< யோபு 32 >

1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள்.
ヨブみづから見て己の正義とするに因て此三人の者之に答ふる事を止む
2 ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான்.
時にラムの族ブジ人バラケルの子エリフ怒を發せり ヨブ神よりも己を正しとするに因て彼ヨブにむかひて怒を發せり
3 அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள்.
またヨブの三人の友答ふるに詞なくして猶ヨブを罪ありとせしによりて彼らにむかひて怒を發せり
4 எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள்.
エリフはヨブに言ふことをひかへて俟をりぬ 是は自己よりも彼等年老たればなり
5 ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது.
茲にエリフこの三人の口に答ふる詞の有ざるを見て怒を發せり
6 எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்: “நான் வயதில் இளையவன், நீங்களோ முதியவர்கள்; அதினால் நான் அறிந்ததைத் துணிந்து சொல்லப் பயந்திருந்தேன்.
ブジ人バラケルの子エリフすなはち答へて曰く 我は年少く汝等は年老たり是をもて我はばかりて我意見をなんぢらに陳ることを敢てせざりき
7 ‘முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன்.
我意へらく日を重ねたる者宜しく言を出すべし 年を積たる者宜しく智慧を教ふべしと
8 மனிதரில் இருக்கும் ஆவியாகிய எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது.
但し人の衷には靈あり 全能者の氣息人に聰明を與ふ
9 முதியோர் மட்டுமே ஞானிகளல்ல; வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
大なる人すべて智慧あるに非ず 老たる者すべて道理に明白なるに非ず
10 “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
然ば我言ふ 我に聽け 我もわが意見を陳べん
11 நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து, உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
視よ我は汝らの言語を俟ち なんぢらの辯論を聽き なんぢらが言ふべき言語を尋ね盡すと待り
12 நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை; அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
われ細に汝らに聽しが汝らの中にヨブを駁折る者一人も無く また彼の言詞に答ふる者も無し
13 ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
おそらくは汝等いはん 我ら智慧を見得たり 彼に勝つ者は唯神のみ 人は能はずと
14 யோபு என்னோடு வாதாடவில்லை, நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
彼はその言語を我に向て發さざりき 我はまた汝らの言ふ所をもて彼に答へじ
15 “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
彼らは愕きて復答ふる所なく 言語かれらの衷に浮ばず
16 இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
彼等ものいはず立とどまりて重ねて答へざればとて我あに俟をるべけんや
17 இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
我も自らわが分を答へわが意見を吐露さん
18 பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
我には言滿ち わが衷の心しきりに迫る
19 என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
わが腹は口を啓かざる酒のごとし 新しき皮嚢のごとく今にも裂んとす
20 நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
われ説いだして胸を安んぜんとす われ口を啓きて答へん
21 நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
かならず我は人に偏らず 人に諂はじ
22 நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.
我は諂ふことを知ず もし諂はば我の造化主ただちに我を絶たまふべし

< யோபு 32 >