< எரேமியா 7 >

1 யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே:
הַדָּבָר אֲשֶׁר הָיָה אֶֽל־יִרְמְיָהוּ מֵאֵת יְהוָה לֵאמֹֽר׃
2 “நீ யெகோவாவின் ஆலய வாசலில் நின்று இச்செய்தியைப் பிரசித்தப்படுத்து: “‘யெகோவாவை வழிபட இந்த வாசல்களின் வழியாக வருகிற யூதா நாட்டு மக்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
עֲמֹד בְּשַׁעַר בֵּית יְהוָה וְקָרָאתָ שָּׁם אֶת־הַדָּבָר הַזֶּה וְאָמַרְתָּ שִׁמְעוּ דְבַר־יְהוָה כָּל־יְהוּדָה הַבָּאִים בַּשְּׁעָרִים הָאֵלֶּה לְהִֽשְׁתַּחֲוֺת לַיהוָֽה׃
3 இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்திருத்துங்கள். அப்பொழுது நான் உங்களை இந்த இடத்தில் வாழவிடுவேன்.
כֹּֽה־אָמַר יְהוָה צְבָאוֹת אֱלֹהֵי יִשְׂרָאֵל הֵיטִיבוּ דַרְכֵיכֶם וּמַֽעַלְלֵיכֶם וַאֲשַׁכְּנָה אֶתְכֶם בַּמָּקוֹם הַזֶּֽה׃
4 ஏமாற்றும் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, “இதுவே யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம்!” என்று சொல்லாதிருங்கள்.
אַל־תִּבְטְחוּ לָכֶם אֶל־דִּבְרֵי הַשֶּׁקֶר לֵאמֹר הֵיכַל יְהוָה הֵיכַל יְהוָה הֵיכַל יְהוָה הֵֽמָּה׃
5 நீங்கள் உண்மையாக உங்கள் வழிகளையும், செயல்களையும் மாற்றி, ஒருவரோடொருவர் நீதியாய் நடவுங்கள்,
כִּי אִם־הֵיטֵיב תֵּיטִיבוּ אֶת־דַּרְכֵיכֶם וְאֶת־מַֽעַלְלֵיכֶם אִם־עָשׂוֹ תַֽעֲשׂוּ מִשְׁפָּט בֵּין אִישׁ וּבֵין רֵעֵֽהוּ׃
6 அந்நியரையும், தந்தையற்றவர்களையும், விதவைகளையும் ஒடுக்கவேண்டாம். இந்த இடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும், வேறு தெய்வங்களைப் பின்பற்றி உங்களுக்கே தீங்கை உண்டாக்காமலும் இருங்கள்.
גֵּר יָתוֹם וְאַלְמָנָה לֹא תַֽעֲשֹׁקוּ וְדָם נָקִי אַֽל־תִּשְׁפְּכוּ בַּמָּקוֹם הַזֶּה וְאַחֲרֵי אֱלֹהִים אֲחֵרִים לֹא תֵלְכוּ לְרַע לָכֶֽם׃
7 அப்படி இருப்பீர்களானால், உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமாக நான் கொடுத்த இந்த நாட்டிலுள்ள, இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்க வைப்பேன்.
וְשִׁכַּנְתִּי אֶתְכֶם בַּמָּקוֹם הַזֶּה בָּאָרֶץ אֲשֶׁר נָתַתִּי לַאֲבֽוֹתֵיכֶם לְמִן־עוֹלָם וְעַד־עוֹלָֽם׃
8 ஆனால் பாருங்கள், நீங்கள் பயனற்ற ஏமாற்று வார்த்தைகளையே நம்புகிறீர்கள்.
הִנֵּה אַתֶּם בֹּטְחִים לָכֶם עַל־דִּבְרֵי הַשָּׁקֶר לְבִלְתִּי הוֹעִֽיל׃
9 “‘நீங்கள் திருடுகிறீர்கள், கொலைசெய்கிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், பொய் சத்தியம் பண்ணுகிறீர்கள், பாகாலுக்குத் தூபங்காட்டுகிறீர்கள், நீங்கள் அறியாத வேறு தெய்வங்களைப் பின்பற்றுகிறீர்கள்.
הֲגָנֹב ׀ רָצֹחַ וְֽנָאֹף וְהִשָּׁבֵעַ לַשֶּׁקֶר וְקַטֵּר לַבָּעַל וְהָלֹךְ אַחֲרֵי אֱלֹהִים אֲחֵרִים אֲשֶׁר לֹֽא־יְדַעְתֶּֽם׃
10 பின்பு என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கு முன்பாக வந்துநின்று, “நாங்கள் பாதுகாப்பாயிருக்கிறோம்” என்கிறீர்கள். இந்த எல்லா அருவருப்புகளையும் செய்வதற்காகவா நீங்கள் பாதுகாக்கப்பட்டீர்கள்?
וּבָאתֶם וַעֲמַדְתֶּם לְפָנַי בַּבַּיִת הַזֶּה אֲשֶׁר נִקְרָא־שְׁמִי עָלָיו וַאֲמַרְתֶּם נִצַּלְנוּ לְמַעַן עֲשׂוֹת אֵת כָּל־הַתּוֹעֵבוֹת הָאֵֽלֶּה׃
11 என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயம் உங்களுக்கு கள்ளர் குகையானதோ? ஆனால் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கிறேன்! என்று யெகோவா அறிவிக்கிறார்.
הַמְעָרַת פָּרִצִים הָיָה הַבַּיִת הַזֶּה אֲשֶׁר־נִקְרָֽא־שְׁמִי עָלָיו בְּעֵינֵיכֶם גַּם אָנֹכִי הִנֵּה רָאִיתִי נְאֻם־יְהוָֽה׃
12 “‘இப்பொழுது சீலோவில் உள்ள இடத்திற்கு போங்கள். அதையே என் பெயருக்குரிய இருப்பிடமாக முதன்முதலில் ஏற்படுத்தினேன். அங்கே என் மக்களாகிய இஸ்ரயேலருடைய கொடுமையினிமித்தம், அதற்கு நான் என்ன செய்தேன் என்று பாருங்கள்.
כִּי לְכוּ־נָא אֶל־מְקוֹמִי אֲשֶׁר בְּשִׁילוֹ אֲשֶׁר שִׁכַּנְתִּֽי שְׁמִי שָׁם בָּרִֽאשׁוֹנָה וּרְאוּ אֵת אֲשֶׁר־עָשִׂיתִי לוֹ מִפְּנֵי רָעַת עַמִּי יִשְׂרָאֵֽל׃
13 நீங்கள் இந்தச் செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கும்போது, நான் திரும்பத்திரும்ப உங்களுடன் பேசினேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை; நான் உங்களைக் கூப்பிட்டேன், நீங்களோ பதில் தரவில்லை என்று யெகோவா அறிவிக்கிறார்.
וְעַתָּה יַעַן עֲשׂוֹתְכֶם אֶת־כָּל־הַמּֽ͏ַעֲשִׂים הָאֵלֶּה נְאֻם־יְהוָה וָאֲדַבֵּר אֲלֵיכֶם הַשְׁכֵּם וְדַבֵּר וְלֹא שְׁמַעְתֶּם וָאֶקְרָא אֶתְכֶם וְלֹא עֲנִיתֶֽם׃
14 ஆகையால் அன்று நான் சீலோவுக்குச் செய்ததையே, என் பெயரைக் கொண்டிருக்கும் இந்த ஆலயத்திற்கும் செய்வேன். உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இடமான, நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஆலயத்துக்கே இப்படிச் செய்வேன்.
וְעָשִׂיתִי לַבַּיִת ׀ אֲשֶׁר נִֽקְרָא־שְׁמִי עָלָיו אֲשֶׁר אַתֶּם בֹּטְחִים בּוֹ וְלַמָּקוֹם אֲשֶׁר־נָתַתִּי לָכֶם וְלַאֲבֽוֹתֵיכֶם כַּאֲשֶׁר עָשִׂיתִי לְשִׁלֽוֹ׃
15 எப்பிராயீம் மக்களான உங்கள் சகோதரருக்குச் செய்ததுபோல, நான் உங்களை என் முகத்திற்கு முன்னிருந்து தள்ளிவிடுவேன்.’
וְהִשְׁלַכְתִּי אֶתְכֶם מֵעַל פָּנָי כַּאֲשֶׁר הִשְׁלַכְתִּי אֶת־כָּל־אֲחֵיכֶם אֵת כָּל־זֶרַע אֶפְרָֽיִם׃
16 “எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாடவோ, அவர்களுக்காக எந்த வேண்டுதலையோ, விண்ணப்பத்தையோ செய்யவேண்டாம்; அவர்களுக்காக என்னிடம் பரிந்துபேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிகொடுக்கமாட்டேன்.
וְאַתָּה אַל־תִּתְפַּלֵּל ׀ בְּעַד־הָעָם הַזֶּה וְאַל־תִּשָּׂא בַעֲדָם רִנָּה וּתְפִלָּה וְאַל־תִּפְגַּע־בִּי כִּי־אֵינֶנִּי שֹׁמֵעַ אֹתָֽךְ׃
17 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீ காணவில்லையோ?
הַֽאֵינְךָ רֹאֶה מָה הֵמָּה עֹשִׂים בְּעָרֵי יְהוּדָה וּבְחֻצוֹת יְרוּשָׁלָֽ͏ִם׃
18 வான அரசிக்கு அப்பம் சுடுவதற்காக பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், தந்தையர் நெருப்பு மூட்டுகிறார்கள், பெண்கள் மாவைப் பிசைந்து அப்பம் சுடுகிறார்கள். அவர்கள் என்னைக் கோபம் மூட்டுவதற்காக, வேறு தெய்வங்களுக்குப் பானபலிகளைச் செலுத்துகிறார்கள்.
הַבָּנִים מְלַקְּטִים עֵצִים וְהָֽאָבוֹת מְבַעֲרִים אֶת־הָאֵשׁ וְהַנָּשִׁים לָשׁוֹת בָּצֵק לַעֲשׂוֹת כַּוָּנִים לִמְלֶכֶת הַשָּׁמַיִם וְהַסֵּךְ נְסָכִים לֵאלֹהִים אֲחֵרִים לְמַעַן הַכְעִסֵֽנִי׃
19 ஆனால் அவர்கள் என்னையா கோபமூட்டுகிறார்கள்? வெட்கக்கேடாக தங்களுக்கல்லவா தீங்கை வருவித்துக் கொள்கிறார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
הַאֹתִי הֵם מַכְעִסִים נְאֻם־יְהוָה הֲלוֹא אֹתָם לְמַעַן בֹּשֶׁת פְּנֵיהֶֽם׃
20 “‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: என் கோபமும் கடுங்கோபமும் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது மனிதர்மேலும், மிருகத்தின்மேலும், வெளிநிலத்திலுள்ள மரங்களின்மேலும், நிலத்தின் பலனின்மேலும் ஊற்றப்படும். அது ஒருவராலும் அணைக்க முடியாதபடி எரியும்.
לָכֵן כֹּה־אָמַר ׀ אֲדֹנָי יְהֹוִה הִנֵּה אַפִּי וַֽחֲמָתִי נִתֶּכֶת אֶל־הַמָּקוֹם הַזֶּה עַל־הָֽאָדָם וְעַל־הַבְּהֵמָה וְעַל־עֵץ הַשָּׂדֶה וְעַל־פְּרִי הָֽאֲדָמָה וּבָעֲרָה וְלֹא תִכְבֶּֽה׃
21 “‘ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: போங்கள், நீங்கள் போய், நீங்கள் விரும்பியபடி தொடர்ந்து பிற பலிகளுடன் தகனபலிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் அவைகளின் இறைச்சியை நீங்களே சாப்பிடுங்கள்!
כֹּה אָמַר יְהוָה צְבָאוֹת אֱלֹהֵי יִשְׂרָאֵל עֹלוֹתֵיכֶם סְפוּ עַל־זִבְחֵיכֶם וְאִכְלוּ בָשָֽׂר׃
22 ஏனென்றால் உங்கள் முற்பிதாக்களை நான் எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்து, அவர்களுடன் பேசியபோது, நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தது தகனபலிகளையும், மற்ற பலிகளையும் குறித்து மட்டுமல்ல.
כִּי לֹֽא־דִבַּרְתִּי אֶת־אֲבֽוֹתֵיכֶם וְלֹא צִוִּיתִים בְּיוֹם הוציא הוֹצִיאִי אוֹתָם מֵאֶרֶץ מִצְרָיִם עַל־דִּבְרֵי עוֹלָה וָזָֽבַח׃
23 இந்த கட்டளையுடன், எனக்குக் கீழ்ப்படியுங்கள், அப்பொழுது நான் உங்கள் இறைவனாயிருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலெல்லாம் நடவுங்கள், அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும் என்ற கட்டளையையும் கொடுத்தேன்.
כִּי אִֽם־אֶת־הַדָּבָר הַזֶּה צִוִּיתִי אוֹתָם לֵאמֹר שִׁמְעוּ בְקוֹלִי וְהָיִיתִי לָכֶם לֵֽאלֹהִים וְאַתֶּם תִּֽהְיוּ־לִי לְעָם וַהֲלַכְתֶּם בְּכָל־הַדֶּרֶךְ אֲשֶׁר אֲצַוֶּה אֶתְכֶם לְמַעַן יִיטַב לָכֶֽם׃
24 ஆனால் அவர்கள் கேட்கவுமில்லை அதைக் கவனிக்கவுமில்லை; அதற்குப் பதிலாக, தங்கள் பொல்லாத இருதயங்களிலுள்ள பிடிவாத மனப்பாங்கின்படியெல்லாம் செய்தார்கள். முன்னேற்றமடையாமல் பின்னடைந்து போனார்கள்.
וְלֹא שָֽׁמְעוּ וְלֹֽא־הִטּוּ אֶת־אָזְנָם וַיֵּֽלְכוּ בְּמֹעֵצוֹת בִּשְׁרִרוּת לִבָּם הָרָע וַיִּהְיוּ לְאָחוֹר וְלֹא לְפָנִֽים׃
25 உங்கள் முற்பிதாக்கள் எகிப்தை விட்டுச்சென்ற காலத்திலிருந்து, இன்றுவரை, நாள்தோறும் திரும்பத்திரும்ப, நான் என்னுடைய ஊழியரான இறைவாக்கினரை உங்களிடம் அனுப்பிக்கொண்டே இருந்தேன்.
לְמִן־הַיּוֹם אֲשֶׁר יָצְאוּ אֲבֽוֹתֵיכֶם מֵאֶרֶץ מִצְרַיִם עַד הַיּוֹם הַזֶּה וָאֶשְׁלַח אֲלֵיכֶם אֶת־כָּל־עֲבָדַי הַנְּבִיאִים יוֹם הַשְׁכֵּם וְשָׁלֹֽחַ׃
26 ஆனால் மக்களோ, நான் சொன்னவற்றைக் கேட்கவுமில்லை கவனிக்கவுமில்லை. இன்னும் முரட்டுத்தனமுள்ளவர்களாகி தங்கள் முற்பிதாக்களைப் பார்க்கிலும், அதிக தீமையான செயல்களையே செய்தார்கள்.’
וְלוֹא שָׁמְעוּ אֵלַי וְלֹא הִטּוּ אֶת־אָזְנָם וַיַּקְשׁוּ אֶת־עָרְפָּם הֵרֵעוּ מֵאֲבוֹתָֽם׃
27 “எரேமியாவே! இவையெல்லாவற்றையும் நீ அவர்களுக்குக் கூறினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். நீ அவர்களைக் கூப்பிட்டாலும் பதில் கொடுக்கவுமாட்டார்கள்.
וְדִבַּרְתָּ אֲלֵיהֶם אֶת־כָּל־הַדְּבָרִים הָאֵלֶּה וְלֹא יִשְׁמְעוּ אֵלֶיךָ וְקָרָאתָ אֲלֵיהֶם וְלֹא יַעֲנֽוּכָה׃
28 ஆகையால் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்படியாமலும், அவருடைய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற மக்களினம் இதுதான். உண்மை அழிந்துவிட்டது; அவர்களுடைய உதடுகளிலிருந்து அது மறைந்துபோயிற்று.
וְאָמַרְתָּ אֲלֵיהֶם זֶה הַגּוֹי אֲשֶׁר לֽוֹא־שָׁמְעוּ בְּקוֹל יְהוָה אֱלֹהָיו וְלֹא לָקְחוּ מוּסָר אָֽבְדָה הָֽאֱמוּנָה וְנִכְרְתָה מִפִּיהֶֽם׃
29 “‘நீ உனது தலைமயிரை வெட்டி, அப்பால் எறிந்துவிடு. வறண்ட மேடுகளில் புலம்பு. ஏனெனில் யெகோவா தன் கடுங்கோபத்துக்குள்ளான இச்சந்ததியைப் புறக்கணித்துக் கைவிட்டுவிட்டார்.
גָּזִּי נִזְרֵךְ וְֽהַשְׁלִיכִי וּשְׂאִי עַל־שְׁפָיִם קִינָה כִּי מָאַס יְהוָה וַיִּטֹּשׁ אֶת־דּוֹר עֶבְרָתֽוֹ׃
30 “‘யூதா மக்கள் என் பார்வையில் தீமையான செயல்களைச் செய்துள்ளார்கள்; என் பெயரைக்கொண்டு விளங்கும் இந்த ஆலயத்தில், தங்கள் அருவருக்கப்பட்ட விக்கிரகங்களை வைத்து அதைக் கறைப்படுத்தியுள்ளார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
כִּֽי־עָשׂוּ בְנֵי־יְהוּדָה הָרַע בְּעֵינַי נְאֻום־יְהוָה שָׂמוּ שִׁקּֽוּצֵיהֶם בַּבַּיִת אֲשֶׁר־נִקְרָא־שְׁמִי עָלָיו לְטַמְּאֽוֹ׃
31 அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில்போட்டு, எரிப்பதற்காகப் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தில் உயர்ந்த மேடைகளைக் கட்டியிருக்கிறார்கள். இதை நான் கட்டளையிடவுமில்லை. என் மனதில் நினைக்கவும் இல்லை.
וּבָנוּ בָּמוֹת הַתֹּפֶת אֲשֶׁר בְּגֵיא בֶן־הִנֹּם לִשְׂרֹף אֶת־בְּנֵיהֶם וְאֶת־בְּנֹתֵיהֶם בָּאֵשׁ אֲשֶׁר לֹא צִוִּיתִי וְלֹא עָלְתָה עַל־לִבִּֽי׃
32 எனவே எச்சரிக்கையாயிரு, மக்கள் அதைத் தோப்பேத் என்றோ, பென் இன்னோமின் பள்ளத்தாக்கு என்றோ இனி ஒருபோதும் அழைக்காமல், படுகொலை பள்ளத்தாக்கு என்றே அழைக்கும் நாட்கள் வருகின்றன. ஏனெனில் அவர்கள் இடமின்றிப் போகுமட்டும் மரித்தவர்களை தோப்பேத்திலே புதைப்பார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
לָכֵן הִנֵּֽה־יָמִים בָּאִים נְאֻם־יְהוָה וְלֹא־יֵאָמֵר עוֹד הַתֹּפֶת וְגֵיא בֶן־הִנֹּם כִּי אִם־גֵּיא הַהֲרֵגָה וְקָבְרוּ בְתֹפֶת מֵאֵין מָקֽוֹם׃
33 அப்பொழுது இந்த மக்களின் சடலங்கள் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் உணவாகும். அவைகளைப் பயமுறுத்தி விரட்டிவிட ஒருவரும் இருக்கமாட்டார்கள்.
וְֽהָיְתָה נִבְלַת הָעָם הַזֶּה לְמַֽאֲכָל לְעוֹף הַשָּׁמַיִם וּלְבֶהֱמַת הָאָרֶץ וְאֵין מַחֲרִֽיד׃
34 யூதாவின் பட்டணங்களிலிருந்தும், எருசலேமின் வீதிகளிலிருந்தும் சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும் இல்லாமல் செய்வேன். மணமகளின் குரலையும், மணமகனின் குரலையும் ஒழியப்பண்ணுவேன். ஏனெனில், நாடு பாழாய்ப்போகும்.
וְהִשְׁבַּתִּי ׀ מֵעָרֵי יְהוּדָה וּמֵֽחֻצוֹת יְרוּשָׁלִַם קוֹל שָׂשׂוֹן וְקוֹל שִׂמְחָה קוֹל חָתָן וְקוֹל כַּלָּה כִּי לְחָרְבָּה תִּהְיֶה הָאָֽרֶץ׃

< எரேமியா 7 >