< யோபு 5 >
1 “நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்? பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்?
Взывай, если есть отвечающий тебе. И к кому из святых обратишься ты?
2 கோபம் மூடனைக் கொல்லும், பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும்.
Так, глупца убивает гневливость, и несмысленного губит раздра-жительность.
3 மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன், ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.
Видел я, как глупец укореняется, и тотчас проклял дом его.
4 அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள், வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள்.
Дети его далеки от счастья, их будут бить у ворот, и не будет заступника.
5 பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்; பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர்.
Жатву его съест голодный и из-за терна возьмет ее, и жаждущие поглотят имущество его.
6 ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை; தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.
Так, не из праха выходит горе, и не из земли вырастает беда;
7 தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
но человек рождается на страдание, как искры, чтобы устремляться вверх.
8 “ஆனாலும் நான், இறைவனைத் தேடி, அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.
Но я к Богу обратился бы, предал бы дело мое Богу,
9 அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
Который творит дела великие и неисследимые, чудные без числа,
10 பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.
дает дождь на лице земли и посылает воды на лице полей;
11 அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி, துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.
униженных поставляет на высоту, и сетующие возносятся во спасение.
12 அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.
Он разрушает замыслы коварных, и руки их не довершают предприятия.
13 இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.
Он уловляет мудрецов их же лукавством, и совет хитрых становится тщетным:
14 பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்; இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.
днем они встречают тьму и в полдень ходят ощупью, как ночью.
15 இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து, வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
Он спасает бедного от меча, от уст их и от руки сильного.
16 ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, அநீதி தன் வாயை மூடும்.
И есть несчастному надежда, и неправда затворяет уста свои.
17 “இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.
Блажен человек, которого вразумляет Бог, и потому наказания Вседержителева не отвергай,
18 அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
ибо Он причиняет раны и Сам обвязывает их; Он поражает, и Его же руки врачуют.
19 ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.
В шести бедах спасет тебя, и в седьмой не коснется тебя зло.
20 பஞ்சத்தில் சாவிலிருந்தும் யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.
Во время голода избавит тебя от смерти, и на войне - от руки меча.
21 தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்; பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய்.
От бича языка укроешь себя и не убоишься опустошения, когда оно придет.
22 அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
Опустошению и голоду посмеешься и зверей земли не убоишься,
23 வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.
ибо с камнями полевыми у тебя союз, и звери полевые в мире с тобою.
24 உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.
И узнаешь, что шатер твой в безопасности, и будешь смотреть за домом твоим, и не согрешишь.
25 உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய். உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள்.
И увидишь, что семя твое многочисленно, и отрасли твои, как трава на земле.
26 ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.
Войдешь во гроб в зрелости, как укладываются снопы пшеницы в свое время.
27 “நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”
Вот, что мы дознали; так оно и есть: выслушай это и заметь для себя.