< யோவான் 10 >

1 இயேசு மேலும் சொன்னதாவது: “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத் தொழுவத்தினுள்ளே ஒருவன் வாசல் வழியாய் உள்ளே போகாமல் வேறு வழியாய் ஏறி உள்ளே வருகிறவன், அவன் கள்வனும் கொள்ளைக்காரனுமாய் இருப்பான்.
அஹம்’ யுஷ்மாநதியதா²ர்த²ம்’ வதா³மி, யோ ஜநோ த்³வாரேண ந ப்ரவிஸ்²ய கேநாப்யந்யேந மேஷக்³ரு’ஹம்’ ப்ரவிஸ²தி ஸ ஏவ ஸ்தேநோ த³ஸ்யுஸ்²ச|
2 வாசல் வழியாய் உள்ளே போகிறவனே ஆடுகளின் மேய்ப்பனாய் இருக்கிறான்.
யோ த்³வாரேண ப்ரவிஸ²தி ஸ ஏவ மேஷபாலக​: |
3 காவலாளி அவனுக்கு வாசல் கதவைத் திறந்து விடுகிறான். ஆடுகளும் அவனுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வழிநடத்திச் செல்கிறான்.
தௌ³வாரிகஸ்தஸ்மை த்³வாரம்’ மோசயதி மேஷக³ணஸ்²ச தஸ்ய வாக்யம்’ ஸ்²ரு’ணோதி ஸ நிஜாந் மேஷாந் ஸ்வஸ்வநாம்நாஹூய ப³ஹி​: க்ரு’த்வா நயதி|
4 அவன் தனக்குச் சொந்தமான எல்லா ஆடுகளையும் தொழுவத்திற்கு வெளியே கொண்டுவந்து விட்டபின்பு, அவைகளுக்கு முன்னாக நடந்து செல்கிறான். அவனுடைய ஆடுகளும் அவனுடைய குரலை அறிந்திருப்பதால், அவை அவனுக்குப்பின் செல்கின்றன.
ததா² நிஜாந் மேஷாந் ப³ஹி​: க்ரு’த்வா ஸ்வயம்’ தேஷாம் அக்³ரே க³ச்ச²தி, ததோ மேஷாஸ்தஸ்ய ஸ²ப்³த³ம்’ பு³த்⁴யந்தே, தஸ்மாத் தஸ்ய பஸ்²சாத்³ வ்ரஜந்தி|
5 ஆடுகள் ஒருபோதும் அறியாத ஒருவனைப் பின்பற்றிச் செல்லமாட்டாது; ஒரு அவனுடைய குரலை அவை இன்னாருடைய குரல் என்று அறியாதபடியால், அவை அவனைவிட்டு ஓடிப்போகும்” என்றார்.
கிந்து பரஸ்ய ஸ²ப்³த³ம்’ ந பு³த்⁴யந்தே தஸ்மாத் தஸ்ய பஸ்²சாத்³ வ்ரஜிஷ்யந்தி வரம்’ தஸ்ய ஸமீபாத் பலாயிஷ்யந்தே|
6 இயேசு இதை உவமையாக பேசி அவர்களுக்குச் சொன்னபோது, இயேசு தங்களுக்கு என்ன சொல்கிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
யீஸு²ஸ்தேப்⁴ய இமாம்’ த்³ரு’ஷ்டாந்தகதா²ம் அகத²யத் கிந்து தேந கதி²தகதா²யாஸ்தாத்பர்ய்யம்’ தே நாபு³த்⁴யந்த|
7 எனவே இயேசு மீண்டும் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், ஆடுகளுக்கு வாசல் நானே.
அதோ யீஸு²​: புநரகத²யத், யுஷ்மாநாஹம்’ யதா²ர்த²தரம்’ வ்யாஹராமி, மேஷக்³ரு’ஹஸ்ய த்³வாரம் அஹமேவ|
8 எனக்கு முன்னே வந்த எல்லோரும் கள்வரும் கொள்ளைக்காரருமாய் இருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
மயா ந ப்ரவிஸ்²ய ய ஆக³ச்ச²ந் தே ஸ்தேநா த³ஸ்யவஸ்²ச கிந்து மேஷாஸ்தேஷாம்’ கதா² நாஸ்²ரு’ண்வந்|
9 நானே வாசல்; என் வழியாய் உள்ளே போகிறவர்கள் யாரோ அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்கள் சுதந்திரமாய் உள்ளே வந்து வெளியே போய், தமக்குரிய மேய்ச்சலைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
அஹமேவ த்³வாரஸ்வரூப​: , மயா ய​: கஸ்²சித ப்ரவிஸ²தி ஸ ரக்ஷாம்’ ப்ராப்ஸ்யதி ததா² ப³ஹிரந்தஸ்²ச க³மநாக³மநே க்ரு’த்வா சரணஸ்தா²நம்’ ப்ராப்ஸ்யதி|
10 திருடனோ திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான்; நானோ அவர்கள் ஜீவனை அடையும்படியாக வந்திருக்கிறேன். அவர்கள் அந்த ஜீவனை நிறைவாய் பெற்றுக்கொள்ளும்படியாகவே வந்தேன்.
யோ ஜநஸ்தேந​: ஸ கேவலம்’ ஸ்தைந்யப³த⁴விநாஸா²ந் கர்த்துமேவ ஸமாயாதி கிந்த்வஹம் ஆயு ர்தா³தும் அர்தா²த் பா³ஹூல்யேந ததே³வ தா³தும் ஆக³ச்ச²ம்|
11 “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்.
அஹமேவ ஸத்யமேஷபாலகோ யஸ்து ஸத்யோ மேஷபாலக​: ஸ மேஷார்த²ம்’ ப்ராணத்யாக³ம்’ கரோதி;
12 கூலிக்காரனோ ஆடுகளின் உரிமையுள்ள மேய்ப்பன் அல்ல. எனவே அவன் ஓநாய் வருகிறதைக் காண்கிறபோது, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் மந்தையைத் தாக்கி, அதைச் சிதறடிக்கிறது.
கிந்து யோ ஜநோ மேஷபாலகோ ந, அர்தா²த்³ யஸ்ய மேஷா நிஜா ந ப⁴வந்தி, ய ஏதாத்³ரு’ஸோ² வைதநிக​: ஸ வ்ரு’கம் ஆக³ச்ச²ந்தம்’ த்³ரு’ஷ்ட்வா மேஜவ்ரஜம்’ விஹாய பலாயதே, தஸ்மாத்³ வ்ரு’கஸ்தம்’ வ்ரஜம்’ த்⁴ரு’த்வா விகிரதி|
13 கூலிக்காரனோ தான் கூலிக்காரனாக இருப்பதால், ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல் அவன் ஓடிப்போகிறான்.
வைதநிக​: பலாயதே யத​: ஸ வேதநார்தீ² மேஷார்த²ம்’ ந சிந்தயதி|
14 “நானே நல்ல மேய்ப்பன்; நான் என் ஆடுகளையும் என்னுடைய ஆடுகள் என்னையும் அறிந்திருக்கின்றன.
அஹமேவ ஸத்யோ மேஷபாலக​: , பிதா மாம்’ யதா² ஜாநாதி, அஹஞ்ச யதா² பிதரம்’ ஜாநாமி,
15 பிதா என்னை அறிந்திருக்கிறதுபோல நானும் பிதாவை அறிந்திருக்கிறேன், ஆகையால் நான் ஆடுகளுக்காக என் உயிரையும் கொடுக்கிறேன்.
ததா² நிஜாந் மேஷாநபி ஜாநாமி, மேஷாஸ்²ச மாம்’ ஜாநாந்தி, அஹஞ்ச மேஷார்த²ம்’ ப்ராணத்யாக³ம்’ கரோமி|
16 இந்தத் தொழுவத்திற்குள் இராத வேறு ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும். அவைகளும் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாய் இருக்கும்.
அபரஞ்ச ஏதத்³ க்³ரு’ஹீய மேஷேப்⁴யோ பி⁴ந்நா அபி மேஷா மம ஸந்தி தே ஸகலா ஆநயிதவ்யா​: ; தே மம ஸ²ப்³த³ம்’ ஸ்²ரோஷ்யந்தி தத ஏகோ வ்ரஜ ஏகோ ரக்ஷகோ ப⁴விஷ்யதி|
17 நான் என் உயிரைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். நான் அதைத் திரும்பவும் பெற்றுக் கொள்வேன்.
ப்ராணாநஹம்’ த்யக்த்வா புந​: ப்ராணாந் க்³ரஹீஷ்யாமி, தஸ்மாத் பிதா மயி ஸ்நேஹம்’ கரோதி|
18 என் உயிரை ஒருவரும் என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்வதில்லை. என் சுயவிருப்பத்தின்படியே நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்த கட்டளையை நான் என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன்” என்றார்.
கஸ்²சிஜ்ஜநோ மம ப்ராணாந் ஹந்தும்’ ந ஸ²க்நோதி கிந்து ஸ்வயம்’ தாந் ஸமர்பயாமி தாந் ஸமர்பயிதும்’ புநர்க்³ரஹீதுஞ்ச மம ஸ²க்திராஸ்தே பா⁴ரமிமம்’ ஸ்வபிது​: ஸகாஸா²த் ப்ராப்தோஹம்|
19 இந்த வார்த்தைகளை யூதர்கள் கேட்டபோது, அவர்களிடையே மீண்டும் பிரிவினை ஏற்பட்டது.
அஸ்மாது³பதே³ஸா²த் புநஸ்²ச யிஹூதீ³யாநாம்’ மத்⁴யே பி⁴ந்நவாக்யதா ஜாதா|
20 அவர்களில் பலர், “இவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது, பைத்தியமும் பிடித்துவிட்டது, இவன் பேச்சை ஏன் கேட்கிறீர்கள்?” என்றார்கள்.
ததோ ப³ஹவோ வ்யாஹரந் ஏஷ பூ⁴தக்³ரஸ்த உந்மத்தஸ்²ச, குத ஏதஸ்ய கதா²ம்’ ஸ்²ரு’ணுத²?
21 மற்றவர்களோ, “இவை பிசாசு பிடித்தவனுடைய வார்த்தைகள் அல்லவே. பார்வையற்றவனுடைய கண்களைப் பிசாசினால் திறக்க முடியுமோ?” என்றார்கள்.
கேசித்³ அவத³ந் ஏதஸ்ய கதா² பூ⁴தக்³ரஸ்தஸ்ய கதா²வந்ந ப⁴வந்தி, பூ⁴த​: கிம் அந்தா⁴ய சக்ஷுஷீ தா³தும்’ ஸ²க்நோதி?
22 எருசலேமிலே ஆலயத்தின் அர்ப்பணிப்புப் பண்டிகை நடந்தது. அது குளிர்க்காலமாயிருந்தது.
ஸீ²தகாலே யிரூஸா²லமி மந்தி³ரோத்ஸர்க³பர்வ்வண்யுபஸ்தி²தே
23 இயேசு ஆலயப் பகுதியில் சாலொமோன் மண்டபத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.
யீஸு²​: ஸுலேமாநோ நி​: ஸாரேண க³மநாக³மநே கரோதி,
24 அப்பொழுது யூதர்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டு, “நீர் எவ்வளவு காலத்துக்கு எங்களைச் சந்தேகப்படவைப்பீர்? நீர் கிறிஸ்துவானால் அதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்லும்” என்றார்கள்.
ஏதஸ்மிந் ஸமயே யிஹூதீ³யாஸ்தம்’ வேஷ்டயித்வா வ்யாஹரந் கதி காலாந் அஸ்மாகம்’ விசிகித்ஸாம்’ ஸ்தா²பயிஷ்யாமி? யத்³யபி⁴ஷிக்தோ ப⁴வதி தர்ஹி தத் ஸ்பஷ்டம்’ வத³|
25 அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்கள் விசுவாசிக்கவில்லை. என் பிதாவின் பெயரினால் நான் செய்கிற கிரியைகளே என்னைக் குறித்துப் பேசுகின்றன.
ததா³ யீஸு²​: ப்ரத்யவத³த்³ அஹம் அசகத²ம்’ கிந்து யூயம்’ ந ப்ரதீத², நிஜபிது ர்நாம்நா யாம்’ யாம்’ க்ரியாம்’ கரோமி ஸா க்ரியைவ மம ஸாக்ஷிஸ்வரூபா|
26 ஆனால், நீங்கள் என்னுடைய ஆடுகளாய் இராதபடியால், விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
கிந்த்வஹம்’ பூர்வ்வமகத²யம்’ யூயம்’ மம மேஷா ந ப⁴வத², காரணாத³ஸ்மாந் ந விஸ்²வஸித²|
27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிகொடுக்கின்றன. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் என்னைப் பின்பற்றுகின்றன.
மம மேஷா மம ஸ²ப்³த³ம்’ ஸ்²ரு’ண்வந்தி தாநஹம்’ ஜாநாமி தே ச மம பஸ்²சாத்³ க³ச்ச²ந்தி|
28 நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. (aiōn g165, aiōnios g166)
அஹம்’ தேப்⁴யோ(அ)நந்தாயு ர்த³தா³மி, தே கதா³பி ந நம்’க்ஷ்யந்தி கோபி மம கராத் தாந் ஹர்த்தும்’ ந ஸ²க்ஷ்யதி| (aiōn g165, aiōnios g166)
29 அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது.
யோ மம பிதா தாந் மஹ்யம்’ த³த்தவாந் ஸ ஸர்வ்வஸ்மாத் மஹாந், கோபி மம பிது​: கராத் தாந் ஹர்த்தும்’ ந ஸ²க்ஷ்யதி|
30 நானும் பிதாவும் ஒன்றே” என்றார்.
அஹம்’ பிதா ச த்³வயோரேகத்வம்|
31 அப்பொழுது யூதத்தலைவர்கள் இயேசுவின்மேல் எறியும்படி மீண்டும் கற்களை எடுத்துக்கொண்டார்கள்.
ததோ யிஹூதீ³யா​: புநரபி தம்’ ஹந்தும்’ பாஷாணாந் உத³தோலயந்|
32 ஆனால் இயேசுவோ அவர்களிடம், “என் பிதாவினிடத்தில் இருந்து பல நற்கிரியைகளை நான் உங்களுக்குக் காண்பித்தேன். இவைகளில் எதினிமித்தம் நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார்.
யீஸு²​: கதி²தவாந் பிது​: ஸகாஸா²த்³ ப³ஹூந்யுத்தமகர்ம்மாணி யுஷ்மாகம்’ ப்ராகாஸ²யம்’ தேஷாம்’ கஸ்ய கர்ம்மண​: காரணாந் மாம்’ பாஷாணைராஹந்தும் உத்³யதா​: ஸ்த²?
33 அதற்கு யூதர்கள், “நற்செயலினால் நாங்கள் உன்மேல் கல்லெறியவில்லை. ஆனால் ஒரு சாதாரண மனிதனாகிய நீ, உன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறாயே. அவ்விதம் நீ இறைவனை நிந்தித்துப் பேசியதற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள்.
யிஹூதீ³யா​: ப்ரத்யவத³ந் ப்ரஸ²ஸ்தகர்ம்மஹேதோ ர்ந கிந்து த்வம்’ மாநுஷ​: ஸ்வமீஸ்²வரம் உக்த்வேஸ்²வரம்’ நிந்த³ஸி காரணாத³ஸ்மாத் த்வாம்’ பாஷாணைர்ஹந்ம​: |
34 “உங்கள் சட்டத்தில், ‘நீங்கள் “தெய்வங்களாய்” இருக்கிறீர்கள்’ என்று எழுதியிருக்கவில்லையா? என இயேசு அவர்களிடம் கேட்டார்.
ததா³ யீஸு²​: ப்ரத்யுக்தவாந் மயா கதி²தம்’ யூயம் ஈஸ்²வரா ஏதத்³வசநம்’ யுஷ்மாகம்’ ஸா²ஸ்த்ரே லிகி²தம்’ நாஸ்தி கிம்’?
35 இறைவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களை அவர், ‘கடவுள்கள்’ என்று சொல்லியிருக்கிறாரே. வேதவசனமும் தவறாக இருக்கமுடியாதே.
தஸ்மாத்³ யேஷாம் உத்³தே³ஸே² ஈஸ்²வரஸ்ய கதா² கதி²தா தே யதீ³ஸ்²வரக³ணா உச்யந்தே த⁴ர்ம்மக்³ரந்த²ஸ்யாப்யந்யதா² ப⁴விதும்’ ந ஸ²க்யம்’,
36 அப்படியானால் பிதாவினால் தனக்கென வேறுபிரித்து இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் என்னை, ‘இறைவனுடைய மகன்’ என்று சொன்னதால், நான் இறைவனை நிந்திக்கிறேன் என்று நீங்கள் எப்படி என்னில் குற்றம் காணலாம்?
தர்ஹ்யாஹம் ஈஸ்²வரஸ்ய புத்ர இதி வாக்யஸ்ய கத²நாத் யூயம்’ பித்ராபி⁴ஷிக்தம்’ ஜக³தி ப்ரேரிதஞ்ச புமாம்’ஸம்’ கத²ம் ஈஸ்²வரநிந்த³கம்’ வாத³ய?
37 நான் என் பிதாவுக்குரியவற்றைச் செய்யாவிட்டால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டாம்.
யத்³யஹம்’ பிது​: கர்ம்ம ந கரோமி தர்ஹி மாம்’ ந ப்ரதீத;
38 ஆனால் அவைகளை நான் செய்தால், நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டாலும் கூட கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அப்பொழுது பிதா என்னில் இருக்கிறார் என்பதையும், நான் பிதாவில் இருக்கிறேன் என்பதையும் நீங்கள் அறிந்து விளங்கிக்கொள்வீர்கள்” என்றார்.
கிந்து யதி³ கரோமி தர்ஹி மயி யுஷ்மாபி⁴​: ப்ரத்யயே ந க்ரு’தே(அ)பி கார்ய்யே ப்ரத்யய​: க்ரியதாம்’, ததோ மயி பிதாஸ்தீதி பிதர்ய்யஹம் அஸ்மீதி ச க்ஷாத்வா விஸ்²வஸிஷ்யத²|
39 எனவே அவர்கள் மீண்டும் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் அவரோ அவர்களுடைய பிடியில் அகப்படாமல் தப்பிப்போய்விட்டார்.
ததா³ தே புநரபி தம்’ த⁴ர்த்தும் அசேஷ்டந்த கிந்து ஸ தேஷாம்’ கரேப்⁴யோ நிஸ்தீர்ய்ய
40 பின்பு இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து ஆரம்ப நாட்களிலே யோவான் திருமுழுக்கு கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு போய், அங்கே தங்கினார்.
புந ர்யர்த்³த³ந் அத்³யாஸ்தடே யத்ர புர்வ்வம்’ யோஹந் அமஜ்ஜயத் தத்ராக³த்ய ந்யவஸத்|
41 அநேகர் அவரிடத்தில் வந்து. அவர்கள் அவரிடம், “யோவான் ஒருபோதும் ஒரு அடையாளத்தையும் செய்யவில்லை. ஆனாலும் இவரைக்குறித்து யோவான் சொன்னவை எல்லாம் உண்மையாய் இருக்கிறது” என்றார்கள்.
ததோ ப³ஹவோ லோகாஸ்தத்ஸமீபம் ஆக³த்ய வ்யாஹரந் யோஹந் கிமப்யாஸ்²சர்ய்யம்’ கர்ம்ம நாகரோத் கிந்த்வஸ்மிந் மநுஷ்யே யா ய​: கதா² அகத²யத் தா​: ஸர்வ்வா​: ஸத்யா​: ;
42 அவ்விடத்திலே அநேகர் இயேசுவில் விசுவாசம் வைத்தார்கள்.
தத்ர ச ப³ஹவோ லோகாஸ்தஸ்மிந் வ்யஸ்²வஸந்|

< யோவான் 10 >