யஞ்ச கிந்து மத்ப்ரேரயிதா ஸத்யவாதீ³ தஸ்ய ஸமீபே யத³ஹம்’ ஸ்²ருதவாந் ததே³வ ஜக³தே கத²யாமி|
27 இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
கிந்து ஸ ஜநகே வாக்யமித³ம்’ ப்ரோக்த்தவாந் இதி தே நாபு³த்⁴யந்த|
28 எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள்.
ததோ யீஸு²ரகத²யத்³ யதா³ மநுஷ்யபுத்ரம் ஊர்த்³வ்வ உத்தா²பயிஷ்யத² ததா³ஹம்’ ஸ புமாந் கேவல: ஸ்வயம்’ கிமபி கர்ம்ம ந கரோமி கிந்து தாதோ யதா² ஸி²க்ஷயதி தத³நுஸாரேண வாக்யமித³ம்’ வதா³மீதி ச யூயம்’ ஜ்ஞாதும்’ ஸ²க்ஷ்யத²|
29 என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார்.
மத்ப்ரேரயிதா பிதா மாம் ஏகாகிநம்’ ந த்யஜதி ஸ மயா ஸார்த்³த⁴ம்’ திஷ்ட²தி யதோஹம்’ தத³பி⁴மதம்’ கர்ம்ம ஸதா³ கரோமி|
30 அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
ததா³ தஸ்யைதாநி வாக்யாநி ஸ்²ருத்வா ப³ஹுவஸ்தாஸ்மிந் வ்யஸ்²வஸந்|
31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள்.
யே யிஹூதீ³யா வ்யஸ்²வஸந் யீஸு²ஸ்தேப்⁴யோ(அ)கத²யத்
32 அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
மம வாக்யே யதி³ யூயம் ஆஸ்தா²ம்’ குருத² தர்ஹி மம ஸி²ஷ்யா பூ⁴த்வா ஸத்யத்வம்’ ஜ்ஞாஸ்யத² தத: ஸத்யதயா யுஷ்மாகம்’ மோக்ஷோ ப⁴விஷ்யதி|
33 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
ததா³ தே ப்ரத்யவாதி³ஷு: வயம் இப்³ராஹீமோ வம்’ஸ²: கதா³பி கஸ்யாபி தா³ஸா ந ஜாதாஸ்தர்ஹி யுஷ்மாகம்’ முக்த்தி ர்ப⁴விஷ்யதீதி வாக்யம்’ கத²ம்’ ப்³ரவீஷி?
34 அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.
ததா³ யீஸு²: ப்ரத்யவத³த்³ யுஷ்மாநஹம்’ யதா²ர்த²தரம்’ வதா³மி ய: பாபம்’ கரோதி ஸ பாபஸ்ய தா³ஸ: |
35 ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
தா³ஸஸ்²ச நிரந்தரம்’ நிவேஸ²நே ந திஷ்ட²தி கிந்து புத்ரோ நிரந்தரம்’ திஷ்ட²தி| (aiōn )
36 ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.
அத: புத்ரோ யதி³ யுஷ்மாந் மோசயதி தர்ஹி நிதாந்தமேவ முக்த்தா ப⁴விஷ்யத²|
37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை.
யுயம் இப்³ராஹீமோ வம்’ஸ² இத்யஹம்’ ஜாநாமி கிந்து மம கதா² யுஷ்மாகம் அந்த: கரணேஷு ஸ்தா²நம்’ ந ப்ராப்நுவந்தி தஸ்மாத்³தே⁴தோ ர்மாம்’ ஹந்தும் ஈஹத்⁴வே|
38 எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார்.
அஹம்’ ஸ்வபிது: ஸமீபே யத³பஸ்²யம்’ ததே³வ கத²யாமி ததா² யூயமபி ஸ்வபிது: ஸமீபே யத³பஸ்²யத ததே³வ குருத்⁴வே|
39 அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள்.
ததா³ தே ப்ரத்யவோசந் இப்³ராஹீம் அஸ்மாகம்’ பிதா ததோ யீஸு²ரகத²யத்³ யதி³ யூயம் இப்³ராஹீம: ஸந்தாநா அப⁴விஷ்யத தர்ஹி இப்³ராஹீம ஆசாரணவத்³ ஆசரிஷ்யத|
40 ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே.
ஈஸ்²வரஸ்ய முகா²த் ஸத்யம்’ வாக்யம்’ ஸ்²ருத்வா யுஷ்மாந் ஜ்ஞாபயாமி யோஹம்’ தம்’ மாம்’ ஹந்தும்’ சேஷ்டத்⁴வே இப்³ராஹீம் ஏதாத்³ரு’ஸ²ம்’ கர்ம்ம ந சகார|
41 நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள்.
யூயம்’ ஸ்வஸ்வபிது: கர்ம்மாணி குருத² ததா³ தைருக்த்தம்’ ந வயம்’ ஜாரஜாதா அஸ்மாகம் ஏகஏவ பிதாஸ்தி ஸ ஏவேஸ்²வர:
42 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
ததோ யீஸு²நா கதி²தம் ஈஸ்²வரோ யதி³ யுஷ்மாகம்’ தாதோப⁴விஷ்யத் தர்ஹி யூயம்’ மயி ப்ரேமாகரிஷ்யத யதோஹம் ஈஸ்²வராந்நிர்க³த்யாக³தோஸ்மி ஸ்வதோ நாக³தோஹம்’ ஸ மாம்’ ப்ராஹிணோத்|
43 நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே.
யூயம்’ மம வாக்யமித³ம்’ ந பு³த்⁴யத்⁴வே குத: ? யதோ யூயம்’ மமோபதே³ஸ²ம்’ ஸோடு⁴ம்’ ந ஸ²க்நுத²|
44 நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன்.
யூயம்’ ஸை²தாந் பிது: ஸந்தாநா ஏதஸ்மாத்³ யுஷ்மாகம்’ பிதுரபி⁴லாஷம்’ பூரயத² ஸ ஆ ப்ரத²மாத் நரகா⁴தீ தத³ந்த: ஸத்யத்வஸ்ய லேஸோ²பி நாஸ்தி காரணாத³த: ஸ ஸத்யதாயாம்’ நாதிஷ்ட²த் ஸ யதா³ ம்ரு’ஷா கத²யதி ததா³ நிஜஸ்வபா⁴வாநுஸாரேணைவ கத²யதி யதோ ஸ ம்ரு’ஷாபா⁴ஷீ ம்ரு’ஷோத்பாத³கஸ்²ச|
45 இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
அஹம்’ தத்²யவாக்யம்’ வதா³மி காரணாத³ஸ்மாத்³ யூயம்’ மாம்’ ந ப்ரதீத²|
46 நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்?
மயி பாபமஸ்தீதி ப்ரமாணம்’ யுஷ்மாகம்’ கோ தா³தும்’ ஸ²க்நோதி? யத்³யஹம்’ தத்²யவாக்யம்’ வதா³மி தர்ஹி குதோ மாம்’ ந ப்ரதித²?
47 யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார்.
ய: கஸ்²சந ஈஸ்²வரீயோ லோக: ஸ ஈஸ்²வரீயகதா²யாம்’ மநோ நித⁴த்தே யூயம் ஈஸ்²வரீயலோகா ந ப⁴வத² தந்நிதா³நாத் தத்ர ந மநாம்’ஸி நித⁴த்³வே|
48 அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.
ததா³ யிஹூதீ³யா: ப்ரத்யவாதி³ஷு: த்வமேக: ஸோ²மிரோணீயோ பூ⁴தக்³ரஸ்தஸ்²ச வயம்’ கிமித³ம்’ ப⁴த்³ரம்’ நாவாதி³ஷ்ம?
49 அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
ததோ யீஸு²: ப்ரத்யவாதீ³த் நாஹம்’ பூ⁴தக்³ரஸ்த: கிந்து நிஜதாதம்’ ஸம்மந்யே தஸ்மாத்³ யூயம்’ மாம் அபமந்யத்⁴வே|
50 நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே.
அஹம்’ ஸ்வஸுக்²யாதிம்’ ந சேஷ்டே கிந்து சேஷ்டிதா விசாரயிதா சாபர ஏக ஆஸ்தே|
51 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
அஹம்’ யுஷ்மப்⁴யம் அதீவ யதா²ர்த²ம்’ கத²யாமி யோ நரோ மதீ³யம்’ வாசம்’ மந்யதே ஸ கதா³சந நித⁴நம்’ ந த்³ரக்ஷ்யதி| (aiōn )
52 அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
யிஹூதீ³யாஸ்தமவத³ந் த்வம்’ பூ⁴தக்³ரஸ்த இதீதா³நீம் அவைஷ்ம| இப்³ராஹீம் ப⁴விஷ்யத்³வாதி³நஞ்ச ஸர்வ்வே ம்ரு’தா: கிந்து த்வம்’ பா⁴ஷஸே யோ நரோ மம பா⁴ரதீம்’ க்³ரு’ஹ்லாதி ஸ ஜாது நிதா⁴நாஸ்வாத³ம்’ ந லப்ஸ்யதே| (aiōn )
53 நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.
தர்ஹி த்வம்’ கிம் அஸ்மாகம்’ பூர்வ்வபுருஷாத்³ இப்³ராஹீமோபி மஹாந்? யஸ்மாத் ஸோபி ம்ரு’த: ப⁴விஷ்யத்³வாதி³நோபி ம்ரு’தா: த்வம்’ ஸ்வம்’ கம்’ புமாம்’ஸம்’ மநுஷே?
54 இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர்.
யீஸு²: ப்ரத்யவோசத்³ யத்³யஹம்’ ஸ்வம்’ ஸ்வயம்’ ஸம்மந்யே தர்ஹி மம தத் ஸம்மநநம்’ கிமபி ந கிந்து மம தாதோ யம்’ யூயம்’ ஸ்வீயம் ஈஸ்²வரம்’ பா⁴ஷத்⁴வே ஸஏவ மாம்’ ஸம்மநுதே|
55 நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன்.
யூயம்’ தம்’ நாவக³ச்ச²த² கிந்த்வஹம்’ தமவக³ச்சா²மி தம்’ நாவக³ச்சா²மீதி வாக்யம்’ யதி³ வதா³மி தர்ஹி யூயமிவ ம்ரு’ஷாபா⁴ஷீ ப⁴வாமி கிந்த்வஹம்’ தமவக³ச்சா²மி ததா³க்ஷாமபி க்³ரு’ஹ்லாமி|
56 உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார்.
யுஷ்மாகம்’ பூர்வ்வபுருஷ இப்³ராஹீம் மம ஸமயம்’ த்³ரஷ்டும் அதீவாவாஞ்ச²த் தந்நிரீக்ஷ்யாநந்த³ச்ச|
57 அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
ததா³ யிஹூதீ³யா அப்ரு’ச்ச²ந் தவ வய: பஞ்சாஸ²த்³வத்ஸரா ந த்வம்’ கிம் இப்³ராஹீமம் அத்³ராக்ஷீ: ?
58 அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார்.
யீஸு²: ப்ரத்யவாதீ³த்³ யுஷ்மாநஹம்’ யதா²ர்த²தரம்’ வதா³மி இப்³ராஹீமோ ஜந்மந: பூர்வ்வகாலமாரப்⁴யாஹம்’ வித்³யே|
59 இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.
ததா³ தே பாஷாணாந் உத்தோல்ய தமாஹந்தும் உத³யச்ச²ந் கிந்து யீஸு² ர்கு³ப்தோ மந்திராத்³ ப³ஹிர்க³த்ய தேஷாம்’ மத்⁴யேந ப்ரஸ்தி²தவாந்|