< யோவான் 20 >
1 வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
ಅನನ್ತರಂ ಸಪ್ತಾಹಸ್ಯ ಪ್ರಥಮದಿನೇ ಽತಿಪ್ರತ್ಯೂಷೇ ಽನ್ಧಕಾರೇ ತಿಷ್ಠತಿ ಮಗ್ದಲೀನೀ ಮರಿಯಮ್ ತಸ್ಯ ಶ್ಮಶಾನಸ್ಯ ನಿಕಟಂ ಗತ್ವಾ ಶ್ಮಶಾನಸ್ಯ ಮುಖಾತ್ ಪ್ರಸ್ತರಮಪಸಾರಿತಮ್ ಅಪಶ್ಯತ್|
2 எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
ಪಶ್ಚಾದ್ ಧಾವಿತ್ವಾ ಶಿಮೋನ್ಪಿತರಾಯ ಯೀಶೋಃ ಪ್ರಿಯತಮಶಿಷ್ಯಾಯ ಚೇದಮ್ ಅಕಥಯತ್, ಲೋಕಾಃ ಶ್ಮಶಾನಾತ್ ಪ್ರಭುಂ ನೀತ್ವಾ ಕುತ್ರಾಸ್ಥಾಪಯನ್ ತದ್ ವಕ್ತುಂ ನ ಶಕ್ನೋಮಿ|
3 எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ಅತಃ ಪಿತರಃ ಸೋನ್ಯಶಿಷ್ಯಶ್ಚ ಬರ್ಹಿ ರ್ಭುತ್ವಾ ಶ್ಮಶಾನಸ್ಥಾನಂ ಗನ್ತುಮ್ ಆರಭೇತಾಂ|
4 அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
ಉಭಯೋರ್ಧಾವತೋಃ ಸೋನ್ಯಶಿಷ್ಯಃ ಪಿತರಂ ಪಶ್ಚಾತ್ ತ್ಯಕ್ತ್ವಾ ಪೂರ್ವ್ವಂ ಶ್ಮಶಾನಸ್ಥಾನ ಉಪಸ್ಥಿತವಾನ್|
5 அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.
ತದಾ ಪ್ರಹ್ವೀಭೂಯ ಸ್ಥಾಪಿತವಸ್ತ್ರಾಣಿ ದೃಷ್ಟವಾನ್ ಕಿನ್ತು ನ ಪ್ರಾವಿಶತ್|
6 பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
ಅಪರಂ ಶಿಮೋನ್ಪಿತರ ಆಗತ್ಯ ಶ್ಮಶಾನಸ್ಥಾನಂ ಪ್ರವಿಶ್ಯ
7 இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
ಸ್ಥಾಪಿತವಸ್ತ್ರಾಣಿ ಮಸ್ತಕಸ್ಯ ವಸ್ತ್ರಞ್ಚ ಪೃಥಕ್ ಸ್ಥಾನಾನ್ತರೇ ಸ್ಥಾಪಿತಂ ದೃಷ್ಟವಾನ್|
8 பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
ತತಃ ಶ್ಮಶಾನಸ್ಥಾನಂ ಪೂರ್ವ್ವಮ್ ಆಗತೋ ಯೋನ್ಯಶಿಷ್ಯಃ ಸೋಪಿ ಪ್ರವಿಶ್ಯ ತಾದೃಶಂ ದೃಷ್ಟಾ ವ್ಯಶ್ವಸೀತ್|
9 ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
ಯತಃ ಶ್ಮಶಾನಾತ್ ಸ ಉತ್ಥಾಪಯಿತವ್ಯ ಏತಸ್ಯ ಧರ್ಮ್ಮಪುಸ್ತಕವಚನಸ್ಯ ಭಾವಂ ತೇ ತದಾ ವೋದ್ಧುಂ ನಾಶನ್ಕುವನ್|
10 பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
ಅನನ್ತರಂ ತೌ ದ್ವೌ ಶಿಷ್ಯೌ ಸ್ವಂ ಸ್ವಂ ಗೃಹಂ ಪರಾವೃತ್ಯಾಗಚ್ಛತಾಮ್|
11 ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.
ತತಃ ಪರಂ ಮರಿಯಮ್ ಶ್ಮಶಾನದ್ವಾರಸ್ಯ ಬಹಿಃ ಸ್ಥಿತ್ವಾ ರೋದಿತುಮ್ ಆರಭತ ತತೋ ರುದತೀ ಪ್ರಹ್ವೀಭೂಯ ಶ್ಮಶಾನಂ ವಿಲೋಕ್ಯ
12 அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
ಯೀಶೋಃ ಶಯನಸ್ಥಾನಸ್ಯ ಶಿರಃಸ್ಥಾನೇ ಪದತಲೇ ಚ ದ್ವಯೋ ರ್ದಿಶೋ ದ್ವೌ ಸ್ವರ್ಗೀಯದೂತಾವುಪವಿಷ್ಟೌ ಸಮಪಶ್ಯತ್|
13 அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
ತೌ ಪೃಷ್ಟವನ್ತೌ ಹೇ ನಾರಿ ಕುತೋ ರೋದಿಷಿ? ಸಾವದತ್ ಲೋಕಾ ಮಮ ಪ್ರಭುಂ ನೀತ್ವಾ ಕುತ್ರಾಸ್ಥಾಪಯನ್ ಇತಿ ನ ಜಾನಾಮಿ|
14 இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
ಇತ್ಯುಕ್ತ್ವಾ ಮುಖಂ ಪರಾವೃತ್ಯ ಯೀಶುಂ ದಣ್ಡಾಯಮಾನಮ್ ಅಪಶ್ಯತ್ ಕಿನ್ತು ಸ ಯೀಶುರಿತಿ ಸಾ ಜ್ಞಾತುಂ ನಾಶಕ್ನೋತ್|
15 அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
ತದಾ ಯೀಶುಸ್ತಾಮ್ ಅಪೃಚ್ಛತ್ ಹೇ ನಾರಿ ಕುತೋ ರೋದಿಷಿ? ಕಂ ವಾ ಮೃಗಯಸೇ? ತತಃ ಸಾ ತಮ್ ಉದ್ಯಾನಸೇವಕಂ ಜ್ಞಾತ್ವಾ ವ್ಯಾಹರತ್, ಹೇ ಮಹೇಚ್ಛ ತ್ವಂ ಯದೀತಃ ಸ್ಥಾನಾತ್ ತಂ ನೀತವಾನ್ ತರ್ಹಿ ಕುತ್ರಾಸ್ಥಾಪಯಸ್ತದ್ ವದ ತತ್ಸ್ಥಾನಾತ್ ತಮ್ ಆನಯಾಮಿ|
16 அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
ತದಾ ಯೀಶುಸ್ತಾಮ್ ಅವದತ್ ಹೇ ಮರಿಯಮ್| ತತಃ ಸಾ ಪರಾವೃತ್ಯ ಪ್ರತ್ಯವದತ್ ಹೇ ರಬ್ಬೂನೀ ಅರ್ಥಾತ್ ಹೇ ಗುರೋ|
17 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
ತದಾ ಯೀಶುರವದತ್ ಮಾಂ ಮಾ ಧರ, ಇದಾನೀಂ ಪಿತುಃ ಸಮೀಪೇ ಊರ್ದ್ಧ್ವಗಮನಂ ನ ಕರೋಮಿ ಕಿನ್ತು ಯೋ ಮಮ ಯುಷ್ಮಾಕಞ್ಚ ಪಿತಾ ಮಮ ಯುಷ್ಮಾಕಞ್ಚೇಶ್ವರಸ್ತಸ್ಯ ನಿಕಟ ಊರ್ದ್ಧ್ವಗಮನಂ ಕರ್ತ್ತುಮ್ ಉದ್ಯತೋಸ್ಮಿ, ಇಮಾಂ ಕಥಾಂ ತ್ವಂ ಗತ್ವಾ ಮಮ ಭ್ರಾತೃಗಣಂ ಜ್ಞಾಪಯ|
18 மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
ತತೋ ಮಗ್ದಲೀನೀಮರಿಯಮ್ ತತ್ಕ್ಷಣಾದ್ ಗತ್ವಾ ಪ್ರಭುಸ್ತಸ್ಯೈ ದರ್ಶನಂ ದತ್ತ್ವಾ ಕಥಾ ಏತಾ ಅಕಥಯದ್ ಇತಿ ವಾರ್ತ್ತಾಂ ಶಿಷ್ಯೇಭ್ಯೋಽಕಥಯತ್|
19 வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
ತತಃ ಪರಂ ಸಪ್ತಾಹಸ್ಯ ಪ್ರಥಮದಿನಸ್ಯ ಸನ್ಧ್ಯಾಸಮಯೇ ಶಿಷ್ಯಾ ಏಕತ್ರ ಮಿಲಿತ್ವಾ ಯಿಹೂದೀಯೇಭ್ಯೋ ಭಿಯಾ ದ್ವಾರರುದ್ಧಮ್ ಅಕುರ್ವ್ವನ್, ಏತಸ್ಮಿನ್ ಕಾಲೇ ಯೀಶುಸ್ತೇಷಾಂ ಮಧ್ಯಸ್ಥಾನೇ ತಿಷ್ಠನ್ ಅಕಥಯದ್ ಯುಷ್ಮಾಕಂ ಕಲ್ಯಾಣಂ ಭೂಯಾತ್|
20 அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
ಇತ್ಯುಕ್ತ್ವಾ ನಿಜಹಸ್ತಂ ಕುಕ್ಷಿಞ್ಚ ದರ್ಶಿತವಾನ್, ತತಃ ಶಿಷ್ಯಾಃ ಪ್ರಭುಂ ದೃಷ್ಟ್ವಾ ಹೃಷ್ಟಾ ಅಭವನ್|
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
ಯೀಶುಃ ಪುನರವದದ್ ಯುಷ್ಮಾಕಂ ಕಲ್ಯಾಣಂ ಭೂಯಾತ್ ಪಿತಾ ಯಥಾ ಮಾಂ ಪ್ರೈಷಯತ್ ತಥಾಹಮಪಿ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರೇಷಯಾಮಿ|
22 இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
ಇತ್ಯುಕ್ತ್ವಾ ಸ ತೇಷಾಮುಪರಿ ದೀರ್ಘಪ್ರಶ್ವಾಸಂ ದತ್ತ್ವಾ ಕಥಿತವಾನ್ ಪವಿತ್ರಮ್ ಆತ್ಮಾನಂ ಗೃಹ್ಲೀತ|
23 நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
ಯೂಯಂ ಯೇಷಾಂ ಪಾಪಾನಿ ಮೋಚಯಿಷ್ಯಥ ತೇ ಮೋಚಯಿಷ್ಯನ್ತೇ ಯೇಷಾಞ್ಚ ಪಾಪಾತಿ ನ ಮೋಚಯಿಷ್ಯಥ ತೇ ನ ಮೋಚಯಿಷ್ಯನ್ತೇ|
24 இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
ದ್ವಾದಶಮಧ್ಯೇ ಗಣಿತೋ ಯಮಜೋ ಥೋಮಾನಾಮಾ ಶಿಷ್ಯೋ ಯೀಶೋರಾಗಮನಕಾಲೈ ತೈಃ ಸಾರ್ದ್ಧಂ ನಾಸೀತ್|
25 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
ಅತೋ ವಯಂ ಪ್ರಭೂಮ್ ಅಪಶ್ಯಾಮೇತಿ ವಾಕ್ಯೇಽನ್ಯಶಿಷ್ಯೈರುಕ್ತೇ ಸೋವದತ್, ತಸ್ಯ ಹಸ್ತಯೋ ರ್ಲೌಹಕೀಲಕಾನಾಂ ಚಿಹ್ನಂ ನ ವಿಲೋಕ್ಯ ತಚ್ಚಿಹ್ನಮ್ ಅಙ್ಗುಲ್ಯಾ ನ ಸ್ಪೃಷ್ಟ್ವಾ ತಸ್ಯ ಕುಕ್ಷೌ ಹಸ್ತಂ ನಾರೋಪ್ಯ ಚಾಹಂ ನ ವಿಶ್ವಸಿಷ್ಯಾಮಿ|
26 இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
ಅಪರಮ್ ಅಷ್ಟಮೇಽಹ್ನಿ ಗತೇ ಸತಿ ಥೋಮಾಸಹಿತಃ ಶಿಷ್ಯಗಣ ಏಕತ್ರ ಮಿಲಿತ್ವಾ ದ್ವಾರಂ ರುದ್ಧ್ವಾಭ್ಯನ್ತರ ಆಸೀತ್, ಏತರ್ಹಿ ಯೀಶುಸ್ತೇಷಾಂ ಮಧ್ಯಸ್ಥಾನೇ ತಿಷ್ಠನ್ ಅಕಥಯತ್, ಯುಷ್ಮಾಕಂ ಕುಶಲಂ ಭೂಯಾತ್|
27 பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
ಪಶ್ಚಾತ್ ಥಾಮೈ ಕಥಿತವಾನ್ ತ್ವಮ್ ಅಙ್ಗುಲೀಮ್ ಅತ್ರಾರ್ಪಯಿತ್ವಾ ಮಮ ಕರೌ ಪಶ್ಯ ಕರಂ ಪ್ರಸಾರ್ಯ್ಯ ಮಮ ಕುಕ್ಷಾವರ್ಪಯ ನಾವಿಶ್ವಸ್ಯ|
28 அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
ತದಾ ಥೋಮಾ ಅವದತ್, ಹೇ ಮಮ ಪ್ರಭೋ ಹೇ ಮದೀಶ್ವರ|
29 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
ಯೀಶುರಕಥಯತ್, ಹೇ ಥೋಮಾ ಮಾಂ ನಿರೀಕ್ಷ್ಯ ವಿಶ್ವಸಿಷಿ ಯೇ ನ ದೃಷ್ಟ್ವಾ ವಿಶ್ವಸನ್ತಿ ತಏವ ಧನ್ಯಾಃ|
30 இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
ಏತದನ್ಯಾನಿ ಪುಸ್ತಕೇಽಸ್ಮಿನ್ ಅಲಿಖಿತಾನಿ ಬಹೂನ್ಯಾಶ್ಚರ್ಯ್ಯಕರ್ಮ್ಮಾಣಿ ಯೀಶುಃ ಶಿಷ್ಯಾಣಾಂ ಪುರಸ್ತಾದ್ ಅಕರೋತ್|
31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
ಕಿನ್ತು ಯೀಶುರೀಶ್ವರಸ್ಯಾಭಿಷಿಕ್ತಃ ಸುತ ಏವೇತಿ ಯಥಾ ಯೂಯಂ ವಿಶ್ವಸಿಥ ವಿಶ್ವಸ್ಯ ಚ ತಸ್ಯ ನಾಮ್ನಾ ಪರಮಾಯುಃ ಪ್ರಾಪ್ನುಥ ತದರ್ಥಮ್ ಏತಾನಿ ಸರ್ವ್ವಾಣ್ಯಲಿಖ್ಯನ್ತ|