< எரேமியா 44 >
1 மிக்தோல், தக்பானேஸ், மெம்பிஸ் ஆகிய கீழ் எகிப்திலும், பத்ரோசிலும் வாழ்ந்த யூதர்களைக் குறித்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது:
Šis ir tas vārds, kas notika uz Jeremiju pret visiem Jūdiem, kas Ēģiptes zemē dzīvoja, kas Migdolā dzīvoja un Takvanesā un Novā un Patros zemē, sacīdams:
2 “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எருசலேமின்மேலும், யூதாவின் பட்டணங்களிலும் நான் கொண்டுவந்த பேரழிவை நீங்கள் கண்டீர்கள். இன்று அவை குடியிருப்பாரின்றி பாழாக்கப்பட்டு கிடக்கின்றன.
Tā saka Tas Kungs Cebaot, Israēla Dievs: jūs esat redzējuši visu ļaunumu, ko Es esmu vedis pār Jeruzālemi un pār visām Jūda pilsētām, un redzi, tā ir šodien posta vieta bez iedzīvotāja,
3 அவர்கள் செய்த தீமையினாலே இப்படி நடந்தது. அவர்களோ நீங்களோ உங்கள் முற்பிதாக்களோ, ஒருபோதும் அறிந்திராத வேறு தெய்வங்களை அவர்கள் வணங்கி, அவைகளுக்குத் தூபம் எரித்து எனக்குக் கோபமூட்டினார்கள்.
Viņu bezdievības dēļ ko tie darījuši, Mani kaitinādami, kad tie gāja kvēpināt un kalpot citiem dieviem, ko tie nepazina, ne paši, ne jūs, ne jūsu tēvi.
4 நான் திரும்பத்திரும்ப என் ஊழியர்களான இறைவாக்கினரை அனுப்பினேன். அவர்கள், ‘நான் வெறுக்கிற இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்யவேண்டாம்’ என்று சொன்னார்கள்.
Un Es pie jums vienmēr esmu sūtījis vienā sūtīšanā visus Savus kalpus, tos praviešus, un sacījis: nedariet jel šo negantību, ko Es ienīstu.
5 ஆனாலும் என் மக்கள் அதைக் கேட்கவோ, கவனிக்கவோ இல்லை. தங்களுடைய கொடுமையிலிருந்து திரும்பவுமில்லை. வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதை நிறுத்தவும் இல்லை.
Bet tie nav klausījuši, nedz savas ausis griezuši, ka atgrieztos no savas bezdievības, nekvēpināt citiem dieviem.
6 ஆகையால் என்னுடைய கடுங்கோபம் ஊற்றப்பட்டது. அது யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்து, அவைகளை இன்று இருப்பதுபோல் வெறும் பாழிடமாய் ஆக்கியிருக்கிறது.
Tāpēc Mana bardzība un Mana dusmība izgāzusies un degusi Jūda pilsētās un Jeruzālemes ielās, tā ka tās palikušas par tuksnesi un posta vietu, tā kā tas šodien ir.
7 “இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் யூதாவிலிருந்து அகற்றி, ஒருவரும் உங்களுக்கென மீதியாயிருக்கவிடாமல், இப்படியான பெரும் பேராபத்தை ஏன் உங்கள்மேல் கொண்டுவருகிறீர்கள்?
Un nu, tā saka Tas Kungs Cebaot, Israēla Dievs: Kāpēc jūs darāt tādu lielu ļaunumu pret savām dvēselēm, ka top izdeldēti jūsu starpā vīrs un sieva, bērns un zīdāmais no Jūda vidus, un nekā no jums neatliek,
8 நீங்கள் குடியிருக்கும்படி வந்து சேர்ந்திருக்கும் எகிப்து நாட்டில் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின் செயல்களினால் ஏன் என்னைக் கோபமடையச் செய்கிறீர்கள்? உங்களையே நீங்கள் அழித்து, பூமியிலுள்ள எல்லா மக்கள் மத்தியிலும் நீங்கள் உங்களைச் சாபப்பொருளாகவும், பழிச்சொல்லாகவும் ஆக்குகிறீர்கள்.
Mani kaitinādami ar savu roku darbiem un kvēpinādami citiem dieviem Ēģiptes zemē, kurp jūs esat gājuši, tur piemājot, lai paši sev sataisāt izdeldēšanu un topat par lāstu un apsmieklu starp visām zemes tautām?
9 நீங்கள் உங்கள் முற்பிதாக்களினாலும், யூதா நாட்டு அரசர்களினாலும், அரசிகளினாலும் செய்யப்பட்ட கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? நீங்களும், உங்கள் மனைவியரும் எருசலேமின் தெருக்களிலும், யூதா நாட்டிலும் செய்த கொடுமைகளை மறந்துவிட்டீர்களா?
Vai esiet aizmirsuši savu tēvu bezdievību un Jūda ķēniņu bezdievību un viņu sievu bezdievību un savu bezdievību un savu sievu bezdievību, ko tie darījuši Jūda zemē un Jeruzālemes ielās?
10 இன்றுவரை அவர்கள் தங்களைத் தாழ்த்தவோ, பயபக்தியை காட்டவோ இல்லை. நான் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் முன்வைத்த என் சட்டங்களையும், விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவுமில்லை.”
Un tomēr tie līdz šai dienai vēl nav sagrauzti un nebīstas nedz staigā Manā bauslībā un Manos likumos, ko Es esmu licis priekšā jums un jūsu tēviem.
11 ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உன்மீது பேராபத்தைக் கொண்டுவரும்படியும், யூதா உங்களில் ஒவ்வொருவனையும் அழிக்கும்படியும் நான் தீர்மானித்திருக்கிறேன்.
Tādēļ tā saka Tas Kungs Cebaot, Israēla Dievs: redzi, Es griezīšu Savu vaigu uz jums par ļaunumu un izdeldēšu visu Jūdu.
12 எகிப்தில் குடியிருக்கும்படி, அங்குதான் போவோம் என முடிவெடுத்த யூதாவின் மீதியானோரை நான் அகற்றிவிடுவேன். அவர்கள் யாவரும் எகிப்தில் அழிந்துபோவார்கள். அவர்கள் வாளினால் விழுந்தோ, பஞ்சத்தினால் இறந்துபோவார்கள். அவர்கள் சிறியோரிலிருந்து பெரியோர்வரை வாளினால் அல்லது பஞ்சத்தினால் அழிவார்கள். அவர்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டனத்திற்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாவார்கள்.
Un Es ņemšu Jūda atlikušos, kas savu vaigu griezuši, iet uz Ēģiptes zemi, tur piemājot, un tie visi dabūs galu Ēģiptes zemē, tie kritīs caur zobenu, caur badu tiem būs gals, gan maziem gan lieliem, caur zobenu un caur badu tie mirs un būs par lāstu un briesmām un par apsmieklu un kaunu.
13 நான் எருசலேமை தண்டித்ததுபோல எகிப்தில் குடியிருப்பவர்களையும் வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.
Es arī tos piemeklēšu, kas dzīvo Ēģiptes zemē, tā kā es Jeruzālemi esmu piemeklējis ar zobenu, ar badu un ar mēri.
14 எகிப்தில் குடியிருக்கப்போன யூதாவில் மீதமுள்ளோர் யாரும் யூதா நாட்டுக்குத் திரும்பிவர தப்பியோ, பிழைத்தோ இருக்கமாட்டார்கள். அங்கு திரும்பிவந்து வாழவேண்டுமென்ற வாஞ்சை அவர்களுக்கு இருந்துங்கூட, ஒருசில அகதிகளைத்தவிர வேறு ஒருவரும் திரும்பமாட்டார்கள்.”
Un neviens neizbēgs un neizspruks no Jūda atlikušiem, kas nākuši uz Ēģiptes zemi, tur piemājot, lai varētu atgriezties uz Jūda zemi, uz kurieni viņu dvēsele ilgojās atpakaļ griezties un tur dzīvot; jo tie negriezīsies atpakaļ, bez tiem vien, kas izbēg.
15 அப்பொழுது தங்கள் மனைவியர் பிற தெய்வங்களுக்கு பலி செலுத்தியதை அறிந்திருந்த எல்லா மனிதரும், அவர்களோடு நின்ற எல்லாப் பெண்களுமான பெரும் கூட்டமும், மேல் எகிப்திலும் கீழ் எகிப்திலும் வாழ்ந்த எல்லா மக்களும் எரேமியாவிடம் கூறியதாவது:
Tad visi vīri, kas zināja savas sievas citiem dieviem kvēpinām, un visas sievas, kas tur stāvēja lielā pulkā, līdz ar visiem ļaudīm, kas dzīvoja Ēģiptes zemē iekš Patros atbildēja Jeremijam un sacīja:
16 “யெகோவாவின் பெயரால் நீ எங்களுக்குக் கூறிய செய்தியை நாங்கள் கேட்கப்போவதில்லை.
Uz to vārdu, ko tu mums esi sacījis Tā Kunga Vārdā, mēs tev negribam klausīt,
17 ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை.
Bet mēs darīsim pēc visiem vārdiem, kas no mūsu mutes nākuši, un kvēpināsim debess ķēniņienei un upurēsim viņai dzeramus upurus, tā kā mēs esam darījuši paši un mūsu tēvi, mūsu ķēniņi un mūsu lielkungi pa Jūda pilsētām un Jeruzālemes ielām; tad mums bija maizes papilnam un mēs bijām līksmi un neredzējām ļauna.
18 ஆனால் வான அரசிக்கு நாங்கள் தூபம் செலுத்துவதையும் பானபலிகள் வார்ப்பதையும் நிறுத்தியதிலிருந்து, நாங்கள் எல்லாவற்றிலும் குறைவடைந்தோம். வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கிறோம்” என்றார்கள்.
Bet no tā brīža, ka esam mitējušies kvēpināt debess ķēniņienei un viņai upurēt dzeramus upurus, tad mums ir bijis visāds trūkums, un mēs ejam bojā caur zobenu un caur badu.
19 மேலும் அங்கிருந்த பெண்கள், “நாங்கள் வான அரசிக்குத் தூபங்காட்டி, அவளுக்கு பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் அவளுடைய உருவமுள்ள அப்பங்களைச் சுட்டதையும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றியதையும் எங்கள் கணவன்மார் அறியாமலா இருந்தார்கள்?” என்று கேட்டார்கள்.
Un kad mēs tai debess ķēniņienei kvēpinām un viņai upurējam dzeramus upurus, vai tad mēs bez savu vīru ziņas tai taisām raušus, to tēlodami, un tai upurējam dzeramus upurus?
20 அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும்,
Tad Jeremija runāja uz visiem ļaudīm, uz vīriem un uz sievām un uz visiem ļaudīm, kas viņam to vārdu bija atbildējuši, un sacīja:
21 “யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் தெருக்களிலும், நீங்களும், உங்கள் தந்தையரும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், நாட்டு மக்களும் தூபங்காட்டியதைப் பற்றி யெகோவா தெரியாமலிருந்தாரா?
Vai Tas Kungs nav pieminējis un pie sirds ņēmis to kvēpināšanu, ko jūs esat kvēpinājuši pa Jūda pilsētām un Jeruzālemes ielām, jūs un jūsu tēvi, jūsu ķēniņi un jūsu lielkungi un tās zemes ļaudis?
22 உங்கள் கொடிய செயல்களையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும் யெகோவாவினால் சகிக்க முடியாமல் போயிற்று. அதனால்தான் யெகோவா உங்கள் நாட்டை இன்று இருப்பதுபோல் குடியில்லாமல் பாழடையச் செய்து, சாபத்திற்குள்ளாக்கினார்.
Un Tas Kungs vairs nevarēja paciest to bezdievību, ko jūs darījāt un to negantību, ko jūs darījāt. Tādēļ jūsu zeme ir tapusi par postu un par briesmām un par lāstu, ka neviens tur nedzīvo, kā tas šodien ir.
23 நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களையோ அவரது ஒழுங்குவிதிகளையோ அவர் சொன்னவற்றையோ கைக்கொள்ளாமலும் விட்டீர்கள். ஆகையால் இன்று நீங்கள் காணும் பேராபத்து உங்கள்மேல் வந்திருக்கிறது” என்றான்.
Tāpēc ka jūs esat kvēpinājuši un pret To Kungu grēkojuši un neesat klausījuši Tā Kunga balsij nedz staigājuši viņa bauslībā un viņa likumos un viņa liecībās, tādēļ jums šis ļaunums noticis, kā tas šodien ir.
24 மேலும் எரேமியா, பெண்கள் உட்பட எல்லா மக்களையும் பார்த்து, “எகிப்திலிருக்கும் மக்களே! யூதாவிலிருக்கும் மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
Un Jeremija sacīja uz visiem ļaudīm un uz visām sievām: klausiet Tā Kunga vārdu, jūs visi no Jūda cilts, kas esat Ēģiptes zemē.
25 இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ‘வான அரசிக்குத் தூபங்காட்டவும், பானபலிகளை வார்க்கவும், நாங்கள் செய்த வாக்கை நிச்சயமாக நிறைவேற்றுவோம்’ என்று நீங்களும், உங்கள் மனைவியரும் பொருத்தனை செய்தீர்கள். அதை உங்கள் செயல்களினால் காட்டியுமிருக்கிறீர்கள். “உங்கள் வாக்கை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள். உங்கள் பொருத்தனைகளைக் கடைப்பிடியுங்கள்.
Tā runā Tas Kungs Cebaot, Israēla Dievs, sacīdams: jūs un jūsu sievas ar savu muti esat runājuši un ar savām rokām to darījuši. Jūs esat sacījuši: mēs turēsim savus solījumus, ko esam apsolījuši, kvēpināt debess ķēniņienei un tai upurēt dzeramus upurus. Nu tad turat stipri savus solījumus un dariet, ko esat apsolījuši.
26 ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான்.
Tad nu klausiet Tā Kunga vārdu, jūs visi no Jūda, kas dzīvojat Ēģiptes zemē: redzi, Es zvērēju pie Sava lielā vārda, saka Tas Kungs, ka Mans Vārds no nekāda vīra mutes vairs netaps saukts visā Ēģiptes zemē, kas sacītu: tik tiešām kā Tas Kungs Dievs dzīvo!
27 நான் அவர்களுக்கு நன்மையையல்ல; தீமையைச் செய்யவே காத்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் இருக்கும் யூதா மக்கள் அனைவரும் இல்லாமற்போகும்வரை வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள்.
Redzi, Es būšu nomodā pār tiem uz ļaunu un ne uz labu, un visi vīri no Jūda, kas Ēģiptes zemē, taps izdeldēti ar zobenu un ar badu, tiekams būs pagalam.
28 வாளுக்குத் தப்பி எகிப்து நாட்டிலிருந்து யூதா நாட்டுக்குத் திரும்புகிறவர்களோ மிகச் சிலராய் இருப்பார்கள். அப்பொழுது யூதாவில் மீதியாயிருந்து எகிப்தில் குடியிருக்கும்படி போன நீங்கள் அனைவரும், என்னுடைய வார்த்தையோ அல்லது உங்களுடைய வார்த்தையோ எது நிலைநிற்கும் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
Bet kas izbēgs zobenam, tie griezīsies atpakaļ no Ēģiptes zemes uz Jūda zemi, mazs pulciņš, un tad visi Jūda atlikušie, kas nākuši piemist Ēģiptes zemē, atzīs, kura vārds pastāvēs, vai Mans, vai viņu.
29 “‘இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிப்பேன் என்பதற்கு உங்களுக்கு நான் ஒரு அடையாளத்தைத் தருகிறேன்’ என்று யெகோவா கூறுகிறார். ‘நான் உங்களுக்கு எதிராகப் பயமுறுத்திச் சொன்ன வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்.’
Un tas jums būs par zīmi, saka Tas Kungs, ka Es jūs šai vietā piemeklēšu, lai zināt, ka Mani vārdi piepildīsies pie jums uz ļaunu.
30 நான் உங்களுக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே என்று யெகோவா சொல்கிறதாவது: ‘எகிப்திய அரசன் பார்வோன் ஓப்ராவை, அவனைக் கொல்லத் தேடுகிற பகைவரின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அது யூதாவின் அரசனான சிதேக்கியாவை, அவனைக் கொல்லத் தேடிய பகைவனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கும்’ என்கிறார்.”
Tā saka Tas Kungs: redzi, Es nodošu Faraonu Hofru, Ēģiptes ķēniņu, viņa ienaidniekiem rokā, un tiem rokā, kas meklē viņa dvēseli, tā kā Es Cedeķiju, Jūda ķēniņu, esmu devis rokā Nebukadnecaram, Bābeles ķēniņam, viņa ienaidniekam, un tiem, kas viņa dvēseli meklēja.