< யோபு 26 >
1 அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
௧யோபு மறுமொழியாக:
2 “பெலவீனமானவனுக்கு நீ எப்படி உதவினாய்? தளர்ந்த கையை நீ எப்படித் தாங்கினாய்?
௨“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?
3 ஞானமில்லாத ஒருவனுக்கு நீ எப்படி புத்திமதி கூறி, சிறந்த மெய்யறிவைக் காட்டியிருக்கிறாய்?
௩நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்?
4 இந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்கு உதவியவர் யார்? யாருடைய ஆவி உன் வாயிலிருந்து பேசிற்று?
௪யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
5 “தண்ணீரின்கீழ் மடிந்தவர்களும் அவர்களோடே இருப்பவர்களும், இறந்தவர்களின் ஆவிகளும் பயந்து நடுங்குகின்றன.
௫தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
6 பாதாளம் இறைவனுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கிறது; நரகம் திறந்திருக்கிறது. (Sheol )
௬அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. (Sheol )
7 இறைவன் வெறுமையான வெளியில் வடதிசை வானங்களை விரிக்கிறார், அவர் பூமியை அந்தரத்திலே தொங்கவிடுகிறார்.
௭அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
8 அவர் தண்ணீரைத் தம்முடைய மேகங்களில் சுற்றி வைக்கிறார், ஆனாலும் அவைகளின் பாரத்தால் மேகங்கள் கிழிந்து போவதில்லை.
௮அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
9 அவர் சிங்காசனத்தின் மேற்பரப்பின் மேலாகத் தமது மேகத்தை விரித்து, அதை மூடிவைக்கிறார்.
௯அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
10 அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார்.
௧0அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.
11 வானத்தின் தூண்கள், அவருடைய கண்டனத்தால் திகைத்து நடுங்குகின்றன.
௧௧அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
12 அவர் தமது வல்லமையினால் கடலை அமர்த்துகிறார், தமது ஞானத்தினால் ராகாப் கடல் விலங்கைத் துண்டுகளாக வெட்டுகிறார்.
௧௨அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
13 அவருடைய சுவாசத்தினால் ஆகாயங்கள் அழகாயின; அவருடைய கரம் நெளியும் பாம்பை ஊடுருவிக் குத்தியது.
௧௩தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
14 இவை அவருடைய செயல்களில் வெளிப்புற விளிம்பு மட்டுமே; அவரைப்பற்றி நாம் கேள்விப்பட்டது மிகக் கொஞ்சமே; அப்படியானால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை விளங்கிக்கொள்பவன் யார்?”
௧௪இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.