< யோபு 40 >

1 மேலும் யெகோவா யோபுவிடம் சொன்னதாவது:
上主又接著問約伯說:
2 “எல்லாம் வல்லவருடன் வாதாடுகிறவன் அவரைத் திருத்துவானோ? இறைவனைக் குற்றம் சாட்டுகிறவன் அவருக்குப் பதிலளிக்கட்டும்.”
好辯之士,豈能同全能者辯論﹖非難天主的,請答覆這一切!
3 யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது:
約伯回答上主說:「
4 “நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்? நான் என் கையினால் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
看,我這麼卑賤,我能回答什麼﹖只好用手掩口。
5 நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை; நான் இனிமேல் ஒன்றுமே சொல்லமாட்டேன்.”
我說過一次,再不敢重複;我再說一次:我不敢再說什麼! 」
6 அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
上主由旋風中回答約伯說:
7 “இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்; நான் உன்னிடம் கேள்வி கேட்பேன், நீ எனக்குப் பதில் சொல்.
你要像勇士束好腰,我要問你,請指教我。
8 “நீ என் நீதியை அவமதிப்பாயோ? நீ உன்னை நீதியுள்ளவனாக்குவதற்கு, என்னைக் குற்றவாளியென்று தீர்ப்பாயோ?
你豈能推翻我的評斷,歸罪於我,而自以為有理﹖
9 உன் புயம் இறைவனுடையதைப் போன்றதோ? உன் குரல் அவருடைய குரலைப்போல் முழங்குமோ?
你的手臂豈能同天主的相比﹖你的聲音,那能像雷鳴﹖
10 அப்படியானால் உன்னை மகிமையினாலும் மகத்துவத்தினாலும் அழகுபடுத்தி, மேன்மையையும் மாட்சிமையையும் உடுத்திக்கொள்.
請你以尊貴和高雅作你的點綴,以光華美麗作你的衣裳;
11 உன் கோபத்தின் சீற்றத்தை வீசி, பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்து.
發洩你的烈怒,貶抑一切高傲的人;
12 பெருமையுள்ள ஒவ்வொரு மனிதனையும் பார்த்து அவர்களைத் தாழ்மைப்படுத்து; கொடியவர்களை அவர்கள் நிற்கும் இடத்திலேயே நசுக்கிப் போடு.
視察一切傲慢的人,且加以制服,推翻惡人所處的地位;
13 அவர்கள் எல்லோரையும் ஒன்றாய் தூசிக்குள் புதைத்துவிடு; கல்லறையின் உள்ளே அவர்களின் முகங்களை மூடிப்போடு.
將他們一同埋在土中,把他們都關在黑暗中!
14 அப்பொழுது உன் வலதுகையே உன்னை மீட்கும் என்று நானும் ஒத்துக்கொள்வேன்.
如果你能這樣作,我也要稱讚你,因為你的右手救護了你。
15 “இப்பொழுது உன்னோடுகூட நான் படைத்த நீர்யானையைப் பார்; அது எருதைப் போலவே புல் மேய்கிறது.
且看河馬,牠同你都是我造成的,牠像牛一樣吃草。
16 அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு? அதின் வயிற்றின் தசைநார்களின் வலிமை எவ்வளவு?
牠的精力全在腰部,牠的力量是在腹部的肌肉;
17 அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது; அதின் இடுப்பு நரம்புகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன.
牠挺起尾巴好像香柏,大腿上的筋聯結在一起;
18 அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும், கால்கள் இரும்புத் தூண்களைப் போலவும் இருக்கின்றன.
牠的脊骨好似銅管,牠的骨骸有如鐵杠。
19 இறைவனின் படைப்புகளில் இதுவே முதலிடம் பெறுகிறது; இருந்தும் அதைத் தமது வாளுடன் அணுக அதைப் படைத்தவரால் முடியும்.
牠是天主的傑作,造牠者賜給了牠利刃。
20 குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்; காட்டு விலங்குகளெல்லாம் அதனருகில் விளையாடும்.
群山供給牠食物,百獸在那裏同牠遊戲。
21 அது தாமரையின் கீழும், நாணலின் மறைவில் சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
牠臥在蓮葉之下,躺在蘆葦和沼澤深處;
22 தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன; ஆற்றலறிகள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன.
蓮葉的蔭影遮蔽著牠,溪邊的楊柳掩護著牠。
23 ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை; யோர்தான் நதி அதின் வாய்க்கெதிராகப் பெருக்கெடுத்து ஓடினாலும், அது உறுதியாயிருக்கும்.
河水漲溢之時,牠毫不戰慄;約但河漲到牠口邊,牠仍安寧。
24 அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?
誰能在牠目前捕捉牠,或以木橛穿透牠的鼻孔﹖

< யோபு 40 >