< யோவேல் 3 >

1 “அந்நாட்களிலும் அவ்வேளையிலும், யூதாவையும் எருசலேமையும் முன்னிருந்த நிலைக்கு நான் திரும்பவும் கொண்டுவருவேன்.
ఆ రోజుల్లో, ఆ సమయంలో యూదావారిని, యెరూషలేము నివాసులను నేను చెరలోనుంచి రప్పించేటప్పుడు,
2 நான் எல்லா நாடுகளையும் ஒன்றுசேர்த்து, அவர்களை யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவேன். அங்கே நான் என் உரிமைச்சொத்தான இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு அவர்களுக்கு விரோதமாய் நியாயந்தீர்பேன்; ஏனெனில் அவர்கள் என் மக்களை பிறநாடுகள் மத்தியில் சிதறடித்து, என் நாட்டையும் தங்களிடையே பங்கிட்டுக்கொண்டார்கள்.
ఇతర ప్రజలందరినీ సమకూర్చి, యెహోషాపాతు లోయకు వారిని తీసుకువస్తాను. నా ప్రజలను బట్టి, నా సొత్తయిన ఇశ్రాయేలును బట్టి నేను అక్కడ వారిని శిక్షిస్తాను. వారు నా ప్రజలను ఇతర ప్రజల మధ్యకు చెదరగొట్టి నా దేశాన్ని పంచుకున్నారు.
3 என் மக்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள், வேசிகளுக்கான கூலியாக ஆண்பிள்ளைகளைக் கொடுத்தார்கள், தாங்கள் திராட்சை இரசம் குடிப்பதற்காக பெண்பிள்ளைகளை விற்றார்கள்.
వారు నా ప్రజలకు చీట్లు వేసి, ఒక పసివాణ్ణి ఇచ్చి వేశ్యను తీసుకున్నారు. తాగడానికి ద్రాక్ష మద్యం కోసం ఒక పిల్లను అమ్మేశారు.
4 “தீரு, சீதோன் பட்டணங்களே, பெலிஸ்தியரின் எல்லா பிரதேசங்களே, எனக்கு விரோதமாய் உங்களுக்கு என்ன இருக்கிறது? நான் ஏதாவது செய்ததற்காகவா நீங்கள் என்னைப் பழிவாங்குகிறீர்கள்? அப்படி நீங்கள் என்னைப் பழிவாங்கினால், நான் தாமதமின்றி விரைவாக நீங்கள் செய்தவற்றை உங்கள் சொந்த தலைமேலேயே திருப்புவேன்.
తూరు, సీదోను, ఫిలిష్తీయ ప్రాంత నివాసులారా, నా మీద మీకెందుకు కోపం? నా మీద ప్రతీకారం చూపిస్తారా? మీరు నా మీద ప్రతీకారం చూపించినా మీరు చేసినదాన్ని త్వరలోనే మీ నెత్తి మీదికి రప్పిస్తాను.
5 என் வெள்ளியையும் என் தங்கத்தையும் நீங்கள் எடுத்து, என் சிறந்த திரவியங்களையும் அள்ளிக்கொண்டு, உங்கள் கோயில்களுக்குப் போனீர்கள்.
మీరు నా వెండి, నా బంగారాలను తీసుకుపోయారు. నా విలువైన వస్తువులను పట్టుకుపోయి మీ గుళ్లలో ఉంచుకున్నారు.
6 யூதா, எருசலேம் மக்களை அவர்கள் தாய்நாட்டிலிருந்து தூரமாய் அனுப்புவதற்காக அவர்களைக் கிரேக்கருக்கு நீங்கள் விற்றுவிட்டீர்கள்.
యూదావారూ యెరూషలేము నగరవాసులూ తమ ప్రాంతం నుంచి దూరంగా ఉండాలని మీరు వారిని గ్రీకులకు అమ్మేశారు.
7 “இதோ, நீங்கள் விற்ற இடங்களிலிருந்து அவர்களை மீண்டும் எழுப்பப்போகிறேன். நீங்கள் செய்ததை உங்கள் தலைகள் மேலேயே திருப்புவேன்.
మీరు చేసిన దాన్ని మీ నెత్తి మీదికి రప్పిస్తాను. మీరు వారిని అమ్మి పంపేసిన స్థలాలనుంచి వారు తిరిగి వచ్చేలా చేస్తాను.
8 உங்கள் மகன்களையும் மகள்களையும் யூதா மக்களுக்கு விற்பேன். அவர்கள் அவர்களை தூரதேசத்திலுள்ள நாட்டாரான சபேயருக்கு விற்பார்கள்.” இதை யெகோவாவே சொன்னார்.
మీ కొడుకులనూ కూతుళ్ళను యూదావారికి అమ్మివేస్తాను. వారు దూరంగా ఉండే షెబాయీయులకు వారిని అమ్మేస్తారు. యెహోవా ఈ మాట చెప్పాడు.
9 பிற நாடுகளிடையே இதை அறிவியுங்கள்; யுத்தத்திற்குத் தயாராகுங்கள்; இராணுவவீரரை எழுப்புங்கள்; போர்வீரர்கள் அனைவரும் நெருங்கிப்போய் தாக்கட்டும்.
రాజ్యాల్లో ఈ విషయం చాటించండి, యుద్ధానికి సిద్ధపడండి. శూరులను రేపండి. వారిని దగ్గరికి రమ్మనండి. సైనికులంతా రావాలి.
10 உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும், உங்கள் வெட்டுக்கத்திகளை ஈட்டிகளாகவும் அடியுங்கள். பெலவீனன், “நான் பெலனுள்ளவன்!” என்று சொல்லட்டும்.
౧౦మీ నాగటి కర్రులను సాగగొట్టి కత్తులు చేయండి. మీ మడ్డికత్తులు సాగగొట్టి ఈటెలు చేయండి. “నాకు బలముంది” అని బలం లేనివాడు అనుకోవాలి.
11 சுற்றுப்புறம் எங்குமுள்ள நாடுகளே, நீங்கள் எல்லோரும் விரைந்துவந்து, அங்கே ஒன்றுகூடுங்கள். யெகோவாவே உமது படைவீரர்களைக் கொண்டுவாரும்!
౧౧చుట్టుపట్లనున్న రాజ్యాల్లారా, మీరంతా త్వరగా సమకూడిరండి. యెహోవా, నీ గొప్ప శూరులను ఇక్కడికి తీసుకు రా.
12 “பிறநாடுகள் எழும்பட்டும்; யோசபாத்தின் பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறிப் போகட்டும். அங்கே நான், சுற்றுப்புறம் எங்குமுள்ள பிறநாடுகள் அனைத்தையும் நியாயந்தீர்ப்பதற்காக உட்காருவேன்.
౧౨రాజ్యాలు లేచి యెహోషాపాతు లోయలోకి రావాలి. చుట్టు పక్కలుండే రాజ్యాలకు తీర్పు తీర్చడానికి నేను అక్కడ కూర్చుంటాను.
13 விளைச்சல் முதிர்ந்துள்ளது, அரிவாளை நீட்டி அறுங்கள். திராட்சைப்பழ ஆலைகள் நிரம்பியுள்ளன, வந்து திராட்சைப் பழங்களை மிதியுங்கள்; இரசத் தொட்டிகளும் நிறைந்து பொங்கி வழிகின்றன; இவ்வளவாய் அவர்களின் கொடுமை பெரியது!”
౧౩పంట పండింది. కొడవలి పెట్టి కోయండి. రండి, ద్రాక్ష పళ్ళను తొక్కండి. గానుగ నిండి ఉంది. తొట్లు పొర్లి పారుతున్నాయి. వారి అపరాధం చాలా ఎక్కువగా ఉంది.
14 தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் மக்கள் கூட்டங்கூட்டமாய் இருக்கின்றனர். தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் யெகோவாவின் நாள் சமீபித்துள்ளது.
౧౪తీర్పు తీర్చే లోయలో యెహోవా దినం సమీపంగా ఉంది. తీర్పు తీర్చే లోయలో ప్రజలు గుంపులు గుంపులుగా కూడి ఉన్నారు.
15 சூரியனும் சந்திரனும் இருளடையும், நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடாதிருக்கும்.
౧౫సూర్య చంద్రులు చీకటైపోతారు. నక్షత్రాల కాంతి తప్పింది.
16 யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து முழங்குவார்; வானமும் பூமியும் அதிரும். ஆனால் யெகோவா தம் மக்களுக்குப் புகலிடமும் இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார்.
౧౬యెహోవా సీయోనులో నుంచి గర్జిస్తాడు. యెరూషలేములోనుంచి తన స్వరం పెంచుతాడు. భూమ్యాకాశాలు కంపిస్తాయి. అయితే యెహోవా తన ప్రజలకు ఆశ్రయం. ఇశ్రాయేలీయులకు కోటగా ఉంటాడు.
17 “அப்பொழுது என் பரிசுத்த மலையாகிய சீயோனில் வாழ்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; பிறநாட்டார் இனி ஒருபோதும் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.
౧౭మీ యెహోవా దేవుణ్ణి నేనే, నా పవిత్ర పర్వతమైన సీయోనులో నివసిస్తున్నానని మీరు తెలుసుకుంటారు. అప్పుడు యెరూషలేము పవిత్ర పట్టణంగా ఉంటుంది. వేరే దేశాల సేనలు దానిగుండా మళ్ళీ వెళ్ళరు.
18 “அந்நாட்களில் மலைகளில் புதிய திராட்சை இரசம் பொழியும், குன்றுகள் பாலாய் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பியோடும். யெகோவாவின் ஆலயத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பி, சித்தீம் பள்ளத்தாக்கிற்கு தண்ணீர் பாய்ச்சும்.
౧౮ఆ రోజుల్లో పర్వతాల మీద నుంచి కొత్త ద్రాక్షారసం పారుతుంది. కొండల మీద నుంచి పాలు ప్రవహిస్తాయి. యూదా వాగులన్నిటిలో నీళ్లు పారుతాయి. యెహోవా మందిరంలో నుంచి నీటి ఊట ఉబికి పారి, షిత్తీము లోయను తడుపుతుంది.
19 யூதா நாட்டில் குற்றமற்ற இரத்தம் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் எகிப்து பாழாகும், ஏதோம் பாழடைந்து பாலைவனமாகும்.
౧౯కాబట్టి ఐగుప్తుదేశం పాడవుతుంది. ఎదోము దేశం పాడైన ఎడారి అవుతుంది. ఎందుకంటే యూదావారి మీద వాళ్ళు దౌర్జన్యం చేశారు, వారి దేశంలో నిర్దోషుల రక్తం ఒలికించారు.
20 யூதா என்றென்றும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியிருக்கும் இடமாகும்.
౨౦యూదాలో ప్రజలు కలకాలం నివసిస్తారు. తరతరాలకు యెరూషలేము నివాస స్థలంగా ఉంటుంది.
21 அவர்களுடைய இரத்தப்பழியை நான் தண்டியாமல் விடுவேனோ? நான் தண்டிப்பேன்.”
౨౧వారి ప్రాణ నష్టానికి నేను ఇదివరకూ చేయని ప్రతీకారం చేస్తాను. యెహోవా సీయోనులో నివసిస్తున్నాడు.

< யோவேல் 3 >