< யோபு 4 >

1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக:
2 யாராவது ஒருவர் உன்னுடன் பேசத் துணிந்தால், நீ பொறுமையாய் இருப்பாயோ? ஆனால் யாரால்தான் பேசாதிருக்க முடியும்?
நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்?
3 நீ அநேகருக்கு புத்தி சொல்லி, தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியிருக்கிறாய்.
இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, சோர்ந்த கைகளைத் திடப்படுத்தினீர்.
4 தடுக்கி விழுந்தவர்களை உன் வார்த்தைகள் தாங்கியிருக்கின்றன; தள்ளாடிய முழங்கால்களை நீ உறுதிபடுத்தியிருக்கிறாய்.
விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
5 இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்; அது உன்னைத் தாக்கியதும் நீ மனங்கலங்கிப் போனாய்.
இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
6 உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும், குற்றமற்ற வழிகள் உனக்கு நல் எதிர்பார்ப்பாயும் இருக்கவேண்டும் அல்லவோ?
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
7 குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ? நேர்மையானவர்கள் அழிக்கப்பட்டதுண்டோ? என இப்பொழுது யோசித்துப்பார்.
குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அழிக்கப்பட்டது எப்போது? இதை நினைத்துப்பாரும்.
8 தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள், அதையே அறுக்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
9 இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
10 சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம், ஆனாலும் அந்த பெருஞ்சிங்கத்தின் பற்கள் உடைக்கப்படுகின்றன.
௧0சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
11 சிங்கம் இரையில்லாமல் இறந்துபோகும், சிங்கக் குட்டிகளோ சிதறிப்போகும்.
௧௧கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், பாலசிங்கங்கள் சிதறிப்போகும்.
12 “இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது, அதின் மெல்லிய ஓசை என் காதுகளில் விழுந்தது.
௧௨இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
13 மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, இரவில் அமைதியைக் கெடுக்கும் கனவுகளின் மத்தியில்,
௧௩மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
14 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளையெல்லாம் நடுங்கச் செய்தன.
௧௪பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்னால் செல்லுகையில் என் உடலின் முடி சிலிர்த்து நின்றது.
௧௫அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
16 ஆவி நின்றது, அதின் தோற்றத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஒரு உருவம் என் கண்கள் முன் நின்றது, அப்பொழுது நான் முணுமுணுக்கும் குரலைக் கேட்டேன்:
௧௬அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
17 ‘மனிதன் இறைவனைவிட நீதிமானாய் இருக்க முடியுமோ? தன்னைப் படைத்தவரைவிட அதிக தூய்மையாய் இருப்பானோ?
௧௭மனிதன் தேவனைவிட நீதிமானாயிருப்பானோ? மனிதன் தன்னை உண்டாக்கினவரைவிட சுத்தமாயிருப்பானோ?
18 இறைவன் தமது ஊழியர்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார், அவர் தன் தூதர்களிலும் குறைகண்டிருக்கிறார்.
௧௮கேளும், அவர் தம்முடைய வேலைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
19 அப்படியிருக்க தூசியில் அஸ்திபாரமிட்டு, களிமண் வீட்டில் வாழ்பவர்களும், பூச்சிபோல் நசுக்கப்படுகிறவர்களுமாகிய மனிதரின் குறையை அவர் காணாமலிருப்பாரோ?
௧௯புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
20 அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும், கவனிப்பார் ஒருவருமில்லாமல் நிலையான அழிவை அடைகிறார்கள்.
௨0காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நிலையான அழிவை அடைகிறார்கள்.
21 அவர்களுடைய கூடாரத்தின் கயிறுகள் மேலே இழுக்கப்பட்டு, அவை ஞானமில்லாமல் சாவதில்லையா?’
௨௧அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் இறக்கிறார்களே என்று சொன்னான்.

< யோபு 4 >