< யோவான் 14 >
1 “உங்கள் இருதயம் கலங்குவதற்கு இடங்கொடுக்க வேண்டாம். இறைவனில் விசுவாசமாயிருங்கள்; என்னிலும் விசுவாசமாயிருங்கள்.
மநோது³: கி²நோ மா பூ⁴த; ஈஸ்²வரே விஸ்²வஸித மயி ச விஸ்²வஸித|
2 என்னுடைய பிதாவின் வீட்டிலே அநேக உறைவிடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாதிருந்தால் நான் எப்படி உங்களுக்குச் சொல்லியிருப்பேன். உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தும்படி நான் அங்கு போகிறேன்.
மம பிது க்³ரு’ஹே ப³ஹூநி வாஸஸ்தா²நி ஸந்தி நோ சேத் பூர்வ்வம்’ யுஷ்மாந் அஜ்ஞாபயிஷ்யம்’ யுஷ்மத³ர்த²ம்’ ஸ்தா²நம்’ ஸஜ்ஜயிதும்’ க³ச்சா²மி|
3 நான் போய், உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்திய பின்பு, மீண்டும் வந்து, நீங்கள் என்னுடன் இருக்கும்படி உங்களைக் கூட்டிச் செல்வேன். அப்பொழுது நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்.
யதி³ க³த்வாஹம்’ யுஷ்மந்நிமித்தம்’ ஸ்தா²நம்’ ஸஜ்ஜயாமி தர்ஹி பநராக³த்ய யுஷ்மாந் ஸ்வஸமீபம்’ நேஷ்யாமி, ததோ யத்ராஹம்’ திஷ்டா²மி தத்ர யூயமபி ஸ்தா²ஸ்யத²|
4 நான் போகிற இடத்திற்கான வழியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்றார்.
அஹம்’ யத்ஸ்தா²நம்’ ப்³ரஜாமி தத்ஸ்தா²நம்’ யூயம்’ ஜாநீத² தஸ்ய பந்தா²நமபி ஜாநீத²|
5 தோமா இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாதே. அப்படியிருக்க, அங்கு போகும் வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான்.
ததா³ தோ²மா அவத³த், ஹே ப்ரபோ⁴ ப⁴வாந் குத்ர யாதி தத்³வயம்’ ந ஜாநீம: , தர்ஹி கத²ம்’ பந்தா²நம்’ ஜ்ஞாதும்’ ஸ²க்நும: ?
6 அதற்கு இயேசு, “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் மூலமாய் அன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரமுடியாது.
யீஸு²ரகத²யத்³ அஹமேவ ஸத்யஜீவநரூபபதோ² மயா ந க³ந்தா கோபி பிது: ஸமீபம்’ க³ந்தும்’ ந ஸ²க்நோதி|
7 நீங்கள் உண்மையாக என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். அவரைக்கண்டும் இருக்கிறீர்கள்” என்றார்.
யதி³ மாம் அஜ்ஞாஸ்யத தர்ஹி மம பிதரமப்யஜ்ஞாஸ்யத கிந்த்வது⁴நாதஸ்தம்’ ஜாநீத² பஸ்²யத² ச|
8 அதற்குப் பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும். அது எங்களுக்குப் போதும்” என்றான்.
ததா³ பி²லிப: கதி²தவாந், ஹே ப்ரபோ⁴ பிதரம்’ த³ர்ஸ²ய தஸ்மாத³ஸ்மாகம்’ யதே²ஷ்டம்’ ப⁴விஷ்யதி|
9 அப்பொழுது இயேசு அவனிடம் சொன்னதாவது: “பிலிப்புவே, நான் இவ்வளவு காலம் உங்களோடிருந்தும், நீ இன்னும் என்னை அறிந்துக்கொள்ளவில்லையா? என்னைக் கண்டிருக்கிறவன் பிதாவைக் கண்டிருக்கிறான். அப்படியிருக்க, ‘பிதாவை எங்களுக்குக் காண்பியும்’ என்று நீ எப்படிச் சொல்லலாம்?
ததோ யீஸு²: ப்ரத்யாவாதீ³த், ஹே பி²லிப யுஷ்மாபி⁴: ஸார்த்³த⁴ம் ஏதாவத்³தி³நாநி ஸ்தி²தமபி மாம்’ கிம்’ ந ப்ரத்யபி⁴ஜாநாஸி? யோ ஜநோ மாம் அபஸ்²யத் ஸ பிதரமப்யபஸ்²யத் தர்ஹி பிதரம் அஸ்மாந் த³ர்ஸ²யேதி கதா²ம்’ கத²ம்’ கத²யஸி?
10 நான் பிதாவில் இருக்கிறதையும், பிதா என்னில் இருக்கிறதையும் நீ விசுவாசிக்கவில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிற இந்த வார்த்தைகள் என்னுடையதல்ல. அவை என் பிதாவின் வார்த்தைகளே. அவர் எனக்குள் இருந்து தமது செயல்களைச் செய்கிறார்.
அஹம்’ பிதரி திஷ்டா²மி பிதா மயி திஷ்ட²தீதி கிம்’ த்வம்’ ந ப்ரத்யஷி? அஹம்’ யத்³வாக்யம்’ வதா³மி தத் ஸ்வதோ ந வதா³மி கிந்து ய: பிதா மயி விராஜதே ஸ ஏவ ஸர்வ்வகர்ம்மாணி கராதி|
11 நான் பிதாவில் இருக்கிறேன் என்றும், பிதா என்னில் இருக்கிறார் என்றும் நான் சொல்லும்போது அதை நம்புங்கள்; இல்லாவிட்டால் நான் செய்த கிரியைகளின் நிமித்தமாவது அதை நம்புங்கள்.
அதஏவ பிதர்ய்யஹம்’ திஷ்டா²மி பிதா ச மயி திஷ்ட²தி மமாஸ்யாம்’ கதா²யாம்’ ப்ரத்யயம்’ குருத, நோ சேத் கர்ம்மஹேதோ: ப்ரத்யயம்’ குருத|
12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னில் விசுவாசம் வைக்கிறவர்கள் நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள். நான் என் பிதாவினிடத்திற்கு போகிறபடியால், அவர்கள் இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் செய்வார்கள்.
அஹம்’ யுஷ்மாநதியதா²ர்த²ம்’ வதா³மி, யோ ஜநோ மயி விஸ்²வஸிதி ஸோஹமிவ கர்ம்மாணி கரிஷ்யதி வரம்’ ததோபி மஹாகர்ம்மாணி கரிஷ்யதி யதோ ஹேதோரஹம்’ பிது: ஸமீபம்’ க³ச்சா²மி|
13 நீங்கள் என் பெயரில் எதைக் கேட்கிறீர்களோ, அதை நான் செய்வேன். மகனால் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படியாக அதைச் செய்வேன்.
யதா² புத்ரேண பிது ர்மஹிமா ப்ரகாஸ²தே தத³ர்த²ம்’ மம நாம ப்ரோச்ய யத் ப்ரார்த²யிஷ்யத்⁴வே தத் ஸப²லம்’ கரிஷ்யாமி|
14 என்னுடைய பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்.
யதி³ மம நாம்நா யத் கிஞ்சித்³ யாசத்⁴வே தர்ஹி தத³ஹம்’ ஸாத⁴யிஷ்யாமி|
15 “நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் கொடுக்கும் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள்.
யதி³ மயி ப்ரீயத்⁴வே தர்ஹி மமாஜ்ஞா: ஸமாசரத|
16 நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார். (aiōn )
ததோ மயா பிது: ஸமீபே ப்ரார்தி²தே பிதா நிரந்தரம்’ யுஷ்மாபி⁴: ஸார்த்³த⁴ம்’ ஸ்தா²தும் இதரமேகம்’ ஸஹாயம் அர்தா²த் ஸத்யமயம் ஆத்மாநம்’ யுஷ்மாகம்’ நிகடம்’ ப்ரேஷயிஷ்யதி| (aiōn )
17 அவரே சத்திய ஆவியானவர். இந்த உலகத்தினரால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவரை அறிந்திருக்கிறீர்கள். அவர் உங்களுடனேகூட இருக்கிறார்; மேலும் உங்களுக்குள்ளும் இருப்பார்.
ஏதஜ்ஜக³தோ லோகாஸ்தம்’ க்³ரஹீதும்’ ந ஸ²க்நுவந்தி யதஸ்தே தம்’ நாபஸ்²யந் நாஜநம்’ஸ்²ச கிந்து யூயம்’ ஜாநீத² யதோ ஹேதோ: ஸ யுஷ்மாகமந்த ர்நிவஸதி யுஷ்மாகம்’ மத்⁴யே ஸ்தா²ஸ்யதி ச|
18 நான் உங்களை திக்கற்றோராய் விடமாட்டேன்; நான் உங்களிடத்தில் மீண்டும் வருவேன்.
அஹம்’ யுஷ்மாந் அநாதா²ந் க்ரு’த்வா ந யாஸ்யாமி புநரபி யுஷ்மாகம்’ ஸமீபம் ஆக³மிஷ்யாமி|
19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள்.
கியத்காலரத் பரம் அஸ்ய ஜக³தோ லோகா மாம்’ புந ர்ந த்³ரக்ஷ்யந்தி கிந்து யூயம்’ த்³ரக்ஷ்யத²; அஹம்’ ஜீவிஷ்யாமி தஸ்மாத் காரணாத்³ யூயமபி ஜீவிஷ்யத²|
20 அந்த நாள் வரும்போது, நான் பிதாவில் இருப்பதையும், நீங்கள் என்னில் இருப்பதையும், நான் உங்களில் இருப்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
பிதர்ய்யஹமஸ்மி மயி ச யூயம்’ ஸ்த², ததா²ஹம்’ யுஷ்மாஸ்வஸ்மி தத³பி ததா³ ஜ்ஞாஸ்யத²|
21 என்னுடைய கட்டளைகளை ஏற்று, அவைகளுக்குக் கீழ்ப்படிகிறவன் எவனோ, அவனே என்னில் அன்பாயிருக்கிறவன். என்னில் அன்பாயிருக்கிறவன் பிதாவினால் அன்பு செலுத்தப்படுவான். நானும் அவனில் அன்பாயிருந்து, என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன்.”
யோ ஜநோ மமாஜ்ஞா க்³ரு’ஹீத்வா தா ஆசரதி ஸஏவ மயி ப்ரீயதே; யோ ஜநஸ்²ச மயி ப்ரீயதே ஸஏவ மம பிது: ப்ரியபாத்ரம்’ ப⁴விஷ்யதி, ததா²ஹமபி தஸ்மிந் ப்ரீத்வா தஸ்மை ஸ்வம்’ ப்ரகாஸ²யிஷ்யாமி|
22 அப்பொழுது யூதாஸ் ஸ்காரியோத் அல்லாத மற்ற யூதா அவரிடம், “ஆண்டவரே உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிறீரே, அது ஏன்?” என்று கேட்டான்.
ததா³ ஈஷ்கரியோதீயாத்³ அந்யோ யிஹூதா³ஸ்தமவத³த், ஹே ப்ரபோ⁴ ப⁴வாந் ஜக³தோ லோகாநாம்’ ஸந்நிதௌ⁴ ப்ரகாஸி²தோ ந பூ⁴த்வாஸ்மாகம்’ ஸந்நிதௌ⁴ குத: ப்ரகாஸி²தோ ப⁴விஷ்யதி?
23 அதற்கு இயேசு, “யாராவது என்னில் அன்பாயிருந்தால், அவர்கள் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படிவார்கள். என்னுடைய பிதா அவர்களில் அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து, அவனுடன் குடியிருப்போம்.
ததோ யீஸு²: ப்ரத்யுதி³தவாந், யோ ஜநோ மயி ப்ரீயதே ஸ மமாஜ்ஞா அபி க்³ரு’ஹ்லாதி, தேந மம பிதாபி தஸ்மிந் ப்ரேஷ்யதே, ஆவாஞ்ச தந்நிகடமாக³த்ய தேந ஸஹ நிவத்ஸ்யாவ: |
24 என்னில் அன்பாயிராதவன் என்னுடைய போதனைக்குக் கீழ்ப்படியமாட்டான். நீங்கள் கேட்கிற இந்த வார்த்தைகள் என்னுடைய வார்த்தைகள் அல்ல; அவை என்னை அனுப்பிய பிதாவுக்குரிய வார்த்தைகள்.
யோ ஜநோ மயி ந ப்ரீயதே ஸ மம கதா² அபி ந க்³ரு’ஹ்லாதி புநஸ்²ச யாமிமாம்’ கதா²ம்’ யூயம்’ ஸ்²ரு’ணுத² ஸா கதா² கேவலஸ்ய மம ந கிந்து மம ப்ரேரகோ ய: பிதா தஸ்யாபி கதா²|
25 “நான் உங்களோடு இருக்கும்போதே இவைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
இதா³நீம்’ யுஷ்மாகம்’ நிகடே வித்³யமாநோஹம் ஏதா: ஸகலா: கதா²: கத²யாமி|
26 ஆனால், என்னுடைய பெயரிலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவரான உதவியாளர், உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவர் நான் உங்களுக்குச் சொன்ன ஒவ்வொன்றையும் உங்களுக்கு நினைவு படுத்துவார்.
கிந்த்வித: பரம்’ பித்ரா ய: ஸஹாயோ(அ)ர்தா²த் பவித்ர ஆத்மா மம நாம்நி ப்ரேரயிஷ்யதி ஸ ஸர்வ்வம்’ ஸி²க்ஷயித்வா மயோக்தா: ஸமஸ்தா: கதா² யுஷ்மாந் ஸ்மாரயிஷ்யதி|
27 சமாதானத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டுப் போகிறேன். என்னுடைய சமாதனத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் கொடுக்கிற இந்த சமாதானமோ உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றது அல்ல, ஆகையால் உங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; பயப்படவும் வேண்டாம்.
அஹம்’ யுஷ்மாகம்’ நிகடே ஸா²ந்திம்’ ஸ்தா²பயித்வா யாமி, நிஜாம்’ ஸா²ந்திம்’ யுஷ்மப்⁴யம்’ த³தா³மி, ஜக³தோ லோகா யதா² த³தா³தி ததா²ஹம்’ ந த³தா³மி; யுஷ்மாகம் அந்த: கரணாநி து³: கி²தாநி பீ⁴தாநி ச ந ப⁴வந்து|
28 “‘நான் உங்களைவிட்டுப் போகப்போகிறேன்’ என்றும், ‘உங்களிடத்தில் திரும்பிவருவேன்’ என்றும் நான் சொன்னதைக் கேட்டீர்கள். நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், நான் பிதாவினிடத்தில் போகிறதைக் குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் பிதா, என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
அஹம்’ க³த்வா புநரபி யுஷ்மாகம்’ ஸமீபம் ஆக³மிஷ்யாமி மயோக்தம்’ வாக்யமித³ம்’ யூயம் அஸ்²ரௌஷ்ட; யதி³ மய்யப்ரேஷ்யத்⁴வம்’ தர்ஹ்யஹம்’ பிது: ஸமீபம்’ க³ச்சா²மி மமாஸ்யாம்’ கதா²யாம்’ யூயம் அஹ்லாதி³ஷ்யத்⁴வம்’ யதோ மம பிதா மத்தோபி மஹாந்|
29 அது நிகழும் முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதனால் அது நிகழும்போது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்கள்.
தஸ்யா க⁴டநாயா: ஸமயே யதா² யுஷ்மாகம்’ ஸ்²ரத்³தா⁴ ஜாயதே தத³ர்த²ம் அஹம்’ தஸ்யா க⁴டநாயா: பூர்வ்வம் இதா³நீம்’ யுஷ்மாந் ஏதாம்’ வார்த்தாம்’ வதா³மி|
30 இன்னும் நான் உங்களுடன் மிகுதியாக பேசப்போவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்குரியது என்னிடத்தில் ஒன்றுமில்லை.
இத: பரம்’ யுஷ்மாபி⁴: ஸஹ மம ப³ஹவ ஆலாபா ந ப⁴விஷ்யந்தி யத: காரணாத்³ ஏதஸ்ய ஜக³த: பதிராக³ச்ச²தி கிந்து மயா ஸஹ தஸ்ய கோபி ஸம்ப³ந்தோ⁴ நாஸ்தி|
31 ஆனால் நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டிருப்பதை மட்டுமே நான் செய்கிறேன் என்றும் உலகம் அறிந்துகொள்ளவேண்டும். “எழுந்திருங்கள்; இப்பொழுது நாம் இங்கிருந்து போவோம்” என்றார்.
அஹம்’ பிதரி ப்ரேம கரோமி ததா² பிது ர்விதி⁴வத் கர்ம்மாணி கரோமீதி யேந ஜக³தோ லோகா ஜாநந்தி தத³ர்த²ம் உத்திஷ்ட²த வயம்’ ஸ்தா²நாத³ஸ்மாத்³ க³ச்சா²ம|